கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலம் என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மா அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள்.

கோலமிடுவதற்கான பொருட்களும், முறையும்[தொகு]

தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.

கோலங்களின் வகைகள்[தொகு]

ஓர் எளிமையான கம்பிக் கோலம்

கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும்.

  1. கம்பிக் கோலம்
  2. புள்ளிக் கோலம்

கம்பிக் கோலம்[தொகு]

கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும்.

புள்ளிக் கோலம்[தொகு]

புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகளிடுவதிலும் இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே:

  • நேர்ப் புள்ளிகள்
  • ஊடு புள்ளிகள்

என்று கூறுவர்.

சதுர வலைப்பின்னல்
வடிவில் புள்ளிகள்

நேர்ப் புள்ளிகள் ஊடுபுள்ளிகள்

இப்புள்ளிக் கோலங்களும், புள்ளிகள் தொடர்பில் கோடுகள் வரையப்படும் முறைபற்றி இருவகையாகப் பகுக்கலாம்.

  • புள்ளிகளில் தொடாது, அவற்றுக்கு இடையால் வரையப்படும் நேர் அல்லது வளை கோடுகள் மூலம் வடிவங்களை உருவாக்கல்.
புள்ளிகளூடு
வளைகோடுகள்-1
புள்ளிகளூடு
வளைகோடுகள்-2
  • புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் வடிவங்களை உருவாக்கல்.

நேர்கோடுகளால்
இணைக்கப்பட்ட
புள்ளிகள்

வளைகோடுகளால்
இணைக்கப்பட்ட
புள்ளிகள்

அநேகமாக எல்லாக் கேத்திரகணித வடிவ அமைப்புகளைப் பற்றி வரையப்படும் கோலங்களையும் முடிவின்றி விரிவாக்கிக்கொண்டு செல்லலாம்.

கோலமிடப் பயன்படும் பொருட்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kolam
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலம்&oldid=3446207" இருந்து மீள்விக்கப்பட்டது