கன்னடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கன்னடம் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கன்னடம்
ಕನ್ನಡ kannaḍa
நாடு(கள்) கர்நாடகா, இந்தியா
பிராந்தியம் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கோவா.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
35 மில்லியன் (தாய்நிலத்தில்), 44 மில்லியன் (மொத்தம்)[1][2]  (date missing)
திராவிடம்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா (கர்நாடகா)
Regulated by பல அக்காதமிகள் மற்றும் கர்நாடகா அரசு
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 kn
ISO 639-2 kan
ISO 639-3 kan
கன்னடம் பேசும் நிலப்பகுதி - கர்நாடகா மாநிலம்

கன்னடம் (ಕನ್ನಡ , க1ந்நட3, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும்.[3] பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். இந்தியாவின் 22 தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

இம்மொழியின் எழுத்து வடிவம் அண்டை மாநிலத்தில் பேசப்படும் தெலுங்கு மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து உள்ளது.

மொழி வரலாறு[தொகு]

கன்னட மொழி எழுத்துக்கள்

கன்னட மொழியானது மூல தென் திராவிட மொழியிலிருந்து பிரிந்ததாக எண்ணுகின்றனர். எப்பொழுது இப்பிரிவு நிகழ்ந்தது என்று கூறப் போதிய சான்றுகள் இல்லை. பேச்சு மொழியாக 2000 ஆண்டுகளேனும் இருந்திருக்க வேண்டும். பிராகிருத, சமசுகிருத மொழிகளின் தாக்கத்தை இம்மொழியில் காணலாம். மொழியின், அகரவரிசை நெடுங்கணக்கில் வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமசுகிருதம் போல நான்கு வேறுபாடுகள் உள்ளனவாக அமைத்துக்கொண்டனர். இவ்வமைப்பு எப்பொழுதிலிருந்து நிலவி வருகின்றதெனத் தெரியவில்லை.

கல்வெட்டுக்களில் மிகவும் தொன்மையானது கி.பி 450 ஐச் சார்ந்த ஹல்மிதி கல்வெட்டாகும். இது ஹளே கன்னடம் (= பழைய கன்னடம்) மொழியில் உள்ளது. பதாமி மலையில் கி.பி. 543 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் சமசுகிருத மொழி கல்வெட்டு ஒன்று உள்ளது. பழைய கன்னடத்தில் தமிழ் ழகரமும், தமிழ் வல்லின றகரமும், இரண்டுசுழி னகரமும் இருந்தன. தென்கன்னடப் பகுதியில் (தக்ஷின் கன்னடாவில்) 1980ல் தான் னகரத்தை விலக்கினார்கள்.

செப்பேடுகளில்:

மேற்கு கங்கர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 444) எழுதப்பட்டதாகக் கருதப்படும் தும்புலா செப்பேடுகளில் சமசுகிருத-கன்னட இருமொழி பொறிப்புகள் உள்ளது. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் கன்னடப் பகுதியில் பெல்மன்னு என்னும் இடத்தில், ஆலுவரச-2 என்னும் அரசன் ஆண்ட காலத்தில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் முழு கன்னட மொழி செப்பேடு ஒன்று அறியப்படுகின்றது.

இலக்கிய வகையில், கி.பி. 700 ஆம் ஆண்டளவில் திரிபாதி சந்தத்தில் கப்பெ அரபட்டா எழுதிய பாடல்கள் பழமையானவை. ஆனால் இன்று கிடைத்துள்ளவற்றுள் நிருபதுங்க அமோகவர்ஷா என்னும் அரசனால் கி.பி. 850 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கவிராஜமார்கம் என்னும் நூலே பழமையானது. கி.பி. 900ல் சிரவணபலகுலாவைச் சேர்ந்த பத்திரபாஃகுவின் வாழ்க்கையை விளக்கும், சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே (?) என்னும் நூல் அடுத்ததாக உள்ள பழமையான நூல் ஆகும்.

