மன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னா
Manna
Tissot The Gathering of the Manna (color).jpg
மன்னாவைச் சேகரித்தல் - ஜேம்ஸ் டிஸ்சட்டின் ஓவியம்
மாற்றுப் பெயர்கள்மனா
வகைவெதுப்பி

மன்னா அல்லது மனா அல்லது மன்னு என்பது விவிலிய நூலில் யாத்திராகமம் நூலில் கூறப்பட்டுள்ள இசுரவேலருக்காக பாலைவனத்தில் அதியசமாக உருவாக்கப்பட்ட உணவாகும். திருக்குர்ஆனில் இது மன்னு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட நாட்டில் முதலாவது அறுவடை செய்த போது மன்னா பொழிவது நின்றுப்போனது. "மன் வு" அல்லது "மன்னா என்ற" எபிரேய மொழிப் பதம் "இது என்ன?" என மொழிப் பெயர்க்கப்படும். மொழியியலாளர் யோர்ஜ் கொசென் என்பவர் இப்பதம் உணவு என்ற பொருளுடைய எகிப்திய "மென்னுயு" என்ற சொல்லின் மறு வடிவம் என் கருதுகின்றார்[1]. மன்னா என்பது இன்று ஆன்மீகக் கொடைகளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

யூத-கிறித்தவ-இசுலாமிய சமயங்களின் படி, மன்னா அதிசயமாக கடவுளால் இசுரவேலருக்கு அவர்களது 40 ஆண்டு பாலைவன வாழ்க்கையில் கொடுக்கப்பட்டதாகும். அது இரவில் பனி போலப் பொழிந்தது. மேலும் அது கொத்துமல்லி விதையளவாகவும் முத்துப் போன்ற நிறமாகவும் காணப்பட்டது[2] அது சூரிய வெப்பத்தால் உருகிப்போக முன்பாக சூரியோதயத்துக்கு முன்பாக சேகரிக்கப்பட்டது. அவகள் அதை சேகரித்து அரைத்து அல்லது இடித்து சமைத்தனர்[3]. சபாத்துக்கு முதல் நாள் இரட்டிப்பான அளவு மன்னா பொழிந்தது சபாத் நாளில் மன்னா பொழியவில்லை. இஸ்ரவேலர் கிகால் என்னும் இடத்துக்கு வந்து நிசான் மாதாம் 14 ஆம் நாள் அங்கு அறுவடை செய்யப்பட்ட தானியங்களை உண்ட போது மன்னு பொழிவது நின்றுப்போனது.

ஆதாரம்[தொகு]

  1. Durch Gosen zum Sinai, 1881, p. 236
  2. எண்ணாகமம் 11:7
  3. எண்ணாகமம் 11:8
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னா&oldid=2048724" இருந்து மீள்விக்கப்பட்டது