வசுகுப்தர்
வசுகுப்தர் சைவ சமயத்தின் பிரிவுகளில் ஒன்றான காசுமீர சைவத்தின் நிறுவனராவார். இவரது காலம் கி.பி 860–925 என்று சொல்லப்படுகிறது.
சிவசூத்திரம்
[தொகு]வசுகுப்தர் சிவசூத்திரம் எனும் நூலை எழுதியுள்ளார்.[1][2] இந்நூல் காசுமீர சைவத்தின் முதல் நூலாகும். இந்நூலில் காசுமீர சைவம் குறித்தான எழுபத்தேழு சூத்திரங்கள் உள்ளன. இந்நூலை சிவபெருமானே வசுகுப்தருக்கு கூறி எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.[1]
வசுகுப்தருக்கு சிவபெருமானே சிவசூத்தரம் நூலை தந்தார் என்பதற்கு பல்வேறு தொன்மங்கள் கூறப்படுகின்றன. வசுகுப்தர் மகாதேவ சிகரத்தின் அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து தவம் செய்தார். அ்பபோது சிவபெருமான் தோன்றி தான் ஒரு பாறையின் மீது சிவசூத்திரத்தினை பொறித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். வசுகுப்தர் அப்பாறையைத் தொட்டதும், அப்பாறையானது புரண்டு சிவசூத்தரங்களை காட்டியதாக கூறப்படுகிறது.[1]
சிவசூத்திரற்கு விளக்கம்
[தொகு]வசுகுப்தரின் மாணாக்கர் கல்லாடர் என்பராவார்.[1] இவர் தன்னுடைய குருநாதரின் சிவசூத்திரத்திற்கு பொருளை விளக்கி ஸ்பந்த சர்வஸ்வம் எனும் நூலை இயற்றியுள்ளார்.[1]