தற்கால இலக்கியம்[தொகு]

20 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தில் கன்னடம் முன்னணி வகிக்கும் ஓர் இந்திய மொழி ஆகும். இந்தியாவில் எம்மொழியினும் அதிக எண்ணிக்கையில் ஞானபீடப் பரிசுப் பெற்ற மொழி கன்னடம் ஆகும். இதுவரை 7 இலக்கிய எழுத்தாளர்கள் ஞானபீடப் பரிசுகள் பெற்றுள்ளனர். இது தவிர 48 சாகித்திய அகாதமிப் பரிசகளும் பெற்றுள்ளது.

ஞானபீட பரிசு பெற்றவர்கள்:

 1. 1967 குவெம்பு (ஸ்ரீ ராமாயண தர்ஷனம்) (Kuvempu for Sri Ramayana Darshanam)
 2. 1973 டா. ரா பெந்த்ரே (நாக்கு தந்தி) (Da.Ra.Bendre for Naaku thanthi)
 3. 1977 சிவராம் கரந்த் (மூக்காஜ்ஜிய கனசுகளு) (Shivaram Karanth for Mookajjiya Kanasugalu)
 4. 1983 மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (சிக்கவீர ராஜேந்திரா) (Masti Venkatesh Iyengar for Chikaveera Raajendhra)
 5. 1990 வி.க்ரு கோகக் (பாரத சிந்து ராஷ்மி) (Vi.Kru.Gokak for Bhaaratha Sindhhu Rashmi)
 6. 1994 யு.ஆர். ஆனந்தமூர்த்தி (கன்னட சங்கிரஹ சாஹித்யம்/ கன்னட மொழி ஆக்கங்களுக்கு) (U.R.Ananthamurthy for his works in Kannada / samagra sahitya)
 7. 1998 கிரிஷ் கர்னாட் (கன்னட சங்கிரஹ சாஹித்ய நாடக ஆக்கங்களுக்கு) (Girish Karnad for his dramatic works in Kannada / samagra sahitya)

மொழி[தொகு]

உயிர் எழுத்துக்கள்[தொகு]

கன்னடத்தில் 13 உயிர் எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்களை ஸ்வர என்று அழைக்கின்றனர். அவையாவன:

(அ), (ஆ), (இ), (ஈ), (உ), (ஊ), (ரு), (எ), (ஏ), (ஐ), (ஒ), (ஓ), (ஔ)

யோகவாஹா[தொகு]

உயிர் எழுத்துக்கள் தவிர, பாதி உயிரெழுத்து ஒலியாகவும், பாதி மெய்யெழுத்து ஒலியாகவும் இருப்பதாகக் கருதப்படும் யோகவாஹா என்னும் இரு எழுத்துக்கள் உண்டு. அவையாவன:

 1. அனுஸ்வரம்: (அம்)
 2. விசர்கம்: (அஃஅ)

மெய் எழுத்துக்கள்[தொகு]

கன்னட மொழியில் தமிழில் உள்ள க,ச,ட,த,ப ஆகிய ஐந்து வல்லின எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் நான்கு விதமாக வேறுபடுத்திக் காட்டுவர்.

ஒலிப்பிலா ஒலிப்பிலா
வெடிப்பொலி
ஒலிப்புடை ஒலிப்புடை
வெடிப்பொலி
மூக்கொலி
கடைநா
கடையண்ண ஒலிகள்
(க1, ka) (க2, kha) (க3, ga) (க4gha) (ங, nga)
இடைநா
இடையண்ண ஒலிகள்
(ச1, ca) (ச2, cha) (ச3, ja) (ச4, jha) (ஞ, nya)
நுனிநா
மேலண்ண ஒலிகள்
(ட1, tta) (ட2, ttha) (ட3, dda) (ட4, ddha) (ண, nna)
பல் உறழ் ஒலிகள் (த1, ta) (த2, tha) (த3, da) (த4, dha) (ந, na)
இதழ் ஒலிகள் (ப1, pa) (ப2, pha) (ப3, ba) (ப4, bha) (ம, ma)

