திலகம் (நெற்றிப்பொட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகளிர் நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டைத் திலகம் என்பர்.

அது நெற்றிக்கு எடுப்பைத் தருவதால் மக்களில் எடுப்பாக விளங்குபவர்களையும் ‘மக்கள் திலகம்’, ‘மங்கையர் திலகம்’ என்றெல்லாம் வழங்குகிறோம்.

புத்தர் பெருமானை மகதநாட்டுத் திலகம் என்றனர். [1]

 • 'தில்’லைத் தருவது திலகம்.
 • இக்கால மகளிர் போலச் சங்ககால மகளிரும் நெற்றியில் திலகம் வைத்துக்கொண்டனர். [2]
 • கணவன் பிரிந்திருக்கும் காலத்தில் மகளிர் திலகம் அணிந்துகொள்வது இல்லை. [3]
 • முத்தை ஒட்டவைத்தும் திலகம் இட்டுக்கொண்டனர். [4]

காசறை என்னும் கஸ்தூரியைக் குழைத்துக் கன்னங் கரேர் எனத் திலகமிட்டுக்கொண்டு கண்ணாடி பார்க்கும் பழக்கமும் உண்டு. [5]

நாட்டுப்புறங்களில்
 • வேங்கை மரப் பாலை உலர்த்திய வேங்கைப்பொட்டு, கருவைக் காயைக் காய்ச்சி வடித்த சாற்றைக் காயவைத்துப் பெற்ற கருவைப்பொட்டு முதலானவை நாட்டுப்புற மக்களிடையே வழக்கத்தில் இருந்துவந்தன.
 • இக்காலத்தில் பிளாஸ்டிக் நறுக்குகளாகச் செய்யப்பட்ட பொட்டுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றால் இக்கால மகளிர் தம் நெற்றியை ஒப்பனை செய்துகொள்கின்றனர்.

இதனையும் காண்க[தொகு]

திலகம் (மலர்)

அடிக்குறிப்பு[தொகு]

 1. மறந்தும் மழை மறா மகதநன்னாட்டுக்கு ஒருபெருந் தெய்வம் என்று உரவோன் உரைக்கும் - மணிமேகலை 26-43
 2. திருமுருகாற்றுப்படை 24, நற்றிணை 6, அகநானூறு 253, 389, பரிபாடல் 11-99, நடனமாதர் திலகம் இட்டுக்கொண்டு ஆடுவர். சிலப்பதிகாரம் 8-74
 3. செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப – சிலப்பதிகாரம் 4-54
 4. கலித்தொகை 92-35,
 5. காசறைத் திலகம் கருங்கறை கிடந்த மாசில் முகத்து - சிலப்பதிகாரம் 28-27