உரோமைப் பேரரசு
உரோமைப் பேரரசு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ஊ.மு. 27 – பொ.ஊ. 395 (ஒன்றுபட்ட பேரரசு)[2] பொ.ஊ. 395 – பொ.ஊ. 476/480 (மேற்கு உரோமைப் பேரரசு) பொ.ஊ. 395 – பொ.ஊ. 1453 (கிழக்கு உரோமைப் பேரரசு) | |||||||||||
நிலை | பேரரசு | ||||||||||
தலைநகரம் |
| ||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||
சமயம் |
| ||||||||||
மக்கள் | உரோமானியர் | ||||||||||
அரசாங்கம் | உரிமை ரீதியில் குடியரசு, நடைமுறை ரீதியில் பகுதியளவு தேர்ந்தெடுக்கப்பட்ட முழுமையான முடியரசு | ||||||||||
பேரரசர் | |||||||||||
• பொ. ஊ. மு. 27 – பொ. ஊ. 14 | அகத்தசு (முதல்) | ||||||||||
• 98–117 | திராயான் | ||||||||||
• 138–161 | அந்தோனியசு பையசு | ||||||||||
• 270–275 | அரேலியன் | ||||||||||
• 284–305 | தியோக்லெதியன் | ||||||||||
• 306–337 | முதலாம் கான்ஸ்டன்டைன் | ||||||||||
• 379–395 | முதலாம் தியோடோசியஸ்[d] | ||||||||||
• 474–480 | யூலியசு நெபோசு[e] | ||||||||||
• 475–476 | உரோமுலசு அகத்தசு | ||||||||||
• 527–565 | முதலாம் ஜஸ்டினியன் | ||||||||||
• 610–641 | எராக்கிளியசு | ||||||||||
• 780–797 | ஆறாம் கான்சுடான்டைன்[f] | ||||||||||
• 976–1025 | இரண்டாம் பாசில் | ||||||||||
• 1143–1180 | முதலாம் மானுவேல் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரியக் காலம் முதல் பிந்தைய நடுக் காலம் | ||||||||||
• அக்தியம் போர் | பொ. ஊ. மு. 32 – பொ. ஊ. மு. 30 | ||||||||||
• பேரரசு நிறுவப்பட்டது | 30 – 2 பொ. ஊ. மு. | ||||||||||
• ஆக்தேவியனுக்கு அகத்தசு என்று பெயரிடப்பட்டது | 16 சனவரி, 27 பொ. ஊ. மு. | ||||||||||
• கான்ஸ்டண்டினோபில் தலைநகரானது | 11 மே 330 | ||||||||||
• இறுதி கிழக்கு-மேற்குப் பிரிவு | 17 சனவரி 395 | ||||||||||
• உரோமுலசு அகத்தசு பதவி நீக்கப்படுதல் | 4 செப்டம்பர் 476 | ||||||||||
• யூலியசு நெபோசின் கொலை | 9 மே 480 | ||||||||||
• நான்காம் சிலுவைப் போர் | 12 ஏப்ரல் 1204 | ||||||||||
• கான்சுடான்டினோப்பிள் மீண்டும் கைப்பற்றப்படுதல் | 25 சூலை 1261 | ||||||||||
29 மே 1453 | |||||||||||
• திரெபிசோந்தின் வீழ்ச்சி | 15 ஆகத்து 1461 | ||||||||||
பரப்பு | |||||||||||
பொ. ஊ. மு. 25[6] | 2,750,000 km2 (1,060,000 sq mi) | ||||||||||
பொ. ஊ. 117[6][7] | 5,000,000 km2 (1,900,000 sq mi) | ||||||||||
பொ. ஊ. 390[6] | 3,400,000 km2 (1,300,000 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• பொ. ஊ. மு. 25[8] | 5,68,00,000 | ||||||||||
நாணயம் | செசுதேர்தியசு,[g] அரேயசு, சோல்தியசு, நோமிசுமா | ||||||||||
|
உரோமைப் பேரரசு (Roman Empire) என்பது பண்டைய உரோமின் குடியரசு காலத்துக்குப் பிந்தைய காலம் ஆகும். ஓர் அரசியல் அமைப்பாக ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் மேற்கு ஆசியாவின் நடு நிலக் கடலைச் சுற்றி இருந்த பகுதிகளில் பரந்த நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது. இதைப் பேரரசர்கள் ஆண்டனர். முதலாவது உரோமைப் பேரரசராகச் சீசர் அகத்தசின் பொறுப்பேற்பு முதல், 3ஆம் நூற்றாண்டின் இராணுவ, அரசற்ற நிலை வரை இது உரோமை இத்தாலியை இதன் மாகாணங்களின் முதன்மைப் பகுதியாகக் கொண்டிருந்தது. உரோம் நகரம் இதன் ஒரே தலைநகராக இருந்தது. இப்பேரரசானது பிறகு பல பேரரசர்களால் ஆளப்பட்டது. அவர்கள் மேற்கு உரோமைப் பேரரசு மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசின் கட்டுப்பாட்டைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். உரோம் நகரமானது இந்த இரண்டு பேரரசுகளின் பெயரளவிலான தலைநகரமாகத் தொடர்ந்திருந்தது. இந்நிலை பொ. ஊ. 476 வரை நீடித்தது. அந்த ஆண்டு ஏகாதிபத்திய முத்திரையானது மேற்குத் தலைநகரமான இராவென்னாவைச் செருமானியக் காட்டுமிராண்டிகள் கைப்பற்றியதற்குப் பிறகு கான்ஸ்டான்டினோபிலுக்கு அனுப்பப்பட்டது. பொ. ஊ. 380இல் உரோமைப் பேரரசின் அரசு சமயமாக கிறித்தவம் பின்பற்றப்பட்டது மற்றும் செருமானிய மன்னர்களிடம் உரோமைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது ஆகியவை பாரம்பரியக் காலத்தின் முடிவையும், நடுக் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கின்றன. இந்த நிகழ்வுகள் மற்றும் கிழக்கு உரோமைப் பேரரசு படிப்படியாக எலனிய மயமாக்கப்பட்டது ஆகிய காரணங்களால் கிழக்குப் பகுதிகளில் நீடித்திருந்த நடுக் கால உரோமைப் பேரரசை பிரித்து அறிவதற்காக வரலாற்றாளர்கள் அப்பேரரசைப் பைசாந்தியப் பேரரசு என்று குறிப்பிடுகின்றனர்.
உரோமைப் பேரரசுக்கு முன்னர் இருந்த அரசான உரோமைக் குடியரசானது உள்நாட்டுப் போர்கள் மற்றும் அரசியல் சண்டைகளால் கடுமையாக உறுதித் தன்மை குலைந்திருந்தது. பொ. ஊ. மு. 1ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யூலியசு சீசர் நிரந்தரச் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். பிறகு பொ. ஊ. மு. 44இல் அரசியல் கொலை செய்யப்பட்டார். உள்நாட்டுப் போர்களும், நாடு கடத்தல்களும் தொடர்ந்தன. பொ. ஊ. மு. 31ஆம் ஆண்டு அக்தியம் யுத்தத்தில் மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபாற்றாவுக்கு எதிராக ஆக்தேவியனின் வெற்றியில் இப்பிரச்சினைகள் இறுதியாக உச்சத்தை அடைந்தன. அதைத் தொடர்ந்த ஆண்டில் ஆக்தேவியன் எகிப்தின் தாலமி இராச்சியத்தை வென்றார். பொ. ஊ. மு. 4ஆம் நூற்றாண்டில் அலெக்சாந்தரின் படையெடுப்புகள் மூலம் தொடங்கிய எலனியக் காலத்தை முடித்து வைத்தார். ஆக்தேவியனின் சக்தியானது அதிகமாகியது. உரோமை செனட் சபையானது ஒட்டு மொத்த சக்தியையும், அகத்தசு என்ற புதிய பட்டத்தையும் அவருக்கு வழங்கியது. அவரை முதல் உரோமைப் பேரரசர் ஆக்கியது. இத்தாலி தவிர்த்த பரந்த உரோமை நிலப்பரப்புகள் செனட் மற்றும் ஏகாதிபத்திய மாகாணங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. இத்தாலி தொடர்ந்து முதன்மை நிலமாக இருந்தது.
உரோமைப் பேரரசின் முதல் இரண்டு நூற்றாண்டுகளானது அதற்கு முன்னர் கண்டிராத நிலைத் தன்மையையும், செழிப்பையும் உடைய காலத்தைக் கண்டது. இது பாக்ஸ் உரோமானா (பொருள்: உரோமை அமைதி) என்று அறியப்படுகிறது. உரோம் அதன் உச்சபட்ச நிலப்பரப்பு விரிவாக்கத்தை திராயனின் (பொ. ஊ. 98–117) ஆட்சியின் போது அடைந்தது. கமதசுவின் (பொ. ஊ. 177–192) ஆட்சியில் அதிகரித்து வந்த பிரச்சினைகளுடன், வீழ்ச்சிக் காலமானது தொடங்கியது. 3ஆம் நூற்றாண்டில் பேரரசின் நிலையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ஒரு பிரச்சனையின் கீழ் இது சென்றது. அது கெளல் மற்றும் பல்மைரேனியப் பேரரசுகள் உரோமைச் செனட் சபையில் இருந்து பிரிந்து சென்றது ஆகும். பெரும்பாலும் உரோமை இலீசியன்களை சேர்ந்த ஒரு தொடர்ச்சியான, குறுகிய காலமே பதவி வகித்த பேரரசர்கள் பேரரசுக்குத் தலைமை தாங்கினர். அரேலியனுக்குக் (பொ. ஊ. 270–275) கீழ் பேரரசு மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. இதை நிலைப்படுத்த தியோக்லெதியன் இரண்டு வெவ்வேறு ஏகாதிபத்திய அவைகளை கிரேக்கக் கிழக்கு மற்றும் இலத்தீன் மேற்கில் 286இல் அமைத்தார். பொ. ஊ. 313ஆம் ஆண்டின் மிலன் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பொ. ஊ. 4ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் சக்தி வாய்ந்த பதவிகளுக்கு உயர்ந்தனர். இதற்குப் பிறகு சீக்கிரமே இடம் பெயர்தல் காலத்தில் ஏற்பட்ட செருமானிய மக்கள் மற்றும் அட்டிலாவின் ஊணர்கள் ஆகியோரின் பெரிய படையெடுப்புகள் மேற்கு உரோமைப் பேரரசின் பலவீனத்திற்கு வழி வகுத்தன. செருமானிய எருலியர்களிடம் இராவென்னா வீழ்ந்தது மற்றும் பொ. ஊ. 476இல் ஒதோசரால் உரோமுலசு அகத்தசு பதவி நீக்கப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு மேற்கு உரோமைப் பேரரசு இறுதியாக வீழ்ந்தது. கிழக்கு உரோமைப் பேரரசர் செனோ அதிகாரப் பூர்வமாக பொ. ஊ. 480இல் இதைக் கலைத்தார். கிழக்கு உரோமைப் பேரரசானது மேலும் ஒரு 1,000 ஆண்டுகளுக்கு, 1453இல் இரண்டாம் மெகமுது தலைமையிலான உதுமானியத் துருக்கியர்களிடம் கான்ஸ்டான்டினோபில் வீழ்ந்தது வரை எஞ்சிப் பிழைத்திருந்தது.[i]
உரோமைப் பேரரசின் பரந்த நிலப்பரப்பு மற்றும் நீண்ட காலம் நீடித்திருந்த தன்மை ஆகியவற்றின் காரணமாக, உரோமின் அமைப்புகளும், பண்பாடும் இது அமைந்திருந்த நிலப்பரப்பில் மொழி, சமயம், கலை, கட்டடக் கலை, இலக்கியம், தத்துவம், நீதி மற்றும் அரசாங்க வகைகளின் வளர்ச்சி மீது ஆழ்ந்த மற்றும் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உரோமானியர்களின் இலத்தீன் மொழியானது நடுக்கால மற்றும் நவீன உலகின் உரோமானிய மொழிகளாகப் பரிணாமம் அடைந்துள்ளது. அதே நேரத்தில், நடுக் காலக் கிரேக்க மொழியானது கிழக்கு உரோமைப் பேரரசின் மொழியானது. பேரரசு கிறித்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கிய நிகழ்வு நடுக்காலக் கிறித்தவ உலகத்தின் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. இத்தாலிய மறுமலர்ச்சி மீது உரோமானிய மற்றும் கிரேக்கக் கலையானது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உரோமனெஸ்க், மறுமலர்ச்சி மற்றும் புதிய பாரம்பரியக் கட்டடக் கலை ஆகியவற்றுக்கு அடிப்படையாக உரோமின் கட்டடப் பாரம்பரியம் திகழ்கிறது. இஸ்லாமியக் கட்டடக் கலை மீதும் இது வலிமையான தாக்கத்தைக் கொண்டுள்ளது. நடுக்கால ஐரோப்பாவில் கிரேக்க மற்றும் உரோமானிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் மறு கண்டுபிடிப்பானது (இது இஸ்லாமிய அறிவியலுக்கும் அடிப்படையாக உள்ளது) அறிவியல் மறுமலர்ச்சி மற்றும் புரட்சிக்கு வழி வகுத்தது. உரோமைச் சட்டத் தொகுப்பானது பிரான்சின் நெப்போலியச் சட்டங்கள் உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பல நவீன நீதி அமைப்புகளைத் தனது வழித் தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உரோமின் குடியரசு அமைப்புகள் ஒரு நீடித்திருக்கக் கூடிய மரபை விட்டுச் சென்றுள்ளன. அவை நடுக் காலத்தின் இத்தாலிய நகர அரசுக் குடியரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஆரம்ப காலம் மற்றும் பிற நவீன சனநாயகக் குடியரசுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
வரலாறு
[தொகு]குடியரசிலிருந்து பேரரசாதல்
[தொகு]பொ. ஊ. மு. 6ஆம் நூற்றாண்டில் உரோமைக் குடியரசு நிறுவப்பட்டதற்குப் பிறகு, சிறிது காலத்தில் உரோமானது விரிவடையத் தொடங்கியது. எனினும், பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டு வரை இத்தாலிய மூவலந்தீவைத் தாண்டி இது விரிவடையவில்லை. அந்நேரத்திலேயே, இது பேரரசரைக் கொண்டிருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே "பேரரசாக" (அதாவது, ஒரு பெரிய சக்தி) இருந்தது.[10] தற்கால வரையறையின் படி, குடியரசானது ஒரு தேச அரசு கிடையாது. ஆனால், தங்களைத் தாமே ஆட்சி செய்ய விடப்பட்டிருந்த பட்டணங்கள் (உரோமை செனட் சபையிலிருந்து வேறுபட்ட அளவிலான சுதந்திரத்தை இவை கொண்டிருந்தன) மற்றும் இராணுவத் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்ட மாகாணங்களின் ஒரு தொடர்ச்சியான அமைப்பு ஆகும். இது பேரரசர்களால் ஆளப்படவில்லை. மாறாக, ஆண்டு தோறும் செனட் சபையுடன் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட நீதிபதிகளால் (எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் அயல்நாட்டுப் பேராளர்கள் ஆவர்) ஆளப்பட்டது.[11] பல்வேறு காரணங்களுக்காக, பொ. ஊ. மு. 1ஆம் நூற்றாண்டானது அரசியல் மற்றும் இராணுவ மாற்றத்தைக் கொண்ட ஒரு காலமாக இருந்தது. இது இறுதியாக பேரரசரால் ஆளப்படும் நிலைக்கு வழி வகுத்தது.[12][13][14] இந்தப் பேராளரின் இராணுவ சக்தியானது இம்பீரியம் என்று அழைக்கப்பட்ட உரோமானிய நீதிக் கோட்பாட்டைச் சார்ந்திருந்தது. இம்பீரியம் என்பதன் பொருள் "தலைமைத்துவம்" (எனினும் பொதுவாக இராணுவ ரீதியில்) என்பதாகும்.[15] அவ்வப்போது வெற்றிகரமான பேராளர்கள் மரியாதைக்குரிய பட்டமான இம்பரேட்டர் (தளபதி) என்ற பட்டத்தைப் பெற்றனர். இச்சொல்லே எம்பரர் (பேரரசர்) மற்றும் எம்பயர் (பேரரசு) ஆகிய சொற்களின் தொடக்கச் சொல்லாகும். ஏனெனில், இந்தப் பட்டமானது (மற்றும் பிற பட்டங்களும்) எப்போதும் தொடக்க கால பேரரசர்களுக்கு அவர்கள் பதவிக்கு வரும் போது மட்டுமே கொடுக்கப்பட்டது.[16]
பொ. ஊ. மு. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் உரோமானது ஒரு நீண்ட தொடர்ச்சியான உட்புறச் சண்டைகள், கூட்டு சதித் திட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிப்புக்குள்ளானது. அதே நேரத்தில், இத்தாலியைத் தாண்டி இதன் சக்தியைப் பெருமளவுக்கு விரிவாக்கியது. இது உரோமைக் குடியரசின் பிரச்சனைக் காலமாகும். இந்த சகாப்தத்தின் முடிவின் போது பொ. ஊ. மு. 44இல் யூலியசு சீசர் குறுகிய காலத்திற்கு நிரந்தர சர்வாதிகாரியாகத் திகழ்ந்தார். பிறகு அரசியல் கொலை செய்யப்பட்டார். இவரை அரசியல் கொலை செய்தவர்களின் பிரிவானது உரோமில் இருந்து துரத்தியடிக்கப்பட்டனர். சீசரின் தத்து மகன் ஆக்தேவியன் மற்றும் மார்க் ஆண்டனியால் தலைமை தாங்கப்பட்ட இராணுவத்தால் பொ. ஊ. மு. 42இல் பிலிப் யுத்தத்தின் போது அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஆண்டனி மற்றும் ஆக்தேவியன் ஆகியோர் தங்களுக்கிடையே உரோமானிய உலகைப் பிரித்துக் கொண்ட போதும், அது நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. பொ. ஊ. மு. 31இல் அக்தியம் போரில் மார்க் ஆண்டனி மற்றும் ஏழாம் கிளியோபாற்றாவை ஆக்தேவியனின் படைகள் தோற்கடித்தன. பொ. ஊ. மு. 27இல் உரோமின் செனட் மற்றும் மக்கள் ஆக்தேவியனை இம்பீரியத்தின் ஆளுநராகத்துடன் பிரின்செப்சு ("முதல் குடிமகன்") ஆக்கினர். இவ்வாறாக பிரின்சிபேத் (உரோமை ஏகாதிபத்திய வரலாற்றின் முதல் காலம் இதுவாகும். இது பொதுவாக பொ. ஊ. மு. 27 முதல் பொ. ஊ. 284 வரை காலமிடப்படுகிறது) காலமானது தொடங்கப்பட்டது. ஆக்தேவியானுக்கு அகத்தசு ("மிக்க மதிப்பு கொண்டவர்") என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. பழைய அரசியலமைப்புச் சட்டப் பகுதியானது தொடர்ந்த போதும், அகத்தசு அதன் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். குடியரசானது பெயரளவில் இருந்த போதிலும் அகத்தசின் சமகாலத்தவர்களுக்கு இது வெறும் ஒரு திரை என்று தெரியும். உரோமில் அனைத்து உண்மையான அதிகாரத்தையும் அகத்தசு தான் கொண்டிருந்தார்.[17] இவரது ஆட்சியானது ஒரு நூற்றாண்டு கால உள்நாட்டுப் போர்களை முடித்து வைத்ததாலும், அதற்கு முன்னர் கண்டிராத அமைதி மற்றும் செழிப்பான காலத்தைத் தொடங்கி வைத்ததாலும் உரோமில் இவர் மிகவும் விரும்பப்பட்டார். அது எந்த அளவுக்கு எனில், சட்டப்படியாக இல்லாவிட்டாலும் ஒரு நடைமுறைப்படியான முடியரசராக சக்தியை இவர் கொண்டிருந்தார். இவரது ஆட்சிக் காலங்களின் போது, ஒரு புதிய அரசியலமைப்பு ஒழுங்கமைவானது (இது ஒரு பங்கு இயற்கையாகவும், ஒரு பங்கு வடிவமைப்பாகவும் இருந்தது) உருவாகத் தொடங்கியது. எனவே இவரது இறப்பின் போது, புதிய அரசியலமைப்பானது திபேரியசு புதிய பேரரசராக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, முந்தைய காலத்தைப் போலவே தொடர்ந்து செயல்பட்டது.
பொ. ஊ. 117இல் உரோமைப் பேரரசர் திராயானின் ஆட்சிக்குக் கீழ், இது அதன் அதிகபட்ச பரப்பளவை எட்டியது. நடுநிலக்கடல் வடி நிலத்தின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்திருந்தது. மூன்று கண்டங்களில் நிலப்பரப்புகளைக் கொண்டிருந்தது.
பாக்ஸ் உரோமனா
[தொகு]அகத்தசின் ஆட்சியில் இருந்து தொடங்கிய 200 ஆண்டு காலமானது வழக்கமாக பாக்ஸ் உரோமானா ("உரோமானிய அமைதி") என்று கருதப்படுகிறது. இக்காலத்தின் போது, உரோம் அதற்கு முன்னர் என்றுமே அடைந்திராத அளவிலான சமூக நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரச் செழிப்பால் பேரரசின் ஒத்திசைவுத் திறனானது அதிகரிக்கப்பட்டது. மாகாணங்களில் கிளர்ச்சிகள் அடிக்கடி ஏற்படவில்லை. ஆனால், எப்போதாவது ஏற்பட்டால் "இரக்கமற்று வேகமாக" ஒடுக்கப்பட்டன.[18] அகத்தசுக்கு வாரிசாகத் தகுதி இருந்த திறமையான ஒரு சிலரை விட அவர் அதிக காலம் உயிர் வாழ்ந்தார். இதனால் அரசமரபின் வழியாகப் பதவிக்கு வருபவர்களுக்கான கொள்கைகளை நிறுவுவதில் இவரால் ஓரளவுக்கே வெற்றி காண முடிந்தது. ஜூலியோ குளாடிய அரசமரபானது மேற்கொண்ட நான்கு பேரரசர்களான திபேரியசு, காலிகுலா, குளோடியசு, மற்றும் நீரோ ஆகியோர் வரையே நீடித்தது. பொ. ஊ. 69இல் இது முடிவுக்கு வந்தது. இதற்குப் பிறகு நான்கு பேரரசர்களின் ஆண்டு என்ற பிரச்சினைக்குரிய காலம் ஏற்பட்டது. இக்காலத்தில் வெசுப்பாசியான் வெற்றியாளராகவும், குறுகிய காலமே ஆட்சி செய்த பிளேவியன் அரசமரபின் நிறுவனராகவும் உருவானார். இதற்குப் பிறகு நெர்வா-அந்தோனின் அரசமரபானது ஆட்சிக்கு வந்தது. அது "ஐந்து நல்ல பேரரசர்களை" உருவாக்கியது. அவர்கள் நெர்வா, திராயான், அத்ரியன், அந்தோனினுசு பையசு மற்றும் தத்துவ நாட்டம் கொண்ட மார்க்கஸ் அரேலியஸ் ஆகியோர் ஆவர்.
மேற்கில் வீழ்ச்சியும், கிழக்கில் நீடிப்பும்
[தொகு]ஒரு சம காலப் பார்வையாளரான கிரேக்க வரலாற்றாளர் தியோ காசியசுவின் பார்வையில், பொ. ஊ. 180இல் பேரரசர் கமாதசு பதவிக்கு வந்தது" ஒரு தங்க இராச்சியத்திலிருந்து துரு மற்றும் இரும்பு இராச்சியமாக மாறி" வீழ்ச்சியடைந்ததைக் குறித்தது.[19] இது ஒரு பிரபலமான விமர்சனமாக இருந்தது. குறிப்பாக எட்வார்ட் கிப்பன் போன்ற சில வரலாற்றாளர்கள் கமாதசுவின் ஆட்சிக் காலத்தை உரோமைப் பேரரசின் இறங்கு முகத்தின் தொடக்கமாகக் கருதுவதற்கு இது வழி வகுத்தது.[20][21]
பொ. ஊ. 212இல் கரகல்லாவின் ஆட்சியின் போது உரோமானிய குடியுரிமையானது பேரரசின் சுதந்திரமாக பிறந்த அனைத்து குடியிருந்தவர்களுக்கும் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பொதுவான இத்தகைய சைகை இருந்த போதிலும் செவரன் அரசமரபானது அமளி நிறைந்ததாக இருந்தது. ஒவ்வொரு பேரரசரின் ஆட்சியும் வாடிக்கையாக அவரது கொலை அல்லது அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுவதில் முடிந்தது. இந்த அரசமரபின் வீழ்ச்சிக்குப் பிறகு உரோமைப் பேரரசானது 3ஆம் நூற்றாண்டின் பிரச்சனைகள், படையெடுப்புகளின் ஒரு காலம், குடிமக்களின் பிரச்சனை, பொருளாதார ஒழுங்கற்ற தன்மை மற்றும் பிளேக் நோய் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது.[22]
வரலாற்று கால கட்டங்களை வரையறுக்கும் போது, இந்த பிரச்சனையானது சில நேரங்களில் பாரம்பரியக் காலத்தில் இருந்து பிந்தைய பாரம்பரியக் காலத்துக்கான மாற்றத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அரேலியன் (ஆட்சி பொ. ஊ. 270–275) பேரரசை விளம்பில் இருந்து மீட்டு வந்து நிலைப்படுத்தினார். தியோக்லெதியன் பேரரசை முழுவதுமாக சீர்படுத்தும் பணியை முடித்தார். ஆனால், பிரின்செப்சுவின் பங்கானது வீழ்ந்தது. அடிக்கடி டோமின் ("எசமானர்" அல்லது "பிரபு") என்று குறிப்பிடப்பட்ட முதல் பேரரசராக இவர் உருவானர்.[23] தியோக்லெதியனின் ஆட்சியானது அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட கிறித்தவத்திற்கு எதிராக பேரரசின் மிகுந்த ஒத்திசைவான முயற்சியையும் கொண்டு வந்தது. இம்முயற்சி "பெரும் இடர்ப்படுத்துதல்" என்று அழைக்கப்படுகிறது.