மேலுள்ளனவன்றி, தமிழில் உள்ளது போன்ற இடையின மெய்யெழுத்துக்கள் வரிசையும் உண்டு. அவையாவன:

(ய, ya), (ர, ra), (ல, la), (வ, va), (ஷ, sha), (ஷ2, shha), (ஸ, sa), (ஹ, ha), (ள, lla)

பேச்சுக் கன்னடம்[தொகு]

கன்னடத்தின் எழுத்துருவம் தெலுங்கை ஒத்துள்ளபோதிலும் பேச்சுக் கன்னடம் தமிழை ஓரளவு ஒத்தாகும்.

எண்கள்[தொகு]

 1. - ஒந்து (ஒன்று (தமிழில்))
 2. - எரடு (இரண்டு (தமிழில்))
 3. - மூரு (மூன்று (தமிழில்))
 4. - நாலக்கு (நான்கு (தமிழில்))
 5. - ஐது (ஐந்து (தமிழில்))
 6. - ஆறு (ஆறு (தமிழில்))
 7. - ஏளு (ஏழு (தமிழில்))
 8. - என்டு (எட்டு (தமிழில்))
 9. - ஒம்பத்து (ஒன்பது (தமிழில்))
 10. - ஹத்து (பத்து (தமிழில்))
 11. - நூறு (நூறு (தமிழில்))
 12. - ஸாவிரா (ஆயிரம் (தமிழில்))

பொதுவானவை[தொகு]

 • நானு - நான் (தமிழில்)
 • குத்கொலி - அமருங்கள் (பேச்சுத் தமிழ்: உக்காருங்க, சென்னை, செங்கல்பட்டுத் தமிழில் குந்து, குந்திக்கோங்க) (தமிழில்)
 • பருத்தீரா - வாறீங்களா (தமிழில்)
 • ஹௌதா - அப்படியா (தமிழில்)
 • ஆமேலே பர்த்தினி - அப்புறமா வரேன் (தமிழில்)
 • எஷ்டு - (எவ்வளவு (தமிழில்)
 • எஷ்டாகிதே - (எவ்வளவு ஆகீயிருகுதுங்க (தமிழில்)
 • கன்னடா சொல்ப சொல்ப பரத்தே (கன்னடம் கொஞ்சம் கொஞ்சம் அறிவேன் (தமிழில்))
 • கென்டித்தி/மனையவரூ (மனைவி (தமிழில்))
 • ஊட்டா (சாப்பாடு (தமிழில்))
 • திண்டி (சிற்றுண்டி (தமிழில்))
 • நிம்ம ஹெசரு ஏனு (உங்க பெயர் என்ன? (தமிழில்))
 • சென்னாகிதீரா? (நலமாக உள்ளீர்களா? (தமிழில்))
 • ஹேகிதிரா? - (எப்படி இருக்கிறீர்கள்? (தமிழில்))
 • மல்கொளி - (படுத்துக் கொள்ளுங்கள் (தமிழில்))
 • மனே எள்ளீதே (வீடு எங்குள்ளது (தமிழில்))
 • பூப்பசண்டரா ஹோகுதா இல்வா? (பொதுவா பஸ்களில்: பூப்பசண்டாரா போகுதா? இல்லையா? (தமிழில்))
 • சொல்ப நீர் கொடி (கொஞ்சம் தண்ணீர் தரவும்(தமிழில்))
 • நானு நிம்கெ ப்ரீத்தி மாடுத்தேனெ(நான் உங்களைக் காதலிக்கின்றேன் (தமிழில்))

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னடம்&oldid=1989675" இருந்து மீள்விக்கப்பட்டது