மனனம் (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனனம் என்பது குருவிடமிருந்து மற்றும் வேத வேதாந்த சாத்திரங்களிலிருந்து கேட்கப்பட்ட இரண்டற்ற பிரம்மத்தைக் குறித்து, வேதாந்தம் ஏற்றுக் கொள்ளும் யுக்திகளின் மூலமாக எப்பொழுதும் பிரம்மத்தைக் குறித்து சிந்திப்பதாகும்.[1]

மனனம் என்பதற்கு சிந்திப்பது, ஆலோசிப்பது என்பது பொருள். ஆனால் இங்கு மனனம் என்னும் சொல்லானது பரிபாஷையாக (மறைமுகமாக உணர்த்தும் சொல்) பயன்படுத்தப்படுகிறது. இதில் மூன்று அம்சங்கள் உள்ளன.

  • வேதத்தின் மூலமும், குருவின் மூலமும் உபதேசிக்கப்பட்ட இரண்டற்ற பிரம்மவஸ்துதான் இங்கு மனனத்திற்கு எடுத்துக் கொண்ட பொருளாகும்.
  • சிந்திப்பதை எப்பொழுதும் இடைவிடாமல் செய்ய வேண்டும் என்று தட்சஸ்மிருதியானது, ஒரு சந்நியாசியின் அன்றாடச் செயல் என்று விளக்கியுள்ளது.
  • மேலும் “உறக்கம் வரும் வரையிலும், மரணம் நெருங்கும் வரையிலும் வேதாந்தச் சிந்தனையில் ஒரு சந்நியாசி காலத்தை கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனனம்_(இந்து_சமயம்)&oldid=3913724" இலிருந்து மீள்விக்கப்பட்டது