அங்கமளித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கமளித்தல் என்பது அம்மனை வழிபடுகின்ற சாக்த மதப்பிரிவின் ஒரு வழிபாட்டு சடங்காகும். இந்த சடங்கில் பக்தர்கள், மனித உடல் உறுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ள தகடுகளை வாங்கி கோவிலின் உண்டியலில் செலுத்துகிறார்கள். [1]

பெண் உருவம் பொறித்த உருவ தகடு

உடல் உபாதை தருகின்ற உடல் உறுப்புக்கள் சரியாகினால் இவ்வாறு அங்கமளிப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். அந்த உபாதை தீர்ந்ததும் அந்த உடல் உறுப்புக்கு ஏற்ற தகடுகளை வாங்கி காணிக்கையாக செலுத்துகிறார்கள். இந்த வழிபாட்டு முறை பெண் தெய்வ வழிபாட்டு முறைகளில் மட்டுமே காணப்படுகிறது.

கண்மலர் மற்றும் உருவத்தகடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கூடை

ஆதாரங்கள்[தொகு]

  1. சிறுதெய்வ வகைப்பாடு- தமிழாய்வு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கமளித்தல்&oldid=3726616" இலிருந்து மீள்விக்கப்பட்டது