உள்ளடக்கத்துக்குச் செல்

சனகாதி முனிவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனகாதி முனிவர்கள்
தேவநாகரிसनकादि ऋषि
வகைவிஷ்ணுவின் முனி அவதாரங்கள்
இடம்ஜன லோகம்
சின்முத்திரை காட்டி யோக நிலையில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் சனகாதி முனிவர்கள் மெளன நிலையிலேயே ஆத்ம தத்துவத்தை அறிகிறார்கள்

தொடரின் ஒரு பகுதி
இந்து தொன்மவியல்

இந்து சுவஸ்திகா
மூலங்கள்

வேதங்கள் · உபநிடதம்  · பிரம்ம சூத்திரம்  · பகவத் கீதை · புராணங்கள் · இதிகாசங்கள்

வேத தொன்மவியல்

ரிக் வேதம் · சாம வேதம் · யசூர் வேதம் · அதர்வண வேதம்

இராமாயணம் · மகாபாரதம்

திருப்பாற்கடல் · வைகுந்தம்  · கைலாயம்  · பிரம்ம லோகம்  · இரண்யகர்பன்  · சொர்க்கம் · பிருத்வி  · நரகம் · பித்துரு உலகம்

மும்மூர்த்திகள் · பிரம்மன் · திருமால் · சிவன் · சரஸ்வதி  · திருமகள்  · பார்வதி · விநாயகர் · முருகன்

புராண - இதிகாச கதைமாந்தர்கள்

சனகாதி முனிவர்கள்  · பிரஜாபதிகள்  · சப்த ரிசிகள் · பிருகு · அத்திரி  · கௌதமர் · காசிபர் · வசிட்டர் · அகத்தியர் · ஜமதக்கினி  · தட்சன் · வால்மீகி · அரிச்சந்திரன்  · ராமர் · சீதை · இலட்சுமணன் · அனுமான்  · இராவணன்  · புரூரவன்  · நகுசன்  · யயாதி  · பரதன்  · துஷ்யந்தன் · வியாசர்  · கிருஷ்ணர்  · பீஷ்மர் · பாண்டவர்கள்  · கர்ணன்  · கௌரவர்  · விதுரன்  · பாண்டு  · திருதராட்டிரன் காந்தாரி  · குந்தி ·


சனகாதி முனிவர்கள் அல்லது பிரம்ம குமாரர்கள் (Four Kumaras) என்பவர்கள் பூவியில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக, பிரம்மாவின் மனதால் படைக்கப்பட்ட நான்கு ஆண் குழந்தைகள் ஆவர். ஆனால் தங்களை படைத்த பிரம்மாவின் விருப்பத்தை மீறி, இக்குமாரர்கள், இல்லற வாழ்வில் புகாது, பிரம்மச்சர்ய ஆசிரம வாழ்வை மேற்கொண்டு அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பி வந்தனர் என இந்து சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வாயிலாக அறிய முடிகிறது.[1][2] பொதுவாக சனகாதி முனிவர்கள், சனகர், சனாநந்தர், சனத்குமாரர் மற்றும் சனாதனர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள்.

சைவ சமயத்தில்

[தொகு]

யோக நிலையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியிடம், சனகாதி முனிவர்கள், ஆத்ம வித்தை மெளனமாக அறிந்தவர்கள்.

உபநிடதம் மற்றும் மகாபாரத்தில் சனத்குமாரர்

[தொகு]

சாந்தோக்கிய உபநிடதத்தில், பிரம்மத்தை அறிய பூமா வித்தியாவை அருளியதன் மூலம், பிரம்ம தத்துவத்தை, சனத்குமாரர் எல்லாம் அறிந்த நாரதருக்கு புகட்டினார்.

மகாபாரத இதிகாசத்தில், விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க, உத்யோக பருவத்தில், அத்தினாபுர மன்னன் திருதராஷ்டிரனுக்கு மரணமில்லா பெரு வாழ்வு குறித்தான ஆத்ம வித்தையை சனத்குமாரர் அருளினார். சனத்குமாரரின் இந்த அருளரைகளை சனத்சுஜாதீயம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

மகாபாரத்தின் சாந்தி பருவத்தில், சுக்கிரன் மற்றும் விருத்திராசூரன் ஆகியவர்களுக்கு பிரம்ம வித்தையை அருளியதாக தகவல் உள்ளது.

பாகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றில் சனகாதி முனிவர்கள், விஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bhaktivedanta VedaBase: Srimad Bhagavatam 3.12". Vedabase.net. Archived from the original on 2 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. D Dennis Hudson (25 September 2008). The Body of God:An Emperor's Palace for Krishna in Eighth-Century Kanchipuram: An Emperor's Palace for Krishna in Eighth-Century Kanchipuram. Oxford University Press. pp. 355–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-536922-9. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனகாதி_முனிவர்கள்&oldid=4057216" இலிருந்து மீள்விக்கப்பட்டது