உள்ளடக்கத்துக்குச் செல்

நேர்த்திக் கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேர்த்திக் கடன் என்பது தன்னுடைய கோரிக்கை நிறைவடைந்தால், இறைவனிடம் பொருள் தருவதாகவும், சில சடங்குகள் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக்கொள்ளுதல் ஆகும்.

இந்து சமயம்

[தொகு]

இந்து சமயத்தில் எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. இவற்றை நிறைவேற்ற எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படுவதில்லை. [1] கோரிக்கைகள் நிறைவேறியதும் நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்கின்றார்கள்.

இவ்வகையான நேர்த்திக் கடன்களை மூன்றாக பிரித்துக் கொள்கின்றனர். [2]

 1. உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்
 2. பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்
 3. உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்

உடலை வருத்தும் நேர்த்திக் கடன்கள்

[தொகு]

பெரு தெய்வ வழிபாட்டில் தங்கத்தேர் இழுத்தல், இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் செய்வித்தல், துலாபாரம் இடுதல் போன்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன. இந்த வகை நேர்த்திக் கடன்கள் பெரும்பாலும் உடல் துயருரா நிலையில் இருக்கும். ஆனால் சிறு தெய்வ வழிபாட்டிற்கென உள்ள சில நேர்த்திக் கடன்கள் உடலை வருத்தி செய்யப்படுபவனவாகும். சிறு மற்றும் பெரு தெய்வ வழிபாட்டிற்கு பொதுவான நேர்த்திக் கடன்களும் உள்ளன. மண்சோறு சாப்பிடுதல், அலகு குத்துதல், பால்குடம், காவடி எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற எண்ணற்ற நேர்த்திக் கடன்கள் உள்ளன.[3]

பொருளாக அளி்க்கப்படும் நேர்த்திக் கடன்கள்

[தொகு]
 • அங்கமளித்தல் - கண்மலர், கை, கால் போன்ற உலோக அங்கங்களை செலுத்துதல்
 • கால்நடை அளித்தல் - ஆடு மாடு கோழி போன்ற கால்நடைகளை கோயிலுக்கு அளித்தல்
 • கோவில் மணி கட்டுதல் - வேண்டுதலுக்கு தக்கபடி சிறிய, பெரிய மணிகளை கோவிலில் கட்டுதல்
 • வேல் வாங்கி செலுத்துதல் - வேல், அரிவாள் போன்ற ஆயுதங்களை கோயிலுக்கு அளித்தல்
 • தொட்டில் கட்டுதல் - குழந்தை வரம் வேண்டி பால் மரங்களில் தொட்டில் கட்டுதல்.
 • மண்பொம்மை செலுத்துதல் - மண்குதிரை, கன்றுடன் கூடிய பசு போன்ற மண்பொம்மைகளை கோயிலில் வைத்தல்
 • உருவ பொம்மை செலுத்துதல் - தவழும் குழந்தை, ஆண்-பெண் பொம்மை போன்றவற்றை கோயிலில் செலுத்துதல்
 • கோவிலை புதுப்பித்தல்


உயிர்ப்பலியாக அளிக்கப்படும் நேர்த்திக் கடன்கள்

[தொகு]
 • பலியிடுதல் - ஆடு மாடு கோழி போன்ற உயிர்களை வெட்டி பலியிடுதல். சில இடங்களில் பன்றி போன்ற விலங்குகளிலும் பலியிடப்படுகின்றன.
 • குருதி கொடுத்தல்
 • கோழி குத்துதல் - கோழியை கோயிலின் முன்னுள்ள வேலில் உயிரோடு குத்துதல்.


மேலும் சில நேர்த்திக் கடன்கள்

ஆதாரங்கள்

[தொகு]
 1. நேர்த்திக் கடனை எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் - தினமலர் கோயில்கள்
 2. சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் தமிழாய்வு தளம்
 3. சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் தமிழாய்வு தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்த்திக்_கடன்&oldid=2587504" இலிருந்து மீள்விக்கப்பட்டது