பித்துரு உலகம்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
பித்துரு உலகம் அல்லது பித்ரு லோகம் (Pitru loka) என்பது இந்து தர்மத்தின் படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும்.[1]இதனை பிரேத லோகம் என்றும் அழைப்பர்.[2] பித்துரு லோகம் பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும்[3] [4] நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம் 5, அத்தியாயம் 24) கூறுகிறது.[5]
இந்து சமய நம்பிக்கைகளின் படி, உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய - பாவ கர்மவினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, செய்த பாவ - புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்துரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருப்பர். பித்துரு லோகத்தினர் முற்பிறவியில் செய்த கருமவினைகளுக்கு ஏற்ப, மீண்டும் மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு பிறவியாகவோ பிறப்பர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ SOUL'S JOURNEY AFTER DEATH
- ↑ Preta loka (world of Spirits
- ↑ http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=82[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ அந்தரிட்சம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "SRIMAD BHAGAVATA by Krsna-Dwaipayana Vyasa" (PDF). Archived from the original (PDF) on 2017-01-10. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
வெளி இணைப்புகள்
[தொகு]- Birth and Death பரணிடப்பட்டது 2016-09-10 at the வந்தவழி இயந்திரம்