தியோக்லெதியன் பேரரசை நான்கு பகுதிகளாகப் பிரித்தார். இது ஒவ்வொன்றும் ஒரு தனி பேரரசரால் ஆளப்பட்டது. இது நால்வர் ஆட்சி முறை என்று அழைக்கப்பட்டது.[24] உரோமுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஒழுங்கற்ற நிலைகளைத் தான் சரி செய்து விட்டதாக நம்பிய இவர், தனது துணை பேரரசருடன் முடி துறந்தார். நால்வர் ஆட்சி முறையானது சீக்கிரமே வீழ்ச்சியடைந்தது. இறுதியில் நிலைமையானது முதலாம் கான்ஸ்டன்டைனால் இறுதியாக ஒழுங்குபடுத்தப்பட்டது. முதலாம் கான்ஸ்டன்டைன் கிறித்தவ மதத்திற்கு மாறிய முதல் பேரரசர் ஆனார். கிழக்கு உரோமைப் பேரரசின் புதிய தலைநகரமாக கான்ஸ்டான்டினோபிலை இவர் நிறுவினார். கான்ஸ்டன்டைனிய மற்றும் வேலன்டினிய அரசமரபுகளின் தசாப்தங்களின் போது பேரரசானது கிழக்கு-மேற்கு என்ற ரீதியில் பிரிந்திருந்தது. கான்ஸ்டான்டினோபில் மற்றும் உரோம் ஆகிய இரு இடங்களில் சக்தி மையங்கள் இருந்தன. தனது ஆலோசகர் மர்தோனியசுவின் தாக்கத்தின் கீழ் ஜூலியன் தன் ஆட்சியின் போது பாரம்பரிய உரோமானிய மற்றும் எலனிய சமயத்தை மீண்டும் கொண்டு வர முயற்சித்தார். இக்காலத்தில், குறுகிய இடைவெளியில் கிறித்தவப் பேரரசர்கள் ஆட்சிக்கு வந்தால் இது தடைபட்டது. கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரு பகுதிகளின் மீதும் ஆட்சி செலுத்திய கடைசி பேரரசரான முதலாம் தியோடோசியஸ் பொ. ஊ. 395இல் இறந்தார். அவர் இறக்கும் முன் பேரரசின் அதிகாரப்பூர்வ சமயமாக கிறித்தவ மதத்தை ஆக்கினார்.[25]
குடியேறிகளைப் பேரரசில் இணைப்பது மற்றும் படையெடுப்பாளர்களைச் சண்டையிட்டு முறியடிப்பது ஆகியவற்றுக்கான பேரரசின் ஆற்றலானது ஆரம்ப 5ஆம் நூற்றாண்டின் போது, செருமானியப் புலம் பெயர்வு மற்றும் படையெடுப்புகளால் கையாள இயலாத நிலைக்குச் சென்றதால், மேற்கு உரோமைப் பேரரசானது சிதைவுறஆரம்பித்தது. உரோமுக்குப் போலியான விசுவாசமுடைய பல செருமானிய மக்களைப் பேரரசு இணைத்துக் கொண்ட போதும் பேரரசானது சிதைவுற ஆரம்பித்தது.[26] அனைத்து படையெடுப்பாளர்களையும் சண்டையிட்டு முறியடிப்பதில் உரோமானியர்கள் வெற்றி அடைந்திருந்தனர். இதில் மிக குறிப்பிடத்தக்க படையெடுப்பாளர் அட்டிலா ஆவார்.[27] பெரும்பாலான கால வரிசைகள் மேற்கு உரோமைப் பேரரசின் முடிவு என பொ. ஊ. 476ஐக் குறிப்பிடுகின்றன. அந்த ஆண்டு உரோமுலுசு அகத்துலுசு செருமானியப் போர்ப் பிரபு ஒதோசருக்காக தனது பதவியைத் துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.[28][29][30]
தனது சொந்த கைப்பாவை பேரரசர் ஒருவரைப் பெயரிடுவதற்குப் பதிலாக ஒதோசர் கிழக்கு பேரரசின் ஆட்சிக்குக் கீழ் தன்னை அமைத்துக் கொண்டார். மேற்கு பேரரசை முடித்து வைத்தார். செனோவை ஒற்றைப் பேரரசராக அறிவித்ததன் மூலம் அவர் இதைச் செய்தார். தன்னை அவருக்குப் பெயரளவில் அடிபணிந்தவராக ஆக்கிக் கொண்டார். உண்மையில், இத்தாலியானது தற்போது ஒதோசரால் மட்டுமே ஆளப்பட்டது.[31][32][33] கிழக்கு உரோமைப் பேரரசானது பிந்தைய வரலாற்றாளர்களால் பைசாந்தியப் பேரரசு என்றும் அழைக்கப்பட்டது. இது கான்ஸ்டன்டைன் பதினோராம் பலையலோகோசின் ஆட்சி வரை தொடர்ந்து நீடித்தது. 29 மே 1453 அன்று "படையெடுப்பாளர்" இரண்டாம் மெகமுது மற்றும் அவரது உதுமானியப் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் கான்ஸ்டான்டினோபில் முற்றுகையின் இறுதிக் கட்டங்களில் கடைசி உரோமைப் பேரரசர் இறந்தார். இரண்டாம் மெகமுதுவும் தனக்குத் தானே சீசர் அல்லது கெய்சரி ரும் என்ற பட்டத்தைக் கோரினார். உரோமைப் பேரரசுடன் ஒரு தொடர்பைக் கோரும் முயற்சியாக அவர் இதைச் செய்தார்.[34]
புவிவியலும், மக்கள் தொகையியலும்
[தொகு]மனித வரலாற்றின் மிகப் பெரிய பேரரசுகளில் உரோமைப் பேரரசும் ஒன்றாகும். ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ச்சியான நிலப்பரப்புகளை இது கொண்டிருந்தது.[35] இலத்தீன் சொற்றொடரான இம்பீரியம் சைன் பைன் ("முடிவற்ற பேரரசு"[36]) என்பது காலமோ அல்லது நிலப்பரப்போ பேரரசுக்குத் தடையாக இல்லை என்ற சித்தாந்தத்தை வெளிப்படுத்தியது. வேர்ஜிலின் இதிகாசமான அயேனிடு, உரோமானியர்களுக்கு எல்லையற்ற பேரரசானது அவர்களின் முதன்மை தெய்வம் ஜூப்பிட்டரால் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறது.[37] அனைவருக்கும் பொதுவான மேலாட்சி என்ற வாதமானது, 4ஆம் நூற்றாண்டில் பேரரசானது கிறித்தவ ஆட்சிக்குக் கீழ் வந்த போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நீடிக்கச் செய்யப்பட்டது.[j] பேரரசைக் கட்டமைக்கும் தங்களது நோக்கத்தில் பெரும் பகுதிகளை இணைத்ததோடு, தங்களது சூழ்நிலையை மாற்றிய மிகப் பெரிய சிற்பிகளாகவும் உரோமானியர்கள் திகழ்ந்தனர். தங்களது புவியியலை நேரடியாக மாற்றியமைத்தனர். எடுத்துக்காட்டாக, விரிவடைந்த பேரரசுக்குத் தேவையான மர மூலப் பொருட்களைக் கொடுப்பதற்காக ஒட்டு மொத்த காடுகளும் வெட்டப்பட்டன.[39]
பொ. ஊ. 1ஆம் நூற்றாண்டில் தான் வடக்கு ஐரோப்பாவின் பகுதிகள் வெல்லப்பட்ட போதும், உண்மையில் உரோமானிய விரிவாக்கமானது பெரும்பாலும் குடியரசின் கீழ் நடத்தப்பட்டது. பொ. ஊ. 1ஆம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உரோமானிய கட்டுப்பாடானது வலிமைப்படுத்தப்பட்டது. அகத்தசின் ஆட்சியின் போது, பொது மக்களின் பார்வைக்காக "அறியப்பட்ட உலகத்தின் உலகளாவிய வரைபடமானது" முதன் முதலில் காட்சிக்கு வைக்கப்பட்டது. பண்டைக் காலத்தைச் சேர்ந்த, தற்போது எஞ்சியிருக்கும், அரசியல் சூழலியல் குறித்த மிகுந்த அகல் விரிவான வேலைப்பாடான, பான்டசு கிரேக்க எழுத்தாளரான இசுட்ராபோவின் புவியியல் எனும் நூலின் உருவாக்கத்துடன் இது ஒத்துப் போகிறது.[41] அகத்தசு இறந்த போது அவரது சாதனைகள் குறித்த நினைவுச் சின்ன (ரெஸ் கெஸ்டே) நூலானது, முக்கியமாக பேரரசுக்குள் இருந்த மக்கள் மற்றும் இடங்களின் புவியியல் தொகுப்பைச் சிறப்பம்சமாகக் கொண்டிருந்தது.[42] புவிவியல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மிகவும் விழிப்புடன் எழுதப்பட்ட பதிப்புகளைப் பேணுவது ஆகியவை உரோமானிய ஏகாதிபத்திய நிர்வாகத்தின் மையமான கவனங்களாக இருந்தன.[43]
பேரரசானது அதன் அதிகபட்ச பரப்பளவை திராயனின் (ஆ. 98–117),[44] கீழ் அடைந்தது. அந்நேரத்தில் 50 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது.[6][7] பாரம்பரிய மக்கள் தொகை மதிப்பீடானது 5.50 முதல் 6 கோடி[45] வரையிலான குடி மக்கள் வாழ்ந்தனர் என்று குறிப்பிடுகிறது. உலகின் மொத்த மக்கள் தொகையில் இது 6இல் 1 பங்கு முதல் 4இல் 1 பங்கு வரையிலான மக்கள் தொகையைக் கொண்டிருந்தது என்று மதிப்பிடப்படுகிறது.[46] மேற்குலகில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை எந்த ஓர் ஒன்றிணைந்த அரசியல் உருப்படியினதையும் விட மிகப்பெரிய மக்கள் தொகையாக இதன் மக்கள் தொகை இப்பேரரசை ஆக்கியுள்ளது.[47] சமீபத்திய மக்கள் தொகை ஆய்வுகள், 7 முதல் 10 கோடிக்கும் அதிகமான அதிகபட்ச மக்கள் தொகைக்காக வாதிடுகின்றன.[48] உரோம், அலெக்சாந்திரியா மற்றும் அந்தியோக்கியா ஆகிய பேரரசில் இருந்த மூன்று பெரிய நகரங்கள் ஒவ்வொன்றும், 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த எந்த ஒரு ஐரோப்பிய நகரத்தின் அளவைப் போலவும் கிட்டத்தட்ட இரு மடங்கு அளவில் இருந்தன.[49]
வரலாற்றாளர் கிறித்தோபர் கெல்லி இதைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:
அக்காலத்தில் பேரரசானது தூரல்களால் நனைந்த வடக்கு இங்கிலாந்தின் ஆட்ரியனின் சுவரிலிருந்து, சிரியாவின் புறாத்து ஆற்றின் சூரியனால் மிகை வெப்பத்தில் வாட்டப்பட்ட ஆற்றங்கரைகள் வரையிலும்; ஐரோப்பாவின் வளமான சமவெளி நிலங்களில் பாம்பு போல ஊர்ந்து இருந்த பெரிய ரைன்–தன்யூபு ஆற்று அமைப்பு முதல், கடல் மட்டத்திற்குக் கீழ் இருந்த நாடுகள் முதல் கருங்கடல் வரையிலும், வடக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையின் செழிப்பான சமவெளிகள் வரையிலும், எகிப்தின் நைல் ஆற்றின் தாவர வளர்ச்சி மிக்க நீண்டு ஆழ்ந்த பகுதி வரையிலும் நீண்டிருந்தது. பேரரசானது நடு நிலக்கடலை முழுவதுமாக சுற்றி இருந்தது … இதன் துரந்தரர்களால் இது மர் நோஸ்ற்றும் ('நம் கடல்') என்று குறிப்பிடப்பட்டது.[45]
திராயானுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அத்ரியன் பேரரசை விரிவாக்குவதைத் தவிர்த்து அதைப் பேணும் ஒரு கொள்கையைப் பின்பற்றினார். எல்லைகள் (பைன்கள்) குறிக்கப்பட்டன. எல்லைப் பகுதிகள் (லிமித்தேசு) ரோந்துக்கு உள்ளாக்கப்பட்டன.[44] மிக அதிகமான அரண்களைக் கொண்டிருந்த எல்லைகள் மிக அதிக நிலைத்தன்மையற்றதாக இருந்தன.[13] எப்போதுமே அச்சுறுத்தலாக விளங்கியவர்களாகக் கருதப்பட்ட காட்டுமிராண்டிகளிடமிருந்து உரோமானிய உலகை ஆட்ரியனின் சுவரானது பிரித்தது. பேரரசைப் பேணும் இந்த முயற்சியின் முதன்மையான எஞ்சியுள்ள நினைவுச் சின்னமாக இச்சுவர் உள்ளது.[50]
மொழிகள்
[தொகு]உரோமானியர்களின் மொழியானது இலத்தீன் ஆகும். உரோமானிய ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்துக்கு ஓர் ஆதாரமாக வேர்ஜில் இதை அழுத்தமாகக் கூறுகிறார்.[51] அலெக்சாந்தர் செவரசுவின் (ஆ. 222–235) காலம் வரை உரோமானியக் குடிமக்களின் பிறப்புச் சான்றிதழ்களும், உயில்களும் இலத்தீன் மொழியிலேயே எழுதப்பட வேண்டும் என்று இருந்தது.[52] மேற்கில் சட்ட நீதிமன்றங்களின் மொழியாகவும், பேரரசு முழுவதும் இராணுவத்தின் மொழியாகவும்[53] இலத்தீன் திகழ்ந்தது. ஆனால், உரோமனிய ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்ட மக்கள் மீது அலுவல்பூர்வமாக இலத்தீன் திணிக்கப்படவில்லை.[54] இக்கொள்கை பேரரசர் அலெக்சாந்தரின் கொள்கையிலிருந்து மாறுபடுகிறது. அலெக்சாந்தர் தனது பேரரசு முழுவதும் கிரேக்கத்தை அலுவல்பூர்வ மொழியாகத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.[55] அலெக்சாந்தரின் வெற்றிகளின் ஒரு விளைவாக கொயினே கிரேக்கமானது கிழக்கு நடுநிலக் கடலைச் சுற்றியும், ஆசியா மைனருக்குள்ளும் இணைப்பு மொழியாக உருவானது.[56] இலத்தீன் மேற்கு மற்றும் கிரேக்க கிழக்கை பிரித்த "மொழிக் கோடானது" பால்கன் மூவலந்தீவு வழியாகச் சென்றது.[57]
ஒரு மேனிலை கல்வியை பெற்ற உரோமானியர்கள் கிரேக்கத்தை ஓர் இலக்கிய மொழியாகப் பயின்றனர். ஆளும் வர்க்கத்தினரில் பெரும்பாலான மனிதர்களால் கிரேக்கத்தைப் பேச முடிந்தது.[59] ஜூலியோ குளாடிய அரசமரபின் பேரரசர்கள் உயர் தரமுடைய சரியான இலத்தீன் (இலத்தீனிதசு) பயன்பாட்டை ஊக்குவித்தனர். இந்த மொழி இயக்கமானது தற்கால வரையறைகளின் படி பாரம்பரிய இலத்தீன் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும், அவர்கள் அலுவல்பூர்வ வணிகத்திற்காக இலத்தீன் மொழியைப் பயன்படுத்துவதை விரும்பினர்.[60] கிரேக்கப் பயன்பாட்டை வரையறைக்குள் வைக்க குளோடியசு முயற்சித்தார். இலத்தீன் பேசத் தெரியாதவர்களின் குடியுரிமையை ஒரு சமயம் அதிகாரப்பூர்வமாக இரத்து செய்தார். ஆனால், கிரேக்க மொழி பேசும் தூதுவர்களுடன் உரையாடுவதற்கு தனது சொந்த இரட்டை மொழியை செனட்டில் கூட இவர் பயன்படுத்தினார்.[60] இவர் "நம் இரண்டு மொழிகள்" என்று குறிப்பிட்டதாக சுவேதோனியசு குறிப்பிட்டுள்ளார்.[61]
கிழக்குப் பேரரசில் சட்டங்கள் மற்றும் அலுவல்பூர்வ ஆவணங்கள் வாடிக்கையாக இலத்தீனிலிருந்து கிரேக்கத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டன.[62] இரு மொழிகளும் தினசரி வாழ்வில் இணைந்திருந்ததை இருமொழிக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. இக்கல்வெட்டுகள் சில நேரங்களில் கிரேக்கத்திலிருந்து இலத்தீனுக்கும், இலத்தீனிலிருந்து கிரேக்கத்திற்கும் கூட மாறியிருந்தன.[63] பொ. ஊ. 212இல் பேரரசில் சுதந்திரமாகப் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான வாக்குரிமை அளிக்கப்பட்டதற்குப் பிறகு, ஒரு பெரும் எண்ணிக்கையிலான உரோமானியக் குடிமக்கள் இலத்தீன் தெரியாதவர்களாக இருந்திரு வேண்டும். எனினும், "உரோமானியம்" என்பதற்கான குறியீடாக இலத்தீன் தெரிய வேண்டும் என்பது தொடர்ந்து நீடித்தது.[64]
பிற சீர்திருத்தங்களில் ஒன்றாக பேரரசர் தியோக்லெதியன் (ஆ. 284–305) இலத்தீனின் அதிகாரப்பூர்வ நிலையைப் புதுப்பிக்க விரும்பினார். கிரேக்கச் சொற்றொடரான கே கிராதோசா தயலெக்தோசு என்பது "அதிகார மொழியாக" இலத்தீனின் நிலையை தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறது.[65] 6ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் ஒரு மட்டு மீறிய சித்தாந்த முயற்சியாக சட்டத்தின் மொழியாக இலத்தீனின் நிலையை மீண்டும் நிலை நிறுத்த முயற்சித்தார். இவரின் காலத்தில் இலத்தீன் கிழக்கில் உயிர்ப்புடன் இருந்த ஒரு மொழியாக தன் நிலையை கொண்டிருக்காத நிலையிலும் இவர் இவ்வாறு முயற்சித்தார்.[66]
உள்ளூர் மொழிகளும், மொழியியல் மரபும்
[தொகு]மொழி பெயர்ப்பாளர்கள் குறித்த குறிப்புகள் கிரேக்கம் மற்றும் இலத்தீன் தவிர்த்து பிற உள்ளூர் மொழிகளின் பயன்படும் தொடர்ந்தது எனக் காட்டுகின்றன. குறிப்பாக, காப்திய மொழி முதன்மையாக இருந்த எகிப்தைக் குறிப்பிடலாம். ரைன் மற்றும் தன்யூபு ஆற்றங்கரைகளில் இராணுவ மொழிகளாக உள்ளூர் மொழிகள் இருந்தன. பியூனிக், கௌல் மற்றும் அரமேயம் போன்ற உள்ளூர் மொழிகளுக்கு ஆதரவையும் உரோமானிய சட்டவியலாளர்கள் காட்டியுள்ளனர். சரியான புரிதல், மற்றும் சட்டங்கள் மற்றும் உறுதி மொழிகளின் பயன்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர்.[67] திபேரியசுவின் (பொ. ஊ. 1ஆம் நூற்றாண்டு) காலத்தின் போது கல்வெட்டுகள் மற்றும் நாணயங்களில் குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுவதற்கு லிபிகோ-பெர்பெர் மற்றும் பியூனிக் மொழிகள் ஆப்பிரிக்கா மாகாணத்தில் பயன்படுத்தப்பட்டன. 2ஆம் நூற்றாண்டுக்குள்ளும், பொதுப்பணி கட்டடங்களில் லிபிகோ-பெர்பெர் மற்றும் பியூனிக் கல்வெட்டுக்கள் தோன்றுகின்றன. அவற்றில் சில இலத்தீனுடன் சேர்ந்து இருமொழியாகத் தோன்றுகின்றன.[68] சிரியாவில் பல்மைராவின் இராணுவ வீரர்கள் கல்வெட்டுகளுக்காகத் தங்களது பேச்சு வழக்கு அரமேய மொழியைக் கூடப் பயன்படுத்தினர். இராணுவத்தின் மொழியாக இலத்தீன் இருக்க வேண்டும் என்ற சட்டத்திலிருந்து ஒரு மிகுந்த மாறுபட்டதாக இது உள்ளது.[69]
பேரரசில் இருந்த பன்மொழிப் புலமைக்கு ஒரு பரிந்துரை எடுத்துக்காட்டாக பாபதா ஆவணக் காப்பகமானது உள்ளது. இந்த பாபிரஸானது அரேபிய மாகாணத்தில் இருந்த ஒரு யூதப் பெண்மணியின் பெயரைக் கொண்டுள்ளது. இது பொ. ஊ. 93–132 வரையிலான காலத்தைச் சேர்ந்தது என தேதியிடப்படுகிறது. உள்ளூர் மொழியான அரமேயத்தைப் பெரும்பாலும் கொண்டிருக்கும் இது கிரேக்க எழுத்துக்களில் செமித்திய மற்றும் இலத்தீன் தாக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது; எனினும், உரோமானிய ஆளுநருக்கான ஒரு மனுவானது கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.[70]
இலக்கிய மேனிலை மக்கள் மத்தியில் இலத்தீன் ஆதிக்கம் செலுத்தியது பிற பேசப்பட்ட மொழிகளின் தொடர்ச்சியை மறைக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில், பேரரசுக்குள் இருந்த அனைத்துப் பண்பாடுகளும் முதன்மையாக எழுதப்படாத வாய்மொழி மரபுகளாக இருந்தன.[68] மேற்கில் இலத்தீன் அதன் பேச்சு வடிவத்தில் பண்பற்ற இலத்தீன் என்று குறிப்பிடப்படுகிறது. இதனுடன் ஓர் இந்தோ ஐரோப்பியப் பூர்வீகத்தை கொண்டிருந்த செல்திக்கு மற்றும் இத்தாலிய மொழிகளின் இடத்தை இலத்தீனானது படிப்படியாகப் பெற்றது. சொற்றொடர்கள் மற்றும் சொற்களில் இருந்த பொதுவான தன்மையானது இலத்தீன் பின்பற்றப்படுவதை எளிதாக நிகழக்கூடியதாக்கியது.[71][72]
பிந்தைய பண்டைக் காலத்தில் அரசியல் அதிகாரமானது பகிர்ந்தளிக்கப்பட்டதற்குப் பிறகு எசுப்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, இத்தாலியம், கத்தலான் மற்றும் உருமேனியம் மற்றும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான சிறு மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகள் போன்ற உரோமானிய மொழிகளின் பிரிவுகளாக உள்ளூர் அளவில் இலத்தீன் வளர்ந்தது. தற்போது 90 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகம் முழுவதும் இவற்றைத் தாய் மொழிகளாகக் கொண்டுள்ளனர்.[73]
கல்வி மற்றும் இலக்கியத்திற்கான பன்னாட்டு மொழியாக இலத்தீனானது, மறுமலர்ச்சி மனிதவியல் முதல் 17ஆம் நூற்றாண்டு வரை தூதரக மற்றும் சிந்தனை இன்ப நாட்டமுடைய முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு செயல்பாடு நிறைந்த ஊடகமாக தொடர்ந்து நீடித்துள்ளது. சட்டம் மற்றும் உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபைக்கு தற்போது வரை ஊடகமாக இலத்தீன் நீடித்துள்ளது.[74]
பைசாந்திய பேரரசின் மொழியாகக் கிரேக்கம் தொடர்ந்த போதிலும், கிழக்கின் மொழியியல் பரவலானது மிகுந்த சிக்கலானதாக இருந்தது. ஒரு கிரேக்க மொழி பேசும் பெரும்பான்மையினர் கிரேக்க மூவலந்தீவு மற்றும் தீவுகள், மேற்கு அனத்தோலியா, முக்கியமான நகரங்கள் மற்றும் சில கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்தனர்.[76] கிரேக்கம் மற்றும் இலத்தீன் போலவே, திரேசிய மொழியானது இந்தோ ஐரோப்பிய பூர்வீகத்தை கொண்டிருந்தது. ஏகாதிபத்திய சகாப்த கல்வெட்டுகளில் எழுதப் பயன்படுத்தப்பட்ட, அனத்தோலியாவின் ஏராளமான தற்போது அற்றுவிட்ட மொழிகளும் இந்தோ ஐரோப்பிய பூர்வீகத்தை கொண்டிருந்தன.[76][68] அல்பேனியமானது பொதுவாக இல்லிரிய மொழியின் வழித்தோன்றல் என கருதப்படுகிறது.[77] எனினும், இந்த கோட்பாடானது சில மொழியியலாளர்களால் விவாதத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. அவர்கள் இம்மொழி தசியம் அல்லது திரேசியத்திலிருந்து பெறப்பட்டது என்பதை குறிப்பிடுகின்றனர். எனினும், இல்லிரியம், தசியம் மற்றும் திரேசியம் ஆகியவை ஒரு துணை குழுவை உருவாக்குகின்றன. அது முதன்மையாக எகிப்தில் காப்தியம், சிரியா மற்றும் மெசபதோமியாவில் அரமேயம் ஆகிய பல்வேறு ஆப்பிரிக்க ஆசிய மொழிகள் என்றுமே கிரேக்கத்தால் இடமாற்றம் செய்யப்படவில்லை. எனினும், கிரேக்கம் பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட்டது கிறித்தவம் பரவுவதில் ஒரு காரணியாக இருந்தது. புதிய ஏற்பாட்டிலுள்ள புனித பாலின் நூல்களுக்கு கிரேக்கம் பயன்படுத்தப்பட்டது என்பது இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.[76]
பிந்தைய பண்டைக் காலத்தில் கௌல் மொழி குறித்த ஏராளமான குறிப்புகள், இது தொடர்ந்து பேசப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. பொ. ஊ. 2ஆம் நூற்றாண்டில் சில நீதி நடத்தை முறைகள்,[78] எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவது[79] மற்றும் மருந்தியல்[80] ஆகியவற்றில் இதன் பயன்பாடானது இருந்தது என்பது ஓர் அப்பட்டமான அடையாளப்படுத்துதலாக உள்ளது. உரோமானிய கெளலில் பொ. ஊ. 5ஆம் நூற்றாண்டில் எழுதிய சுல்பிசியசு செவரசு இரு மொழிப் பயன்பாட்டுடன் கௌல் மொழியைத் தனது தாய்மொழியாகக் குறிப்பிடுகிறார்.[79] திரியேருக்கு அருகில் திரவேரி மொழி பேசப்பட்டதைப் போல, அனத்தோலியாவில் கலாத்திய பேச்சு வழக்கு எஞ்சியிருந்தது என்பது ஜெரோமால் (331–420) உறுதிப்படுத்தப்படுகிறது. அவர் நேரடியாக இது குறித்த தகவலை அறிந்திருந்தார்.[81]
பெரும்பாலான வரலாற்று மொழியியல் அறிஞர்கள் பிரான்சில் 6ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரையிலான கடைசி காலத்தில் கூட கௌல் மொழியானது இன்னும் தொடர்ந்து பேசப்பட்டது என்று பரிந்துரைக்கின்றனர்.[82] உள்ளூர் பொருளியல் பண்பாடானது, பெருமளவுக்கு உரோமானிய மயமாக்கப்பட்ட போதும் கௌல் மொழியானது, கெளல் மீதான உரோமானிய ஆட்சி நூற்றாண்டுகளின் போது பேசப்பட்ட இலத்தீன் மொழியுடன் இணைந்து நீடித்திருந்தது என்று கருதப்படுகிறது.[82] கலாத்திய மொழி குறித்த கடைசிக் குறிப்பானது சிதோபோலிசின் சிரிலால் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தீய ஆவியானது ஒரு துறவி மீது அணைந்து, அவரை கலாத்திய மொழியில் மட்டுமே பேசுமாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.[k] அதே நேரத்தில், பிரான்சில் கௌல் மொழி குறித்த கடைசிக் குறிப்பானது 560 மற்றும் 575க்கு இடையில் தோர்சின் கிரிகோரியால் கொடுக்கப்பட்டுள்ளது. "கெளல் உச்சரிப்பில் வாசோ கலாதே என்று அழைக்கப்பட்ட" அவர்க்னேவில் உள்ள ஒரு சன்னதியானது அழிக்கப்பட்டு, எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.[82][84] நீண்ட காலத்திற்கு இருமொழிப் பயன்பாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு உள்ளிட்ட கெளல்-உரோமானிய மொழிகளின் வளர்ச்சியானது கெளலால் ஒரு குறிப்பிடத்தக்க வழிகளில் கட்டமைக்கப்பட்டது. பிரெஞ்சு மொழியைப் பொறுத்த வரையில் அதன் கடன் சொற்கள், கடன் மொழி பெயர்ப்புகள் (வி[85] உள்ளிட்ட, "ஆம்" என்பதற்கான சொல்),[85][86] ஒலிப்பு மாற்றங்கள்,[87] இணைப்பு வார்த்தைகளின் மீதான தாக்கங்கள் மற்றும் சொல் வரிசைகள் ஆகியவையும் கட்டமைக்கப்பட்டுள்ளன.[85][86][88]
சமூகம்
[தொகு]உரோமைப் பேரரசானது குறிப்பிடத்தக்க வகையில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டதாக இருந்தது. ஒரு நீண்ட கால அளவிற்கு இதன் அரசியல் அமைப்பிற்குள் பல்வேறுபட்ட மக்களை ஒன்றிணைத்த அதே நேரத்தில், ஓர் இணைந்த அடையாள உணர்வை உருவாக்குவதற்காக "ஒரு வியப்புக்குரிய ஒத்திசைவான ஆற்றலை" இது கொண்டிருந்தது.[89] மன்றங்கள், வெட்ட வெளி அரங்குகள், பந்தய களங்கள் மற்றும் குளியல் இடங்கள் போன்ற அனைவரும் பயன்படுத்தக் கூடிய பொதுப்பணி நினைவிடங்கள் மற்றும் சமூக இடங்களை உருவாக்குவதில் உரோமானியர்கள் செலுத்திய கவனமானது "உரோமானியம்" என்ற உணர்வு உருவாக உதவியது.[90]
உரோமைச் சமூகமானது பல்வேறு, ஒன்றுடன் ஒன்று பகுதியளவு ஒத்திருந்த சமூகப் படி நிலை அமைப்புகளைக் கொண்டிருந்தது. ஆங்கில மொழியின் "வகுப்பு" போன்ற தற்போதைய கோட்பாடுகளால் இதைத் துல்லியமாகப் பிரதிநிதித்துவப்படுத்த இயலாது.[91] அகத்தசு ஒரே அதிகாரம் உடையவராக உருவாகிய இரண்டு தசாப்த உள்நாட்டுப் போரானது, உரோமின் பாரம்பரிய சமூகத்தைக் குழப்பம் மற்றும் பொங்கெழுச்சி உடைய ஒரு நிலைக்கு உள்ளாக்கியது.[92] ஆனால், செல்வம் மற்றும் சமூக அதிகாரம் உடனடியாக மீண்டும் பகிர்ந்தளிக்கப்படும் நிலைக்கு இது இட்டுச் செல்லவில்லை. கீழ்த்தட்டு வகுப்பினரின் பார்வையில், சமூக கோபுரத்தின் மேல் மற்றொரு சிகரமானது வெறுமனே சேர்க்கப்பட்டது.[93] குடியரசு காலத்தில் இருந்ததைப் போலவே புரவலத் தன்மை, நட்பு (அமிதியா), குடும்பம் மற்றும் திருமணம் ஆகிய தனி நபர் உறவு முறைகள் அரசியல் மற்றும் அரசாங்கம் செயல்படும் முறையில் தொடர்ந்து தாக்கத்தை உண்டாக்கின.[94] எனினும் நீரோவின் காலத்தின் போது, சுதந்திரம் உடையவராகப் பிறந்த ஒரு குடிமகனை விட செல்வம் அதிகம் உடைய ஒரு முந்தைய அடிமையைக் காண்பதோ அல்லது ஒரு செனட் சபை உறுப்பினரை விட அதிக சக்தி கொண்டிருக்கும் ஒரு குதிரை வீரர் வரிசையைச் சேர்ந்தவரைக் காண்பதோ வழக்கத்திற்கு மாறான ஒன்றானதாக இல்லை.[95]
குடியரசின் மிகுந்த மாறாத தன்மையுடைய படி நிலை அமைப்புகள் தெளிவற்றதானது அல்லது சிதறுண்டு போனது என்ற நிலையானது, பேரரசின் கீழ், சமூக நிலைகளுக்கு இடையில் ஒருவர் மாற இயலும் என்பதற்கான சாத்தியத்தை அதிகமாக்கியது.[96] இம்மாற்றம் மேல் நிலையிலிருந்து கீழ் நிலைக்கும், கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கும் என இருவராகவும் நடைபெற்றது. நன்றாக ஆவணப்படுத்தப்பட்ட அனைத்து பிற பண்டைக் கால சமூகங்களையும் விட அதிகமான அளவுக்கு இது இருந்தது.[97] பெண்கள், விடுதலை செய்யப்பட்ட மனிதர்கள் மற்றும் அடிமைகள் ஆகியோர், முன்னர் அவர்களுக்கு குறைந்த அளவிலேயே கிடைத்த செல்வம் சேர்ப்பதற்கான மற்றும் செல்வாக்கைச் செலுத்துவதற்கான வாய்ப்புகளை தற்போது அதிகமாகக் கொண்டிருந்தனர்.[98] பேரரசில் சமூக வாழ்க்கையானது, குறிப்பாக தனி நபர் மூலப் பொருட்கள் வரையறுக்கப்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கு, பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் (கொலேஜியம் மற்றும் சோடேல்கள்) ஆகியவற்றின் ஒரு பெருகுதலால் மேலும் அதிகமானது. தொழில்முறைப் பணியாளர் மற்றும் வணிகப் பொது நோக்கக் கழகங்கள், அனுபவசாலிகளின் குழுக்கள், சமய குழுக்கள், உணவகக் குழுக்கள்,[99] கலை நிகழ்ச்சி செய்வோர்[100] மற்றும் இறந்தோரைப் புதைக்கும் அமைப்புகள்[101] ஆகியவை இதில் அடங்கும்.
சட்ட முறைமை நிலை
[தொகு]சட்டவியலாளர் கையசு, "மனிதர்களுக்கான உரோமைச் சட்டங்களின்" முக்கியமான தனிச் சிறப்பானது அனைத்து மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவோ (லிபெரி) அல்லது அடிமைகளாகவோ (செர்வி) இருந்தனர் என்பதாகும் என்று குறிப்பிடுகிறார்.[102] சுதந்திரமான நபர்களின் சட்ட முறைமை நிலையானது அவர்களது குடியுரிமை மூலம் மேலும் வரையறுக்கப்படலாம். பெரும்பாலான குடிமக்கள் வரையறுக்கப்பட்ட உரிமைகளையே (இயுசு இலத்தீனம் போன்ற, "இலத்தீன் உரிமை") கொண்டிருந்தனர். ஆனால், குடியுரிமை இல்லாதவர்களுக்குக் கிடைக்காத சட்ட ரீதியான பாதுகாப்புகள் மற்றும் உரிமைகளைப் பெறும் நிலையில் குடியுரிமையுடையவர்கள் இருந்தனர். சுதந்திரமான மக்கள் குடிமக்களாகக் கருதப்படவில்லை. குடிமக்களாகக் கருதப்படாத சுதந்திரமான மக்கள் உரோமானிய உலகிற்குள் வாழும் பட்சத்தில் பெரெக்ரினி (உரோமானியர் அல்லாதவர்) என்ற நிலையைப் பெற்றிருந்தனர்.[103] பொ. ஊ. 212இல் பேரரசர் கரகல்லாவின் கன்ஸ்டிடீயோ அந்தோனினியானா என்று அறியப்பட்ட கல்வெட்டின் பொருளானது பேரரசின் அனைத்து சுதந்திரமாகப் பிறந்த வசிப்பாளர்களுக்கும் குடியுரிமையை விரிவாக்கியது. சட்ட ரீதியாக அனைவரும் சமம் என்ற இக்கோட்பாடானது குடியுரிமை கொண்டவர்கள் மற்றும் குடியுரிமையற்றவர்கள் எனப் பிரித்த ஏற்கனவே இருந்த சட்டங்களை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைப்பதற்கான தேவையை ஏற்படுத்தியிருக்கும்.[104]
உரோமானியச் சட்டத்தில் பெண்கள்
[தொகு]சுதந்திரமாகப் பிறந்த உரோமானியப் பெண்கள் அனைவரும் குடியரசு மற்றும் பேரரசுக் காலம் முழுவதும் குடியுரிமை பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால், வாக்களிக்கவோ, அரசியல் அலுவலகத்தில் பதவிகளை வகிக்கவோ அல்லது இராணுவத்தில் சேவையாற்றவோ இல்லை. ஒரு தாயின் குடியுரிமை நிலையானது அவரது குழந்தைகளைப் போலவே இருந்தது. இது எக்சு துவோபுசு சிவிபசு உரோமானிசு நதோசு ("இரு உரோமானியக் குடியுரிமை பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள்") என்னும் சொற்றொடரால் சுட்டிக் காட்டப்படுகிறது.[l] உரோமானியப் பெண் தனது சொந்தக் குடும்பப் பெயரை (நாமென்) வாழ்நாள் முழுவதும் வைத்துக் கொண்டார். குழந்தைகள் பெரும்பாலும் தந்தையின் பெயரைப் பயன்படுத்தினர். ஆனால், ஏகாதிபத்தியக் காலத்தில் சில நேரங்களில் தங்களது தாயின் பெயரைத் தங்களது பெயரில் ஒரு பகுதியாகவோ அல்லது தந்தையின் பெயருக்குப் பதிலாகவோ பயன்படுத்தினர்.[107]
தன் கணவனின் அதிகாரத்திற்குப் பெண் கட்டுப்பட்டவள் எனும் மனுசு திருமணத்தின் வழக்கில் இல்லாத வடிவமானது ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் பெரும்பாலும் கைவிடப்பட்டிருந்தது. தனது திருமணத்தின் மூலம் தான் கொண்டு வந்திருந்த எந்த ஓர் உடைமையின் உரிமையையும் ஒரு திருமணம் செய்த பெண் தக்க வைத்துக் கொண்டார். நுட்பமாகக் காண்கையில், அப்பெண் தனது கணவனுடைய வீட்டிற்குள் சென்றாலும் கூட, தனது தந்தையின் சட்ட முறைமையான அதிகாரத்தின் கீழ் தொடர்ந்து இருந்தார். ஆனால் தன் தந்தை இறந்த போது, அப்பெண் சட்ட ரீதியாக சம உரிமை பெற்றவரானார்.[108] பல பிற பண்டைக் காலக் கலாச்சாரங்கள் முதல் நவீன காலம் வரையில் பல சமூகங்களின் பெண்களுடன் ஒப்பிடுகையில் இந்த முன்னேற்பாடானது, உரோமானியப் பெண்கள் பெற்ற சுதந்திரத்தின் அளவு அதிகமாக இருந்ததற்கு ஒரு காரணியாக அமைந்தது:[109] சட்ட ரீதியான விவகாரங்களில் தனது தந்தையிடம் அப்பெண் பதிலளிக்க வேண்டிய தேவை இருந்த போதிலும், தன்னுடைய அன்றாட வாழ்வில் தன் தந்தை நேரடியாக ஆராய்வதில் இருந்து அப்பெண்ணுக்கு விடுதலை அளிக்கப்பட்டிருந்தது.[110] அப்பெண் மீது எந்த ஒரு சட்ட ரீதியான அதிகாரத்தையும் அப்பெண்ணின் கணவர் கொண்டிருக்கவில்லை.[111] "ஓர்-ஆண் பெண்" (யுனிவிரா), அதாவது ஒரே ஒரு முறை மட்டுமே திருமணம் செய்த பெண் என்பது பெருமைக்கான காரணியாக இருந்த போதிலும், விவாகரத்தானது சிறிதளவே அவமானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இறப்பு அல்லது விவாகரத்து வழியாக கணவனை இழந்ததற்குப் பிறகு, சீக்கிரமே மறு திருமணம் செய்வதும் இவ்வாறாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.[112]
தங்களது தந்தை ஓர் உயிலை விட்டுச் செல்லாமல் இறந்திருந்தால், பையன்களுடன் பெண்களும் சமமான சொத்துரிமையைப் பெற்றிருந்தனர்.[113] ஓர் உரோமானியத் தாய் உடைமையைச் சொந்தமாக வைத்திருப்பதற்கும், தனக்கு விருப்பமான நேரத்தில் அதை விற்பதற்குமான அவரது உரிமையானது தனது மகன்கள் இளைஞர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மீது ஏராளமான செல்வாக்கைத் தாய்க்குக் கொடுத்தது. அத்தாய் தனது சொந்த உயிலின் நிபந்தனைகளை எழுதுவதற்குமான உரிமையும் பெற்றிருந்ததையும் உள்ளடக்கியிருந்தது.[114]
பாரம்பரிய நன்னடத்தை மற்றும் சமூக ஒழுங்கை மீண்டும் நிறுவும் அகத்தசின் ஒரு செயல் திட்டத்தின் பகுதியாக, "குடும்ப உறவுகளின் மதிப்பை" ஊக்குவிக்கும் விதமாக நன்னடத்தைச் சட்டமானது ஆண்கள் மற்றும் பெண்களின் நடத்தையை ஒழுங்குபடுத்த முயற்சித்தது.[115][116] அரசால் குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஊக்குவிக்கப்பட்டது. மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த ஓர் பெண்ணுக்கு பெயரளவிலான மதிப்புகளும், அதிகப்படியான சட்ட ரீதியிலான சுதந்திரமும் (இயுசு திரியம் லிபரரும்) வழங்கப்பட்டது.
