உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதட்சணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் கருவறையை வலம் வருதல் (சிவப்பு நிறத்தில்)
கோயிலை வலம் வருதல்
பௌத்த பிக்குகள் தூபியை வலம் வருதல்
தூபியை வலம் வருதல், சீனா

பிரதட்சணம் என்பது இந்து சமயக் கோயில்களை வலம் வருகின்ற முறையாகும். [1] இந்த பிரதட்சண முறையை அறிமுகம் செய்தவர் விநாயகர். கோயிலை வலம் வருவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும். அம்மன் கோயில்களில் வேப்பிலை ஆடைப் பிரதட்சணம் முறையும், சிவாலயங்களில் சோம சூக்தப் பிரதட்சண முறையும் தனித்துவமானவை.[1]

தொன்மம்

[தொகு]

நாரதர் கொடுத்த மாம்பழத்திற்காக சிவ பார்வதி மகன்களான விநாயகருக்கும், முருகருக்கும் போட்டி ஏற்பட்டது. சிவபெருமான் நடுவராக இருந்து, முதலில் உலகை சுற்றிவருபவருக்கே மாம்பழம் என்றுரைத்தார். அதனால் முருகன் உலகை தன்னுடைய வாகனமான மயிலின்மீது ஏறி சுற்றினார். ஆனால் விநாயகர் தன்னுடைய பெற்றோர்களான பார்வதி மற்றும் சிவபெருமானை வலம் வந்து வணங்கினார். பெற்றோரை வணங்குவது உலகை வணங்குவதற்கு சமம் என்றுரைத்தார். அவரது செயல்பாட்டால் மகிழ்ந்த சிவபெருமான் மாம்பழத்தை விநாயகருக்கே கொடுத்தார். இந்நிகழ்வே முதன் முதலாக ஏற்பட்ட பிரதட்சணமாக கருதப்படுகிறது. ஆலய பிரதட்சண முறையை விநாயகரே அறிமுகம் செய்தார். [1]

வகைகள்

[தொகு]

பிரதட்சணத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன.[1]

பலன்கள்

[தொகு]

இந்து சமய கோயில்களை எண்ணிக்கை அடிப்படியில் பிரதட்சணம் செய்ய வேண்டும் என்பதும், அவ்வாறு செய்யப்படுகின்ற பிரதட்சணங்களுக்கு தனிப்பட்ட பலன் உண்டு என்பதும் நம்பிக்கையாகும்.[2]

  • மூன்று முறை - விரும்பிய காரியம் நிறைவேறும்
  • ஐந்து முறை - காரிய வெற்றி
  • ஏழு முறை - நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி
  • ஒன்பது முறை - குழந்தைப் பேறு
  • பதினொரு முறை - ஆயுள் விருத்தி
  • பதினைந்து முறை - செல்வம் பெருகும்
  • ஆயிரத்து எட்டு முறை - விரும்பிய பெண் மனைவியாகக் கிடைப்பாள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 http://temple.dinamalar.com/news_detail.php?id=21519
  2. http://temple.dinamalar.com/New.php?id=642
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதட்சணம்&oldid=3756693" இலிருந்து மீள்விக்கப்பட்டது