அர்ச்சனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அர்ச்சனை (ⓘ) என்பது வேதம் பயின்ற ஒரு நபர் பக்தர்களுக்காக அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும். பொதுவாக இம்முறை இந்து சமயக் கோயில்களில் பரவலாகக் காணப்படுகிறது. ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுவதாக இந்து சமயம் சொல்கிறது. அர்ச்சனை செய்பவர் பக்தர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் போன்றவற்றை விசாரித்து மணியை ஒலித்தவாறே அதை சொல்லி அர்ச்சனை செய்வார். அர்ச்சனை செய்பவர் அர்ச்சகர் அல்லது பூசாரி எனப்படுகிறார். பல ஆண்டு காலமாக அர்ச்சனை என்பது சமசுகிருத மொழியில் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. தற்போது தமிழ் மொழியிலும் அர்ச்சனை செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அர்ச்சனை செய்வதற்கு பெரும்பாலும் அர்ச்சனை சீட்டு வாங்குதல் அல்லது காணிக்கை போன்ற முறைகளில் பணம் வசூல் செய்யப்படுகிறது.
பொருள்
[தொகு]அர்ச்சனை என்ற சொல் சிலை என்று பொருள்படும் "அர்ச்சா" மற்றும் "அர்ச்சித்தா"என்ற சமசுகிருத சொல்லில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.