குடியுரிமை பெற்றவர்களாக அவர்களது சட்ட முறைமையிலான நிலை மற்றும் அவர்கள் சம உரிமை பெற்ற அளவு ஆகியவற்றின் காரணமாகப் பெண்களால் உடைமைகளைச் சொந்தமாக வைத்திருக்கவும், ஒப்பந்தங்களைச் செய்யவும், கப்பல் துறை, உற்பத்தி மற்றும் கடன் வழங்குதல் ஆகிய தொழில்களில்[117] ஈடுபடவும் முடிந்தது. பொதுப் பணிகளுக்கு நிதியுதவி அளித்ததில் பெண்களைக் கொடையாளர்களாக மரியாதையுடன் பேரரசு முழுவதும் காணப்படும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பெண்கள் குறிப்பிடத்தக்க அளவிலான உடைமையைப் பெறவோ அல்லது விற்கவோ முடியும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, செர்கீ வளைவிற்கு கல்வெட்டில் மரியாதை செலுத்தப்பட்ட ஒரு குடும்பத்தின் சல்வியா போதுமா என்கிற ஒரு பெண் உறுப்பினர் நிதியுதவி அளித்திருந்தார். வீனஸின் ஒரு பெண் பூசாரியான யூமாச்சியா பொம்பெயியிலுள்ள மன்றத்தின் மிகப்பெரிய கட்டடத்திற்கு நிதியுதவி அளித்திருந்தார்.[118]
அடிமைகளும், சட்டமும்
[தொகு]அகத்தசின் காலத்தின் போது, இத்தாலியில் இருந்த மொத்த மக்களில் 35% பேர் வரை அடிமைகளாக இருந்தனர்.[119] இது வரலாற்று ரீதியாக "அடிமைச் சமூகங்களாக" இருந்த ஐந்து சமூகங்களில் ஒரு சமூகமாக உரோமை ஆக்குகிறது. இச்சமூகங்களில் அடிமைகள் மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 5இல் 1 பங்காவது இருந்தனர். பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கை வகித்தனர்.[m][119] பாரம்பரிய உரோமானிய சமூக அமைப்புகளுடன், பொருளாதாரப் பயன்பாட்டுக்கும் பங்களித்த ஒரு சிக்கலான அமைப்பாக அடிமை முறை இருந்தது.[120] நகர்ப்புற அமைப்பில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், சமையல்காரர்கள் மற்றும் கணக்கர்கள் போன்ற தொழில் முறைப் பணியாளர்களாக அடிமைகள் இருந்திருக்க வாய்ப்பிருந்துள்ளது. இதனுடன், வீடுகள் அல்லது பணியிடங்களில் பயிற்சியளிக்கப்பட்ட அல்லது பயிற்சியற்ற பணியாளர்களாகப் பெரும்பான்மையான அடிமைகள் திகழ்ந்தனர். ஆலை மற்றும் சுரங்கத் தொழில் போன்ற தொழில்கள், மற்றும் விவசாயம் ஆகியவை அடிமைகளிலிருந்து மிகு நலம் பெறுவதைச் சார்ந்திருந்தன. இத்தாலிக்கு வெளியே இருந்த மக்கள் தொகையில் 10% முதல் 20% வரையிலானோர் சராசரியாக அடிமைகளாக இருந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் உரோமானிய மாகாணமான எகிப்தில் குறைவான அளவிலும், ஆனால் சில கிரேக்கப் பகுதிகளில் மிகுந்த அடர்த்தியான அளவிலும் காணப்பட்டனர். விவசாய நிலம் மற்றும் தொழில் துறை மீது விரிவடைந்து கொண்டிருந்த உரோமானிய உடைமையானது மாகாணங்களில் ஏற்கனவே இருந்த அடிமை முறைப் பழக்க வழக்கங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[121]
3ஆம் மற்றும் 4ஆம் நூற்றாண்டுகளில் அடிமை முறை அமைப்பானது குறையத் தொடங்கியது என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், 5ஆம் நூற்றாண்டு வரை உரோமானிய சமூகத்தின் ஓர் உள்ளடங்கிய பாகமாக இது தொடர்ந்தது. மேற்கில் நகர்ப்புற மையங்களின் வீழ்ச்சி மற்றும் அடிமை முறைக்கான தேவையை உருவாக்கிய சிக்கலான ஏகாதிபத்தியப் பொருளாதாரம் சிதைவுற்றது ஆகிய்வற்றுடன் அடிமை முறையானது படிப்படியாக 6ஆம் மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் முடிந்து போனது.[122]
அடிமை முறை குறித்த சட்டங்கள் "மிகுந்த நுணுக்கங்களைக்" கொண்டதாக இருந்தன.[123] உரோமானியச் சட்டத்தின் கீழ் அடிமைகள் உடைமையாகக் கருதப்பட்டனர். அவர்களுக்குச் சட்ட ரீதியிலான ஒரு நபராக இருக்க அனுமதி இல்லை. பொதுவாகக் குடிமக்களுக்குக் கொடுக்கப்படாத உடல் சார்ந்த தண்டனைகளின் வடிவங்கள், சித்திரவதை மற்றும் விசாரணையின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுதல் ஆகிய தண்டனைகள் அடிமைகளுக்குக் கொடுக்கப்படலாம்.[124] அடிமைகளுக்குச் சட்ட ரீதியிலான திருமணம் செய்து கொள்ளும் உரிமை கிடையாது. ஆனால், அவர்களது ஒன்றிணைவானது சில நேரங்களில் அங்கீகரிக்கப்பட்டது. இரு அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டால் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்ளலாம்.[125]
குடியரசின் செர்வில் போர்களைத் தொடர்ந்து, அகத்தசு மற்றும் அவருக்குப் பின் வந்தவர்களின் சட்டங்களானவை பணிக் குழுக்களின் அளவை வரையறுப்பதன் மூலமாகக் கிளர்ச்சிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கும், தப்பி ஓடிய அடிமைகளை வேட்டையாடிப் பிடிப்பதற்குமான ஒரு தீவிரமிக்க கவனத்தைக் காட்டின.[126]
நுணுக்கமாகக் காண்கையில், ஓர் அடிமையால் உடைமையைச் சொந்தமாகக் கொண்டிருக்க இயலாது.[127] ஆனால், வர்த்தகம் செய்யும் ஓர் அடிமைக்கு ஒரு தனிக் கணக்கு அல்லது நிதிக்கான (பெக்குலியம்) அனுமதி கொடுக்கப்படலாம். அதைத் தனது சொந்தக் கணக்காக அல்லது நிதியாக அந்த அடிமையால் பயன்படுத்த இயலும். இந்தக் கணக்கின் கட்டுப்பாடுகள் உரிமையாளர் மற்றும் அடிமைக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அளவைப் பொறுத்து மாறுபட்டது. வர்த்தகத்திற்கான இயற்கையான செயல் திறனைக் கொண்ட ஓர் அடிமைக்கு வருவாயைப் பெருக்குவதற்குக் குறிப்பிடத்தக்க அளவிலான சுதந்திரம் கொடுக்கப்படலாம். இந்த பெக்குலியத்தைத் தனது இறப்பிற்குப் பின், தான் அடிமையாக இருக்கும் வீட்டில் உள்ள மற்ற அடிமைகளுக்குக் கொடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படலாம்.[128] ஒரு வீடு அல்லது பணியிடத்திற்குள் அடிமைகளின் ஒரு படி நிலை அமைப்பானது காணப்படலாம். காரணம் ஏற்பட்டால் ஓர் அடிமை பிற அடிமைகளுக்கு எசமானராகச் செயல்படலாம்.[129]
காலப்போக்கில் அடிமைகள் அதிகரிக்கப்பட்ட சட்டப் பாதுகாப்பைப் பெற்றனர். இதில் தங்களது எசமானர்களுக்கு எதிராகப் புகார்களைப் பதிவு செய்யும் உரிமையும் அடங்கும்.[130]
உரோமானிய அடிமை முறையானது இனத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை.[131] கெளல், எசுப்பானியா, செருமனி, பிரித்தானியா, பால்கன் பகுதி, கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் நடு நிலக்கடல் பகுதிகள் முழுவதிலுமிருந்து அடிமைகள் பெறப்பட்டனர். பொதுவாக, இத்தாலியில் இருந்த அடிமைகள் இத்தாலியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்[132]. அதில் ஒரு சிறு பான்மையினர் அயல் நாட்டவராக (இதில் அடிமைகள் மற்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆகிய இருவருமே அடங்குவர்), இத்தாலிக்கு வெளியே பிறந்தவர்களாக இருந்தனர். இவர்கள் தங்கள் அதிக பட்ச எண்ணிக்கையின் போது தலைநகரத்தில் மொத்தமிருந்த அடிமைகளில் 5%ஆக இருந்திருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. தலை நகரத்தில் தான் இவர்களது எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ஐரோப்பாவுக்கு வெளியே இருந்தவர்கள் முதன்மையாகக் கிரேக்க மரபைக் கொண்டிருந்தவர்களாக இருந்தனர். அதே நேரத்தில், யூத அடிமைகள் உரோமானிய சமூகத்துடன் என்றுமே முழுவதுமாக இணையவில்லை. ஓர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினராகத் தொடர்ந்து நீடித்தனர். இந்த அடிமைகள் (குறிப்பாக அயல்நாட்டவர்கள்) உள்ளூர் வாசிகளைக் காட்டிலும் அதிக இறப்பு வீதத்தையும், குறைந்த பிறப்பு வீதத்தையும் கொண்டிருந்தனர். சில நேரங்களில் இவர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்படுவதற்கும் கூட ஆளாயினர்.[133] உரோம் நகரத்தில் அடிமைகளின் இறப்பின் போது பதிவு செய்யப்பட்ட சராசரி வயதானது அசாதாரணமாகக் குறைவாக இருந்தது: 17.5 ஆண்டுகள் (ஆண்களுக்கு 17.2 ஆண்டுகள்; பெண்களுக்கு 17.9 ஆண்டுகள்).[134]
குடியரசு கால விரிவாக்கத்தின் போது, அடிமை முறையானது வியாபித்தது. போர்க் கைதிகள் அடிமைகளுக்கான ஒரு முக்கிய மூலமாக இருந்தனர். அடிமைகள் மத்தியில் இருந்த இன வேறுபாடானது போரில் உரோம் தோற்கடித்த இராணுவங்களை ஓரளவுக்குப் பிரதிபலித்தது. உரோம் கிரேக்கத்தை வென்ற நிகழ்வானது, ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மிகுந்த திறமைசாலி மற்றும் கல்விகற்ற அடிமைகளை உரோமுக்குள் கொண்டு வந்தது. அடிமைகள் சந்தைகளில் வணிகம் செய்யப்பட்டனர். சில நேரங்களில், கடற்கொள்ளையர்களால் விற்கப்பட்டனர். குழந்தைகள் கைவிடப்படுதல் மற்றும் ஏழைகள் மத்தியில் சுயமாக அடிமையாக மாறும் முறை ஆகியவை அடிமைகளுக்கான பிற மூலங்களாக இருந்தன.[135] வெர்னே ("வீட்டில் பிறந்தவர்") எனப்படுபவர்கள் பெண் அடிமைகளுக்கு நகர்ப்புற வீட்டிற்குள் அல்லது ஒரு நாட்டுப்புறப் பண்ணைக்குள் அல்லது பண்ணைக்குள் பிறந்த அடிமைகள் ஆவர். இவர்களுக்கென்று எந்த ஒரு சிறப்பான சட்ட முறைமை நிலையும் இல்லாதிருந்தாலும், ஒரு வெர்னே அடிமையை துன்புறுத்தியவர் அல்லது கவனித்துக் கொள்வதில் தோல்வியடைந்த ஓர் உரிமையாளர் சமூகத்தில் மதிப்பிழக்கும் நிலையை எதிர் கொண்டார். ஏனெனில், இவர்கள் அந்த உரிமையாளரின் பேமிலியாவின் (குடும்ப வீடு) ஒரு பகுதியாகக் கருதப்பட்டனர். உண்மையில், சில நேரங்களில் இந்த வெர்னே அடிமைகள் குடும்பத்திலுள்ள சுதந்திரமான ஆண்களின் குழந்தைகளாக இருந்திருக்க வாய்ப்பிருந்துள்ளது.[136]
வர்த்தகத்தில் இயல்பான செயல் திறம் பெற்ற திறமைசாலி அடிமைகள் தங்களது விடுதலையை நியாயப்படுத்துவதற்குப் போதுமான ஒரு பெருமளவு பெக்குலியத்தைத் திரட்டலாம் அல்லது தாங்கள் ஆற்றிய சேவையிலிருந்து விடுதலை செய்யப்படலாம். விடுதலையானது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகிப் போனது. இதன் காரணமாக, பொ. ஊ. மு. 2ஆம் ஆண்டில் ஒரு சட்டம் (லெக்சு புபியா கனினியா) தனது உயிலில் ஓர் உரிமையாளர் விடுதலைக்கு அனுமதி அளிக்கும் அடிமைகளின் எண்ணிக்கையை வரையறுத்தது.[137]
விடுதலை செய்யப்பட்ட அடிமைகள்
[தொகு]விடுதலை செய்யப்பட்ட அடிமைகளைக் குடியுரிமை பெற்றவர்களாக அனுமதிப்பதில் கிரேக்க நகர அரசுகளில் இருந்து உரோம் வேறுபட்டிருந்தது. விடுதலை செய்யப்பட்டதற்குப் பிறகு ஓர் உரோமானிய குடிமகனிடம் இருந்த ஓர் அடிமை உரிமைக்குரியவனாக இருப்பதில் இருந்து விடுதலை அளிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட செயல்பாட்டு நிலையிலுள்ள அரசியல் சுதந்திரத்தையும் (லிபர்தசு) பெற்றிருந்தான்.[138] லிபர்தசுவைப் பெற்ற ஓர் அடிமை தன் முன்னாள் எசமானனுடன் ஒப்பிடுகையில் ஒரு லிபர்துசு ("விடுதலை செய்யப்பட்ட நபர்", பெண்ணுக்குரிய பெயர் லிபர்தா) என்று அழைக்கப்பட்டான். எசமானன் அந்த அடிமையின் புரவலராக (பத்ரோனசு) உருவாகிறான்: இந்த இருவரும் தொடர்ந்து சம்பிரதாய மற்றும் சட்ட ரீதியிலான கடமைகளை ஒருவருக்கொருவர் கொண்டிருந்தனர். பொதுவாக ஒரு சமூக வகுப்பாக விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் லிபர்தினி என்று அழைக்கப்பட்டனர். எனினும், பிந்தைய எழுத்தாளர்கள் லிபர்துசு மற்றும் லிபர்தினுசு ஆகிய சொற்களை இடம் மாற்றிப் பயன்படுத்தினர்.[139][140]
ஒரு லிபர்தினுசுவுக்குப் பொதுப் பதவி அல்லது அரசின் உயர்ந்த சமயத் தலைவர் பதவியை வகிக்கும் உரிமை கிடையாது. ஆனால், பேரரசர் வழிபாட்டு முறையில் ஒரு சமயப் பங்கை அவரால் வகிக்க இயலும். ஒரு செனட் சபை தரத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை அவரால் திருமணம் செய்ய இயலாது. தானும் முறைமையான செனட் தகுதியை அடைய இயலாது. ஆனால், பேரரசின் ஆரம்ப காலத்தின் போது விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகித்தனர். அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அத்ரியன் அவர்களின் பங்களிப்பைச் சட்டத்தின் மூலம் வரையறுத்தார்.[140] ஒரு விடுதலை செய்யப்பட்ட அடிமையின் எந்த ஓர் எதிர் காலக் குழந்தைகளும் சுதந்திரத்துடன் பிறந்தவர்களாகக் கருதப்படுவர். அவர்களுக்குக் குடிமகனுக்குரிய முழு உரிமைகளும் வழங்கப்படும்.
வெற்றிகரமான விடுதலை செய்யப்பட்ட அடிமைகளின் வளர்ச்சியானது தொடக்க கால ஏகாதிபத்திய சமூகத்தின் ஒரு தன்மையாக இருந்தது. இந்த வளர்ச்சி ஏகாதிபத்திய சேவையில் அரசியல் தாக்கம் மூலமாகவோ அல்லது செல்வம் மூலமாக நடைபெற்றது. பேரரசு முழுவதும் காணப்படும் கல்வெட்டுகள் பெரும் சாதனைகளைச் செய்த விடுதலை செய்யப்பட்ட அடிமைகளின் ஒரு குழுவின் செல்வச் செழிப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. வெட்டீ வீடு போன்ற பெருமளவில் செலவழித்த வீடுகளில் சிலவற்றை பொம்பெயில் அவர்கள் உடைமையாகக் கொண்டிருந்தது இதை உறுதிப்படுத்துகிறது. நீரோவின் காலத்தில் எழுதிய பெட்ரோனியசின் சாத்திரிகோன் என்று புதினத்திலுள்ள திரிமால்ச்சியோ என்ற கதாபாத்திரத்தால், விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் புதிய பணத்தைச் சேர்த்ததன் மூலம் செய்யும் செயல்கள் நையாண்டிப் படுத்தப்பட்டிருந்தன. இத்தகைய நபர்கள் தனித்துவமிக்கவர்களாக இருந்த அதே நேரத்தில், கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு செல்லும் சமூக நகர்வானது பேரரசில் சாத்தியமானது என்பதைத் தெரிவிப்பதாக இது இருந்தது.
மக்கள் படி நிலை
[தொகு]ஓர்தோ (பன்மை ஓர்தின்கள்) என்ற இலத்தீன் சொல்லானது ஒரு சமூகத் தனி நிலையைக் குறிக்கிறது. இது ஆங்கிலத்தில் "வகுப்பு, வரிசை, தரம்," என்று பலவராக மொழி பெயர்க்கப்படுகிறது. எனினும், எந்த ஓர் ஆங்கிலச் சொல்லும் சரியான பொருளைக் குறிப்பதில்லை. உரோமானிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு நோக்கமானது ஒரு நபர் எந்த ஓர்தோவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிவதாகும். உரோமில் இருந்த இரண்டு உச்சபட்ச ஓர்தின்கள் செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் குதிரை வீரர் வகுப்பினர் ஆகியோர் ஆவர். உரோமுக்கு வெளியே தெகுரியர்கள் ஒரு தனி நகரத்தின் உச்சபட்ச நிர்வகிக்கும் ஓர்தோவாகத் திகழ்ந்தனர்.
பண்டைக் கால உரோமில் "செனட் சபை உறுப்பினர்" என்பவர் ஒரு தேர்வு செய்யப்பட்ட பதவி கிடையாது. ஒரு செயல் பேராளராகக் குறைந்தது ஒரு முறை தேர்வு செய்யப்பட்டுச் சேவையாற்றியதற்குப் பிறகு, அந்த நபர் செனட்டுக்குள்ளான சேர்க்கையைப் பெற்றார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பால் கண்டறியப்பட்ட, குறைந்த பட்ச உடைமையாக 10 இலட்சம் செசதெர்தீயைக் (உரோமானிய நாணயம்) கொண்டிருக்கும் தகுதியையும் ஒரு செனட் சபை உறுப்பினர் பெற்றிருக்க வேண்டும்.[141] இந்தத் தகுதியை அடைவதற்கு இயலாத அளவிற்கு ஏழ்மையை அடைந்த பழைய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான செனட் சபை உறுப்பினர்களுக்குப் பெருமளவு பணத்தை இத்தகுதியை அடைய வேண்டும் என்பதற்காக அன்பளிப்பாக நீரோ கொடுத்தார். ஓர்தோ செனத்தோரியசு என்ற தகுதியை அடைந்த அனைத்து மனிதர்களும் ஒரு செனட் இருக்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. செனட் இருக்கையைப் பெறுவதற்கு உரோமில் சட்ட ரீதியான வாசிப்பாளராக இருக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த 600 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பில் பேரரசர்கள் பெரும்பாலும் வெற்றிடங்களை நியமிப்புகள் மூலம் நிரப்பினர்.[142] ஒரு செனட்டரின் மகன் ஓர்தோ செனத்தோரியசு நிலையில் இருந்தாலும், செனட்டில் அவரைச் சேர்த்துக் கொள்ள, மேற்கொண்ட தகுதிகளைத் தனி ஒருவராக அம்மகன் கொண்டிருக்க வேண்டும். நன்னடத்தைத் தர நிலைகளை மீறினால், ஒரு செனட் சபை உறுப்பினர் நீக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணை மணந்து கொள்வதற்கோ அல்லது வெட்ட வெளி வட்டரங்கில் சண்டையிடுவதற்கோ அவருக்குத் தடை இருந்தது.[143]
நீரோவின் காலத்தில் செனட் சபை உறுப்பினர்கள் தொடர்ந்து உரோம் மற்றும் இத்தாலியின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சிலர் ஐபீரிய மூவலந்தீவு மற்றும் தெற்கு பிரான்சைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். வெசுப்பாசியனுக்குக் கீழ் கிழக்கே இருந்த கிரேக்க மொழி பேசும் மாகாணங்களைச் சேர்ந்த ஆண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.[144] கிழக்குக் கோடி மாகாணமான கப்பதோசியாவைச் சேர்ந்த முதல் செனட் சபை உறுப்பினர் மார்க்கஸ் அரேலியஸின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[n] செவரன் அரசமரபின் (193-235) காலத்தில் செனட்டில் இத்தாலியர்கள் பாதிக்கும் குறைவாக இருந்தனர்[146]. 3ஆம் நூற்றாண்டின் போது செனட் சபை உறுப்பினர்கள் உரோமைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்தது. அரசியலில் செயல்பாட்டுடன் இருந்த மற்றும் தங்களது தாயகத்தில் (பத்ரியா) ஈகைக் குணத்துடன் இருந்த செனட் சபை உறுப்பினர்கள் குறித்து கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.[143]
செனட் சபை உறுப்பினர்கள் ஒரு மதிப்புணர்வால் சூழப்பட்டிருந்தனர். அவர்கள் பாரம்பரிய நிர்வாக வகுப்பினராக இருந்தனர். கர்சசு ஆனோரம் எனும் அரசியல் வாழ்க்கைப் பாதையில் வளர்ச்சியடைந்திருந்தனர். ஆனால், பேரரசின் குதிரை வீரர் வகுப்பினர் பெரும்பாலும் செனட் சபை உறுப்பினர்களை விடப் பெரும் செல்வத்தையும், அரசியல் சக்தியையும் கொண்டிருந்தனர். குதிரை வீரர் வகுப்பினரின் உறுப்பினராவது உடைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உரோமின் ஆரம்ப நாட்களில், ஈக்குதேசு அல்லது நைட் வீரர்கள் குதிரையேற்ற வீரர்களாகச் ("பொதுக் குதிரை" எனப்பட்டனர்) சேவையாற்றும் தங்களது திறமையால் தனித்துவம் பெற்றிருந்தனர். ஆனால், பேரரசின் இராணுவத்தில் குதிரைப்படைப் பிரிவு என்பது ஒரு தனியான அமைப்பாக இருந்தது.[o] மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மூலம் மதிப்பிடப்பட்ட 4 இலட்சம் உரோமானிய நாணயங்களை உடைமையாகக் கொண்டிருந்தவர் மற்றும் மூன்று தலைமுறைகளாக சுதந்திரத்துடன் பிறந்தவரே ஒரு குதிரை வீரர் வகுப்பின் உறுப்பினராகும் தகுதியைப் பெற்றிருந்தார்.[148] பொ. ஊ. மு. 28ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது இத்தகுதியை அடைந்த பெரும் எண்ணிக்கையிலான ஆண்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பொ. ஊ. 14இல் காதிசு மற்றும் பதுவா ஆகிய இடங்களில் மட்டும் 1,000 குதிரை வீரர் வகுப்பினர் பதிவு செய்தனர்.[p][150] குதிரை வீரர் வகுப்பினர் திரேசு மிலிதியா எனும் ஓர் இராணுவ வாழ்க்கைப் பாதையில் வளர்ச்சியடைந்திருந்தனர். ஏகாதிபத்திய நிர்வாகத்திற்குள் உயர்ந்த பதவியை அடைந்த மூத்த பேராளர் அல்லது ஆளுநர் மற்றும் கருவூல அதிகாரிகளாகத் திகழ்ந்தனர்.[151]
மாகாண ஆண்கள் செனட் அல்லது குதிரை வீரர் வகுப்பின் உறுப்பினர்களாக வளர்ச்சியடைவது என்பது பேரரசின் முதல் மூன்று நூற்றாண்டுகளின் சமூக நகர்வு நிலையின் ஓர் அம்சமாக இருந்தது. உரோமானிய உயர்குடியானது போட்டியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. பிந்தைய ஐரோப்பிய உயர்குடியினரைப் போல் இல்லாமல், ஓர் உரோமானிய குடும்பமானது தனது நிலையை மரபு வழி வாரிசுகள் வழியாகவோ அல்லது நில உரிமையைக் கொண்டோ தொடர்ந்து கொண்டிருக்க இயலாது.[152] உயர்ந்த ஓர்தினேசுக்குள் ஒருவர் சேர்வது என்பது தனித்துவத்தையும், மதிப்பையும் கொடுத்தது. ஆனால், ஒரு சில பொறுப்புகளையும் கொடுத்தது. பண்டைக் காலத்தில் ஒரு நகரமானது அதன் முக்கியப் பொதுப் பணி வேலைகள், நிகழ்வுகள் மற்றும் சேவைகள் (முனேரா) ஆகியவற்றுக்கு நிதியளிக்கத் தனது முக்கியக் குடிமக்களைச் சார்ந்திருந்தது. வரி வருவாயைச் சார்ந்திருக்கவில்லை. வரி வருவாயானது முதன்மையாக இராணுவத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. ஒருவர் தன் தர நிலையைப் பேணுவதற்குப் பெருமளவு தனி நபர் செலவீனத்தைச் செய்ய வேண்டிய தேவை இருந்தது.[153] பேரரசின் பிந்தைய காலத்தைப் போலவே, நகரங்கள் செயல்படுவதற்குத் தெகுரியர்கள் மிகவும் இன்றியமையாதவர்களாக இருந்தனர். பட்டண மன்றங்களில் இருந்த தர நிலைகளுக்கான உறுப்பினர்கள் குறைந்த போது, செனட் சபை உறுப்பினர்களாகப் பதவி உயர்ந்தவர்கள் மைய அரசாங்கத்தால் தங்களது பதவிகளைக் கைவிட்டு விட்டுத் தங்களது சொந்த பட்டணங்களுக்குத் திரும்புமாறு ஊக்குவிக்கப்பட்டனர். இது அன்றாடப் பொதுப்பணி வாழ்க்கையை நீடித்திருக்கச் செய்யும் ஒரு முயற்சியாக நடைபெற்றது.[154]
பேரரசின் பிந்தைய காலத்தில் திகினிதாசு ("பயனுடைய, நன் மதிப்புடைய") செனட் அல்லது குதிரை வீரர்கள் வரிசை நிலையை அடைந்தால் அவர்களுக்கு மேற்கொண்ட பட்டங்களான விர் இல்லசுதிரிசு ("புகழ்பெற்ற மற்றும் வெற்றி ஆக்கமுள்ள மனிதன்") போன்றவை கொடுக்கப்பட்டன[155]. கிலாரிசுமசு என்ற பட்டமானது சில செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் வீட்டுப் பெண்கள் உள்ளிட்ட உடனடிக் குடும்பத்தினரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.[156] குதிரை வீரர் வரிசை உறுப்பினர்களின் சம்பள அளவானது பெருகியது. ஏகாதிபத்திய சேவையாற்றியவர்களின் தரமானது அவர்களின் சம்பளத்தால் தர நிலைப்படுத்தப்பட்டது. எக்சாசெனரியசு என்பவர்கள் ஆண்டுக்கு 60,000 உரோமானிய நாணயங்களையும், சென்டனேரியசு என்பவர்கள் ஆண்டுக்கு 1 இலட்சம் உரோமானிய நாணயங்களையும், துசெனாரியசு என்பவர்கள் ஆண்டுக்கு 2 இலட்சம் நாணயங்களையும் சம்பளமாகப் பெற்றனர். எமினெந்திசிமசு (“மிகுந்த புகழ் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த”) என்ற பட்டமானது பேரரசரின் பிரித்தோரியப் பாதுகாவலர்களாக இருந்த குதிரை வீரர் வரிசையிரின் உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. குதிரை வீரர் வகுப்பு உயர் அதிகாரிகள் பொதுவாக பெர்பெக்திசிமி (“மிகுந்த மேன்மை வாய்ந்த”) மற்றும் கீழ் நிலையில் இருந்தவர்கள் வெறுமனே எக்ரெகீ (“உயர்ந்த”) என்ற பட்டத்தையும் கொண்டிருந்தனர்.[157]
சமமற்ற நீதி
[தொகு]குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமென்ற குடியரசுக் கொள்கையானது மங்கத் தொடங்கிய போது, மேல் வகுப்பினரின் பெயரளவு மற்றும் சமூகத் தனி உரிமையானது உரோமானியச் சமூகத்தில் பெரும் மதிப்பை (ஆனசுதியோரேசு) பெற்றவர்கள் மற்றும் எளிமையான மக்கள் (உமிலியோரேசு) என்று முறை சாராப் பிரிவுகளுக்கு வழி வகுத்தது. பொதுவாக, ஆனசுதியோரேசு என்பவர்கள் மூன்று உயர்ந்த "வகுப்பினரின்" உறுப்பினர்களாக, ஒரு சில இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து திகழ்ந்தனர்.[158] பொ. ஊ. 212இல் அனைவருக்கும் குடியுரிமை வழங்கிய நிகழ்வானது, புதிதாகக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மேல் தமது உயர் நிலையை நிலை நாட்ட வேண்டும் என மேல்தட்டு வகுப்பினர் மத்தியில் ஒரு போட்டி வேட்கையை அதிகப்படுத்தியது. குறிப்பாக நீதி அமைப்பில் இத்தகைய உயர் நிலையைப் பெற வேண்டும் என அவர்களுக்கு வேட்கை ஏற்பட்டது.[159] பொறுப்பேற்ற அதிகாரியின் தீர்ப்பைப் போலவே, தண்டனை வழங்குவது என்பது பிரதிவாதியின் ஒப்பீட்டளவிலான மதிப்பையும் (திகினிதாசு) பொறுத்து அமைந்தது. குற்றம் நிரூபிக்கப்படும் போது ஓர் ஆனசுதியோர் அபராதம் செலுத்தும் நிலையும், அதே குற்றத்திற்காக ஓர் உமிலியோர் கசையடியைப் பெறும் நிலை இருந்தது.[160]
குடியரசின் கீழ் மரண தண்டனைக்குரிய குற்றங்களில் கூட சுதந்திரமான ஆண்களுக்குச் சட்ட ரீதியாகக் கொடுக்கப்படும் தண்டனையாக மரண தண்டனையானது அவ்வப்போது மட்டுமே கொடுக்கப்பட்டது.[161] "மிகுந்த மரியாதைக்குரியவர்களாகக்" கருதப்பட்ட ஏகாதிபத்தியக் குடிமக்களுக்கு ஒப்பீட்டளவில் வேகமானதாகவும், வலியற்றதாகவும் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில், தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் முன்னர் அடிமைகளுக்கென்று மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த சித்ரவதை முறைகள் மற்றும் நீண்ட நேரம் நிகழ்கிற இறப்பு ஆகியவற்றை அடையும் நிலையைச் சந்தித்தனர். இதில் சிலுவையில் அறைந்து கொல்லப்படுதல் மற்றும் வட்டரங்கில் வேடிக்கையாகப் பிறர் கண்டு களிக்கும் போது விலங்குகளுக்கு இரையாக விடப்படுவதும் ஆகியவையும் அடங்கும்.[162] தொடக்க காலப் பேரரசில் கிறித்தவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் தங்களது ஆனசுதியோரேசு எனும் மதிப்பை இழக்கலாம். குறிப்பாக, தங்களது குடிமகனுக்குரிய பொறுப்புகளின் சமயம் சார்ந்த அம்சங்களை அவர்கள் பூர்த்தி செய்ய மறுத்தால் இவ்வாறு நிகழலாம். இவ்வாறாக, அவர்கள் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படலாம். அத்தண்டனைகள் அவர்கள் தியாகிகள் ஆவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கின.[163]
அரசாங்கமும், இராணுவமும்
[தொகு]ஏகாதிபத்திய உரோமானிய அரசின் மூன்று முதன்மையான அம்சங்களானவை மைய அரசாங்கம், இராணுவம் மற்றும் மாகாண அரசாங்கம் ஆகியவையாகும்.[164] ஒரு நிலப்பரப்பு மீதான கட்டுப்பாட்டை இராணுவமானது போர் மூலம் நிலை நாட்டியது. ஆனால், ஒரு நகரமோ அல்லது மக்களோ ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு, இராணுவத்தின் பணியானது ஒழுங்கமைப்பதாக மாறியது. உரோமானியக் குடிமக்கள் (பொ. ஊ. 212க்குப் பிறகு பேரரசின் அனைத்து சுதந்திரமாகப் பிறந்த குடிமக்கள்), அவர்களுக்கு உணவளித்த விவசாய நிலங்கள், மற்றும் சமயம் சார்ந்த இடங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது ஆகியவை இதில் அடங்கும்.[165] ஒட்டு மொத்த தொலைத்தொடர்பு அல்லது ஒட்டு மொத்த அழிவை ஏற்படுத்தும் எந்த வித நவீன செயற்கருவிகளும் இல்லாமல் இராணுவ வலிமையின் மூலமாக மட்டுமே தங்களது ஆட்சியைத் திணிப்பதற்கு, உரோமானியர்கள் போதிய மனித வளத்தையோ அல்லது வளத்தையோ கொண்டிருக்கவில்லை. சட்டம் ஒழுங்கைப் பேணுவது, தகவல்களைச் சேமிப்பது மற்றும் வருவாயைப் பெறுவது ஆகியவற்றுக்கு சக்தி வாய்ந்த உள்ளூர் மேனிலை மக்களுடனான ஒத்துழைப்பானது தேவையானதாக இருந்தது. ஒரு பிரிவுக்கு எதிராக மற்றொரு பிரிவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் உள்ளூர் அரசியல் பிரிவினையை உரோமானியர்கள் அடிக்கடித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். புளூட்டாக் இதைக் குறிப்பிட்டு, "நகரங்களுக்குள் இருந்த பிரிவுகளுக்கு இடையிலான சண்டையே சுயாட்சியை இழப்பதற்கு இட்டுச் சென்றது" என்று கூறியுள்ளார்.[166]
தங்களது விசுவாசத்தை உரோமுக்குக் காட்டிய சமூகங்கள் தங்களது சொந்த சட்டங்களைத் தக்க வைத்துக் கொண்டன. அவைகளால் தங்கள் சொந்த வரிகளை உள்ளூர் அளவில் வசூலிக்க முடியும். சில அரிதான நிகழ்வுகளில் உரோமானிய வரி விதிப்பில் இருந்து அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. சட்டரீதியிலான பெருமைகள் மற்றும் ஒப்பீட்டளவிலான சுதந்திரம் ஆகியவை உரோமுடன் நல்லுறவைத் தொடர்ந்து பேணுவதற்கு ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது.[167] இவ்வாறாக, உரோமை அரசாங்கமானது வரம்புக்குட்பட்டதாக இருந்தது. ஆனால், தனக்குக் கிடைத்த வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தியது.[168]
மைய அரசாங்கம்
[தொகு]பண்டைக் கால உரோமின் ஏகாதிபத்திய வழிபாட்டு முறையானது பேரரசர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சில உறுப்பினர்களை உரோமானிய அரசின் தெய்வீகமாக வழங்கப்பட்ட அதிகாரத்துடன் (அக்தோரிதசு) அடையாளப்படுத்தினர். அப்போதியோசிசு சடங்கானது இறந்த பேரரசரைத் தெய்வமாக்கும் முயற்சியை முக்கியத்துவப்படுத்தியது. மக்களின் தந்தையாக அவரது பங்கை ஒப்புக்கொண்து. பாதர் பேமிலியாசு ஆன்மா கொள்கை அல்லது மானேசு என்ற அவரது மகன்களால் மரியாதை செலுத்தப்பட்டதை இது ஒத்திருந்தது.[170]
பேரரசரின் ஆதிக்கமானது பல்வேறு குடியரசு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட சில சக்திகளை ஒன்றிணைத்தலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதில் மக்களின் தீர்ப்பாயங்களின் மீற இயலாத தன்மை மற்றும் உரோமானிய சமூகத்தின் படி நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய தணிக்கையாளர்களின் அதிகாரம் ஆகியவையும் அடங்கும்.[171] பாந்திபக்சு மேக்சிமசு என்ற மைய சமய அதிகாரம் பெற்றவராகப் பேரரசர் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டார். போரைப் பிரகடனப்படுத்தும் உரிமை, ஒப்பந்தங்களில் கையொப்பமிடுதல் மற்றும் அயல் நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஆகியவற்றைப் பேரரசர் மையப்படுத்தினார்.[172] இந்தச் செயல்கள் பிரின்சிபேத்து காலத்தின் போது தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்த போதும், பேரரசரின் சக்திகளானவை காலப் போக்கில் அரசியலமைப்புத் தன்மை குறைந்து, முடியரசுத் தன்மை அதிகமாக உருவாயின. இறுதியாக ஆதிக்கவாதியாக அவரை ஆக்கின.[173]
பேரரசர் கொள்கை வகுப்பதிலும், முடிவு எடுப்பதிலுமான இறுதியான அதிகாரமுடையவராக இருந்தார். ஆனால், தொடக்க கால பிரின்சிபேத்துவில் தினசரி வாழ்க்கை சார்ந்த அனைத்து நபர்களாலும் எளிதாகத் தொடர்பு கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டார். அலுவல் பூர்வ வர்த்தகம் மற்றும் மனுக்களைத் தானே சொந்தமாகக் கையாள வேண்டும் என அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு விதிமுறைக் குவிமைய ஆட்சியானது அவரைச் சுற்றிப் படிப்படியாகவே உருவானது[174]. ஜூலியோ-கிளாடிய அரசமரபின் பேரரசர்கள் செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் குதிரை வீரர் வரிசையின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது நம்பிக்கைக்குரிய அடிமைகள் மற்றும் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளின் ஒரு முறைசாரா ஆலோசகர்களின் அமைப்பைச் சார்ந்திருந்தனர்.[175] நீரோவுக்குப் பிறகு இந்த முறைசாரா அமைப்பின் தாக்கமானது சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்பட்டது. பெருமளவுக்கு ஒளிவுமறைவற்ற தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக பேரரசரின் மன்றமானது (கன்சிலியம்) அலுவல் பூர்வ நியமிப்பால் உருவாக்கப்பட்டது.[176] அந்தோனின் அரசமரபின் முடிவு வரை, கொள்கை விவாதங்களில் செனட் சபையானது முடிவெடுப்பதில் முன்னிலை வகித்த போதும், கன்சிலியத்தில் அதிகரித்து வந்த முக்கியமான பங்கை குதிரை வீரர் வரிசையின் உறுப்பினர்கள் வழங்கினர்.[177] பேரரசரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரது முடிவுகளில் பல நேரங்களில் நேரடியாகத் தலையிட்டனர். பிளொதினா தனது கணவர் திராயான் மற்றும் அவருக்குப் பின் வந்த அத்திரியன் ஆகிய இருவரின் முடிவுகள் மீதும் தாக்கத்தைக் கொண்டிருந்தார். அலுவலக விவகாரங்கள் சம்பந்தமான பதிப்பிக்கப்பட்ட அவரது கடிதங்கள் அவரது தாக்கத்தை வெளிக்காட்டுவதாக இருந்தன. பேரரசர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் போது ஏற்பிசைவுக்கு உரியவராகவும், தனது மக்களின் கருத்துக்களைக் கேட்பவராகவும் இருந்தார் என்பதன் அறிகுறி இதுவாகும்.[178]
மற்றவர்கள் பேரரசரைச் சந்திக்க வேண்டுமெனில், தினசரி வரவேற்புக் கூடத்தில் (சல்யூதசியோ) அனுமதி பெறலாம். தனது புரவலருக்கு, உதவி பெற்ற ஒருவர் பாரம்பரியமாக மரியாதை செலுத்தும் முறையிலிருந்து இம்முறை உருவானது. அரண்மனையில் பொது விருந்துகளும், சமய விழாக்களும் நடத்தப்பட்டன. இவ்வாறான வாய்ப்பைப் பெறாத பொதுமக்கள் தங்களது பொதுவான ஆமோதிப்பு அல்லது மகிழ்ச்சியின்மையை ஒரு குழுவாக பெரிய வட்ட அரங்குகளில் நடைபெற்ற விளையாட்டுகளில் காட்டலாம்.[179] 4ஆம் நூற்றாண்டில் நகர்ப்புற மையங்கள் சிதைவுறத் தொடங்கிய போது, கிறித்தவப் பேரரசர்கள் தொலை தூரத்தில் இருந்த பெயரளவுத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் பொதுச் சட்டங்களை வெளியிட்டனர். தனி மனுக்களுக்குப் பதிலளிக்கும் நடைமுறையைக் கைவிட்டனர்.[180]
பேரரசரின் எண்ணத்தை மீறுவதற்காக கிட்டத்தட்ட அரசியல் கொலைக்குச் சமமான ஒன்றையோ அல்லது வெளிப்படையான கிளர்ச்சியையோ செனட் சபையால் செய்ய முடியும் என்றாலும், அகத்தசின் மீட்டாக்கம் மற்றும் கொந்தளிப்பான நான்கு பேரரசர்களின் ஆண்டு ஆகியவற்றில் தப்பிப் பிழைத்து, அதன் பெயரளவு அரசியல் மைய நிலையை பிரின்சிபேத்து காலத்தின் போது செனட் சபையானது தக்க வைத்துக் கொண்டது.[181] பேரரசரின் ஆட்சியைச் செனட் சபையானது முறைமை உடையதாக்கியது. தளபதிகள், தூதுவர்கள் மற்றூம் நிர்வாகிகளாகச் சேவையாற்ற, செனட் சபை உறுப்பினர்களின் அனுபவமானது சட்டவியலாளர்களாகப் (லீகதி) பேரரசருக்குத் தேவைப்பட்டது.[182] நிர்வாகியாக ஒரு திறமை மற்றும் பேரரசரின் அலலது காலப் போக்கில் பல பேரரசர்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்றிருப்பது ஆகியவை ஒரு வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்குத் தேவையானதாக இருந்தன.[183]
பேரரசரின் சக்தி மற்றும் அதிகாரத்திற்கு நடைமுறை ரீதியிலான ஆதாரமாகத் திகழ்ந்தது இராணுவம் ஆகும். இலீஜியன் பிரிவுகளுக்கு ஏகாதிபத்தியக் கருவூலத்தில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டது. அவர்கள் ஆண்டு தோறும் பேரரசருக்கு விசுவாசமாக இருப்பதான இராணுவ உறுதி மொழிகளை (சாக்ரமென்டம்) எடுத்துக் கொண்டனர்.[184] பேரரசரின் இறப்பானது நிலைத்தன்மையற்ற மற்றும் பிரச்சனைகள் நிறைந்த ஒரு முக்கியமான கால கட்டத்திற்கு இட்டுச் சென்றது. பெரும்பாலான பேரரசர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வாரிசுகளை அடையாளம் காட்டினர். இந்த வாரிசுகள் பெரும்பாலும் ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லது தத்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தனர். அரசியல் நிலப்பரப்பை நிலைப்படுத்துவதற்காகப் புதிய பேரரசர் தன்னுடைய நிலை மற்றும் அதிகாரத்தின் வெளிப்பாட்டை சீக்கிரமே காட்ட வேண்டும். பிரிடோரியக் காவலர்கள் மற்றும் இலீஜியன் பிரிவுகளின் கூட்டணி மற்றும் விசுவாசம் இல்லாமல் எந்த ஒரு பேரரசரும் எஞ்சி இருப்பதற்கான நம்பிக்கையைக் கொள்ளக் கூடாது என்ற நிலை இருந்தது. அதற்கு அடுத்து தான் அவரது ஆட்சி எஞ்சியிருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகப் பல பேரரசர்கள் இராணுவத்திற்கு தொனேதிவம் எனும் ஒரு பணத் தொகைகளை வழங்கினர். கோட்பாட்டளவில் செனட் சபையானது புதிய பேரரசரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தது. ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் போதும் பிரிடோரியர்களின் அல்லது இராணுவத்தின் அங்கீகாரத்தையும் கருத்தில் கொள்வார்கள்.[185]
இராணுவம்
[தொகு]பியூனிக் போர்களுக்குப் பிறகு ஏகாதிபத்திய உரோமனிய இராணுவமானது 20 ஆண்டுகளுக்கு இராணுவப் பணிக்கும், 5 ஆண்டுகளுக்குச் சேமப் படையினராகவும் சேவையாற்றத் தன்னார்வம் கொண்ட தொழில் முறை இராணுவ வீரர்களை உள்ளடக்கியதாக இருந்தது. குடியரசின் பிந்தைய காலத்தின் போது ஒரு தொழில் முறை இராணுவத்திற்கான மாற்றமானது தொடங்கியது. குடியரசுக் கொள்கையிலிருந்து விலகிய முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்ந்தது. குடியரசின் கீழ் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களைக் கொண்ட ஓர் இராணுவமானது ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு படையெடுப்பில் தங்களது தாயகத்தைத் தற்காப்பதில் குடிமக்களாகத் தங்களது பொறுப்புகளைச் செயல்படுத்தியது. ஏகாதிபத்திய உரோமைப் பொறுத்த வரை இராணுவம் என்பது ஒரு முழு நேரப் பணியாக இருந்தது.[186] "தங்களது இராணுவத்திற்கு ஒரு பெருமளவிலான மனித வளத்தை உருவாக்கிக் கொடுத்த ஓர் அமைப்பாக இத்தாலியில் தாங்கள் வென்ற சமூகங்களை அமைத்ததன் மூலம் உரோமானியர்கள் தங்களது போர் எந்திரத்தை உருவாக்கினார்... தங்களால் தோற்கடிக்கப்பட்ட அனைத்து எதிரிகளிடமும் இவர்கள் வைத்த முதன்மையான கோரிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் உரோமானிய இராணுவத்திற்கு வீரர்களைக் கொடுக்க வேண்டும் என்பதாகும்."[187]
தொடக்க காலப் பேரரசில் உரோமானிய இராணுவத்தின் முதன்மையான பணியானது பாக்ஸ் உரோமனாவை அழியாமல் பாதுகாத்து வைப்பதாக இருந்தது.[188] இராணுவத்தின் மூன்று முதன்மையான பிரிவுகளானவை:
- உரோமில் இருந்த கோட்டைக் காவல் படையினர், இதில் பிரடோரியன் காவலர்கள், கோகோர்த்தேசு அர்பனே மற்றும் விசிலேசு ஆகியோர் அடங்குவர். இதில் விசிலேசு காவலர்களாகவும், தீயணைப்பு வீரர்களாகவும் பணியாற்றினர்;
- மாகாண இராணுவம், மாகாணங்களால் (ஆக்சிலியா) கொடுக்கப்பட்ட உரோமானிய இலீஜியன்கள் மற்றும் துணைப் படைகளை இது உள்ளடக்கியிருந்தது;
- கடற்படை.
