தாவீதின் கல்லறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாவீது அரசர் கல்லறை
எபிரேயம்: קבר דוד המלך
Jerusalem Tomb of David BW 1.JPG
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Old Jerusalem" does not exist.
மாற்றுப் பெயர்தாவீதின் கல்லறை
இருப்பிடம்எருசலேம்
பகுதிஇசுரேல்
ஆயத்தொலைகள்31°46′18″N 35°13′46″E / 31.77170°N 35.22936°E / 31.77170; 35.22936
வகைகல்லறை
வரலாறு
கலாச்சாரம்அயூபிட், எபிரேயம், பைசாந்தியம், சிலுவைப் போர்கள்

தாவீது அரசர் கல்லறை அல்லது தாவீதின் கல்லறை (King David's Tomb; எபிரேயம்: קבר דוד המלך‎) என்பது 12 ஆம் நூற்றாண்டில் உருவான பாரம்பரியத்தின்படி இசுரயேல் அரசரான தாவீது அரசர் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இது எருசலேமின் சீயோன் மலையில் அமைந்துள்ளது. இக்கல்லறை முன்னாள் பைசாந்திய தேவாலயமான "ககியா சியோன்" அமைந்திருந்த மூலைப் பகுதியி உள்ள கீழ்த்தளத்தில் அமைந்துள்ளது. பழைய பைசாந்திய பாரம்பரியம் 4 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியதும், கிறித்தவ விசுவாசத்தின் மூல சந்திப்பு இடமாக "இயேசுவின் மேல் அறை" என அடையாளங் காணப்பட்டது. இக்கட்டடம் தற்போது "புலம்பெயர் யெசிவா"வின் பகுதியாகவுள்ளது.

வரலாறு[தொகு]

கல்லறை "ககியா சீயோன்" என்ற பழைய ஆராதனை இல்லத்தின் எச்சங்களின் கீழ்ததள அறையின் மூலையில் அமைந்துள்ளது. இக்கட்டத்தின் மேல் தளம் இயேசுவின் மேல அறை என பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. தாவீது அடக்கம் செய்யப்பட்ட இடம் தெரியாதெனினும், டனாக் சீலோவாமுக்கு அண்மையில் தாவீதின் நகரின் தெற்குப் பக்கம் எனக் காட்டுகிறது. கி.பி 4 ஆம் நூற்றாண்டில், தாவீதும் அவருடைய தந்தையும் பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. பின்னர் சீயோன் மலை என கி.பி 9 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கருத்து காணப்பட்டது.[1] துடேலா பெஞ்சமின் 1173 இல் எழுதிய எழுத்துப்படைப்பு இதுபற்றிய மீள் விபரிப்புக்குட்படுத்தியது. இரு யூதத் தொழிலாளிகள் தாவீதின் மூல அரண்மனைக்கு குறுக்காக சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்தபோது, பொன்னால் நிறைந்த முடியையும் செங்கோலையும் கண்டுபிடித்ததால் அவ்விடம் தாவீதின் கல்லறையாக இருக்க வேண்டும் என்ற தீர்மானிக்கச் செய்தது. தற்போது பாதுகாக்கப்பட்டுள்ள கோதிக் வெறுங்கல்லறை சிலுவைப் போர் வீரர்களால் கட்டப்பட்டது.[1] சாமுவேல் நூலின்படி சீயோன் மலை தாவீதினால் வெற்றி கொள்ளப்பட்டது என்பதால் மத்தியகால யாத்திரிகர்களால் இவ்விடம் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டு, இங்குதான் அடக்கம் செய்யப்பட்டார் என கருதப்பட்டது.[1] 1335 இல், பழைய தேவாலயம் பிரான்சிஸ்கன் சபையின் துறவியர் மடமாக மாறியதாயினும், கிரேக்க மரபுவழித் திருச்சபைத் தலைமைக் குருக்களுடனான பதட்டம் காரணமாக பிரான்சிஸ்கன் வாசிகள் இவ்விடத்தை மூடிவிட்டனர்.

எருசலேமிலுள்ள பிரான்சிஸ்கன் துறவியர் மடம் தற்போதுள்ள தாவீது அரசர் கல்லறைத் தொகுதியில் 16 ஆம் நூற்றாண்டில் அமைந்திருக்கவில்லை. அது ஒரு துறவியர் மடமாக அல்ல, மாறாக சிறிய துறவியர் மட அறையாக, தற்போதுள்ள தாவீதின் கல்லறையின் மேற்குப் பகுதியில் இறுதி இரவுணவு இடமாகக் கருதப்பட்டது. துறவியர் கழிவுகளை இன்றுள்ள கல்லறைத் தொகுதியில் கிழக்குப் பகுதியில் எறிவதற்குப் பயன்படுத்தினார்கள். சரிப் அஃமட் தயானி என்பவர் இன்று தாவீது அரசரின் கல்லறையப் பக்கம் கவனித்தில் கொள்ளப்படாமல் இருந்த கிழக்குப் பகுதியை துப்புரவு செய்து, 1490 களில் கட்டி முடித்தார். அவர் தற்போதுள்ள தொகுதியின் கிழக்குப் பகுதியில் முசுலிம் தொழுகைக்கான இடத்தை உருவாக்கினார். 1524 இல் எருசலேம் குடியிருப்பாளர்களால் பிரான்சிஸ்கன்கள் மலையிலிருந்து வெளியே அப்புறப்படுத்தப்பட்டனர். எருசலேம் குடியிருப்பாளர்களால் சரிப் அஃமட் தயானிக்கு வழங்கப்பட்ட பெயரான "இபன் டாவூட்" என்ற பெயரைக் கொண்ட முசுலிம் தொழுகைக்கான பள்ளிவாசலை சுல்தான் சுலைமான் என்பவரின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

ஆள்கூற்று: 31°46′17.9″N 35°13′44.45″E / 31.771639°N 35.2290139°E / 31.771639; 35.2290139

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீதின்_கல்லறை&oldid=2144753" இருந்து மீள்விக்கப்பட்டது