கூர்ம புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூர்ம புராணம் (சமஸ்கிருதம்: पुराण, கூர்ம புராணா) என்பது பதினெண் புராணங்களில் பதினைந்தாவது புராணமாகும். கூர்ம புராணம் தமிழில் அதிவீர ராம பாண்டியன் என்னும் மன்னனால் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.[1]

காலம் 16ஆம் நூற்றாண்டு. திருமால் கூர்மாவதாரம் எடுத்து சிவனுடைய பெருமையை மக்களுக்கு உரைத்த செய்தியை இது கூறுகிறது. இது பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று இரு பகுதிகளாக உள்ளது. பூர்வ காண்டத்தில் 48 அத்தியாயங்களும், 2729 பாடல்களும் உள்ளன. உத்தர காண்டத்தில் 47 அத்தியாயங்களும் 899 பாடல்களும் உள்ளன, வடமொழியிலுள்ள கூர்ம புராணத்தை இவர் தமிழில் செய்தார் என இந்த நூலின் பாயிரப்பாடல் குறிப்பிடுகிறது.

நூலில் கூறப்படும் சில செய்திகள்
 • ஆசிரியரின் குரு ‘சுவாமி தேவன்’ வணக்கம் உள்ளது.
 • சிவனது வீரச் செயல்கள், சிவ வழிபாட்டுக் கிரியைகள் முதலானவை இதில் சொல்லப்படுகின்றன.
 • பிரபஞ்சம், பிருகு, புலத்தியன், சூரியன், சந்திரன், மனு என்று தோற்ற வரலாறுகள் சொல்லப்படுகின்றன
தமிழில் முந்துநூல்
பதிப்பு
 • கூர்ம புராணம் பூருவ காண்டமும் உத்தர காண்டமும் தனித்தனி நூல்கள், தஞ்சை சரஸ்வதி மகால் நூல்நிலைய வெளியீடு. 1961-63,

வடமொழியிலுள்ள கூர்மபுராணம் 9,000 கிரந்தங்களால் ஆனது. இது கூர்ம அவதாரம் எடுத்த திருமால், இந்திரத்துய்மனுக்கும் மற்ற முனிவர்களுக்கும் உபதேசித்த மகா புராணம் எனப்படுகிறது. இந்து மதத்தின் பதினெண் புராணங்களுள் இதுவும் ஒன்றாகும்.

அடிக்குறிப்பு[தொகு]

 1. அதிர் பொலங் கழற்கால் அடல் அதிவீரன்
  அரில் தபத் தெரிந்து நன்கு இசைத்த
  முது தமிழ்க் கூர்ம புராணம் முற்றுணர்ந்தோர்
  முத்தி வீட்டு இனிது வீற்றிருப்பர் – நூலின் இறுதிப் பாடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்ம_புராணம்&oldid=3436419" இலிருந்து மீள்விக்கப்பட்டது