பேரரசு முழுவதும் பரவியிருந்த இராணுவக் கோட்டைக் காவல் படையினரின் பரவலானது "உரோமானிய மயமாக்கம்" என்று அறியப்பட்ட கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் ஒன்றிணைவு செயல் மீது ஒரு முக்கியத் தாக்கமாக இருந்தது. குறிப்பாக, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த நிகழ்வுகளில் இது முக்கியத் தாக்கமாய் இருந்தது.[189] உரோமானிய இராணுவம் குறித்த தகவல்களானவை ஒரு பல்வேறுபட்ட ஆதாரங்களில் இருந்து கிடைக்கின்றன. அவற்றில் கிரேக்க மற்றும் உரோமானிய இலக்கிய நூல்கள், இராணுவக் கருத்துருக்களைக் கொண்ட நாணயங்கள், இராணுவ ஆவணங்களைப் பாதுகாத்து வைத்துள்ள பாபிரஸ் காகிதங்கள், திராயானின் தூண் மற்றும் வெற்றி வளைவுகள் போன்ற நினைவுச்சின்னங்கள்; வெற்றி வளைவுகளானவை போரிடும் வீரர்கள் மற்றும் இராணுவ எந்திரங்கள் ஆகிய இரு வகையான கலைச் சித்தரிப்புளையும் சிறப்பம்சமாகக் கொண்டிருந்தன; இராணுவ புதைக்கும் இடங்கள், யுத்த களங்கள் மற்றும் முகாம்கள் ஆகியவற்றின் தொல்லியல் ஆய்வு; இராணுவச் சான்றிதழ்கள், கல்லறை வாசகங்கள், அர்ப்பணிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட கல்வெட்டுகள் ஆகியவற்றிலிருந்து இத்தகவல்கள் பெறப்படுகின்றன.[190]
தனது இராணுவச் சீர்திருத்தங்கள் மூலமாக அகத்தசு இலீஜியனை மாற்றி ஒழுங்குபடுத்தினார். இந்தச் சீர்திருத்தங்களில் கேள்விக்குரிய விசுவாசத்தைக் கொண்டிருந்த இராணுவப் பிரிவுகளை நிலை நிறுத்துவது அல்லது கலைப்பது ஆகியவையும் அடங்கும். இராணுவ மிதியடிகளில் அடிப்பகுதியில் உள்ள ஆணிகளின் அமைப்பை மாற்றுவது வரை இந்தச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. 10 பேர் ஓர் இசுகுவாடு (காந்துபெர்னியா) என்று அழைக்கப்பட்டனர். 10 இசுகுவாடுகள் ஒரு செஞ்சுரி என்று அழைக்கப்பட்டன. ஆறு செஞ்சுரிகள் ஒரு கோகோர்த்து என்று அழைக்கப்பட்டன. பத்து கோகோர்த்துகள் ஓர் இலீஜியன் என்று அழைக்கப்பட்டன. ஏகாதிபத்திய இலீஜியனின் சரியான அளவானது பெரும்பாலும் போர் ஏற்பாடுகள் குறித்த தகவல்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஓர் இலீஜியனில் 4,800 முதல் 5,280 பேர் வரை இருந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[191]
பொ. ஊ. 9இல் தியூத்தோபர்க் யுத்தத்தில் செருமானியப் பழங்குடியினங்கள் 3 முழு இலீஜியன்களையும் அழித்தனர். இந்த அழிவை ஏற்படுத்திய நிகழ்வானது இலீஜியன்களின் எண்ணிக்கையை 25 ஆகக் குறைத்தது. பின்னர் இலீஜியன்களின் எண்ணிக்கையானது மீண்டும் அதிகப்படுத்தப்பட்டது. அடுத்த 300 ஆண்டுகளுக்கு எப்போதுமே 30க்கு சற்றே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இந்த எண்ணிக்கை இருந்தது.[192] 1ஆம் நூற்றாண்டில் இராணுவமானது சுமார் 3 இலட்சம் வீரர்களைக் கொண்டிருந்தது. 2ஆம் நூற்றாண்டில் 4 இலட்சத்துக்கும் குறைவானவர்களைக் கொண்டிருந்தது. பேரரசு தான் வென்ற நிலப்பரப்புகளில் இருந்த ஆயுதமேந்திய படைகளை விட இது "குறிப்பிடத்தக்க அளவு குறைவாகும்". பேரரசில் வாழ்ந்த 2%க்கும் குறைவான ஆண்களே ஏகாதிபத்திய இராணுவத்தில் சேவையாற்றினர்.[193]
அகத்தசு பிரடோரியக் காவலர்களையும் உருவாக்கினார். இதில் ஒன்பது கோகோர்த்துகள் அடங்கியிருந்தன. பொது அமைதியைப் பேணுவதற்காக இது உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இவை இத்தாலியில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தன. இலீஜியன் வீரர்களை விட இதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. பிரடோரியர்கள் வெறும் 16 ஆண்டுகளுக்கு மட்டுமே சேவையாற்றினர்.[194]
ஆக்சிலியா எனும் துணை இராணுவத்திற்குக் குடியுரிமை இல்லாதவர்களில் இருந்து ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தோராயமாக கோகோர்த்து எண்ணிக்கையில் இருந்த சிறு பிரிவுகளாக இவை அமைக்கப்பட்டன. பிரிரடோரிய வீரர்களை விட இவர்களுக்குச் சம்பளம் குறைவாகக் கொடுக்கப்பட்டது. 25 ஆண்டுகள் சேவையாற்றியதற்குப் பிறகு இவர்களுக்கு உரோமானியக் குடியுரிமை வழங்கப்பட்டது. இவர்களது மகன்களுக்கும் இக்குடியுரிமை நீட்டிப்பு செய்யப்பட்டது. தசிதசுவின் கூற்றுப் படி,[195] தோராயமாக இலீஜியன்களின் எண்ணிக்கைக்குச் சமமான அளவில் ஆக்சிலியர்கள் இருந்தனர். இவ்வாறாக ஆக்சிலியாவானது சுமார் 1,25,000 வீரர்களைக் கொண்டிருந்தது என்று மதிப்பிடப்படுகிறது. இதனடிப்படையில் சுமார் 250 ஆக்சிலியப் பிரிவுகள் இருந்தன என்பதை நாம் அறியலாம்.[196] பேரரசின் தொடக்க காலத்தில் உரோமானியக் குதிரைப் படையானது முதன்மையாகச் செல்திக்கு, எசுப்பானிய மற்றும் செருமானியப் பகுதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டிருந்தது. நான்கு கொம்பு சேணம் போன்றவை செல்திக்கு மக்களிடம் இருந்து பெறப்பட்டு இருந்தது. இதை அர்ரியன் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் ஆய்வும் இதனை நமக்குக் காட்டுகிறது. இது போன்ற பல்வேறு பயிற்சி மற்றும் உபகரணங்களின் அம்சங்கள் செல்திக்கு மக்களிடம் இருந்து பெறப்பட்டன.[197]
உரோமானியக் கடற்படையானது (இலத்தீன்: கிளாசிசு, "படகுகளின் தொகுதி") இலீஜியன்களுக்குப் பொருட்கள் வழங்குவது மற்றும் அவற்றின் போக்குவரத்துக்கு மட்டும் உதவாமல் ரைன் மற்றும் தன்யூபு ஆறுகளை ஒட்டியிருந்த எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதிலும் உதவி புரிந்தன. கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக முக்கியமான கடல் வணிக வழிகளைப் பாதுகாப்பதும் இதன் மற்றொரு பணியாகும். நடு நிலக் கடலின் முழுப்பகுதி, வட அத்திலாந்திக்குக் கடற்கரையின் பகுதிகள் மற்றும் கருங்கடல் ஆகியவற்றில் இவை ரோந்து சென்றன. இருப்பினும், தரைப்படையே முதிர்ச்சி அடைந்ததாகவும், மிகுந்த மதிப்புக்குரிய பிரிவாகவும் கருதப்பட்டது.[198]
மாகாண அரசாங்கம்
[தொகு]ஓர் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலப்பரப்பானது உரோமானிய மாகாணமாக மூன்று படி செயல் முறையில் மாறியது: நகரங்களைப் பதிவிடுதல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துதல் மற்றும் நிலங்களை அளவிடுதல்.[199] மேற்கொண்ட அரசாங்கப் பதிவுகளானவை பிறப்பு மற்றும் இறப்புகள், நிலம் சார்ந்த பணப் பரிமாற்றங்கள், வரிகள் மற்றும் சட்ட வழக்குகளையும் உள்ளடக்கியிருந்தது.[200] 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளில் இத்தாலிக்கு வெளியே ஆள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 160 அதிகாரிகளை மைய அரசாங்கமானது அனுப்பியது.[11] இந்த அதிகாரிகளில் உரோமானிய ஆளுநர்களும் அடங்குவர்: உரோமில் தேர்வு செய்யப்பட்ட பேராளர்கள் உரோமானிய மக்களின் பெயரில் செனட் மாகாணங்களை ஆண்டனர்; அல்லது பொதுவாகக் குதிரை வீரர் வரிசையின் உறுப்பினர்களாக இருந்த ஆளுநர்கள். ஏகாதிபத்திய மாகாணங்களில் பேரரசர்களின் சார்பாகத் தங்களது இம்பீரியத்தை இவர்கள் கொண்டிருந்தனர். இதற்குக் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு, எகிப்து ஆகும்.[201] தன் ஆளுகைக்குட்பட்ட மக்களுக்கு எளிதில் அணுகக் கூடியவராக ஓர் ஆளுநர் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றிருந்தது. ஆனால், பல்வேறு பணிகளை மற்றவர்களுக்கு அதிகாரத்தை அளிப்பதன் மூலம் இவர் செய்து முடிக்கலாம்.[202] எனினும், இவருக்கென்ற பணியாளர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைவாக இருந்தது: செயலாளர்கள், அறிவிப்பாளர்கள், செய்தி கொண்டு செல்பவர்கள், எழுத்தர்கள், பாதுகாவலர்கள் ஆகிய இவரது அலுவலக பணியாளர்கள் (அப்பரித்தோரோசு); இவர்களுக்குக் குடிசார் மற்றும் இராணும் ஆகிய இரு பணிகளையும் புரிந்த பணியாளர்கள், இவர்கள் பொதுவாகக் குதிரை வீரர் வரிசை உறுப்பினர் அளவுக்குச் சமமானவர்களாக இருந்தனர்; மற்றும் நண்பர்கள், நண்பர்களின் வயது மற்றும் அனுபவமானது வேறுபட்டிருந்தது. அவர்கள் ஆளுநருடன் அலுவல் சாரா வகையில் உடனிருந்தனர்.[202]
மற்ற அதிகாரிகள் அரசாங்க நிதிப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.[11] நீதித்துறை மற்றும் நிர்வாகத்திலிருந்து நிதிப் பொறுப்பைப் பிரித்தது என்பது ஓர் ஏகாதிபத்தியச் சகாப்தச் சீர்திருத்தம் ஆகும். குடியரசின் கீழ் மாகாண ஆளுநர்களும், வரி வசூலிப்பாளர்களும் உள்ளூர் மக்களிடமிருந்து தங்களது சொந்த அனுகூலத்திற்குப் பணத்தை அதிக சுதந்திரத்துடன் சுரண்டலாம் என்ற நிலை இருந்தது.[203] குதிரை வீரர் வரிசை சார்ந்த கருவூல அதிகாரிகளின் அதிகாரமானது உண்மையில் "நீதித்துறை தாண்டியதாகவும், அரசியலமைப்பைத் தாண்டியதாகவும்" இருந்தது. அவர்கள் அரசின் சொந்த உடமை மற்றும் பேரரசரின் பரந்த தனி நபர் உடைமைகளைப் (ரெசு பிரைவேத்தா) பேணினர்.[202] உரோமானிய அரசாங்க அதிகாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், ஒரு சட்ட பிரச்சனை அல்லது குற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உதவி தேவைப்படும் ஒரு மாகாண அதிகாரி ஓரளவுக்கு அலுவல் அதிகாரம் உடையவராகத் தோன்றிய எந்த ஓர் உரோமானியரின் உதவியையும் கேட்கலாம் என்ற நிலை இருந்தது. இந்த உரோமானியர்கள் கருவூல அதிகாரிகள் அல்லது இராணுவ அதிகாரிகள் போன்றவர்களாக இருக்கலாம். இராணுவ அதிகாரிகளில் செஞ்சூரியன்களில் இருந்து கீழ் நிலையில் இருந்த இசுதேசனரீ அல்லது இராணுவக் காவலர் ஆகியோரின் உதவியையும் கேட்கும் நிலை இருந்தது.[204]
உரோமானியச் சட்டம்
[தொகு]பேரரசு முழுவதும் இருந்த உரோமானியக் குடியுரிமை உடையவர்களுடன் தொடர்புடைய வழக்குகள் மீது உரோமானிய நீதிமன்றங்கள் உண்மையான நீதி செயலாட்சியைக் கொண்டிருந்தன. ஆனால், மாகாணங்களில் உரோமானியச் சட்டத்தை சீராகச் செயல்படுத்த வெகு சில சட்டச் செயலாளர்களே இருந்தனர். கிழக்குப் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே நல்ல முறையில் நிறுவப்பட்ட சட்ட விதிகளையும், நீதி செயல் முறைகளையும் கொண்டிருந்தன.[92] மோசு ரெஜியோனிசுவுக்கு ("மாகாணப் பாரம்பரியம்" அல்லது உ"ள்ளூர் சட்டம்") மதிப்பளிப்பதும், சட்ட முன்னுதாரணங்கள் மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு ஓர் ஆதாரமாக உள்ளூர் சட்டங்களை மதிப்பதும் பொதுவாக உரோமானியக் கொள்கையாக இருந்தது.[92][205] உரோமானிய மற்றும் உள்ளூர் சட்டமானது ஒன்றாக அமைந்தது என்பது அடிப்படையாக இருந்த இயுசு ஜென்டியம் ("தேசங்களின் சட்டம்" அல்லது பன்னாட்டு சட்டம்) என்பதனைப் பிரதிபலிப்பதாகக் கருதப்பட்டது.[206] மாகாணச் சட்டத்தின் விதிகள் உரோமானியச் சட்டம் அல்லது பாரம்பரியத்துடன் முரண்பட்டால் உரோமானிய நீதிமன்றங்கள் முறையீடுகளைக் விசாரித்தன. முடிவெடுக்கும் கடைசி அதிகாரத்தைப் பேரரசர் பெற்றிருந்தார்.[92][205][q]
மேற்கு உரோமைப் பேரரசில் சட்டமானது உள்ளூர்மயமாக்கப்பட்ட அல்லது பழங்குடியினத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையில் நிர்வகிக்கப்பட்டது. உரோமானியச் சகாப்தத்தின், குறிப்பாக செல்திக்கு மக்கள் மத்தியில் தனி நபர் உடைமை உரிமையானது ஒரு புதுமையானதாக இருந்திருக்கலாம். குடிமக்களாகத் தங்களது புதிய தனிச் சலுகைகளைக் கண்ட உரோமானியச் சார்பு உயர்குடியினர் செல்வத்தை விலைக்கு வாங்குவதை உரோமானியச் சட்டமானது எளிதாக்கியது.[92] பொ. ஊ. 212இல் பேரரசின் அனைத்து சுதந்திரமான வாசிப்பாளர்களுக்கும் பொதுவான குடியுரிமை விரிவாக்கப்பட்டது என்பது உரோமானியச் சட்டம் சீராகச் செயல்படுத்தப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. உரோமானியச் சட்டமானது குடியுரிமை அல்லாதவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூர் சட்ட விதிகளை இடமாற்றம் செய்தது. 3ஆம் நூற்றாண்டின் பிரச்சனைக்குப் பிறகு, பேரரசை நிலை நிறுத்த தியோக்லெதியனின் முயற்சியாக நான்கு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இரண்டு முக்கிய சட்ட தொகுப்புகளும் அடங்கும். அந்த இரண்டு சட்ட தொகுப்புகள் கோடெக்சு கிரிகோரியேனுசு மற்றும் கோடெக்சு எர்மோஜெனியானுசு ஆகியவை ஆகும். இந்த இரு சட்டங்களும் நிலை பேறுடைய சட்டங்களை அமைக்க மாகாண நிர்வாகிகளுக்கு வழிகாட்டுவதற்காக தொகுக்கப்பட்டன.[207]
மேற்கு ஐரோப்பா முழுவதும் உரோமானியச் சட்டமானது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது, மேற்கத்திய சட்டப் பாரம்பரியத்தின் மீது உரோமானியச் சட்டத்தின் மிகுந்த அளவிலான தாக்கத்திற்கு வழி வகுத்தது. நவீன சட்டங்களில் இலத்தீன் சட்டச் சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்தன் மூலம் இது பிரதிபலிக்கப்படுகிறது.
