இசுரேல் தேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்ணிக்கை 34, எசேக்கியேல் 47 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இசுரேல் தேசத்தின் எல்லைகள்.

இசுரேல் தேசம் (எபிரேயம்: אֶרֶץ יִשְׂרָאֵל, Land of Israel) என்பது தென் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியினால் சூழப்பட்ட பிரதேசத்தினைக் குறிக்கப்பயன்படும் பெயராகும். இது கானான், பாலஸ்தீனம், வாக்களிக்கப்பட்ட நாடு, அல்லது புனித பூமி எனவும் அழைக்கப்படும். சமய நம்பிக்கையுள்ள யூதர்கள் இப் பகுதி கடவுளால் யூத மக்களுக்கு உடைமையாக்கிக் கொள்ள கொடுக்கப்பட்டது என, தோராவின் அடிப்படையில், குறிப்பாக ஆதியாகமம், யாத்திரையாகமம் மற்றும் இறைவாக்கினர்களின் நூல்களின் அடிப்படையில் நம்புகின்றனர்.[1] ஆதியாகமத்தின்படி, கடவுளினால் ஆபிரகாமுக்கும், அவருடைய மகன் ஈசாக்குக்கும், அவருடைய மகன் யாக்கோபுக்கும், அவர்களின் சந்ததியினரான இசுரேலியர்களுக்குக் அத் தேசம் வாக்களிக்கப்பட்டது.[2]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரேல்_தேசம்&oldid=2229769" இருந்து மீள்விக்கப்பட்டது