வரி விதிப்பு
[தொகு]பேரரசின் கீழ் வரி விதிப்பானது பேரரசின் மொத்த உற்பத்தியில் சுமார் 5%மாக இருந்தது.[208] தனி நபர்கள் செலுத்திய வரி வீதம் பொதுவாக 2% முதல் 5%ஆக இருந்தது.[209] நேரடி மற்றும் மறைமுக வரிகளைக் கொண்ட பேரரசின் சிக்கலான அமைப்பால் வரிச் சட்டங்கள் "குழப்பமடையச்" செய்வதாக இருந்தன. வரிகள் பணமாகவோ அல்லது பண்டமாற்று முறையிலோ செலுத்தப்பட்டன. ஒரு மாகாணத்திற்கு என்று குறிப்பிட்ட வரிகள் இருக்கலாம், அல்லது மீன்பிடி தொழில் மற்றும் உப்புத் தொழில் போன்ற உடமைகளுக்குப் பொருந்தும் குறிப்பான வரியானது விதிக்கப்படலாம். இவை ஒரு வரம்பிடப்பட்ட காலத்திற்கு செயல்பட்டதாக இருந்திருக்கலாம்.[210] இராணுவத்தைப் பேணுவது தேவை என்பதன் அடிப்படையில் வரி வசூலிப்பானது நியாயப்படுத்தப்பட்டது.[211] இராணுவம் போரில் வெல்லப்பட்ட பொருட்கள் மிகுதியாக இருந்தால் வரி செலுத்தியவர்கள் சில நேரங்களில் தங்கள் வரியை மீண்டும் பெற்றனர்.[212] பணம் குறைவாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளில் பண்டமாற்று வரியானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, இராணுவ முகாம்களுக்கு தானியங்கள் அல்லது பொருட்களை வழங்குபவர்கள் பண்டமாற்று முறையில் வரி செலுத்தினர்.[213]
நேரடி வரி வருவாய்க்கான முதன்மையான ஆதாரமாக இருந்தது தனி நபர்களாவர். அவர்கள் தேர்தல் வரி மற்றும் தங்களது நிலங்களின் மீதான வரி ஆகியவற்றைச் செலுத்தினர். நிலம் மீதான வரியானது அதன் உற்பத்தி அல்லது உற்பத்தி ஆற்றல் மீது விதிக்கப்பட்டதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.[209] சில குறிப்பிட்ட வரி விலக்குகளுக்குத் தகுதியானவர்கள் இணைப்புப் படிவங்களைப் பூர்த்தி செய்யலாம். எடுத்துக்காட்டாக, எகிப்திய விவசாயிகள் தங்களது வயல்களைப் பயிர் செய்யாது விடப்பட்டதாகப் பதிவு செய்யலாம். நைல் ஆற்றின் வெள்ள நிலையைக் கருத்தில் கொண்டு வரி விலக்குப் பெறலாம்.[214] வரி பொறுப்புகளானவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பால் நிர்ணயிக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மேற்பார்வை அதிகாரிக்கு முன்னாள் ஒவ்வொரு குடும்பத் தலைவர் தோன்றுவதையும், அவரது குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர் என்ற கணக்கைக் கொடுக்கவும் வேண்டிய தேவை இருந்தது. மேலும், குடும்பத்தலைவர் சொந்தமாக வைத்திருந்த உடைமையானது விவசாயத்திற்கு அல்லது வசிப்பிடத்திற்குத் தகுந்ததா என்று குறிப்பிட வேண்டிய தேவை இருந்தது.[214]
மறைமுக வரி வருவாய்க்கு ஒரு முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்தது போர்ட்டோரியா எனப்படும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான சாலை மற்றும் சுங்க வரிகள் ஆகும். மாகாணங்களுக்கு இடையிலும் இவ்வரிகள் விதிக்கப்பட்டன.[209] அடிமை வணிகம் மீது சிறப்பு வரிகள் விதிக்கப்பட்டன. அகத்தசின் ஆட்சியின் முடிவின் போது, அடிமைகளை விற்பதன் மீது 4% வரி விதிப்பை அகத்தசு கொண்டு வந்தார்.[215] இந்த வரியை அடிமைகளை வாங்குபவர்களிடம் இருந்து விற்பவர்களுக்கு நீரோ மாற்றினார். இதற்கு எதிர் வினையாக அடிமைகளை விற்றவர்கள் அடிமைகளின் விலையை அதிகரித்தனர்.[216] ஓர் அடிமையை விடுதலை செய்யும் உரிமையாளர் "விடுதலை வரி" செலுத்தினார். இது அடிமையின் பண மதிப்பில் 5%ஆகக் கணக்கிடப்பட்டது.[r]
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலான மதிப்புடைய உடைமைகளை மற்றவர்கள் தவிர்த்து தங்களது சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கு விட்டு விட்டுச் சென்ற உரோமானியக் குடிமக்களுக்கு 5% மரபு வழி உடைமை வரியானது விதிக்கப்பட்டது. பண்ணை வரி மற்றும் ஏலங்கள் மீதான 1% விற்பனை வரி ஆகியவற்றின் வருவாயானது முதிர்ந்த வீரர்களின் ஓய்வூதிய நிதிக்குக் (அயேரரியம் மிலித்தரே) கொடுக்கப்பட்டது.[209]
குறைவான வரிகள் உரோமானிய உயர்குடியினர் தங்களது செல்வத்தைப் பெருக்குவதற்கு உதவின. அவர்களது செல்வமானது மைய அரசாங்கத்தின் வருவாய்க்குச் சமமாகவோ அல்லது அதை விட அதிகமாகவோ இருந்தது. ஒரு பேரரசர் சில நேரங்களில் தனது கருவூலத்தை நிரப்புவதற்காக "மிகவும் பணக்காரர்களின்" பண்ணைகளைப் பறிமுதல் செய்தார். ஆனால், பிந்தைய காலத்தில் வரி செலுத்துவதற்குச் செல்வந்தர்கள் தெரிவித்த எதிர்ப்பானது பேரரசு வீழ்ச்சியடைந்ததுக்குப் பங்காற்றிய காரணிகளில் ஒன்றாக அமைந்தது.[46]
பொருளாதாரம்
[தொகு]அறிஞர் மோசசு பின்லே என்பவரே உரோமானியப் பொருளாதாரமானது "வளர்ச்சி குன்றியதாகவும், அதன் இலக்குகளை முழுவதுமாக அடையாததாகவும்" இருந்தது என்ற எளிமையான பார்வையை முன் மொழிந்த முதன்மையானவர் ஆவார். உரோமானியப் பொருளாதாரமானது வாழ்தகு வேளாண்மையை சிறப்பியல்பாகக் கொண்டிருந்தது; நகர மையங்கள் வணிகம் மற்றும் தொழில் துறை மூலமாக உற்பத்தி செய்ததை விட அதிகமாகப் பயன்படுத்தின; தாழ்ந்த நிலை கைவினைஞர்கள்; மெதுவாக வளர்ச்சியடைந்த தொழினுட்பம்; மற்றும் "பொருளாதார பகுத்தறிவுற்ற தன்மை".[218] உரோமானிய பொருளாதாரம் பற்றிய தற்போதைய பார்வைகள் மிகுந்த சிக்கலானவையாக உள்ளன. நிலப் பரப்புகளை வெற்றி கொண்டது பெருமளவில் நிலப் பயன்பாட்டை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கு அனுமதி அளித்தது. இது விவசாய உற்பத்தி மற்றும் தனித்துவத்திற்கு வழி வகுத்தது. குறிப்பாக, வட ஆப்பிரிக்காவில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்து.[219] சில நகரங்கள் குறிப்பிட்ட தொழில் துறைகள் அல்லது வணிகச் செயல்பாடுகளுக்காக அறியப்பட்டன. நகர் பகுதிகளில் கட்டடங்கள் கட்டமைக்கப்பட்ட அளவானது ஒரு முக்கியமான கட்டமைப்புத் தொழில் துறையானது இருந்ததைக் காட்டுகிறது.[219] பாபிரசு காகிதங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள சிக்கலான பற்று வரவுக் கணக்கு முறைகள் உரோமானியப் பொருளாதாரமானது பகுத்தறிவின் காரணிகளைக் கொண்டு இருந்ததாகப் பரிந்துரைக்கின்றன.[219] பேரரசு பணத்தைப் பெருமளவில் பயன்படுத்தியது.[220] பண்டைக் காலத்தில் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கான வழி முறைகள் வரம்பிடப்பட்டதாக இருந்த போதிலும், 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளில் போக்குவரத்தானது பெருமளவுக்கு விரிவடைந்தது. மாகாணப் பொருளாதாரங்களை வணிக வழிகள் இணைத்தன.[221] பேரரசின் ஒவ்வொரு பகுதியிலும் வியாபித்திருந்த இராணுவத்தின் பொருள் வழங்கும் ஒப்பந்தங்கள், தங்களது இராணுவத் தளத்திற்கு (கேசுத்ரம்) அருகிலிருந்த, மாகாணம் முழுவதிலுமிருந்த மற்றும் மாகாண எல்லைகளைத் தாண்டி இருந்த உள்ளூர் பொருள் வழங்குனர்களிடமிருந்து பொருட்களைப் பெற்றன.[222] மாகாணப் பொருளாதாரங்களின் ஒரு வலைப்பின்னல் எனும் கருத்தின் சிறந்த உதாரணமாகப் பேரரசு திகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பேரரசின் பொருளாதாரமானது "அரசியல் முதலாளித்துவம்" என்பதன் ஒரு வடிவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதன் சொந்த வருவாய்களை உறுதி செய்து கொள்வதற்காக அரசானது வணிகத்தைக் கண்காணித்து, ஒழுங்குபடுத்தியது.[223] பேரரசின் பொருளாதார வளர்ச்சியானது, நவீனப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடக் கூடிய அளவில் இல்லாவிட்டாலும், தொழிற்புரட்சிக்கு முந்தைய பெரும்பாலான பிற சமூகங்களை விட அதிகமாக இருந்தது.[224]
சமூக ரீதியில் பொருளாதார ஆற்றலானது உரோமைப் பேரரசில் சமூக நகர்வை அடையும் வழிகளில் ஒன்றைத் திறந்தது. சமூக முன்னேற்றமானது இவ்வாறாகப் பிறப்பு, புரவலத் தன்மை, அதிர்ஷ்டம் அல்லது அதீத திறமை ஆகியவற்றையும் கூட ஒற்றை ஆதாரமாகச் சார்ந்திருக்கவில்லை. பாரம்பரிய உயர்குடியின சமூகத்தில் அவர்களுக்கென்ற மதிப்புகள் பரவி இருந்தாலும், மக்கள் தொகை படி நிலைக்குத் தேவையான செல்வத்தால் வெளிக் காட்டப்பட்ட செல்வக்குழு ஆட்சியை நோக்கிய ஒரு வலிமையான போக்கை அது கொண்டிருந்தது. உகந்த முறையில் வெளிக் காட்டப்பட்ட வழிகளில் ஒருவரது செல்வம் முதலீடு செய்யப்பட்டால் பெருமையை அவர் பெற முடியும் என்ற நிலை இருந்தது. முதலீடு செய்யப்பட உகந்த வழிகளாக பெரிய நாட்டுப்புறப் பண்ணைகள் அல்லது பட்ண வீடுகள், அணிகலன்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் போன்ற நலிவுறாத ஆபரணப் பொருட்கள், பொது கலை நிகழ்ச்சிகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது உடன் பணியாற்றியவர்களுக்கான இறப்பிற்குப் பிந்தைய நினைவுச் சின்னங்கள், பீடங்கள் போன்ற சமய அர்ப்பணிப்புகள் ஆகிய்வை திகழ்ந்தன. பொது நோக்கக் கழகம் (காலேஜியா) மற்றும் வணிகக் கழகம் (கார்ப்போரா) ஆகியவை வலைப் பின்னல் அமைப்பு போன்ற தொடர்பு, சிறந்த தொழில் துறை பழக்க வழக்கங்களைப் பகிர்தல் மற்றும் பணியாற்றத் தேவையான மன எண்ணம் ஆகியவற்றின் மூலமாக தனி நபர்கள் வெற்றி அடைவதற்கான ஆதரவை அளித்தன.[158]
நாணயமும், வங்கித் தொழிலும்
[தொகு]தொடக்க காலப் பேரரசானது, கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் பணத்தைப் பயன்படுத்தியது. விலைகள் மற்றும் கடன்களுக்குப் பணம் பயன்படுத்தப்பட்டது.[225]செசதெர்தியசு என்பது 4ஆம் நூற்றாண்டு வரை உரோமானிய நாணயத்தின் அடிப்படை அலகாக இருந்தது.[226] செவரன் அரசமரபின் தொடக்க காலத்தின் போது, பணப் பரிமாற்றங்கள் வெள்ளித் தெனாரியசால் பயன்படுத்தப்பட்ட போதிலும், செசதெர்தியசு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[227] தெனாரியசின் மதிப்பு நான்கு செசதெர்தியசு ஆகும். பொதுவாக, உலோகத்திலிருந்த சிறிய நாணயமானது வெண்கல அசு ஆகும். இதன் மதிப்பு காற்பங்கு செசதெர்தியசு ஆகும்.[228] பொன் அல்லது வெள்ளிக் கட்டிகள் பெக்குனியா ("பணம்") எனக் கருதப்படவில்லை என்று தோன்றுகிறது. எல்லைகளில் தொழில் முறைப் பணப் பரிமாற்றங்கள் அல்லது உடைமைகளை வாங்குவதற்கு மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டன. 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளில் உரோமானியர்கள் நாணயங்களை எடை போடுவதற்கு மாறாக எண்ணினர். நாணயமானது அதன் முக மதிப்புக்காக மதிக்கப்பட்டது என்றும், அதன் உலோக அளவிற்காக மதிக்கப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது. உரோமானிய நாணயத்தின் மதிப்புக் குறைக்கப்படுவதற்கு இறுதியாக இந்த ஆணை மூலம் செயல்படுத்தப்பட்ட பணத்தை குறித்த எண்ணமானது இட்டுச் சென்றது. பிந்தைய காலப் பேரரசில் இது விளைவுகளை ஏற்படுத்தியது.[229] பேரரசு முழுவதும் பணத்தைத் தரப்படுத்தியது என்பது வணிகம் மற்றும் சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுவதை ஊக்குவித்தது.[225] புழக்கத்தில் இருந்த உலோக நாணயங்களின் பெரும் அளவானது வணிகம் அல்லது சேமிப்பிற்கு பணம் பயன்படுத்தப்படுவதை அதிகரித்தது.[230]
பொ. ஊ. மு. 211 | பொ. ஊ. 14 | பொ. ஊ. 286–296 |
---|---|---|
தெனாரியசு = 10 அசு | அரேயசு = 25 தெனாரீ | அரேயி = 454 கிராம் பொன்னுக்கு 60 அரேயி |
செசதெர்சு = 5 அசு | தெனாரீ = 16 அசு | வெள்ளி நாணயங்கள் (சம காலப் பெயர் தெரியவில்லை) = 454 கிராம் வெள்ளிக்கு 96 அரேயி |
செசதெர்தியசு = 2.5 அசு | செசதெர்சசு = 4 அசு | வெண்கல நாணயங்கள் (சம காலப் பெயர் தெரியவில்லை) = மதிப்பு தெரியவில்லை |
அசு = 1 | அசு = 1 |
உரோம் நடுவண் வங்கியைக் கொண்டிருக்கவில்லை. வங்கித் தொழில் மீதான ஒழுங்குபடுத்துதலானது குறைவாகவே இருந்தது, பாரம்பரிய பண்டைக் கால வங்கிகள் பொதுவாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கின் ஒட்டு மொத்த மதிப்பை விட, குறைவான மதிப்பிலேயே கையிருப்பை வைத்திருந்தன. ஒரு வழக்கமான வங்கியானது மிகவும் வரம்பிடப்பட்ட மூலதனத்தைக் கொண்டிருந்தது. ஒரு வங்கியானது 6 முதல் 15 முதலீடுகளைக் கொண்டிருக்கலாம் என்று இருந்தாலும், பெரும்பாலும் ஒரே ஒரு முதலீட்டையே கொண்டிருந்தது. உரோமானிய வாணிகத்தில் தொடர்புடைய எந்த ஒருவரும் பணத்தைப் பெறும் வழியைக் கொண்டிருக்க வேண்டும் என செனீக்கா கூறுகிறார்.[229]
ஒரு தொழில் முறை சேமிப்புக் கணக்கு வங்கியாளர் ஒரு நிலையான அல்லது கால வரையற்ற நேரத்திற்கு பணத்தைப் பெற்று கணக்கில் வரவு வைத்தார். மூன்றாம் நபர்களுக்குப் பணத்தைக் கடனாக கொடுக்கவும் செய்தார். தனி நபர்களுக்குக் கடன் அளிப்பதில் செனட் சபையைச் சேர்ந்த உயர் குடியினர் பெருமளவுக்கு ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கடன் கொடுப்பவர்கள் மற்றும் கடன் பெறுபவர்கள் ஆகிய இருவருமாகத் திகழ்ந்தனர். சமூகத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது சொந்த உடைமைகளில் இருந்து கடன்களைக் கொடுத்தனர்.[233] ஒரு கடனைப் பெற்றவர் மற்றொருவருக்கு அதை மாற்றிக் கொடுக்கலாம். பணம் கை மாறாமல் இது நடந்தது. பண்டைக் கால உரோமானது "காகித" அல்லது ஆவண பணப் பரிமாற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என சில நேரங்களில் கருதப்பட்டாலும், பேரரசு முழுவதும் இருந்த வங்கிகளின் அமைப்பானது நாணயங்களை நேரடியாகப் இடம் மாற்றம் செய்யாமல் பெரும் அளவிலான தொகைகளைப் பரிமாற்றம் செய்வதற்கும் கூட அனுமதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கடல் வழியாகப் பெருமளவிலான பணத்தைக் கொண்டு செல்வது என்பது இடர் வாய்ப்பைக் கொண்டிருந்ததும் இதற்கு ஒரு பங்குக் காரணமாகும். தொடக்க காலப் பேரரசில் ஒரே ஒரு தீவிரமான பணப் பற்றாக்குறை நடந்ததாக அறியப்பட்டுள்ளது. பொ. ஊ. 33ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தப் பணப் பிரச்சனை ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான செனட் சபை உறுப்பினர்களை இடர்ப்படும் நிலைக்கு உள்ளாக்கியது. மைய அரசானது 10 கோடி உரோமானிய நாணயங்களைக் கடனாக வங்கிகளுக்குக் கொடுத்தது. பேரரசர் திபேரியசு வங்கிகளுக்கு இதைக் கொடுத்ததன் மூலம் சந்தையானது மீட்கப்பட்டது.[234] பொதுவாக, ஏற்கனவே கையிருப்பில் இருந்த மூலதனமானது கடன் பெறுபவர்களுக்குத் தேவைப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தது.[229] மைய அரசாங்கமானது அதற்கான பணத்தைக் கடனாகப் பெறவில்லை. பணக் கையிருப்பு மூலம் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையும் பொதுக் கடன் இல்லை என்பதால் ஏற்படவில்லை.[235]
அந்தோனின் மற்றும் செவரன் அரசமரபுகளின் பேரரசர்கள் பெரும்பாலும் நாணயத்தின் மதிப்பை, குறிப்பாக, தெனாரியசு நாணயத்தின் மதிப்பைக் குறைத்தனர். இராணுவச் சம்பளங்களுக்கு நிதி தேவை என்ற அழுத்தம் காரணமாக அவர்கள் இதைச் செய்தனர்.[226] கமாதசுவின் ஆட்சியின் போது ஏற்பட்ட திடீர் விலைவாசி உயர்வானது நிதிச் சந்தையைப் பாதிப்புக்குள்ளாக்கியது.[229] 200களின் நடுப் பகுதியில் விலையுயர்ந்த உலோக நாணயங்களின் வெளியீடானது பெருமளவுக்குக் குறைந்தது.[226] நீண்ட தூர வணிகத்தில் ஏற்பட்ட குறைவு, சுரங்கச் செயல்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு, படையெடுத்து வந்த எதிரிகளால் பேரரசுக்கு வெளியே தங்க நாணயங்கள் இடமாற்றப்பட்டது போன்ற மூன்றாம் நூற்றாண்டின் பிரச்சினைகளின் நிலைமைகள் 300ஆம் ஆண்டு வாக்கில் பணப் புழக்கம் மற்றும் வங்கி அமைப்பைப் பெருமளவுக்குப் பாதித்தன.[226][229] உரோமானிய நாணய முறையானது நீண்ட காலமாக ஆணையால் செயல்படுத்தப்பட்ட பணம் அல்லது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பணமாக இருந்த போதிலும், அரேலியனின் ஆட்சிக்குக் கீழ் பொதுவான பொருளாதார அச்ச உணர்வுகள் வெளிப்படத் தொடங்கின. மைய அரசாங்கத்தால் சட்டப்படி வெளியிடப்பட்ட நாணயங்கள் மீது வங்கியாளர்கள் நம்பிக்கை இழந்தனர். தியோக்லெதியன் தங்க சோலிதுசு நாணயத்தை வெளியிட்டு, நிதிச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி இருந்த போதிலும், பேரரசின் நிதிச் சந்தையானது அதன் முந்தைய நிலைத் தன்மையை மீண்டும் என்றுமே பெறவில்லை.[229]
சுரங்கத் தொழிலும், உலோகவியலும்
[தொகு]பேரரசின் முதன்மையான சுரங்கத் தொழில் பகுதிகளாக ஐபீரிய மூவலந்தீவு (தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், ஈயம்), கௌல் (தங்கம், வெள்ளி, இரும்பு), பிரிட்டன் (முதன்மையாக இரும்பு, ஈயம், தகரம்), தன்யூபிய மாகாணங்கள் (தங்கம், இரும்பு), மாசிடோனியா மற்றும் திரேசு (தங்கம், வெள்ளி) மற்றும் அனத்தோலியா (தங்கம், வெள்ளி, இரும்பு, தகரம்) ஆகியவை திகழ்ந்தன. வண்டல் படிமங்களில் வெளிப்பரப்பு சுரங்க முறை மற்றும் பாதாள சுரங்க முறை மூலமாக தீவிரமான சுரங்கத் தொழிலானது பெருமளவில் அகத்தசின் காலத்தில் தொடங்கி பொ. ஊ. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நடைபெற்றது. பொ. ஊ. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசின் நிலையற்ற தன்மையானது உற்பத்திக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, தசியாவில் இருந்த தங்கச் சுரங்கங்கள் 271இல் அந்த மாகாணமானது சரணடையச் செய்யப்பட்டதற்குப் பிறகு உரோமானிய மிகு நலம் பெறுவதற்கு அதற்கு மேல் வாய்ப்பளிக்கவில்லை. 4ஆம் நூற்றாண்டின் போது ஓரளவுக்கு சுரங்கத் தொழிலானது மீண்டும் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.[236]
திரவ அழுத்த விசையைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட சுரங்கத் தொழிலானது, தொழில் புரட்சிக்கு முந்தைய அளவில் அடிப்படை மற்றும் அரிய உலகங்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த முறையை உருயினா மோந்தியம் ("மலைகள் பாழ்படுதல்") என்று பிளினி குறிப்பிட்டுள்ளார்.[237] ஓர் ஆண்டில் மொத்தம் எடுக்கப்பட்ட இரும்பின் அளவானது 82,500 டன் என்று மதிப்பிடப்படுகிறது.[238] செம்பானது ஆண்டு தோறும் 15,000 டன்னும்,[237][239] ஈயமானது ஆண்டு தோறும் 80,000 டன்னும் பிரித்தெடுக்கப்பட்டன.[237][240][241] இந்த இரண்டு அளவுகளும் தொழிற்புரட்சிக் காலம் வரை எட்டப்படாத உற்பத்தி அளவுகளாக இருந்தன.[239][240][241][242] உலக ஈய உற்பத்தியில் 40% பங்கை எசுப்பானியா மட்டுமே கொண்டிருந்தது.[240] ஆண்டுக்கு 200 டன் என்ற அளவை எட்டிய விரிவான வெள்ளி சுரங்கத் தொழிலின் ஒரு துணைப் பொருளாக அதிகப்படியான ஈய உற்பத்தியானது திகழ்ந்தது. பொ. ஊ. 2ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வாக்கில் அதன் உச்ச பட்ச அளவின் போது உரோமானிய வெள்ளிக் கையிருப்பானது 10,000 டன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடுக் கால ஐரோப்பா மற்றும் பொ. ஊ. 800ஆம் ஆண்டு வாக்கில் கலீபகம் ஆகிய இரு பகுதிகளிலும் ஒட்டு மொத்தமாக இருந்த வெள்ளியின் அளவை விட இது 5 முதல் 10 மடங்கு அதிகமாகும்.[241][243] உரோமானிய உலோக உற்பத்தியின் அளவின் ஒரு வெளிப்பாடாக ஏகாதிபத்திய சகாப்தத்தின் போது கிரீன்லாந்தின் பனிப் படுகைகளிலிருந்த ஈய மாசுபாடானது அதன் வரலாற்றுக்கு முந்தைய அளவுகளை போல் நான்கு மடங்கானது. பிறகு மீண்டும் குறைந்தது.[244]
போக்குவரத்தும், தொலைத்தொடர்பும்
[தொகு]உரோமைப் பேரரசானது நடு நிலக் கடலை முழுவதுமாக சுற்றியிருந்தது. இக்கடலை இவர்கள் "நம் கடல்" (மாரே நோசுதுரும்) என்று அழைத்தனர்.[245] உரோமானியப் பாய் மர நாவாய்கள் நடு நிலக் கடலில் செலுத்தப்பட்டன. மேலும் பேரரசின் முதன்மையான ஆறுகளிலும் செலுத்தப்பட்டன. இந்த ஆறுகளில் கௌதல்குயிவிர், எப்ரோ, ரோன், ரைன், டைபர் மற்றும் நைல் ஆகியவையும் அடங்கும்.[49] எங்கெல்லாம் நீர் வழிப் போக்குவரத்து சாத்தியமாக உள்ளதோ, அங்கெல்லாம் அப்போக்குவரத்து தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தப்பட்டது. நிலப்பகுதி வழியாகச் சரக்குகளைக் கொண்டு செல்வது என்பது மிகக் கடினமானதாக இருந்தது.[246] வாகனங்கள், சக்கரங்கள் மற்றும் கப்பல்கள் ஆகியவை பெரும் எண்ணிக்கையிலான திறமைசாலி மர வேலையாளர்களின் இருப்பைக் காட்டுகின்றன.[247]
நிலப்பகுதிப் போக்குவரத்தானது உரோமானிய சாலைகளின் முன்னேறிய அமைப்பைப் பயன்படுத்தியது. உரோமானியச் சாலைகள் "வியா" என்று அழைக்கப்பட்டன. இச்சாலைகள் முதன்மையாக இராணுவத் தேவைகளுக்காகக் கட்டமைக்கப்பட்டன.[248] ஆனால், வணிகத்திற்காகவும் சேவையாற்றின. சமூகங்களால் பண்ட மாற்று முறையில் செலுத்தப்பட்ட வரியானது இராணுவ வீரர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள், விலங்குகள் அல்லது கர்சசு பப்ளிக்கசுவிற்கான வாகனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.[213] அகத்தசால் நிறுவப்பட்ட அரசு தபால் மற்றும் போக்குவரத்துச் சேவை கர்சசு பப்ளிக்கசு என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு 7 முதல் 12 மைல்களுக்கு இடையிலும் சாலையின் பக்கவாட்டில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவை கிராமங்கள் அல்லது வணிக நிலையங்களாக வளர்ச்சியடைந்தன.[249] ஒரு மான்சியோ என்பது தனியாரால் இயக்கப்பட்ட சேவை நிலையமாகும். இதற்கு இப்பெயரை கர்சசு பப்ளிக்கசுவிற்காக ஏகாதிபத்திய பணித் துறையானது வழங்கியது. இந்த நிலையங்களுக்கு ஆதரவளித்த துணைப் பணியாளர்களில் கோவேறு கழுதை ஓட்டுபவர்கள், செயலாளர்கள், இரும்புக் கொல்லர்கள், வணிக வண்டிகளை உருவாக்குபவர்கள், ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் ஒரு சில இராணுவக் காவலர்கள் மற்றும் விரைவு அஞ்சல் தூதர்கள் ஆகியோரும் இருந்தனர். இந்த மான்சியோக்களுக்கு இடையிலான தொலைவானது ஒரு நாளில் ஒரு வண்டியானது எவ்வளவு தொலைவுக்குப் பயணிக்க முடியும் என்பதைப் பொறுத்து அமைந்தது.[249] வண்டிகளை இழுப்பதற்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட விலங்காகக் கோவேறு கழுதை இருந்தது. இது ஒரு மணி நேரத்திற்கு 4 மைல் வேகத்தில் பயணித்தது.[250] தொலைத் தொடர்பு வேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக பெரிய செருமானியா மாகாணத்தின் மைன்சு என்ற இடத்தில் இருந்து உரோமுக்குப் பயணிக்க ஒரு செய்தித் தூதுவருக்குக் குறைந்தது 9 நாட்கள் எடுத்துக் கொண்டது. மிக அவசரமான விஷயங்களுக்குக் கூட இந்த அளவு நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.[244] இந்த மான்சியோக்களைத் தவிர்த்து சில நிலையங்கள் உணவுடன் சேர்த்துத் தங்குவதற்கு இடமும் அளித்தன. இவ்வாறாக ஒரு தங்கிய இடத்தில் பதிவு செய்யப்பட்ட தகவலானது ரொட்டித் துண்டு, கோவேறு கழுதைக்கான உணவு ஆகியவற்றுக்குமான செலவினங்களையும் குறிப்பிட்டுள்ளது.[251]
வாணிபமும், பண்டங்களும்
[தொகு]உரோமானிய மாகாணங்கள் தங்களுக்குள் வணிகம் செய்து கொண்டன. ஆனால், எல்லைகளுக்கு வெளியேயும் வணிகமானது சீனா மற்றும் இந்தியா ஆகிய பகுதிகள் வரை விரிவடைந்திருந்தது.[252] முக்கியமான வணிகப் பண்டமாகத் தானியங்கள் திகழ்ந்தன.[253] சீனாவுடனான வணிகமானது பெரும்பாலும் நிலப்பகுதியில் பட்டுப் பாதை வழியாக இடை வணிகர்கள் மூலம் நடத்தப்பட்டது. எனினும், இந்திய வணிகமானது செங்கடலில் இருந்த எகிப்தியத் துறைமுகங்களிலிருந்து கடல் வழியாகவும் நடைபெற்றது. இந்த வணிகப் பாதைகளுடன் உரோமானிய விரிவாக்கம் மற்றும் வணிகம் சார்ந்திருந்த குதிரையானது, நோய் பரவுவதற்கு ஒரு முக்கியமான காரணியாக அமைந்தது.[254] மேலும் இடலை எண்ணெய், பல்வேறு உணவுப் பொருட்கள், கரும் (மீன் சுவைச்சாறு), அடிமைகள், தாது, தயாரிக்கப்பட்ட உலகப் பொருட்கள், நார்ப் பொருட்கள் மற்றும் ஜவுளிகள், மரம், மட்பாண்டங்கள், கண்ணாடி பொருட்கள், பளிங்குகள், பாபிரஸ், நறுமணப் பொருட்கள், மருந்துகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தந்தம், முத்துக்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையும் வணிகம் செய்யப்பட்டன.[255]
உழைப்பும், பணிகளும்
[தொகு]உரோம் நகரத்தில் 268 வேறுபட்ட பணிகளையும், பொம்பெயியில் 85 பணிகளையும் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன.[193] தொழில் முறை பணியாளர்களின் சங்கங்கள் அல்லது வாணிகக் கழகங்கள் (காலேஜியா) ஆகியவை பல்வேறுபட்ட பணிகளின் உண்மைத் தன்மைக்கு உறுதியளிக்கின்றன. மீனவர்கள், உப்பு வணிகர்கள், இடலை எண்ணெய் விற்பவர்கள், பொழுது போக்குக் கலைஞர்கள், கால்நடை விற்பவர்கள், பொற்கொல்லர்கள், மந்தைகளை ஓட்டுபவர்கள் மற்றும் கற்களை வெட்டுபவர்கள் ஆகியோரும் இதில் அடங்குவர். இப்பணிகள் சில நேரங்களில் மிகுந்த தனித்துவம் உடையவையாக இருந்தன. எடுத்துக்காட்டாக, உரோமில் இருந்த ஒரு காலேஜியமானது தந்தம் மற்றும் எலும்பிச்சை குடும்ப மரங்களைச் சார்ந்த கைவினைஞர்களுக்காக மட்டுமே என்று கண்டிப்பாக வரம்பிடப்பட்டிருந்தது.[158]
அடிமைகளால் செய்யப்பட்ட பணிகளானவை ஐந்து பொதுவான வகைகளின் கீழ் வந்தன. அவை வீட்டுப்பணி, ஏகாதிபத்திய அல்லது பொதுப்பணி, நகர்ப்புற கலைப் பொருட்கள் மற்றும் சேவைகள், விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில் ஆகியவையாகும். இதில் வீட்டு பணிகள் குறித்த கல்வெட்டுக்கள் குறைந்தது 55 வேறுபட்ட வீட்டுப் பணிகளைப் பதிவு செய்துள்ளன. சுரங்கங்கள் அல்லது குவாரிகளில் பெரும்பாலான உழைப்பைக் குற்றவாளிகள் செய்தனர். அங்கு பணிச் சூழ்நிலைகளானவை பலராலும் அறியப்பட்ட மோசமான மிருகத்தனமான சூழ்நிலைகளாக இருந்தன.[256] நடைமுறையில் அடிமைகள் மற்றும் சுதந்திரமானவர்களுக்கு இடையிலான பணிகளில் வேறுபாடானது சிறிதளவே இருந்தது.[92] பெரும்பாலான பணியாளர்கள் கல்வியற்றவர்களாகவும், தனித் திறமையற்றவர்களாகவும் இருந்தனர்.[257] பெரும் எண்ணிக்கையிலான பொதுப் பணியாளர்கள் விவசாயத்தில் பணிபுரிந்தனர். இத்தாலிய அமைப்பான தொழில் துறை விவசாயத்தில் பணி புரிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பேரரசு முழுவதும் ஒரு நுட்பமாகக் காண்கையில் அடிமைபடுத்தப்படாதவர்களாகக் கருதப்பட்ட மக்களைச் சார்ந்திருந்த பிற பணிகளின் வடிவங்களை விட அடிமைப் பண்ணைப் பணியானது பொதுவாகக் குறைந்த முக்கியத்துவம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.[92]
ஜவுளி மற்றும் துணி உற்பத்தியானது வேலை வாய்ப்பிற்கு ஒரு முதன்மையான ஆதாரமாகத் திகழ்ந்தது. ஜவுளிகள் மற்றும் நிறைவு செய்யப்பட்ட ஆடைகள் ஆகியவை பேரரசின் மக்களுக்கு மத்தியில் வணிகம் செய்யப்பட்டன. பேரரசின் மக்களின் பொருட்கள் பெரும்பாலும் அவர்களின் பெயரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பட்டணத்தின் பெயரையோ கொண்டிருந்தன. அவை ஒரு நிறுவனத்தின் பெயரைக் கொண்டிருக்கவில்லை.[258] நல்ல, அணிவதற்குத் தயாராக உள்ள ஆடைகள் வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டன. உற்பத்தி மையங்களின் செல்வ வளமுள்ள வசிப்பாளர்களாக இந்த வணிகர்கள் பெரும்பாலும் திகழ்ந்தனர். நிறைவு செய்யப்பட்ட ஆடைகள் வணிகர்களின் விற்பனை முகவர்களால் விற்கப்பட்டிருந்திருக்கலாம்.[259] முகவர்கள் வாங்குவதற்கு வாய்ப்பு இருந்த வாடிக்கையாளர்களிடம் அல்லது வெசுதியரீ என்ற பெரும்பாலும் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளாக இருந்த துணிகள் விற்பவர்களிடம் பயணித்தனர். அல்லது துணிகள் விற்பவர்கள் இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்களால் அனுப்பப்பட்டவர்களாக இருந்தனர்.[259] எகிப்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பயிற்சித் தொழிலாளர்கள், சம்பளம் பெற்ற சுதந்திரமான பணியாளர்கள் மற்றும் அடிமைகள் ஆகியோரை பணியமர்த்தி இருந்த செழிப்பான சிறு தொழில் முறைகளை நடத்தினர்.[260] சலவைத் தொழிலாளர்கள் அல்லது சாயம் இடுபவர்கள் தங்களது சொந்த வணிகக் கழகங்களைக் கொண்டிருந்தனர்.[261] ஜவுளி உற்பத்தி மற்றும் பழைய துணிகளை மறு சுழற்சி செய்து தூண்டுப் பொருட்களாக மாற்றுவதில் தனித்துவம் பெற்றிருந்த வணிகக் கழக பணியாளர்கள் சென்டோனரீ என்று அழைக்கப்பட்டனர்.[s]
மொத்த உற்பத்தியும், வருமானப் பரவலும்
[தொகு]பிரின்சிபேத்து காலத்தின் போது உரோமானியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தங்களது கணக்கீடுகளில் பொருளாதார வரலாற்றாளர்கள் வேறுபடுகின்றனர்.[264] பொ. ஊ. 14, 100 மற்றும் 150 ஆகிய மாதிரி ஆண்டுகளின் போது தனி நபர் மொத்த ஆண்டு வருவாயின் மதிப்பீடுகள் 166 முதல் 380 உரோமானிய நாணயங்கள் வரை இருந்தன. இத்தாலியின் தனி நபர் மொத்த ஆண்டு வருவாயானது பேரரசின் மற்ற பகுதிகளை விட 40%[265] முதல் 66%[266] அதிகமாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மாகாணங்களில் இருந்து வந்த வரி இடமாற்றப்பட்டது மற்றும் மையப் பகுதியில் உயர் குடியினரின் வருவாயானது அடர்த்தியாக இருந்தது ஆகியவை ஆகும். இத்தாலியைப் பொறுத்த வரையில், "பொம்பெயி, ஹெர்குலியம், மற்றும் உரோமைப் பேரரசின் பிற மாகாணப் பட்டணங்களின் கீழ் வகுப்பினர் அனுபவித்த ஓர் உயர் தர வாழ்க்கைத் தரமானது பொ. ஊ. 19ஆம் நூற்றாண்டு வரை மேற்கு ஐரோப்பாவில் மீண்டும் பெறப்படவில்லை என்பது குறித்து சிறிதளவே சந்தேகம் இருக்க முடியும்".[267]
செய்தெல்-பிரீசன் பொருளாதார மாதிரியில், பேரரசால் உருவாக்கப்பட்ட மொத்த ஆண்டு வருமானமானது கிட்ட தட்ட 2,000 கோடி உரோமானிய நாணயங்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் 5% மைய மற்றும் உள்ளூர் அரசாங்கத்தால் பெறப்பட்டது. உச்ச பட்சத்தில் இருந்த 1.5% வீடுகளின் வருமானப் பரவலானது சுமார் 20% வருவாயைக் கொண்டிருந்தது. மற்றுமொரு 20%மானது சுமார் 10% மக்களிடம் இருந்தது. இந்த 10% மக்களை மேல் தட்டு அல்லாத நடுத்தர மக்களென்று குறிப்பிடலாம். எஞ்சிய "பெரும்பாலான மக்கள்" பேரரசின் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேலான பங்கை உற்பத்தி செய்தனர். ஆனால், பிழைப்புநிலைப் பொருளாதாரத்திற்கு அருகில் வாழ்ந்தனர்.[268] மேல் தட்டு மக்கள் 1.2% முதல் 1.7%மாக இருந்தனர். நடுத்தர மக்கள் "அளவான, அமைதியான நிலையை பெற்றிருந்தனர். ஆனால், அதிகபட்ச செல்வச் செழிப்பைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள் 6% முதல் 12%மாக இருந்தனர் (…) அதே நேரத்தில் எஞ்சிய பெருமளவிலான மக்கள் பிழைப்புநிலைப் பொருளாதாரத்திற்கு அருகில் வாழ்ந்தனர்".[269]
கட்டடக் கலையும், பொறியியலும்
[தொகு]கட்டடக் கலைக்கு உரோமானியர்களின் முதன்மையான பங்களிப்பானது வளைவு, காப்பறை மற்றும் குவிமாடம் ஆகியவை ஆகும். 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட சில உரோமானியக் கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. இதற்கு ஒரு பங்குக் காரணம் சீமைக்காரை மற்றும் திண்காரை ஆகியவற்றை உருவாக்கப் பயன்படுத்திய நுணுக்கமான முறைகள் ஆகும்.[270] உரோமானியச் சாலைகள் உலகின் மிகுந்த முன்னேற்றமடைந்த, கட்டப்பட்ட சாலைகளாக 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்தன. சாலைகளின் அமைப்பானது இராணுவம் ஒழுங்கை நிலைநாட்டுவது, தொடர்பு மற்றும் வணிகம் ஆகியவற்றை எளிதாக்கியது. வெள்ளங்கள் மற்றும் பிற சூழ்நிலை இடர்ப்பாடுகளை எதிர் கொள்ளும் வகையில் சாலைகள் இருந்தன. மைய அரசாங்கம் வீழ்ச்சி அடைந்ததற்குப் பிறகும் கூட சில சாலைகள் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தக் கூடியவையாகத் தொடர்ந்து நீடித்தன.
பெரிய மற்றும் நீண்ட காலம் நிலைத்திருந்த தொடக்க காலப் பாலங்களில் உரோமானியப் பாலங்களும் ஒன்றாகும். இவை கற்களால் வளைவு அமைப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டன. பெரும்பாலானவை திண்காரையையும் பயன்படுத்தின. மிகப்பெரிய உரோமானியப் பாலமானது தன்யூபு ஆற்றின் கீழ்ப்பகுதில் கட்டப்பட்ட திராயானின் பாலமாகும். இதை திமிஷ்குவின் அப்பல்லோதோருசு கட்டினார். உலகிலேயே கட்டப்பட்ட மிகப்பெரிய பலமாக ஒட்டு மொத்த அளவு மற்றும் நீளம் ஆகிய இரண்டிலுமே 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பாலம் அதன் நிலையைத் தக்க வைத்திருந்தது.[271]
நீரைச் சேமிப்பதற்காக சுபியாகோ அணைகள் போன்ற ஏராளமான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களை உரோமானியர்கள் கட்டமைத்தனர். சுபியாகோ அணைகளில் இரண்டு அணைகள் உரோமின் மிகப் பெரிய கால்வாய்ப் பாலங்களில் ஒன்றான அனியோ நோவுசுவுக்கு இருக்கு நீர் வழங்கின.[272] உரோமானியர்கள் ஐபீரிய மூவலந்தீவில் மட்டும் 72 அணைகளைக் கட்டினர். பேரரசு முழுவதும் இன்னும் ஏராளமான பாலங்கள் அறியப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்றும் கூட பயன்பாட்டில் உள்ளன. பல்வேறு நில அணைகள் உரோமானிய பிரிட்டனில் இருந்து அறியப்பட்டுள்ளன. இதில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டான இலோங்கோவிசியம் (இலான்செஸ்டர்) அணையும் ஒன்றாகும்.
உரோமானியர்கள் ஏராளமான கால்வாய்ப் பாலங்களைக் கட்டினர். பிரோந்தினுசுவின் எஞ்சியுள்ள ஒரு நீர் வளம் தொடர்பான குறிப்பானது நீர் வளங்களை உறுதி செய்வதற்குக் கொடுக்கப்பட்ட நிர்வாக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. பிரோந்தினுசு நெர்வாவுக்குக் கீழ் கியூரேட்டர் அக்குவாரமாகச் (நீர் ஆணையர்) சேவையாற்றினார். கல் தச்சுக் கால்வாய்கள் தொலை தூரத்தில் இருந்த நீரூற்றுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை ஒரு துல்லியமான, சாய்வான அமைப்புகள் மூலம் ஈர்ப்பு விசையை மட்டுமே பயன்படுத்தி எடுத்துச் சென்றன. கால்வாய்ப் பாலத்தின் வழியாக நீர் சென்றதற்குப் பிறகு அது நீர்த் தேக்கத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டது. பொது அலங்கார நீரூற்றுகள், குளியல் இடங்கள், கழிவறைகள் அல்லது தொழில் துறைத் தளங்களுக்குக் குழாய்கள் மூலமாக நீர் கொடுக்கப்பட்டது.[273] உரோம் நகரத்தில் இருந்த முதன்மையான கால்வாய்ப் பாலங்கள் அக்குவா கிளாடியா மற்றும் அக்குவா மார்சியா ஆகியவையாகும்.[274] கான்ஸ்டான்டினோபிலுக்கு நீர் வழங்கும் சிக்கலான முறையில் கட்டப்பட்டிருந்த அமைப்புகளுக்கு நீர் வழங்கிய தொலை தூரப் பகுதியானது 120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அந்த இடத்திலிருந்து 336 கிலோ மீட்டருக்கும் மேல் நீளமுடைய ஒரு வளைவுகளைக் கொண்ட வழியின் மூலம் நீரை நகரம் பெற்றது. உரோமானியக் கால்வாய்ப் பாலங்கள் சிறப்பான பொறியியல் தன்மையுடன் கட்டப்பட்டன. சிறந்த தொழில்நுட்பத் தரத்தைக் கொண்டிருந்தன. நவீன கால[275] ங்கள் வரையில் அதற்குச் சமமான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படவில்லை.[276] பேரரசு முழுவதும் தங்களது விரிவான சுரங்கத் தொழில் செயல் முறைகளுக்கும் கால்வாய்ப் பாலங்களை உரோமானியர்கள் பயன்படுத்தினர். இலாசு மெதுலாசு மற்றும் தெற்கு வேல்சின் தோலௌகோதி போன்ற தளங்களில் இவர்கள் இவ்வாறு பயன்படுத்தினர்.[277]
வெப்பக்காப்புக் கண்ணாடியானது (அல்லது "இரட்டை கண்ணாடி") பொதுக் குளியல் இடங்களைல் கட்டமைத்த போது பயன்படுத்தப்பட்டன. குளுமையான கால நிலைகளில் இருந்த மேல் தட்டு மக்களின் வீடுகள் சூடேற்றுங்கருவிகளைக் கொண்டிருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இக்கருவிகள் மைய சூடேற்றுதலின் ஒரு வடிவமாகும். மிகப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த நீராவிப் பொறியின் அனைத்து தேவையான பாகங்களையும் ஒருங்கிணைத்த முதல் கலாச்சாரமாக உரோமானியர்கள் திகழ்கின்றனர். ஈரோ ஆவிவேக மானியைக் கட்டமைத்த போது இது நிகழ்ந்தது. வணரி மற்றும் இணைக்கும் கம்பி அமைப்புடன் ஈரோவின் ஆவிவேக மானி (நீராவியை உற்பத்தி செய்தது), உலோக உருளை மற்றும் உந்துத் தண்டு (உலோக உந்து விசைக் குழாய்), திரும்ப இயலாத அடைப்பிதழ் (நீர்க் குழாய்களில்) மற்றும் பற்சக்கர அமைப்பு (நீர் ஆலைகள் மற்றும் கடிகாரங்கள்) ஆகிய ஒரு நீராவி எந்திரத்தை (இது 1712இல் உருவாக்கப்பட்டது) உருவாக்கத் தேவையான அனைத்து பாகங்களும் உரோமானியக் காலங்களில் அறியப்பட்டிருந்தன.[278]
சுகாதாரமும், நோயும்
[தொகு]பண்டைக் கால உலகத்தில் கொள்ளை நோய் என்பது பொதுவான ஒன்றாக இருந்தது. எப்போதாவது உரோமைப் பேரரசில் ஏற்பட்ட உலகம் பரவும் நோய்கள் தசம இலட்சக் கணக்கிலான மக்களைக் கொன்றன. உரோமானிய மக்கள் தொகையானது ஆரோக்கியம் இல்லாததாக இருந்தது. பேரரசின் மக்கள் தொகையில் 20% பேர் நூற்றுக்கணக்கான நகரங்களில் ஒன்றான உரோமில் வசித்தனர். பண்டைக் கால தர நிலைப்படி இது ஒரு பெரிய சதவீதம் ஆகும். இதன் மக்கள்தொகை 10 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் இதுவே பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. நகரங்கள் "மக்கள் தொகை மூழ்கடிப்பான்களாக" தங்களது மிகச் சிறந்த காலங்களில் கூட திகழ்ந்தன. இறப்பு வீதமானது பிறப்பு வீதத்தை விட அதிகமாக இருந்தது. நகர்ப்புற மக்கள் தொகையைப் பேணுவதற்கு புதிய குடியிருப்பாளர்கள் நகருக்குள் தொடர்ந்து புலம் பெயர்ந்து வர வேண்டும் என்ற தேவை இருந்தது. சராசரி வாழ்நாள் காலம் 20களின் நடுவில் இருந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளில் ஒரு வேளை பாதிக்கும் மேற்பட்டோர் இளம் வயதை அடையும் முன்னரே இறந்தனர் என்று கருதப்படுகிறது. அடர்ந்த நகர மக்கள் தொகை மற்றும் குறைபாடுடைய கழிவு நீக்க அமைப்பு ஆகியவை நோய்களின் ஆபத்துகளுக்கு பங்களித்தன. உரோமைப் பேரரசின் பரந்த நிலப்பரப்புங்களுக்கு இடையில் நிலம் மற்றும் கடல் மூலமான போக்குவரத்துத் தொடர்பானது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தொற்று நோய்கள் பரவுவதை எளிதாக்கியது. சிறிய மற்றும் புவியியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைக் காட்டிலும் நோய்ப் பரவலானது மிக வேகமாக இருந்தது. ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் இருந்து செல்வந்தர்களும் தப்பவில்லை. பேரரசர் மார்க்கஸ் அரேலியஸின் 14 குழந்தைகளில் இரு குழந்தைகள் மட்டுமே இளம் வயதை அடைந்தனர்.[279]
ஊட்டச்சத்து மற்றும் நோய் சுமையின் ஒரு சிறந்த அறிகுறியாக இருப்பது மக்கள் தொகையின் சராசரி உயரமாகும். நடுக்காலத்தின் போது, இத்தாலியில் இருந்த உரோமுக்கு முந்தைய சமூகங்கள் மற்றும் ஐரோப்பாவில் இருந்த உரோமுக்குப் பிந்தைய சமூகங்களின் மக்கள் தொகையைக் காட்டிலும் சராசரி உரோமைக் குடிமக்களின் உயரமானது குறைவாக இருந்தது. ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளது. "வரலாற்றில் கடைசி முறையாக இல்லாமல், சமூக நிலையில் ஒரு வழக்கத்திற்கு மாறான முன்னேற்றமானது உயிரியல் ரீதியாக பின்னோக்குதலைக் கொண்டு வந்தது" என வரலாற்றாளர் கைல் ஆர்ப்பர் இதை தீர்மானமாகக் கூறியுள்ளார்.[280]
அன்றாட வாழ்க்கை
[தொகு]நகரமும், நாடும்
[தொகு]பண்டைக் கால உலகத்தில் "முறையாக வடிவமைக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, அழகு சேர்க்கப்பட்டதன்" மூலம் ஒரு நகரமானது நாகரிகத்தை வளர்த்த ஓர் இடமாகக் கருதப்பட்டது.[281] உரோமில் ஒரு விரிவான கட்டடத் திட்டங்களை அகத்தசு செயல்படுத்தினார். புதிய ஏகாதிபத்திய சித்தாந்தத்தை வெளிப்படுத்திய பொதுக் கண்காட்சிக் கலை மற்றும் நகரத்தை மறு ஒருங்கிணைப்புச் செய்து அண்டை நகர்ப்புறப் பகுதிகளாக (விசி) மாற்றுதல் ஆகியவற்றுக்கு ஆதரவளித்தார். அண்டை நகர்ப்புறப் பகுதிகள் உள்ளூர் அளவில் காவலர்கள் மற்றும் தீயணைப்புச் சேவைகளால் நிர்வகிக்கப்பட்டன.[282] அகத்தசு கால நினைவுச் சின்னக் கட்டடக் கலையின் ஒரு கவனமாக மார்தியசு வளாகமானது திகழ்ந்தது. இது நகர மையத்திற்கு வெளியே அமைந்திருந்த ஒரு வெட்ட வெளிப் பகுதியாகும். குதிரையேற்ற விளையாட்டுகள் மற்றும் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி ஆகியவற்றுக்காக தொடக்க காலங்களில் இது ஒதுக்கப்பட்டிருந்தது. அகத்தசு அமைதிப் பீடமானது அங்கே அமைந்திருந்தது. இதே போல எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தூணும் அமைந்திருந்தது. அகத்தசின் கீழ் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்திற்குச் சுட்டிக் காட்டும் கோலாக இத்தூண் பயன்படுத்தப்பட்டது. இந்த வளாகமானது இதன் பொதுத் தோட்டங்களுடன் நகரத்தில் வருகை புரிவதற்கு மிகுந்த ஈர்ப்புடைய இடங்களில் ஒன்றாக உருவானது.[282]
நகரத் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வாழ்க்கை முறையானது ஆரம்ப காலத்தைச் சேர்ந்த கிரேக்கர்களால் தாக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டது.[283] கிழக்குப் பேரரசில் உரோமானிய ஆட்சியானது நகரங்களின் உள்ளூர் வளர்ச்சியை அதிகரித்து, வடிவமைத்தது. நகரங்கள் ஏற்கனவே ஒரு வலிமையான எலனியத் தன்மையைக் கொண்டிருந்தன. ஏதென்சு, அப்ரோதிசியசு, எபேசஸ் மற்றும் செராசா போன்ற நகரங்கள் ஏகாதிபத்தியக் கொள்கைகளுடன் ஒத்துப் போவதற்காக நகரத் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலையின் சில அம்சங்களை மாற்றியமைத்தன. அதே நேரத்தில், தங்களது சொந்த அடையாளம் மற்றும் முதன்மை நிலையை வெளிக்காட்டின.[284] மேற்குப் பேரரசில் செல்திக்கு மொழி பேசிய மக்களின் பகுதிகளில் கற்கோயில்கள், மன்றங்கள், நினைவுச் சின்ன அலங்கார நீரூற்றுகள் மற்றும் வட்டரங்குகளை நகர்ப்புற மையங்களின் வளர்ச்சியுடன் உரோம் ஊக்குவித்தது. இவற்றைப் பெரும்பாலும் ஒப்பிடா என்று அறியப்பட்ட ஏற்கனவே இருந்த சுவர்களால் சூழப்பட்ட குடியிருப்புகளிலோ அல்லது குடியிருப்புகள் அமைந்திருந்த தளத்திற்கு அருகிலோ ஏற்படுத்தியது.[285][286][t] உரோமானிய ஆப்பிரிக்காவின் நகரமயமாக்கலானது கடற்கரையின் அருகே இருந்த கிரேக்க மற்றும் பியூனிக் நகரங்களில் விரிவடைந்தது.[249]
பேரரசு முழுவதும் இருந்த வலைப்பின்னல் அமைப்பு போன்ற நகரங்கள் பாக்ஸ் உரோமனாவின் போது ஒரு முதன்மையான ஒன்றிணைக்கும் சக்தியாக இருந்தன.[180] பொ. ஊ. 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டு கால உரோமானியர்கள் ஏகாதிபத்தியப் பரப்புரையால் "அமைதி காலப் பழக்கங்களை மனதில் பதிய வைக்குமாறு" ஊக்குவிக்கப்பட்டனர்.[288] பாரம்பரியவாதி கிளிப்போர்டு ஆண்டோ இதைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
ஏகாதிபத்தியக் கலாச்சாரத்துடன் பிரபலமாகத் தொடர்புபடுத்தப்பட்ட பெரும்பாலான விஷயங்களான பொது வழிபாட்டு முறை மற்றும் அதன் விளையாட்டுக்கள், பொது விருந்துகள், பொழுது போக்குக் கலைஞர்களுக்கு இடையிலான போட்டிகள், பேச்சாளர்கள் மற்றும் தடகள வீரர்கள், மேலும் பெருமளவிலான பொதுக் கட்டடங்களுக்கான நிதி, பொது இடத்தில் கலையானது காட்சிக்கு வைக்கப்படுதல் ஆகியவற்றுக்குத் தனி நபர்கள் நிதியுதவி அளித்தனர். தங்களது பொருளாதார சக்தி மற்றும், சட்ட மற்றும் மாகாண மதிப்புகளை நியாயப்படுத்துவதற்கு இவ்வகையில் பயன்படுத்தப்பட்ட இந்தச் செலவினங்கள் தனி நபர்களுக்கு உதவி செய்தன.[289]
கிறித்தவ தன்விளக்கவியலாளரான தெர்த்துல்லியன் கூட 2ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியின் உலகமானது அதற்கு முந்தைய காலங்களை விட ஒழுங்கிலும், பண்பாட்டிலும் நன்முறையில் இருந்ததாகப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "எங்கும் வீடுகள், எங்கும் மக்கள், எங்கும் ரெசு பப்ளிகா (பொதுநலவாயம்), எங்கும் வாழ்க்கை".[290] பேரரசின் நெருங்கி வந்து கொண்டிருந்த வீழ்ச்சிக்கு ஒரு அறிகுறியாக செல்வச் செழிப்புமிக்க வகுப்பினர் பொதுப் பணி வேலைகளுக்கு ஆதரவளிக்க இயலாத அல்லது விரும்பாத போது 4ஆம் நூற்றாண்டில் நகரங்கள் மற்றும் குடிசார் வாழ்க்கை வீழந்தது.[291]
உரோம் நகரத்தில் பெரும்பாலான மக்கள் பல அடுக்கு அறைக்கட்டுக் கட்டடங்களில் (இன்சுலே) வாழ்ந்தனர். இவை துப்புரவுற்று தீக்கு எளிதில் இரையாகக் கூடிய வகையில் பெரும்பாலும் இருந்தன. குளியல் இடங்கள் (தெர்மே), ஓடும் நீரை வெளித்தள்ளக் கூடிய கழிவறைகள் (இலாட்ரினே), வசதியாக அமைக்கப்பட்ட வட்ட வடிவக் கிண்ணங்கள், தூய நீரைக் கொடுத்த சிக்கலான நுட்பமுடைய நீரூற்றுகள் (நிம்பே)[286] மற்றும், தேர்ப் பந்தயம் மற்றும் கிளாடியேட்டர் சண்டைகள் போன்ற பெரிய அளவிலான பொழுது போக்குகள் போன்ற பொது துணை நலங்கள் இன்சுலேவில் வாழ்ந்த பொது மக்களை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டன.[292] இதே போன்ற துணை நலங்கள் பேரரசு முழுவதும் இருந்த நகரங்களில் கட்டமைக்கப்பட்டன. நன்றாகப் பாதுகாக்கப்பட்ட உரோமானியக் கட்டடங்களில் சில எசுப்பானியா, தெற்கு பிரான்சு மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ளன.
தூய்மையான, சமூக மற்றும் கலாச்சார விழாக்களுக்குப் பொதுக் குளியல் இடங்கள் பயன்படுத்தப்பட்டன.[293] இரவு உணவுக்கு முன்னர் பிந்தைய மாலையில் தினசரி சந்திக்கும் இடமாகக் குளியல் இடம் இருந்தது.[294] மூன்று வெப்பநிலைகளில் சமூகக் குளியல் இடங்களைக் கொடுத்த ஒரு தொடர்ச்சியான அறைகளால் உரோமானியக் குளியல் இடங்கள் தனித்துவமாக விளங்கின. உடற்பயிற்சி மற்றும் எடைப் பயிற்சி அறை, வெப்பக் காற்று அல்லது நீராவிக் குளியலுக்கான அறை, அழகு நிலையம் (இங்கு இறந்த செல்கள் உடலில் இருந்து ஒரு வளைவான கருவி கொண்டு எடுக்கப்பட்டன), பந்து விளையாட்டு அரங்குகள், அல்லது வெளிப்புற நீச்சல் குளங்கள் ஆகியவையும் இந்த பல்வேறுபட்ட வசதிகளில் அடங்கும். குளியல் அறைகளின் மேற்புறத்தில் இருந்து வெப்பக் காற்று உட்கொண்டு வரப்பட்டது. அறைத் தளங்களுக்குக் கீழே கத கதப்பான சூழ்நிலையைக் கொடுத்த வெப்பக் காற்று வழிகள் இருந்தன.[295] மாகாணங்கள் முழுவதும் பொதுக் குளியல் இடங்களானவை நகர்ப்புறக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன. ஆனால் 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனிக் குளியலறைகள் பொதுக் குளியல் இடங்களை இடமாற்றம் செய்தன. சமய விழாக்களின் பகுதியாகவும், தங்களுக்குப் "புறச் சமயம்" தொடர்புடையதாகவும் கருதிய விளையாட்டுக்களைத் தவிர்க்குமாறு கிறித்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தவிர கிறித்தவர்கள் குளியல் இடங்களை மட்டும் பயன்படுத்தாமல், வணிகம் மற்றும் சமூகத்திலும் முழுவதுமாகப் பங்கெடுத்தனர் என்று தெர்த்துல்லியன் குறிப்பிடுகிறார்.[296]
உரோமைச் சேர்ந்த செல்வந்தக் குடும்பங்கள் பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருந்தன. இதில் ஒரு பட்டண வீடு (தோமுசு) மற்றும் நகரத்திற்கு வெளிப்புறத்தில் குறைந்தது ஓர் ஆடம்பர வீடு (வில்லா) ஆகியவை அடங்கும். தோமுசு என்பது தனியார் சொந்தமாக வைத்திருக்கும் ஒரு குடும்ப வீடு ஆகும். இது ஒரு தனியான குளியல் இடம் (பல்னியம்) மற்றும் அதற்கான பொருட்களுடன் ஒரு வேளை இருக்கலாம்.[295] ஆனால், பொது வாழ்க்கையிலிருந்து தனித்து வாழும் ஒரு இடமாக இது இல்லை.[297] உரோமின் சில நகர்ப் புறப் பகுதிகள் செல்வச் செழிப்பு மிக்க வீடுகளின் ஒரு அதிகமான அடர்த்தியைக் காட்டினாலும், செல்வந்தர்கள் அவர்களுக்கென்று தனியான பகுதியை ஒதுக்கிக் கொண்டு வாழவில்லை. அவர்களது வீடுகள் கண்ணில் படக் கூடியவையாகவும், எளிதில் சென்று வரக் கூடியவையாகவும் இருந்தன. வீடுகளின் உச்சியில் இருக்கும் பெரிய அறையானது ஒரு வரவேற்பு அறையாகப் பயன்படுத்தப்பட்டது. இதில் குடும்பத் தலைவர் ஒவ்வொரு நாள் காலையும் தன்னைக் காண வருபவர்களைச் சந்தித்தார். இதில் செல்வச் செழிப்பு மிக்க நண்பர்கள் முதல் குடும்பத் தலைவரின் உதவியைப் பெற்ற ஏழ்மையானவர்கள் வரை அடங்குவர்.[282] இது குடும்பச் சமயச் சடங்குகளுக்கான ஒரு மையமாகவும் திகழ்ந்தது. இதில் ஒரு சன்னிதியும், குடும்ப மூதாதையர்களின் உருவப் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.[298] இந்த வீடுகள் போக்குவரத்துக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பொதுச் சாலைகளில் அமைந்திருந்தன. விதியைப் பார்த்திருக்கும் தரைத் தள இடங்கள் பெரும்பாலும் கடைகளுக்கு (தபேர்னே) வாடகைக்கு விடப்பட்டன.[299] சமையல் கட்டுத் தோட்டங்களுடன் (அறைக் கட்டுகளுக்குப் பதிலாக சன்னல்களுக்கு வெளியே மலர்த் தொட்டிகள் வைக்க இடங்கள் இருந்தன) பட்டண வீடுகள் பொதுவாகச் சுற்றிலும் மூடப்பட்ட தோட்டங்களையும் கொண்டிருந்தன. இந்தத் தோட்டங்கள் இயற்கை மண்டலமாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டும் மற்றும் சுவர்களுக்குள்ளும் அமைந்திருந்தன.[300]
மாறாக, வில்லாவானது பரபரப்பாக இயங்குகிற நகரத்தில் இருந்து ஒரு தப்பிப்பாகக் கருதப்பட்டது. இயற்கை மற்றும் விவசாயத்திற்கு மதிப்பளிக்கிற சிந்தனை இனபத்தில் நாட்டம் மற்றும் கலைகள் தொடர்பான ஒரு பண்பட்ட நோக்கத்தை (ஒத்தியம்) சம நிலையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறையாக இலக்கியத்தில் இது பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. குறைபாடற்ற ஒரு வில்லாவானது வெளிப் புறத்தின் ஒரு காட்சியை அல்லது தோற்றத்தைக் காணக் கூடியதாக இருந்தது. இது கவனமாக கட்டடக்கலை வடிவமைப்பால் அமைக்கப்பட்டிருந்தது.[302] இது ஒரு செயல்பாட்டிலுள்ள பண்ணையில் அல்லது, பொம்பெயி மற்றும் ஹெர்குலியம் போன்ற கடற்கரையில் அமைந்திருந்த "விடுமுறைப் போக்கிடப் பட்டணத்தில்" அமைந்திருக்கலாம்.
அகத்தசுவுக்குக் கீழான நகரப் புதுப்பிப்புத் திட்டம் மற்றும் உரோமானிய மக்கள் தொகையானது கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் என அதிகரித்தது ஆகியவை கலைகளில் கிராமப் புற வாழ்க்கைக்கான ஏக்கம் வெளிக்காட்டப்பட்டுள்ளதுடன் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் மேய்ப்பாளர்களின் குறைபாடற்ற வாழ்வானது கவிதைகளில் புகழப்பட்டது. வீடுகளின் உட்புறங்கள் பெரும்பாலும் வர்ணம் பூசப்பட்ட தோட்டங்கள், நீரூற்றுகள், நிலப்பரப்புகள், தாவர அலங்காரங்கள்,[302] குறிப்பாக பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் போன்ற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. நவீன அறிஞர்கள் சில நேரங்களில் இந்த விலங்குகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை என்று அடையாளப்படுத்தப்படக் கூடிய அளவிற்குத் துல்லியமாக அவை சித்தரிக்கப்பட்டுள்ளன.[303] அகத்தசு காலக் கவிஞரான ஓராசு நகர்ப்புற மற்றும் கிராமப்புற மதிப்புகளுக்கு இடையிலான முரண்பட்ட தன்மையை தனது நீதிக்கதையான நகர எலி மற்றும் நாட்டுப்புற எலி என்ற கதையில் மென்மையாக நையாண்டி செய்துள்ளார். இக்கதையானது குழந்தைகளுக்கான கதையாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வந்தது.[304]
ஒரு மிகுந்த நடைமுறை ரீதியில், மைய அரசாங்கமானது விவசாயத்துக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு செயல்திறமுடைய விருப்பத்தைக் கொண்டிருந்தது.[305] நிலம் பயன்படுத்தப்படுவதன் முதன்மையான நோக்கமாக உணவு உற்பத்தியானது திகழ்ந்தது.[306] நகர்ப்புற வாழ்க்கை மற்றும் அதன் மிகுந்த தனித்துவமான பணியாளர் பிரிவு ஆகியவற்றை நீடிக்க வைத்த பொருளாதார அளவை பெரிய பண்ணைகள் சாதித்தன.[305] பட்டணங்கள் மற்றும் வணிக மையங்களின் உள்ளூர்ச் சந்தைகளின் வளர்ச்சியின் மூலம் சிறிய விவசாயிகள் பயனடைந்தனர். பயிர்ச்சுழற்சி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருக்கம் போன்ற விவசாயத் தொழில்நுட்பங்கள் பேரரசு முழுவதும் பரவின. ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு புதிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக பட்டாணியும், முட்டைக்கோசும் பிரிட்டனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.[307]
உரோம் நகரத்திற்குப் போதுமான உணவு வழங்குதலைப் பெறுவது என்பது பிந்தைய குடியரசில் ஒரு முதன்மையான அரசியல் பிரச்சினையாக உருவானது. பதிவு செய்த குடிமக்களுக்காக தானிய உதவியை (குரா அன்னோனே) அரசாங்கம் கொடுக்க ஆரம்பித்தது.[305] இந்த உதவியை உரோமில் இருந்த 2 முதல் 2.50 இலட்சம் ஆண்கள் பெற்றனர். ஒரு மாதத்திற்கு 33 கிலோ தானியத்தை இவ்வாறாகப் பெற்றனர். மொத்தமாக ஓர் ஆண்டுக்குச் சுமார் 1 இலட்சம் டன் கோதுமையைப் பெற்றனர். இந்தக் கோதுமை முதன்மையாக சிசிலி, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து வந்தது.[308] இத்திட்டமானது அரசின் வருவாயில் குறைந்தது 15% செலவு ஏற்படுத்தியது.[305] ஆனால் கீழ்த்தட்டு மக்கள் மத்தியில் வாழ்க்கைத் தரம் மற்றும் குடும்ப வாழ்வை முன்னேற்றியது.[309] நிலத்தை உடைமையாகக் கொண்டிருந்த வகுப்பினரின் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட இடலை எண்ணெயை வாங்குவதற்குப் பணியாளர்கள் அதிகப்படியாகச் செலவழிப்பதை அனுமதித்ததன் மூலம் செல்வந்தர்களுக்கு இவ்வாறாக மானியம் வழங்கியது.[305]
தானிய உதவியும் ஒரு பெயரளவு மதிப்பைக் கொண்டிருந்தது: அனைவருக்கும் அனுகூலத்தை வழங்குபவர் என்ற பேரரசரின் நிலை மற்றும் "படையெடுத்து வெற்றி கொள்ளப்பட்டதன் அனுகூலங்களில்" இருந்து தங்களுக்குரிய பங்கைப் பெறும் அனைத்துக் குடிமக்களுமான உரிமை ஆகிய இரண்டையுமே இது உறுதி செய்தது.[305] அன்னோனா, பொது நல வசதிகள் மற்றும் பிரமிக்கத்தக்க பொழுது போக்குகள் ஆகியவை கீழ் வகுப்பு உரோமானியர்களின் சலிப்பூட்டும் வாழ்க்கை நிலையைத் தணித்தன. சமூகக் கொந்தளிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்தன. எனினும், நையாண்டிக் கவிஞரான சுவேனல் "ரொட்டித் துண்டு மற்றும் சர்க்கஸ்" ஆகியவற்றைக் குடியரசானது அரசியல் சுதந்திரத்தை இழந்ததன் ஒரு சின்னமாகக் கருதினார்:[310]
பொதுமக்கள் தங்களது விழிப்புணர்வை நீண்ட காலமாக விட்டு விட்டனர்: ஆணைகளையும், ஆட்சிகளையும் ஒரு காலத்தில் வழங்கியவர்கள், இலீசியன்கள் மற்றும் அனைவரும் தற்போது எதிலும் தலையிடுவதில்லை. [மக்கள் தற்போது] வெறும் இரண்டே இரண்டிற்காக ஆர்வத்துடன் விருப்பம் கொள்கின்றனர். அவை ரொட்டித் துண்டு மற்றும் சர்க்கஸ்கள்.[311]
உணவும், உண்ணுதலும்
[தொகு]உரோமில் இருந்த பெரும்பாலான அறைக்கட்டுகள் சமையல் அறைகளைக் கொண்டிருக்கவில்லை. எனினும், ஒரு மரக்கரி கனல் தட்டானது சாதரண சமையற் வேலைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.[313] தயாரித்த உணவானது பொது விடுதிகள், பயணிகள் விடுதிகள், மற்றும் உணவு விற்பனையரங்குகள் (தாபர்னே, பாப்பினே, தெர்மோபோலியா) ஆகிய இடங்களில் விற்கப்பட்டன.[314] எடுப்புச் சாப்பாடு மற்றும் உணவகத்தில் உண்ணுதல் ஆகியவை கீழ் தட்டு மக்களுக்கு உரியவையாக இருந்தன; தனித்துவமான, நுணுக்கமான உணவுகளையுடைய உண்ணுதலானது ஒரு வாலுவர் (ஆர்ச்சிமகிரசு) மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களுடன் செல்வச் செழிப்பு மிக்க வீடுகளில் நடத்தப்பட்ட தனியார் இரவு விருந்து நிகழ்ச்சிகளில்[315] அல்லது சமூகக் குழுக்களால் (காலேஜியா) நடத்தப்படும் விருந்துகளில் மட்டுமே எதிர் பார்க்கக் கூடியதாக இருந்தது.[316]
பெரும்பாலான மக்கள் தங்களது தினசரிக் கலோரிகளில் குறைந்தது 70 சதவீதத்தைத் தானியங்கள் மற்றும் இருபுற வெடிக்கனி ஆகியவற்றின் வடிவத்தில் உட்கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[317] காய்கறிக் கஞ்சியானது (பல்சு) உரோமானியர்களின் பூர்வீக உணவாகக் கருதப்பட்டது.[318] அடிப்படைத் தானியக் கஞ்சியுடன் துண்டாக்கப்பட்ட காய்கறிகள், சிறு மாமிசத் துண்டுகள், பாலாடை, அல்லது மூலிகைகளுடன் சேர்த்து போலேன்டா மற்றும் இரிசோட்டோ ஆகியவற்றை ஒத்த உணவு வகைகள் தயாரிக்கப்படலாம்.[319]
நகர்ப்புற மக்களும், இராணுவத்தினரும் தங்களது தானிய உணவை ரொட்டித் துண்டின் வடிவில் உட்கொள்வதையே விரும்பினர்.[317] ஆலைகளும், வணிக அடுகலன்களும் ஒரு அடுமனை வளாகமாகப் பொதுவாக ஒன்றிணைக்கப்பட்டு இருந்தன.[320] அரேலியனின் ஆட்சியின் போது அரசு தொழிற்சாலைகளின் அடுமனையில் தயாரிக்கப்பட்ட ரொட்டித் துண்டான அன்னோனாவை ஒரு தினசரி பங்கீட்டு உணவுப் பொருளாக விநியோகம் செய்ய அரசானது தொடங்கியது. இடலை எண்ணெயையும் இந்தப் பங்கீட்டில் சேர்த்தது.[321]
உடல் நலத்திற்கு முக்கியமானதாக ஒரு நல்ல உணவு இருந்தது என்பது கலென் (கி. பி. 2ஆம் நூற்றாண்டு) போன்ற மருத்துவ எழுத்தாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவரது சமையற்குறிப்புகள் பார்லி சூப் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. கூமோரல் கோட்பாடு போன்ற எண்ணங்களால் ஊட்டச்சத்து மீதான பார்வைகள் தாக்கம் கொண்டிருந்தன.[322]
உரோமானிய இலக்கியமானது மேல்தட்டு வகுப்பினரின் உண்ணும் பழக்க வழக்கங்கள் மீது கவனம் கொண்டிருந்தது.[323] மேல்தட்டு வகுப்பினருக்கு மாலை உணவானது (செனா) முக்கியமான சமூக விழாவாக இருந்தது.[324] ஒரு நன்றாக அலங்கரிக்கப்பட்ட உணவு உண்ணும் அறையில் (திரிக்லினியம்) விருந்தினர்கள் பொழுது போக்கு பெற்றனர். இவை பெரும்பாலும் முழுவதுமாக சுற்றி அடைக்கப்பட்டிருந்த தோட்டத்தைக் கண்டவாறு நடத்தப்பட்டது. உணவு உண்பவர்கள் தங்களது இடது முழங்கையால் சாய் படுக்கைகளில் ஓய்வெடுத்தனர். குறைந்தது குடியரசின் பிந்தைய காலத்தில், பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து உணவருந்தினர் மற்றும் சாய் படுக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்தனர்.[325]
வேடிக்கை விளையாட்டுகள்
[தொகு]உரோமானிய மக்கள் தங்களுடைய அரசியல் சுதந்திரத்தை "ரொட்டி துண்டுகள் மற்றும் சர்க்கசுகளுக்காக" பரிமாறிக் கொண்டனர் என்று நையாண்டி எழுத்தாளர் சுவேனல் புகார் கூறிய போது அரசாங்கம் கொடுத்த தானிய பங்கீடுகள் மற்றும் சிர்சென்சசை அவர் குறிப்பிட்டார். சிர்சென்சசு என்பவை சர்க்கசு என்று அழைக்கப்பட்ட ஒரு பொழுதுபோக்கு அரங்கில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும். உரோமிலிருந்த இத்தகைய மிகப்பெரிய அரங்காக சர்க்கசு மேக்சிமசு திகழ்ந்தது. இங்கு குதிரைப் பந்தயங்கள், தேர்ப் பந்தயங்கள், குதிரைகளையுடைய திராய் விளையாட்டுக்கள், ஒத்திகைக்குப் பிறகு நடத்தப்பட்ட விலங்கு வேட்டைகள் (வெனதியோனெசு), தடகளப் போட்டிகள், கிளாடியேட்டர் சண்டைகள் மற்றும் வரலாற்று மீள் உருவாக்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. தொடக்க காலங்கள் முதலே பல்வேறு சமய விழாக்கள் விளையாட்டுகளை (லுதி) ஒரு பகுதியாக கொண்டிருந்தன. இதில் முதன்மையாக குதிரை மற்றும் தேர்ப் பந்தயங்கள் (லுதி சிர்சென்செசு) நடைபெற்றன.[326] விவசாயம், உறுப்பினர் இணைப்பு சடங்கு மற்றும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய சமய முக்கியத்துவத்தை இந்த பந்தயங்கள் தக்க வைத்துக் கொண்டன.[u]
அகத்தசுக்கு கீழ் போது பொழுது போக்குகள் ஆண்டின் 77 நாட்களுக்கு நடத்தப்பட்டன. மார்க்கசு அரேலியசின் ஆட்சிக் காலம் வாக்கில் இந்த எண்ணிக்கை 135 நாட்களாக விரிவடைந்தது.[328] சர்க்கசு விளையாட்டுகளுக்கு முன் நிகழ்வாக நுட்பமான அணிவகுப்புகள் (பாம்பா சிர்சென்சிசு) நடைபெற்று அரங்கத்தில் வந்து முடிவடைந்தன.[329] ஆம்பிதியேட்டர் மற்றும் மைதானம் போன்ற சிறிய அரங்குகளிலும் விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஆம்பிதியேட்டர் என்பது உரோமானிய வேடிக்கை அரங்கின் ஓர் அம்சமாக உருவானது. ஓட்டப் பந்தயங்கள், குத்துச் சண்டை, மல்யுத்தம் மற்றும், குத்துச் சண்டை மற்றும் மல்யுத்தத்தை ஆகியவை கலந்த பாங்கிரேசியம் என்று அழைக்கப்பட்ட சண்டை உள்ளிட்ட கிரேக்க பாணியிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன.[330] கடலில் நடைபெறும் யுத்தம் குறித்த பாசாங்கு (நௌமச்சியா) மற்றும் "தண்ணீரில் நடத்தப்படும் பாலட் நடனத்தின்" ஒரு வகை போன்ற நீர் சார்ந்த வேடிக்கைகளும் அதற்கென்றே பொறியியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் நடத்தப்பட்டன.[331] அரசால் ஆதரவளிக்கப்பட்ட திரை அரங்க நிகழ்வுகள் (லுதி இசுகாயேனிசி) கோயில்களின் படிக்கட்டுகள் அல்லது பெரிய கற்களாலான நாடக அரங்குகளில் அல்லது ஒதியோன் என்று அழைக்கப்பட்ட சிறிய, சுற்றிலும் மூடப்பட்ட நாடக அரங்குகளில் நடத்தப்பட்டன.[332]
உரோமானிய உலகத்தில் அடிக்கடி கட்டமைக்கப்பட்ட பெரிய கட்டடங்களாக சர்க்கசுகள் திகழ்ந்தன.[333] பரவலாக கொலோசியம் என்று அழைக்கப்படும் பிலாவிய ஆம்பிதியேட்டரானது உரோமில் நடந்த குருதி சார்ந்த விளையாட்டுகளுக்கான பொதுவான அரங்கமாக உருவானது.[334] இத்தாலிக்கு வெளியே உள்ள நகரங்களில் கட்டப்பட்ட பல உரோமானிய ஆம்பிதியேட்டர்கள், சர்க்கசுகள் மற்றும் நாடக அரங்குகள் தற்போது சிதிலங்களாக காணப்படுகின்றன.[334] வேடிக்கைகள் மற்றும் அரங்கு நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கு உள்ளூர் ஆளும் வர்க்கத்தினர் காரணமாக திகழ்ந்தனர். அவர்களது நிலையை உயர்த்தி காட்டுவது மற்றும் அவர்களது நிதியாதாரங்களை சுருங்க செய்வது ஆகிய இரு நிகழ்வுகளுக்குமே இவை காரணமாக அமைந்தன.[162] ஆம்பிதியேட்டரின் நாற்காலி அமைப்புகள் உரோமானிய சமூகத்தின் தர நிலையை காட்டின: பேரரசர் தன்னுடைய சொகுசு அறையிலும், செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் குதிரைப்படை வரிசை உறுப்பினர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனித்துவமான இருக்கைகளிலும், அரங்கிலிருந்து தொலைவில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் பெண்களும், மோசமான இடங்களில் அடிமைகளும், மற்ற அனைவரும் இவர்களுக்கு இடையிலும் அமர வைக்கப்பட்டனர்.[335] தாங்கள் விரும்பும் முடிவை பெறுவதற்காக இரசிகர்கள் வெறுப்பு அல்லது விருப்பு ஒலிக்குறிப்பை வெளிப்படுத்துவர். ஆனால் பேரரசரின் முடிவே இறுதியானது ஆகும். சமூக மற்றும் அரசியல் போராட்டங்களின் தளங்களாக இந்த வேடிக்கை விளையாட்டுகள் சீக்கிரமே உருவாகலாம். கூட்டத்தில் ஏற்படும் அமளியை ஒடுக்குவதற்காக பேரரசர்கள் சில நேரங்களில் படைகளை அனுப்பினர். இதில் மிக மோசமானதாக 532ஆம் ஆண்டு நடைபெற்ற நிகா கலவரங்கள் கருதப்படுகின்றன.[336]
தேர் குழுக்கள் அவர்கள் அணிந்த ஆடைகளின் நிறங்களின் மூலம் அறியப்பட்டன. இரசிகர்களின் விசுவாசமானது கோபாவேசமாக இருந்தது. சில நேரங்களில் இது விளையாட்டு தொடர்பான கலவரங்களாக வெடித்தது.[338] பந்தயங்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருந்தன. ஆனால் தேரை செலுத்துபவர்கள் மிகவும் கொண்டாடப்பட்ட மற்றும் நன்முறையில் சம்பளம் பெற்ற தடகள வீரர்களில் ஒருவராக இருந்தனர்.[339] எந்த ஒரு அணியும் நியாயமற்ற அனுகூலத்தை பெறாத வகையிலும், தேர்கள் இடித்துக் கொள்வதைக் (நௌபிரசியா) குறைக்கும் வகையிலும் சர்க்கசு அரங்கங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.[340] இருந்த போதிலும் தேர்கள் இடித்துக் கொள்வது வாடிக்கையான ஒன்றாக இருந்தது. இதை பார்வையாளர்களும் நிறைவுடன் கண்டு மகிழ்ந்தனர்.[341] பந்தயங்கள் பாதாள உலகம் தொடர்புடைய தொடக்க கால சடங்குகள் வழியாக ஒரு மந்திரம் கலந்த தனித்துவ பண்பை தக்க வைத்துக் கொண்டன. சர்க்கசு ஓவியங்கள் தற்காக்க கூடியவையாகவும், அதிர்ஷ்டத்தை தருபவையாகவும் கருதப்பட்டன. பந்தய களங்களின் தளத்தில் சாபம் அளிக்கக் கூடிய பட்டிகைகள் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேரோட்டிகள் அடிக்கடி பில்லி சூனியம் செய்துள்ளதாக சந்தேகிக்கவும் பட்டனர்.[342] ஏகாதிபத்திய ஆதரவின் கீழ் பைசாந்திய காலம் வரையிலும் தேர் பந்தயமானது தொடர்ந்து நடைபெற்றது. 6 மற்றும் 7ஆம் நூற்றாண்டுகளில் நகரங்கள் வீழ்ச்சியடைந்தது இப்பந்தயங்கள் இறுதியாக முடிக்கப்படும் நிலைக்கு வழி வகுத்தது.[333]
கிளாடியேட்டர் பந்தயங்கள் இறுதிச் சடங்கு விளையாட்டுகள் மற்றும் பலியீடுகளில் இருந்து தோன்றியதாக உரோமானியர்கள் எண்ணினர். கிளாடியேட்டர் சண்டையின் தொடக்க கால பாணிகளில் சில இனம் சார்ந்த பெயர்களான "திரேசியன்" அல்லது "கௌலியன்" போன்ற பெயர்களைக் கொண்டிருந்தனர்.[343] இந்த பொதுக் காட்சி சண்டைகள் முனேரா என்று கருதப்பட்டன. முனேரா என்றால் "சேவைகள், வாய்ப்புகள், அன்பளிப்புகள்" என்று பொருள். இவை தொடக்கத்தில் லுதி எனப்படும் விழா விளையாட்டுகளில் இருந்து தனித்துவமாக இருந்தன.[344] கொலோசியத்தின் திறப்பு விழாவை குறிப்பதற்காக பேரரசர் டைட்டசு 100 நாட்கள் நடைபெற்ற அரங்க நிகழ்வுகளை நடத்தினார். இதில் ஒரே நாளில் 3,000 கிளாடியேட்டர்கள் போட்டியிட்டனர்.[345] பளிங்குக்கற்கள், சுவர் ஓவியங்கள், விளக்குகள் மற்றும் சுவர் வரைபடங்கள் ஆகியவற்றில் எவ்வாறு பரவலாக கிளாடியேட்டர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதன் மூலம் உரோமானியர்கள் எவ்வாறு கிளாடியேட்டர்களை விரும்பினர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.[346] கிளாடியேட்டர்கள் என்பவர்கள் பயிற்சி அளிக்கப்பட்ட சண்டையாளர்கள் ஆவர். இவர்கள் அடிமைகளாகவோ, குற்றவாளிகளாகவோ அல்லது சுதந்திரமான தன்னார்வலர்களாகவோ இருந்திருக்கலாம்.[347] இந்த அதிகப்படியான திறமையுடைய சண்டை போட்டியாளர்களுக்கு இடையில் நடக்கும் பந்தயங்களின் ஒரு தேவையாகவோ அல்லது விரும்பப்பட்ட முடிவாகவோ அவர்களது இறப்பு எண்ணப்படவில்லை. ஏனெனில், இவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது அதிக செலவு பிடிப்பதாகவும், நீண்ட காலம் எடுத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.[348] மாறாக நோக்சீ என்பவர்கள் சிறிதளவு பயிற்சி அல்லது முழுவதும் பயிற்சியற்ற, பெரும்பாலும் ஆயுதம் கொடுக்கப்படாத, அவர்கள் பிழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இல்லாத, அரங்கிற்குள் தள்ளிவிடப்பட்ட குற்றவாளிகள் ஆவர். உடல் காயம் அடைதல் மற்றும் அவமானம் ஆகியவை தேவையான நீதி பழிவாங்கல்களாக கருதப்பட்டன.[162] இந்த மரண தண்டனைக்குட்படுத்தப்படும் நிகழ்வுகள் சில நேரங்களில் பொது அரங்கிலோ அல்லது தொன்மவியல் நிகழ்வுகளை மீண்டும் நடத்திய சடங்குகளாகவோ இருந்தன. நுட்பமான பொது அரங்கு கருவிகள் தனித்துவமான காட்சி விளைவுகளை ஏற்படுத்துவதற்காக ஆம்பிதியேட்டர்களில் பயன்படுத்தப்பட்டன.[162][349]
நவீன அறிஞர்களுக்கு "அரங்கில் வாழ்வா? சாவா?"[350] என்று போராடுபவர்களை காண்பதில் உரோமானியர்கள் அடைந்த மகிழ்ச்சியை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.[351] இளைய பிளினி கிளாடியேட்டர் வேடிக்கை விளையாட்டுகளை மக்களுக்கு நல்ல ஒன்று என்று குறிப்பிட்டார். "மதிப்புக்குரிய காயங்களை அடைவதற்கும், இறப்பை துச்சமென மதிப்பதற்கும் அவர்களுக்கு அகத்தூண்டுதலாக இருந்ததாகவும், போர் செயல்களுக்காக புகழ் பெறுவதை விரும்புவதை தெரிவிப்பதற்காகவும், வெற்றிக்கான வேட்கைக்காகவும் இவை நல்லவை" என்று குறிப்பிட்டார்.[352] செனீக்கா போன்ற சில உரோமானியர்கள் இந்த மிருகத்தனமான வேடிக்கை விளையாட்டுகளை விமர்சித்தனர். ஆனால் தோற்கடிக்கப்பட்ட சண்டையாளரின் துணிச்சல் மற்றும் நேர்மையில் நற்பண்புகளை கண்டனர்.[353] அரங்கத்தில் உயிர் தியாகம் செய்த கிறித்தவர்களைப் பற்றிய மனப்பான்மை குறித்து நன்முறையில் குறிப்பிட்டார். தொடக்க கால கிறித்தவ இறையியலாளரான தெர்துல்லியன் அரங்குகளில் நடைபெற்ற இறப்புகளை ஒரு நாகரிகமான நரபலிகளுக்கு மேல் எதுவும் இல்லை என்று கருதினார்.[354] எனினும், தியாகி இலக்கியங்கள் கூட "உடல் ரீதியான துயரத்தின் விளக்கங்களை விரிவாக" குறிப்பிட்டது.[355] இது நூல்களின் ஒரு பிரபலமான வகையாக உருவானது. சில நேரங்களில் புனைவுகளில் இருந்து வேறுபடுத்த இயலாததாக இருந்தது.[356]
பொழுது போக்கு
[தொகு]லுதுசு என்ற சொல்லுக்கு "விளையாட்டு, பயிற்சி", "சொல் விளையாட்டு", "நாடக அரங்க நடிப்பு, நடனம், பாடுதல்", "பலகை விளையாட்டு", "தொடக்கப் பள்ளி", ஆகிய பொருள்கள் உண்டு. மேலும் லுதுசு மேக்னசு என்பதில் குறிப்பிட்டுள்ள படி இதற்கு "கிளாடியேட்டர் பயிற்சிப் பள்ளி" என்றும் கூட பொருள் உண்டு.[357] பேரரசில் இருந்த குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் செயல்பாடுகளில் சக்கரம் ஓட்டுதல் மற்றும் தாயம் விளையாடுதல் (ஆசுதிரகலி) ஆகியவை உள்ளடங்கியிருந்தன. மரம், சுடுமண் பாண்டம், மற்றும் குறிப்பாக எலும்பு மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை பெண் குழந்தைகள் வைத்திருந்தனர்.[358] திரிகோன் மற்றும் அருபசுதும் உள்ளிட்ட பந்து விளையாட்டுகளும் விளையாடப்பட்டன.[359] இலதுருன்குலி (ஊடுருவாளர்கள்) மற்றும் 12 இசுகிரிப்தா (12 குறியீடுகள்) உள்ளிட்ட பலகை விளையாட்டுக்களை அனைத்து வயது சார்ந்த மக்களும் விளையாடினர்.[360] அலேயா (தாயம்) அல்லது டேபுலா (பலகை) என்று அழைக்கப்பட்ட ஒரு விளையாட்டானது பாக்கமன் விளையாட்டுடன் ஒத்ததாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[361] தாயமானது சூதாட்ட வடிவில் விளையாடுவதற்கு ஊக்குவிக்கப்படவில்லை. ஆனால் திசம்பரில் சனிக்காக கொண்டாடப்பட்ட, கிறித்துமசுக்கு முன்னோடியாகக் கருதப்படும் சாட்டர்னாலியா விழாவின் போது ஒரு பிரபலமான பொழுது போக்காக இது இருந்தது.
வயது வந்ததற்குப் பிறகு ஆண்களுக்கான பெரும்பாலான உடற்பயிற்சியானது இராணுவ இயல்புடையதாக இருந்தது. மார்த்தியசு வளாகம் என்பது உண்மையில் இளைஞர்கள் குதிரையேற்றம் மற்றும் போரை கற்றுக் கொண்ட ஓர் உடற்பயிற்சி நிலப்பரப்பு ஆகும். வேட்டையாடுதலானது ஓர் உகந்த பொழுது போக்காக கருதப்பட்டது. புளூட்டாக்கின் கூற்றுப் படி ஒரு நல்ல உடல் வாகுவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உடல் வாகுக்காகப் பயிற்சி செய்து, உடல் வாகுவை தந்த கிரேக்க பாணி தடகள போட்டிகளை பழமைவாத உரோமானியர்கள் ஊக்குவிக்கவில்லை. கிரேக்க பாணி தடகள போட்டிகளை ஊக்குவித்த நீரோவின் முயற்சிகளையும் அவர்கள் கண்டித்தனர்.[362] சில பெண்கள் சீரிசை சீருடற்பயிற்சியாளர்களாகவும், அரிதாக சிலர் பெண் கிளாடியேட்டர்களாகவும் பயிற்சி பெற்றனர்.[v][364] பந்து விளையாடுதல், நீச்சல், நடத்தல் அல்லது ஒரு மூச்சுப் பயிற்சியாக சத்தமாக படித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் உடல் நலத்தை பேணுவதற்கு பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.[365]
உடை
[தொகு]சமுதாயத்தில் தங்களது நிலை குறித்து மிகவும் கவனமாக இருந்த உரோமானியர்களின் சமூகத்தில் உடை மற்றும் தனிப்பட்ட ஒப்பனையானது அதை அணிந்துள்ளவருடன் உறவாடுவதன் சமுதாய ஆசார முறையை காட்டியது.[366] சரியான உடையை உடுத்துவது என்பது நல்லொழுங்கில் இருந்த ஒரு சமூகத்தை பிரதிபலித்தது.[367] தங்களது தினசரி வாழ்வில் உரோமானியர்கள் எவ்வாறு உடை உடுத்தினர் என்பது குறித்து நேரடியான சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஏனெனில் ஒருவரின் ஓவியமானது அதில் உள்ளவரின் உடையயை அடையாள மதிப்பிற்காக மாறுபடுத்தி வரையப்பட்டிருக்கலாம். உரோமானியர் காலத்தைச் சேர்ந்த எஞ்சிய துணிகள் மிகவும் அரிதாகவே கிடைக்கப் பெறுகின்றன.[368][369]
தோகா என்பது ஆண் குடிமகனின் தனித்துவமான தேசிய ஆடையாக இருந்தது. ஆனால் இது மிகவும் கனமானதாகவும், நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் இருந்தது. அரசியல் அல்லது நீதித்துறை பணிகள், மற்றும் சமய சடங்குகளை நடத்தும் போது மட்டுமே இவை பொதுவாக அணியப்பட்டன.[370][368] பாதியளவு வட்டமான வெள்ளை கம்பளியின் ஒரு "பரந்து விரிந்த" வடிவமாக இது இருந்தது. இதை அணிந்து கொள்வதோ, சரியாக போர்த்திக் கொள்வதோ என்பது இயலாததாக இருந்தது.[370] இவற்றை உடலில் போர்த்திக் கொள்வது காலப் போக்கில் மிகுந்த நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டதாக மாறியது.[371] தோகா பிரேதெக்சுதா என்பது ஓர் ஊதா அல்லது ஊதா சிவப்பு நிற கோட்டை கொண்டிருந்த உடையாகும். அவமதிக்க கூடாத தன்மையை இது பிரதிநிதித்துவப்படுத்தியது. வயதுக்கு வராத குழந்தைகள், செயல் (குரூல்) நீதிபதிகள் மற்றும் அரச பூசாரிகள் இதை அணிந்து கொண்டனர். முழுவதுமாக ஊதா நிறமுடைய தோகாவானது (தோகா பிக்தா) பேரரசரால் மட்டுமே அணியப்படக் கூடியதாக இருந்தது.[372]
பொதுவான உடையானது கருமை நிறத்திலோ அல்லது பல வண்ணங்களை உடையதாகவோ இருந்தது. அனைத்து உரோமானியர்களுக்குமான அடிப்படை ஆடையானது எளிமையான கைகளை மூடக்கூடிய தூனிக் ஆகும். இது பாலின அல்லது பணக்காரர், ஏழை வேறுபாடின்றி பொதுவானதாக இருந்தது. இதை அணிந்தவரின் உயரத்தைப் பொறுத்து இதன் நீளமானது வேறுபட்டது.[373] ஏழை மக்கள் மற்றும் பணி செய்யும் அடிமைகளின் தூனிக்குகள் இயல்பாக கரடு முரடான கம்பளியிலிருந்து செய்யப்பட்டன. மங்கலான நிறத்தைக் கொண்டிருந்தன. தரமான தூனிக்குகள் மெல்லிய எடையுடைய கம்பளி அல்லது லினன் எனப்படும் நார்த் துணியிலிருந்து தயாரிக்கப்பட்டன. செனட் சபை அல்லது குதிரை வரிசை உறுப்பினராக இருந்த நபர்கள் இரண்டு ஊதா கோடுகளை (கிலாவி) உடைய துணிகளை அணிந்தனர். இந்த கோடுகள் செங்குத்தாக நெய்யப்பட்டிருந்தன. இந்த கோடு எந்த அளவு அகலமாக உள்ளதோ அதை அணிந்துள்ள ஒருவரின் சமூக நிலையானது அந்த அளவுக்கு உயர்வாக கருதப்பட்டது.[373] பிற ஆடைகளை இந்த துணிக்கு மேல் அணிந்து கொள்ளலாம். பொதுவான ஆண்களின் உடை பாணியானது அங்கிகள் மற்றும் சில பகுதிகளில் கால் சட்டைகளையும் உள்ளடக்கியிருந்தது.[374] 2ஆம் நூற்றாண்டில் பேரரசர்களும், உயர்குடியினரும் உண்மையில் ஒரு கிரேக்க ஆடை வகையான பல்லியத்தை அணிந்துள்ளதாக பொதுவாக சித்தரிக்கப்படுகின்றனர். பல்லியத்தை அணிந்துள்ளதாக பெண்களும் கூட சித்தரிக்கப்பட்டுள்ளனர். கிறித்தவர்கள் மற்றும் கற்றறிந்த மக்கள் ஆகிய இருவருக்குமே தகுந்த ஆடையாக பல்லியத்தை தெர்துல்லியன் கருதினார். தோகாவிற்கான மாற்றாக இதை அவர் கருதினார்.[367][368][375]
உரோமானியர்களின் உடை உடுத்தும் பாணிகள் காலப் போக்கில் மாற்றம் அடைந்தன.[376] டாமினேட் கால (அண். பொ. ஊ. 284 – 641) உரோமில் படைவீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகிய இருவருமே உடுத்திய உடைகளானவை வடிவியல் கணிதம் சார்ந்த வடிவங்களையும், தனித்துவமான தாவரங்கள் சார்ந்த வடிவங்களையும் பெருமளவு ஒப்பனையுடன் கொண்டிருந்தன. மிகவும் அழகுபடுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகளாக மனித அல்லது விலங்குகளின் உருவங்கள் அச்சிடப்பட்டிருந்தன.[377] பிந்தைய பேரரசின் அரசவையினர் கவனமாக உருவாக்கப்பட்ட பட்டு அங்கிகளை அணிந்து கொண்டனர். உரோமானிய சமூகம் இராணுவ மயமாக்கப்பட்டது மற்றும் நகர வாழ்வானது நலிவுற்றது ஆகியவை அவர்களின் ஆடை அணியும் பாணியின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தின. அரசு அதிகாரிகளும், போர் வீரர்களும் கனமான இராணுவ பாணி இடுப்புப் பட்டைகளை அணிந்தனர். தோகா ஆடையானது கைவிடப்பட்டது.[378] சமூக ஒற்றுமையை வெளிக்காட்டும் ஓர் ஆடையாக பல்லியமானது தோகாவுக்கு பதிலாக பயன்பாட்டுக்கு வந்தது.[379]
கலைகள்
[தொகு]கிரேக்க கலையானது உரோமானியக் கலை மீது ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.[380] சிற்பங்கள், வெற்றி வளைவுகள் போன்ற நினைவுச்சின்னங்கள் மற்றும் நாணயங்கள் மீது அச்சிடப்பட்ட உருவப்படங்கள் உள்ளிட்ட பொதுக் கலையானது வரலாற்றியல் அல்லது கொள்கை ரீதியிலான முக்கியத்துவத்திற்காக பொதுவாக ஆய்வு செய்யப்படுகிறது.[381] தனி நபர் ஈடுபாட்டு எல்லைக்குள் கலைப்பொருட்களானவை சமய அர்ப்பணிப்புகள், இறுதிச்சடங்கு நினைவுச்சின்னங்கள், வீட்டுப் பயன்பாடு மற்றும் வணிகம் ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்டன.[382] தங்களது வீடுகளில் கலை வேலைப்பாடுகளின் மூலம் பண்பாட்டுக்கான தங்களது போற்றுதலை செல்வந்தர்கள் விளம்பரப்படுத்தினர்.[383] கலைக்கு அதிகப்படியான மதிப்பு கொடுக்கப்பட்ட போதிலும் மிக பிரபலமான கலைஞர்கள் கூட தாழ்ந்த சமூக நிலையில் இருந்தனர். இதற்கு ஒரு பங்கு காரணம் அவர்கள் தங்களது வேலைப்பாடுகளை வெறும் கைகளைக் கொண்டு செய்ததாகும்.[384]
உருவக் கலை
[தொகு]உருவக்கலையானது பொதுவாக சிற்பங்களின் வடிவத்தில் எஞ்சியுள்ளது. ஏகாதிபத்தியக் கலையின் பெரும்பாலான கலை வடிவமாக இது காணப்படுகிறது. அகத்தசின் காலத்தில் உருவப்படங்கள் பாரம்பரிய கூறுகளைப் பயன்படுத்தின. பின்னர் இயற்கை வழுவா கோட்பாடு மற்றும் கருத்தியல் கோட்பாடு ஆகியவற்றின் ஒரு கலவையாக பரிணாமம் அடைந்தன.[385] குடியரசு கால உருவப்படங்கள் கடுமையான இயற்கை வழுவா கோட்பாட்டால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. பேரரசரின் குடும்ப பெண்கள் பொதுவாக பெண் தெய்வங்களாக சித்தரிக்கப்பட்டனர்.
ஓவியக் கலையில் உருவப்படங்களானவை முதன்மையாக பயூம் மம்மி ஓவியங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. இறந்தவர்களின் நினைவாக இயற்கை வழுவா கோட்பாட்டு ஓவியங்களை கொண்டிருந்த எகிப்திய மற்றும் உரோமானிய பாரம்பரியங்களை இது பின்பற்றியது. பளிங்குக் கற்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. ஆனால் அவற்றின் தடையங்கள் அரிதாகவே எஞ்சியுள்ளன.[386]
சிற்பங்களும், சிற்பங்களையுடைய கல் சவப்பெட்டிகளும்
[தொகு]உரோமானிய சிற்பங்களின் எடுத்துக் காட்டுகள் ஏராளமாக எஞ்சியுள்ளன. எனினும் இவை பெரும்பாலும் சேதமடைந்த அல்லது துண்டுகளாக உடைந்த நிலையில் காணப்படுகின்றன. பளிங்குக்கல், வெண்கலம் மற்றும் களிமண், மற்றும் பொதுப்பணி கட்டடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களில் உள்ள புடைப்புச் சிற்பங்களில் காணப்படும் தனியாக நிறுத்தப்பட்ட சிலைகளும் இதில் அடங்கும். ஆம்பிதியேட்டர்களில் இருந்த ஒதுக்கப்பட்ட தனித்தனி இடங்கள் உண்மையில் சிலைகளால் நிரம்பியிருந்தன.[387][388] அரசு தோட்டங்களும் இவ்வாறு சிலைகளால் நிரம்பியிருந்தன.[389] கோயில்களில் தெய்வங்களின் வழிபாட்டு உருவங்கள் நிரம்பியிருந்தன. இவற்றை பெரும்பாலும் புகழ்பெற்ற சிற்பிகள் வடிவமைத்து இருந்தனர்.[390]
2 முதல் 4ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தின் தனித்துவமாக பளிங்குக்கல் மற்றும் சுண்ணாம்புக் கல்லில் நுட்பமாக செதுக்கப்பட்ட கல் சவப்பெட்டிகள் காணப்படுகின்றன.[391] கல் சவப்பெட்டி புடைப்புச் சிற்பங்களாகவை "உரோமானிய உருவங்களின் செழிப்பான ஒற்றை ஆதாரங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.[392] இவை தொன்மவியல் நிகழ்வுகளையோ[393] அல்லது யூத/கிறித்தவ படங்களையோ[394], மேலும் இறந்தவர்களின் வாழ்வையும் சித்தரித்துள்ளன.
ஓவியம்
[தொகு]தொடக்க கால உரோமானிய ஓவியங்கள் இத்தாலிய எதுருசுக மற்றும் கிரேக்க மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. உரோமானிய ஓவியங்களின் எடுத்துக்காட்டுகள் அரண்மனைகள், பாதாள கல்லறைகள் மற்றும் வில்லாக்களில் காணப்படுகின்றன. உரோமானிய ஓவியம் குறித்து தற்போது அறியப்படுபவைகளில் பெரும்பாலானவை தனி நபர் வீடுகளின் உட்புற வேலைப்பாடுகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன. குறிப்பாக பொ. ஊ. 79இல் வெசுவியசு எரிமலை வெடித்த போது இவை பதனம் செய்யப்பட்டுள்ளன. வேலைப்பாடுடைய ஓரப் பகுதிகள், வடிவியல் கணித அல்லது தாவர வடிவங்களை உடைய பகுதிகளுடன் சுவரோவியங்களானவை தொன்மவியல் மற்றும் நாடக அரங்கு, இயற்கைக்காட்சிகள் மற்றும் தோட்டங்கள், வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் அன்றாட வாழ்விலிருந்து நிகழ்வுகளை சித்தரித்துள்ளன.
பளிங்குக்கல்
[தொகு]பளிங்குக்கல் வேலைப்பாடுகள் நீண்ட காலத்திற்கு நீடித்து இருந்த உரோமானிய அலங்கார கலைகளில் ஒன்றாக இருந்தது. இவை தரை மற்றும் பிற கட்டடக்கலை அம்சங்களில் காணப்படுகின்றன. இதில் மிக பொதுவானவையாக ஒன்றிணைக்கப்பட்ட பளிங்குக்கற்கள் இருந்தன. கல் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களின் சீரான துண்டுகள் (தெசரே) மூலம் இவை உருவாக்கப்பட்டன.[396] ஒரே மட்டமான கல்லை வடிவியல் கணித அல்லது படங்களின் அமைப்பை உருவாக்கும் வகையில் துல்லியமாக வெட்டி அதை வடிவங்கள் ஆக்கும் தொழில்நுட்பமானது ஒபுசு செக்திலே என்று அழைக்கப்படுகிறது. இதில் பொதுவாக பல வண்ண பளிங்குக்கற்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த மிகவும் கடினமான தொழில்நுட்பமானது குறிப்பாக 4ஆம் நூற்றாண்டில் சொகுசு தரைகளில் பயன்படுத்தப்படுவதற்கு பிரபலமானதாக இருந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக சூனியசு பாசுசுவின் பாசிலிகாவை குறிப்பிடலாம்.[397]
உருவப்படங்களையுடைய பளிங்குக்கற்கள் ஓவியங்களுடன் பல்வேறு கருத்துருக்களை பகிர்ந்து கொள்கின்றன. சில வேளைகளில் இவை கிட்டத்தட்ட அதே கூட்டமைவுகளை பயன்படுத்துகின்றன. பேரரசு முழுவதும் வடிவியல் கணித வடிவங்கள் மற்றும் தொன்மவியல் நிகழ்வுகள் இவ்வாறாக காணப்படுகின்றன. பளிங்குக்கற்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க செழிப்பான ஆதாரமாக இருந்த வடக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் தங்களது பண்ணைகள், வேட்டையாடுதல், விவசாயம் மற்றும் உள்ளூர் உயிரினங்களின் வாழ்வு குறித்த நிகழ்வுகளை பெரும்பாலும் சித்தரிப்புகளாகத் தேர்ந்தெடுத்தனர்.[395] உரோமானிய பளிங்குக் கற்களின் ஏராளமான மற்றும் முதன்மையான எடுத்துக்காட்டுக்கள் தற்கால துருக்கி (குறிப்பாக அந்தியோச் பளிங்குக்கற்கள்[398]), இத்தாலி, தெற்கு பிரான்சு, இசுப்பானியா மற்றும் போர்த்துகல் ஆகிய இடங்களிலிருந்தும் கூட கிடைக்கப்பெறுகின்றன.
அலங்காரக் கலைகள்
[தொகு]சொகுசு வாடிக்கையாளர்களுக்கான அலங்காரக் கலைகளில் நேர்த்தியான மட்பாண்டங்கள், வெள்ளி மற்றும் வெண்கல கொள்கலன்கள், மற்றும் செயற்கருவிகள், மற்றும் கண்ணாடி பொருட்கள் திகழ்ந்தன. பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக மட்பாண்டங்கள் செய்யும் தொழிலானது திகழ்ந்தது. இதே போலவே கண்ணாடி மற்றும் உலோக வேலைப்பாட்டு தொழில்களும் திகழ்ந்தன. இறக்குமதிகள் புதிய மாகாண உற்பத்தி மையங்களுக்கு தூண்டுதலாக அமைந்தன. 1ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் ஒரு முக்கியமான வணிக பொருளாக இருந்த நேர்த்தியான சிவப்பு மினுக்கு மட்பாண்டங்களின் (தெரா சிகில்லதா) ஒரு முன்னணி தயாரிப்பாளராக தெற்கு கௌல் பகுதி உருவானது.[399] குழாய்களின் மூலம் காற்றை ஊதி கண்ணாடி தயாரிக்கும் செயல்முறையானது பொ. ஊ. மு. 1ஆம் நூற்றாண்டில் சிரியாவில் தோன்றியது என உரோமானியர்களால் கருதப்பட்டது. பொ. ஊ. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் எகிப்து மற்றும் ரைன்லாந்து ஆகிய பகுதிகள் அவற்றின் நேர்த்தியான கண்ணாடி பொருட்களுக்காக அறியப்பட்டன.[400]
-
வெள்ளிக் கோப்பை, போசுகோரியல் பொக்கிஷங்களை சேர்ந்தது. ஆண்டு பொ. ஊ. தொடக்க 1ஆம் நூற்றாண்டு
-
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட கௌல்-உரோமானிய தெரா சிகில்லதா கிண்ணம்
-
இரத்தினக் கற்களையுடைய தங்க தோடுகள், ஆண்டு 3ஆம் நூற்றாண்டு
-
ரைன்லாந்தில் இருந்து பெறப்பட்ட கண்ணாடி கோப்பை, ஆண்டு 4ஆம் நூற்றாண்டு
காண் கலைகள்
[தொகு]கிரேக்கர்களிடமிருந்து பெறப்பட்ட உரோமானிய பாரம்பரியத்தில், இலக்கியம் சார்ந்த நாடக அரங்க கலைகள் முகமூடிகளை பயன்படுத்திய, அனைவரும் ஆண்களாக இருந்த குழுக்களால் நடத்தப்பட்டன. உணர்ச்சிகளை நடித்துக்காட்ட மிகைப்படுத்தப்பட்ட முக அசைவுகளை இவர்கள் செய்தனர். பெண் கதாபாத்திரங்கள் பெண்களின் உடையில் (திராவெசுதி) இருந்த ஆண்களால் நடிக்கப்பட்டது. செனீக்காவின் துன்பியல் நாடகங்களின் மூலம் இலத்தீன் இலக்கியத்தில் உரோமானிய இலக்கிய நாடக அரங்க பாரம்பரியமானது குறிப்பாக நன்முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.
இலக்கிய நாடக அரங்கை விட மிகவும் பிரபலமாக இருந்தது வகை சாராத மிமுசு நாடக அரங்கமாகும். ஒத்திகை இல்லாத வசனங்களுடன் சண்டைக்காட்சிகள் மற்றும் அரசியல் நையாண்டி ஆகியவற்றுடன் நடனம், ஒரே நேரத்தில் பல பந்துகளை காற்று வெளியில் இருக்குமாறு செய்யும் முறை, கழைக் கூத்து மற்றும் கயிறுகளில் நடத்தல் போன்றவற்றுடன் கதை எழுதப்பட்ட சூழ்நிலைகளை இவை கொண்டிருந்தன.[401] இலக்கிய நாடக அரங்கு போல் இல்லாமல் மிமுசு என்பது முகமூடி இல்லாமல் நடித்துக் காட்டப்பட்டது. இயற்கை வழுவா கோட்பாட்டு பாணியை ஊக்குவித்தது. பெண்களின் கதாபாத்திரங்கள் பெண்களால் நடித்துக் காட்டப்பட்டன.[402] பந்தோமிமுசு என்பது கதை நடனத்தின் ஒரு தொடக்க கால வடிவம் ஆகும். இதில் வசனங்கள் பேசப்படவில்லை. ஆனால் வரிகள் பாடப்பட்டன. இந்த வரிகள் பெரும்பாலும் தொன்மவியல் சார்ந்தவையாக இருந்தன. இவை சோக வகையாகவோ அல்லது நகைச்சுவையாகவோ இருந்தன. இந்த பந்தோமிமுசுவுடன் மிமுசு தொடர்புடையது ஆகும்.[403]
சில நேரங்களில் அயல்நாட்டிலிருந்து வந்தவை என்று கருதப்பட்டாலும் இசை மற்றும் நடனம் ஆகியவை உரோமில் தொடக்க காலங்களிலேயே இருந்தன.[404] இறுதிச்சடங்கின்போது இசையானது சம்பிரதாயத்திற்காக மீட்டப்பட்டது. பலியீடுகளின்போது ஒரு மரக் காற்று இசைக்கருவியான திபியா ஊதப்பட்டது.[405] கிட்டத்தட்ட அனைத்து சமூக நிகழ்வுகளிலும் பாடல் (கார்மன்) ஒன்றிணைந்த பகுதியாக இருந்தது. பிரபஞ்சத்தின் ஒழுங்கை இசையானது பிரதிபலிப்பதாக எண்ணப்பட்டது.[406] பல்வேறு மரக்காற்று மற்றும் பித்தளை இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. இது போலவே சித்தாரா மற்றும் தாளக் கருவிகள் போன்ற நரம்பு இசைக் கருவிகளும் மீட்டப்பட்டன.[405] கோர்னு என்பது ஒரு நீண்ட குழாய் உடைய உலோக காற்று இசைக்கருவியாகும். இது இராணுவ சமிக்ஞைகளுக்கும், அணிவகுப்பிலும் பயன்படுத்தப்பட்டது.[405] இந்த இசை கருவிகள் மாகாணங்கள் முழுவதும் பரவி இருந்தன. உரோமானிய கலையில் பரவலாக இவை சித்தரிக்கப்பட்டுள்ளன.[407] நீர்ம விசையாற்றலால் இயக்கப்பட்ட குழாய் இசைக்கருவி (ஐட்ராலிசு) என்பது "பண்டைக்காலத்தின் மிகுந்த முக்கியமான தொழில்நுட்ப மற்றும் இசை சாதனைகளில் ஒன்று" என்று குறிப்பிடப்படுகிறது. கிளாடியேட்டர் விளையாட்டுகள் மற்றும் ஆம்பிதியேட்டரில் நடைபெற்ற நிகழ்வுகளில் இது பயன்படுத்தப்பட்டது.[405] சில நேரங்களில் உரோமானியரல்லாதவராக அல்லது ஆண்களிடம் இல்லாத குணங்களை வெளிப்படுத்துவதாக சில நடனங்கள் கருதப்பட்டாலும், வழக்கொழிந்து போன உரோமானிய சமயச் சடங்குகளில் நடனமானது ஒன்றிணைந்ததாக இருந்தது.[408] பெரும் மகிழ்ச்சி நடனங்களானவை மர்ம சமயங்களின் ஓர் அம்சமாக இருந்தன. குறிப்பாக சைபில்[409] மற்றும் இசிசு வழிபாட்டு சமயங்களில் ஒரு அம்சமாக இவை இருந்தன. சமய சார்பற்ற முறையில் காணும் போது சிரியா மற்றும் இசுப்பெயினின் காதிசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நடன பெண்கள் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தனர்.[410]
கிளாடியேட்டர்களைப் போலவே பொழுதுபோக்கு கலைஞர்களும் சட்டபூர்வமாக இன்பேமியர் என்று குறிப்பிடப்பட்டனர். நுட்பமாக இவர்கள் சுதந்திரமானவர்கள், ஆனால் அடிமைகளைவிட சற்று தான் உயர்ந்தவர்களாவர். எனினும், "நட்சத்திரங்கள்" என்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு செல்வம் மற்றும் பெயரை அனுபவித்தனர். சமூக ரீதியாக உயர்குடியினருடன் கலந்து காணப்பட்டனர்.[411] கலைஞர்கள் சங்கங்களை அமைத்து அதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்து கொண்டனர். நாடக அரங்கு உறுப்பினர்களுக்கான ஏராளமான நினைவுச்சின்னங்கள் தற்போதும் எஞ்சியுள்ளன.[412] பிந்தைய பேரரசில் கிறித்தவ தன்விளக்கத்தவர்களால் நாடக அரங்கு மற்றும் நடனம் ஆகியவை அடிக்கடி கண்டிக்கப்பட்டன.[404][413]
எழுத்தறிவு, நூல்கள் மற்றும் கல்வி
[தொகு]மதிப்பீடுகளின்படி சராசரி எழுத்தறிவானது 5% முதல் 30%க்கும் சற்றே அதிகமாக இருந்தது.[414][415][416] எழுதப்பட்ட சொல் மீது கொடுக்கப்பட்ட மதிப்பை ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் மீது உரோமானியர்கள் கொண்ட கவனம் காட்டுகிறது.[417][418][w] வாசிக்கப்பட்டதோடு சட்டங்கள் மற்றும் ஆணைகள் எழுதவும் பட்டன. தங்களுடைய அலுவல்பூர்வ ஆவணங்களை தங்களுக்காக எழுதவோ அல்லது படிக்கவோ கல்வியறிவற்ற உரோமானிய குடிமக்கள் ஓர் அரசாங்க எழுத்தரை (இசுகிரிபா) பயன்படுத்த முடியும்.[415][420] இராணுவமானது விரிவான எழுதப்பட்ட பதிவுகளை உற்பத்தி செய்தது.[421] இது தல்மூத்தில் "அனைத்துக் கடல்களும் மையானாலும், அனைத்து நாணல்களும் பேனாவானாலும், அனைத்து வானங்களும் வரை தோலானாலும் மற்றும் அனைத்து மனிதர்களும் எழுத்தர்களானாலும் உரோமானிய அரசாங்கத்தின் கவனங்களின் முழு கருதுபொருள் பரப்பெல்லையை அவர்களால் எழுதி வைக்க இயலாது" என்று வேடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.[422]
கணித அறிவு வணிகத்திற்கு தேவையானதாக இருந்தது.[418][423] அடிமைகள் கணித அறிவு மற்றும் கல்வி அறிவுடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தனர். சிலர் மிகுந்த கல்வியறிவு பெற்றிருந்தனர்.[424] எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகளுடன் கூடிய சுவர் எழுத்துக்கள் மற்றும் தரம் குறைவான கல்வெட்டுகள் உயர்குடியினர் அல்லாதவர் மத்தியில் மேம்போக்கான கல்வியறிவு இருந்ததைக் காட்டுகின்றன.[425][x][72]
உரோமானியர்கள் ஒரு விரிவான பூசாரி சார்ந்த ஆவண காப்பகத்தை கொண்டிருந்தனர். சாதாரண மக்களின் வேண்டுதல் அர்ப்பணிப்புக்களுடன் தொடர்புடைய கல்வெட்டுகள் பேரரசு முழுவதும் காணப்படுகின்றன. மந்திரச் சொற்களும் இவ்வாறாக காணப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக கிரேக்க மந்திர பாபிரி காகிதங்களை குறிப்பிடலாம்.[426]
நூல்கள் அதிக விலையுடையவையாக இருந்தன. ஏனெனில் ஒவ்வொரு நகலும் பாபிரசு காகித சுற்றுகளில் (வேல்யூமன்) எழுத்தர்களால் எழுதப்படவேண்டி இருந்தது.[427] ஒரு முதுகெலும்பு போன்ற அமைப்புடன் இணைக்கப்பட்ட பகுதிகளான கோடக்சு என்பவை 1ஆம் நூற்றாண்டில் ஒரு புதுமையாகவே திகழ்ந்தன.[428] ஆனால் 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவை வேல்யூமன்களை இடமாற்றம் செய்தன.[429] வணிக ரீதியிலான நூல் உற்பத்தியானது பிந்தைய குடியரசு காலத்தில் நிறுவப்பட்டது.[430] 3ஆம் நூற்றாண்டின் வாக்கில் ரோம் மற்றும் மேற்கு மாகாண நகரங்களின் சில புறநகர் பகுதிகள் அவற்றின் புத்தக விற்பனை நிலையங்களுக்காக அறியப்பட்டன.[431] நூல்களைத் தொகுப்பதன் தரமானது பல வாறாக வேறுபட்டது.[432] பதிப்புரிமை குறித்த எந்த சட்டங்களும் இல்லாததால் கருத்துத் திருட்டு மற்றும் போலி நூல்களும் பொதுவானவையாக இருந்தன.[430]
நூல் சேகரிப்பாளர்கள் தனிநபர் நூலகங்களில் நூல்களை பெருந்திரளாக திரட்டினர்.[433] ஒரு நேர்த்தியான நூலகமானது ஓய்வு நேரத்தின் (ஒதியம்) ஒரு பகுதியாக இருந்தது. இது வில்லா வாழ்க்கை முறையுடன் தொடர்புடையதாக இருந்தது.[434] குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சேகரிப்புகள் "வீட்டு" அறிஞர்களை ஈர்க்கலாம்.[435] கோமும் நகரத்திற்கு இளைய பிளினி வழங்கியதைப் போல, தனிநபராக ஆதாயம் பெற்றவர்கள் ஒரு சமூகத்திற்கு ஒரு நூலகத்தை நன்கொடையாக வழங்கலாம்.[436] ஏகாதிபத்திய நூலகங்கள் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே திறந்திருந்தன. இவை இலக்கிய திருமுறையை பிரதிநிதித்துவப்படுத்தின.[437] அரசியல் அல்லது சமய அமைப்புகளுக்கு எதிரானவை என்று கருதப்பட்ட நூல்கள் பொது இடத்தில் எரிக்கப்படலாம்.[438] தேச துரோகமாக கருதப்பட்ட நூல்களை மீண்டும் உற்பத்தி செய்த நகல் எடுப்பாளர்களை பேரரசர் தொமிதியன் சிலுவையில் அறைந்தார்.[439]
இலக்கிய நூல்கள் அடிக்கடி உணவு உண்ணும் போதோ அல்லது வாசிப்பு குழுக்களுடனோ சத்தமாக வாசிக்கப்பட்டன.[440] பொது இடத்தில் வாசிக்கப்படுபவை (ரெசிட்டேசனேசு) 1ஆம் நூற்றாண்டு முதல் 3ஆம் நூற்றாண்டு வரையில் விரிவடைந்தன. பொழுது போக்கிற்காக "வாடிக்கையாளர் இலக்கியம்" வளர்ச்சி அடைவதற்கு இது வழிவகுத்தது.[441] படங்களையுடைய நூல்கள் பிரபலமானவையாக இருந்தன. ஆனால் தற்போது எஞ்சிய நூல் துண்டுகளில் இவை அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன.[442]
பொ. ஊ. 235ஆம் ஆண்டு பேரரசர் செவேரசு அலெக்சாந்தரை அவரது சொந்தத் துருப்புக்களே கொன்றனர்.[443] இது 3ஆம் நூற்றாண்டின் பிரச்சினை எனும் நிகழ்வு ஏற்படுவதற்கு வழி வகுத்தது.[444] இப்பிரச்சினையின் போது கல்வியானது வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பேரரசர் சூலியன் கிறித்தவர்களை பாரம்பரிய பாடப்பிரிவுத் தொகுப்புகளை பயிற்றுவிப்பதில் இருந்து தடை செய்தார். ஆனால் திருச்சபை தந்தையரும், பிற கிறித்தவர்களும் இலத்தீன் மற்றும் கிரேக்க இலக்கியம், தத்துவம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை விவிலிய புரிதலில் பின்பற்றினர்.[445] மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சி அடைந்த போது திருச்சபையைச் சார்ந்தவர்கள் கூட வாசிக்கும் பழக்கம் அற்றவர்களாக அரிதாகினர்.[446] எனினும் கல்வியறிவானது பைசாந்தியப் பேரரசில் தொடர்ந்தது.[447]
கல்வி
[தொகு]பாரம்பரிய உரோமானிய கல்வியானது நன்னெறி மற்றும் செயல்முறை சார்ந்ததாக இருந்தது. கதைகள் உரோமானிய நன்னெறிக் கோட்பாடுகளை (மோரெசு மையோரும்) மனதில் கொள்ளுமாறு செய்வதற்காக எழுதப்பட்டன. பெற்றோர் ஒரு முன்மாதிரியான நபர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பணி செய்யும் பெற்றோர் தங்களது திறமைகளை தங்களது குழந்தைகளுக்கு வழங்கினர். இக்குழந்தைகளுக்கு பணி பயிற்சி காலங்களும் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது[449]. இளம் குழந்தைகளை ஒரு பெதகோகு கவனித்துக் கொண்டனர். இவர்கள் ஒரு கிரேக்க அடிமையாகவோ அல்லது முன்னாள் அடிமையாகவோ இருந்தனர்.[450] குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருத்தல், சுயக் கட்டுப்பாடுகளை கற்றுக் கொடுத்தல் மற்றும் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை கற்றுக் கொடுத்தல், வகுப்பறைகளுக்கு செல்லுதல் மற்றும் தனி முறை பயிற்சியிலும் உதவி புரிந்தனர்.[451]
தங்களால் கட்டணம் செலுத்த இயன்ற குடும்பங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ கல்வியானது கிடைக்கப்பெற்றது. அரசின் ஆதரவு இல்லாமல் இருந்த நிலையானது குறைவான கல்வியறிவுக்கு காரணமானது.[452] தொடக்க கல்வியில் படித்தல், எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவை பெற்றோர்கள் ஓர் ஆசிரியரை பணிக்கு அமர்த்தினாலோ அல்லது வாங்கினாலோ வீட்டில் பயிற்றுவிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது.[453] பெற்றோர்களால் கட்டணம் பெற்ற ஒரு தலைமை ஆசிரியரால் (லுதிமாஜிஸ்டர்) ஒருங்கிணைக்கப்பட்ட பொது பள்ளிகளுக்கு பிறகு குழந்தைகள் செல்லலாம் என்ற நிலை இருந்தது.[454] அடிமைகளின் வீட்டில் பிறந்த குழந்தைகள் (வெர்னே) வீடு அல்லது பொதுப் பள்ளியை பகிர்ந்து கொள்ளும் நிலை இருந்தது.[455] சிறுவர்களும், சிறுமியரும் தொடக்க கல்வியை பொதுவாக 7 முதல் 12 வயதுக்குள் பெற்றனர். ஆனால் வகுப்பறைகள் வகுப்பு அல்லது வயதின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை.[456] பெரும்பாலான பள்ளிகள் குழந்தைகளை கண்டிப்பதற்கு அடி கொடுக்கும் முறையை பின்பற்றின.[457] சமூக ரீதியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உடையோருக்கு கிரேக்கம் மற்றும் இலத்தீன் ஆகிய இரு மொழிகளிலுமான கல்வியானது தேவையானதாக இருந்தது.[458] பேரரசு காலத்தின்போது பள்ளிகள் ஏராளமான எண்ணிக்கையில் உருவாயின. இது கல்வி பெறும் வாய்ப்பை அதிகரித்தது.[458]
மேல்தட்டு ஆண்கள் தங்களது 14ஆம் வயதில் ஒரு மூத்த குடும்ப உறுப்பினர் அல்லது குடும்ப நண்பரின் வழிகாட்டுதலின் மூலமாக தலைமைத்துவ பதவிகள் குறித்து கற்கத் தொடங்கினர்.[459] உயர்கல்வியானது கிராமதிசி அல்லது சொல்லாட்சி கலைஞர்களால் கொடுக்கப்பட்டது.[460] கிராமதிகசு அல்லது "இலக்கண ஆசிரியர்" பொதுவாக கிரேக்கம் மற்றும் இலத்தீன் இலக்கியத்தை பயிற்று வித்தார். வரலாறு, புவியியல், தத்துவம் அல்லது கணிதம் ஆகியவை நூல் விளக்கங்களாக கருதப்பட்டன.[461] அகத்தசின் எழுச்சியுடன் சமகால எழுத்தாளர்களான விர்ஜில் மற்றும் லிவி ஆகியோரின் நூல்கள் பாடப் பிரிவின் ஒரு பகுதிகளாயின.[462] சொல்லாட்சிக் கலைஞர் என்பவர் சொற் பொழிவு அல்லது மேடைப்பேச்சை பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியர் ஆவார். பேச்சு கலையானது (ஆர்சு திசேந்தி) பெரும் பேறு பெற்றிருந்தது. பேச்சாற்றலானது (எலோக்குயேந்தியா) நாகரிகமடைந்த சமூகத்தின் "பசை" என்று கருதப்பட்டது.[463] இலக்கிய திருமுறை குறித்து அத்துப்படியாக இருக்க வேண்டிய தேவை இருந்த போதிலும்[464], சொல்லாட்சிக் கலையானது ஓர் அறிவாக பெரும்பாலும் கருதப்படவில்லை. சக்தி கொண்டவர்களை பிரித்துக் காட்டிய ஒரு வகை உணர்ச்சியாக இது கருதப்பட்டது.[465] சொல்லாட்சி பயிற்சியின் பண்டைக்கால மாதிரியானது -"அமைதியான பண்பு, அழுத்தத்தின் கீழும் அமைதியாக இருத்தல், தன்னடக்கம் மற்றும் நல்ல நகைச்சுவை பண்பு"[466]-18ஆம் நூற்றாண்டு வரையிலும் ஒரு மேற்கத்திய கல்வி கொள்கையாக நீடித்திருந்தது.[467]
இலத்தீன் மொழியில் இல்லித்தரேதுசு என்ற சொல்லுக்கு "எழுதப் படிக்கத் தெரியாமை" மற்றும் "பண்பாட்டு கவனம் அல்லது நாகரிகம் அற்ற தன்மை" என்று இரு விதமான பொருட்களும் உண்டு.[468] உயர்கல்வியானது தொழில் ரீதியான முன்னேற்றத்தை ஊக்குவித்தது.[469] பேரரசு முழுவதும் இருந்த நகர்ப்புற உயர்குடியினர் கிரேக்க கல்வி கோட்பாடுகளால் (பைதேயியா) ஊக்குவிக்கப்பட்ட ஓர் இலக்கிய பண்பாட்டை பகிர்ந்து கொண்டனர்.[470] பண்பாட்டுச் சாதனைகளை வெளிக்காட்டுவதற்காக எலனிய நகரங்கள் உயிர் கல்வி பள்ளிகளுக்கு ஆதரவளித்தன.[471] சொல்லாட்சிக் கலை மற்றும் தத்துவம் ஆகியவற்றை கற்பதற்காக உரோமானிய இளைஞர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றனர். பெரும்பாலும் ஏதென்சுக்கு சென்றனர். கிழக்கில் இருந்த பாடப்பிரிவுகளானவை இசை மற்றும் உடற்பயிற்சியையும் பெரும்பாலும் உள்ளடக்கி இருக்க வாய்ப்பிருந்துள்ளது.[472] எலனிய மாதிரியில் பேரரசர் வெசுபாசியன் இலக்கணம், இலத்தீன் மற்றும் கிரேக்க சொல்லாட்சிக் கலை ஆகிய இருக்கைகளுக்கு நன்கொடை வழங்கினார். உரோமில் தத்துவ கல்விக்கு நன்கொடை வழங்கினார். மேல்நிலை கல்வி ஆசிரியர்களுக்கு வரிகளிலிருந்து சிறப்பு விலக்குகளும், சட்டபூர்வ அபராதங்களில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டது.[473] கிழக்கு பேரரசில் பெரிதுசு (தற்கால பெய்ரூத்) இலத்தீன் கல்வியை கொடுக்கும் ஒரு வழக்கத்திற்கு மாறான நகரமாக உருவானது. உரோமானிய சட்டம் குறித்த தன் பள்ளிக்காக இது பிரபலமானதாக இருந்தது.[474] இரண்டாம் நாகரிக காலம் (பொ. ஊ. 1ஆம் முதல் 3ஆம் நூற்றாண்டு) என்று அறியப்பட்ட பண்பாட்டு இயக்கமானது கிரேக்க மற்றும் உரோமானிய சமூகம், கல்வி மற்றும் அழகியல் கோட்பாடுகளை ஒன்றிணைப்பதை ஊக்குவித்தது.[475]
கல்வியறிவு பெற்ற பெண்கள் பண்பாடுடைய உயர்குடியினர் முதல், வனப்பெழுத்தர் மற்றும் எழுத்தர்களாக பயிற்சி பெற்றவர்கள் வரை இருந்தனர்.[476][477] செனட் சபை மற்றும் குதிரை வரிசை உறுப்பினர்களின் மகள்கள் பொதுவாக கல்வியறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது.[455] சமூக ரீதியாக முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒரு வீட்டில் ஒரு கல்வியறிவு பெற்ற மனைவி ஒரு சொத்தாக இருந்தார்.[476]
இலக்கியம்
[தொகு]அகத்தசுக்கு கீழான இலக்கியமானது குடியரசு கால இலக்கியத்துடன் சேர்த்து இலத்தீன் இலக்கியத்தின் "பொற்காலம்" என்று கருதப்படுகிறது. இவை பாரம்பரிய நன்னெறி கோட்பாடுகளை எடுத்துக்காட்டாக கொண்டிருந்தன.[478] பாரம்பரிய கால இலத்தீன் கவிஞர்களில் மூவர் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாக கருதப்படுகின்றனர். அவர்கள் வேர்ஜில், ஓராசு, மற்றும் ஆவிட் ஆகியோர் ஆவர். இந்த மூவருமே இக்காலத்தைச் சேர்ந்தவர்களாவர். வேர்ஜிலின் அயேனெய்து ஒரு தேசிய இதிகாசமாக கிரேக்கத்தின் ஓமரின் இதிகாசங்களுடன் ஒத்து கருதப்பட்டது. கிரேக்க மீட்டர் வரிகளை இலத்தீன் கவிதையில் பயன்படுத்துவதை ஓராசு குறைபாடற்றதாக ஆக்கினார். ஆவிடின் மெட்டாமார்போசசுவானது கிரேக்க-உரோமானிய தொன்மவியலை ஒன்றாக நெய்தது. பிந்தைய பாரம்பரிய தொன்மவியலுக்கு ஒரு முதன்மையான ஆதாரமாக இவரது பாணி கிரேக்கத் தொன்மவியல் கதைகள் உருவாயின. நடுக்கால இலக்கியம் மீது இவரது நூல்கள் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தின.[479] இலத்தீன் எழுத்தாளர்கள் கிரேக்க இலக்கிய பாரம்பரியங்களில் மூழ்கி இருந்தனர். அதன் வடிவங்கள் மற்றும் உள்ளடக்கங்களை பின்பற்றினர். ஆனால் அங்கதத்தை உரோமானியர்கள் தாங்கள் கிரேக்கர்களை விட முன்னணியில் இருந்த ஒரு வகையாக கருதினர். பிரின்சிபேத்து எனப்படும் தொடக்க கால உரோமானிய பேரரசர்களின் ஆட்சி காலமானது பெர்சியசு மற்றும் சுவேனல் போன்ற அங்கத எழுத்தாளர்களை உருவாக்கியது.
1ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 2ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான காலமானது இலத்தீன் இலக்கியத்தின் "வெள்ளிக் காலம்" என்று இயல்பாக அழைக்கப்படுகிறது. நீரோவின் எரிச்சலை பெற்ற பிறகு மூன்று முன்னணி எழுத்தாளர்களான செனீக்கா, லுகான், மற்றும் பெத்ரோனியசு ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். மணிச் செறிவான கவிஞரும், சமூக பார்வையாளருமான மார்தியல் மற்றும் இதிகாசக் கவிஞரான இசுதேதியசு ஆகியோர் தோமிதியனின் ஆட்சிக்காலத்தின்போது எழுதினர். இசுதேதியசின் கவிதைத் தொகுப்பான சில்வே மறுமலர்ச்சி கால இலக்கியத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.[480] வெள்ளிக் காலத்தின் பிற எழுத்தாளர்களாக கலைக்களஞ்சியமான இயற்கை வரலாற்றை எழுதிய இளைய பிளினி மற்றும் வரலாற்றாளர் தசிதுசு ஆகியோரை குறிப்பிடலாம். இதில் இளைய பிளினி என்பவர் மூத்த பிளினியின் உடன் பிறப்பின் மகனாவார்.
அகத்தசு காலத்தைச் சேர்ந்த, முதன்மையான இலத்தீன் உரைநடையில் எழுதிய எழுத்தாளராக வரலாற்றாளர் லிவி திகழ்ந்தார். உரோம் நிறுவப்பட்டது குறித்து இவர் எழுதியது நவீன சகாப்த இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் மிகவும் பரிச்சயமான ஒரு தலுவலாக இருந்தது. கிரேக்கத்தில் எழுதிய பிற ஏகாதிபத்திய வரலாற்றாளர்களில் கலிகர்னசுசுவின் தியோனைசியசு, ஜொசிஃபஸ் மற்றும் காசியசு தியோ ஆகியோர் அடங்குவர். பேரரசின் பிற முக்கியமான கிரேக்க எழுத்தாளர்களாக சுயசரிதையாளர் புளூட்டாக், புவியிலாளர் இசுட்ராபோ மற்றும், சொல்லாட்சிக் கலைஞரும், அங்கத எழுத்தாளருமான லூசியன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். சுவேதோனியசின் 12 சீசர்கள் என்று நூல் ஏகாதிபத்திய சுயசரிதையின் ஒரு முதன்மையான ஆதாரமாக இன்றும் திகழ்கிறது.
2 முதல் 4ஆம் நூற்றாண்டுகள் வரை பாரம்பரிய மரபுடன் செயல் முனைப்புடன் கூடிய பேச்சுவார்த்தையை கிறித்தவ எழுத்தாளர்கள் கொண்டிருந்தனர். ஒரு தனித்துவமான கிறித்தவ குரலைக் கொண்டிருந்த தொடக்க கால வசன எழுத்தாளர்களில் தெர்துல்லியன் ஒருவராகத் திகழ்ந்தார். கான்சுடன்டைன் கிறித்தவ மதத்திற்கு மாறியதற்குப் பிறகு இலத்தீன் இலக்கியமானது கிறித்தவ பார்வையின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.[481] பிந்தைய 4ஆம் நூற்றாண்டில் ஜெரோம் விவிலியத்தின் இலத்தீன் மொழி பெயர்ப்பை வெளியிட்டார். விவிலியத்தின் முதன்மையான இலத்தீன் பதிப்பான உள்கேட்டை போல இது அதிகாரம் பெற்றதாக உருவாகியது. ஹிப்போவின் அகஸ்டீன் தன் புறச் சமய சார்புடையவர்களுக்கு எதிரான கடவுளின் நகரம் எனும் நூலில் அழிவற்ற, ஆன்மிக உரோமுக்கான தன்னுடைய பார்வையை கட்டமைத்துள்ளார். வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பேரரசைக் காட்டிலும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு புதிய இம்பிரியம் சைன் பைன் என்ற பார்வையை இதில் முன்வைத்தார்.
ஒற்றுமையான பாரம்பரிய இலத்தீனுக்கு மாறாக பிந்தைய பண்டைக்காலத்தின் இலக்கிய அழகியலானது தரைபாவுமை தரத்தைக் கொண்டிருந்தது[482]. கிறித்தவ மேலாட்சிக்கு முந்தைய உரோமின் சமய பாரம்பரியங்கள் குறித்து ஒரு தொடர்ந்த ஆர்வமானது 5ஆம் நூற்றாண்டு வரையிலும் காணப்படுகிறது. மக்ரோபியசின் சாட்டர்னாலியா மற்றும் மார்தியனசு கபெல்லாவின் மொழியியல் மற்றும் மெர்குரியின் திருமணம் ஆகியவை இதை வெளிப்படுத்துகின்றன. பிந்தைய பண்டைக்காலத்தின் முதன்மையான இலத்தீன் கவிஞர்களாக ஔசோனியசு, புருதெந்தியசு, கிளாடியன் மற்றும் சிதோனியசு அபோலினரிசு ஆகியோர் திகழ்ந்தனர்.
சமயம்
[தொகு]உரோமானியர்கள் தங்களைத் தாமே அதிகப்படியாக சமய ஈடுபாடு உடையவர்களாக எண்ணினர். தங்களுடைய ஒட்டு மொத்த பக்தி (பியேதசு) மற்றும் கடவுள்களுடனான நல்ல உறவு முறையே (பாக்ஸ் தியோரும்) தங்களது வெற்றிக்கு பங்காற்றியதாக கருதினர். உரோமின் தொடக்ககால மன்னர்களிடம் இருந்து வந்ததாக நம்பப்பட்ட வழக்கொழிந்து போன சமயமே மோசு மையோரும் ("மூதாதையர்களின் வழி") என்பதன் அடித்தளமாக இருந்தது. மோசு மையோரும் உரோமானிய அடையாளத்தின் மையமாக இருந்தது.[483] பொது அலுவலகத்தை சேர்ந்த அதே மனிதர்களால் அரசு சமயத்தின் பூசாரிகள் நிரப்பப்பட்டனர். பண்டைக் காலத்தில் பூசாரிகளின் கல்லூரியின் தலைவரான பாண்டிபெக்சு மேக்சிமசே பேரரசராகவும் இருந்தார்.
உரோமானிய சமயமானது நடைமுறைக்குரியதாகவும், ஒப்பந்தம் சார்ந்ததாகவும் இருந்தது. தோ உத் தேசு ("நீயும் கொடுக்கலாம் என்பதால் நான் கொடுக்கிறேன்") என்ற நியதியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கடவுளின் இயல்பு மீது இலத்தீன் இலக்கியமானது கற்றறிந்த அனுமானத்தை கொண்டிருந்த போதிலும் அறிவு, மற்றும் பிரார்த்தனை, சடங்கு மற்றும் பலியீடு ஆகியவற்றின் சரியான கடைபிடிப்பை சமயமானது சார்ந்திருந்தது. நம்பிக்கை அல்லது கோட்பாட்டை சார்ந்திருக்கவில்லை. சாதாரண உரோமானியர்களுக்கு சமயமானது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகும்.[484] குடும்பத்தின் வீட்டு தெய்வங்களுக்கு பிரார்த்தனைகளையும், தீர்த்தம் தெளித்தலுக்காகவும் வீட்டிலேயே சன்னிதிகளை ஒவ்வொரு வீடும் கொண்டிருந்தது. நகரம் முழுவதும் நீரூற்றுகள் மற்றும் தோப்புகள் போன்ற நகர்ப்புற சன்னிதிகளும், புனித இடங்களும் இருந்தன. சமய கடைபிடிப்புகளை சுற்றித் தான் உரோமானிய நாட்காட்டியானது கட்டமைக்கப்பட்டிருந்தது. 135 நாட்கள் வரையிலும் கூட சமய விழாக்கள் மற்றும் விளையாட்டுகள் (லுதி) ஆகியவற்றுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்தன.[485]
குடியரசின் வீழ்ச்சியை தொடர்ந்து அரசு சமயமானது புதிய அரசுக்கு ஆதரவளிப்பதற்காக மாறிக் கொண்டது. சமய மீட்டெடுப்பு மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றின் ஒரு பரந்த திட்டமாக ஒருவர் ஆட்சியை அகத்தசு நியாயப்படுத்தினார். இக்காலத்தில் பொது மக்களின் வேண்டுதல்கள் பேரரசரின் நலனை நோக்கி வேண்டப்பட்டன. பேரரசர் வழிபாடு என்று அழைக்கப்பட்ட முறையானது ஒரு பரந்த அளவில் விரிவடைந்தது. பாரம்பரியமாக இறந்த மூதாதையர்களை வழிபடுதல் மற்றும் ஒரு மனிதனின் அகத்தை வழிபடுதல், ஒவ்வொரு தனி நபரின் தெய்வீக காவல் தெய்வத்தை வழிபடுதல் ஆகியவற்றுக்கு சமமானதாக இருந்தது. ஒரு பேரரசர் இறக்கும் போது செனட் சபையின் வாக்களிப்பை அடிப்படையாக கொண்டு அவர் ஓர் அரசு தெய்வமாக (திவுசு) மாற்றப்படலாம். உரோமானிய ஏகாதிபத்திய வழிபாடானது எலனிய ஆட்சியாளர் வழிபாட்டால் தாக்கம் கொண்டிருந்தது. மாகாணங்களில் அதன் இருப்பை விளம்பரப்படுத்துவதற்கும், பகிர்ந்து கொண்ட பண்பாட்டு அடையாளத்தை பெறுவதற்கும் உரோம் பயன்படுத்திய முக்கியமான வழிகளில் உரோமானிய ஏகாதிபத்திய வழிபாட்டு முறையும் ஒன்றானது. கிழக்கு மாகாணங்களில் பண்பாட்டு முன்னுதாரணமானது ஏகாதிபத்திய வழிபாட்டு முறை வேகமாக பரவுவதை எளிதாக்கியது. இந்த வழிபாட்டு முறையானது தற்கால சவூதி அரேபியாவின் நஜ்ரான் பகுதி வரை விரிவடைந்திருந்தது.[y] அரசு சமயத்தை நிராகரிப்பது என்பது தேச துரோகத்துக்கு ஒப்பானதாக கருதப்பட்டது. கிறித்தவத்துடனான உரோமின் சண்டைகளுக்கு இதுவே வாய்ப்பாக அமைந்தது. கிறித்தவத்தை உரோமானியர்கள் நாத்திகம் மற்றும் மூடநம்பிக்கை ஆகியவற்றின் ஒரு வடிவம் என்று பலவாறாக கருதினர்.
உரோமானியர்கள் அவர்கள் மதிப்பளித்த ஏராளமான எண்ணிக்கையிலான தெய்வங்களுக்காக அறியப்படுகின்றனர். தங்களது நிலப்பரப்புகளை உரோமானியர்கள் விரிவாக்கம் செய்த போது அங்குள்ள உள்ளூர் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை ஒழிக்காமல்,[z] அவற்றைப் பின்பற்றி பலவாரான மக்களுக்கு மத்தியில் நிலைத்தன்மையை ஊக்குவிப்பது, உரோமானிய சமயத்திற்குள் உள்ளூர் இறையியலை பொருத்திய கோயில்களை கட்டுவது போன்றவை இவர்களது பொதுவான கொள்கையாக இருந்தது. உள்ளூர் மற்றும் உரோமானிய தெய்வங்களின் வழிபாடானது ஒன்றுக்கு பக்கவாட்டில் மற்றொன்று நடைபெற்றதை பேரரசு முழுவதும் காணப்படும் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. உள்ளூர் தெய்வங்களுக்கு உரோமானியர்கள் செய்த அர்ப்பணிப்புகளும் இதில் அடங்கும்.[487] பேரரசின் உச்சநிலையின்போது ஏராளமான உரோமானிய தெய்வங்களுடன் அடையாளப்படுத்தப்பட்ட உள்ளூர் தெய்வங்கள் காணப்பட்டன. இதில் சைபீல், இசிசு, எபோனா மற்றும் சூரிய கடவுள்களான மித்ரசு மற்றும் சோல் இன்விக்தசு ஆகியவற்றின் வழிபாட்டு முறைகளும் அடங்கும். இத்தெய்வங்கள் வடக்கே உரோமானிய பிரித்தானியா வரை காணப்பட்டன. ஒரே கடவுள் அல்லது வழிபாட்டு முறைக்கு மட்டுமே மதிப்பளிக்க வேண்டும் என்ற கடமையை உரோமானியர்கள் என்றுமே கொண்டிராததால் சமய சகிப்புத்தன்மை என்பது இவர்களுக்கு கடினமானதாக இல்லை.[488]
மர்ம சமயங்கள் இறப்புக்கு பின்னர் பாவ விமோசனத்தை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்புகளை அளிப்பதாக கூறின. இவை தனிப்பட்ட விருப்பத்தேர்வுகளாக இருந்தன. ஒருவரின் குடும்பச் சடங்குகள் மற்றும் பொது சமயத்துடன் கூடுதலாக இவை பின்பற்றப்பட்டன. எனினும் இச்சமயங்கள் தனியான உறுதிமொழிகள் மற்றும் இரகசியங்களை கொண்டிருந்தன. இதை பழமை வாத உரோமானியர்கள் "மந்திரம்", கூட்டுச்சதி (கோனியூராசியோ) மற்றும் அரசு/சமயத்திற்கு எதிரான செயல்பாடுகளின் பண்பாக சந்தேகத்துடன் பார்த்தனர். இவ்வாறாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மற்றும் சில நேரங்களில் மிருகத் தனமான முயற்சிகள் இத்தகைய சமயத்தவர்களை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டன. கெளல் பகுதியில் துருயித் சமயத்தினரின் சக்தியானது கண்காணிக்கப்பட்டு வந்தது. இதை சேர்ந்த உரோமானிய குடிமக்களை முதலில் தடைசெய்தும், பிறகு சமயத்தையே முழுவதுமாக தடை செய்ததன் மூலமும் இவ்வாறாக கண்காணிக்கப்பட்டது. எனினும் செல்திக் சமயங்கள் ஏகாதிபத்திய இறையியலின் பார்வையில் மீண்டும் மறு வடிவம் செய்யப்பட்டன. ஒரு புதிய கெளல்-உரோமானிய சமயமானது ஒன்றிணைந்து உருவானது. மூன்று கௌல்களின் சரணாலயம் என்னுமிடத்தில் இதன் தலைநகரமானது நிறுவப்பட்டது. உரோமானிய மாகாண அடையாளத்தின் ஒரு வடிவமாக மேற்கத்திய வழிபாட்டு முறை நிறுவப்படுவதற்கு முன்னோடியாக இது இருந்தது.[489]
யூதத்தின் ஒரே கடவுள் என்ற ஒழுங்கு முறையானது உரோமானிய கொள்கைக்கு சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. சில நேரங்களில் சமரசம் செய்தல் மற்றும் சிறப்பு விலக்குகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு வழி வகுத்தது. தெர்துல்லியன் குறிப்பிட்டுள்ள படி கிறித்தவத்தைப் போலல்லாமல் யூதமானது ஒரு ரிலீஜியோ லிசித்தா ("முறையான சமயம்") என்று கருதப்பட்டது. அரசியல் மற்றும் சமயச் சண்டைகள் யூத-உரோமைப் போர்கள் நடைபெறுவதற்கு வழி வகுத்தன. பொ. ஊ. 70இல் எருசேலம் முற்றுகையிடப்பட்டதானது யூத கோயில் சூறையாடப்படுவதற்கும், யூத அரசியல் சக்தி சிதறுண்டு போவதற்கும் வழி வகுத்தது.
உரோமானிய சுதேயவில் கிறித்தவமானது 1ஆம் நூற்றாண்டில் ஒரு யூத சமயப் பிரிவாக உருவாகியது. படிப்படியாக எருசேலத்தில் இருந்து பேரரசு முழுவதும் மற்றும் அதை தாண்டியும் விரிவடைந்தது. ஏகாதிபத்திய அரசாங்கத்தால் அனுமதியளிக்கப்பட்ட கிறித்தவர்களை கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் வரம்புடனும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. கிறித்தவர்கள் கொல்லப்படும் நிகழ்வானது உள்ளூர் அதிகாரிகளின் அதிகாரத்திற்கு கீழ் பெரும்பாலும் நடைபெற்றன.[490] பொ. ஊ. 64இல் உரோமின் பெரும் தீ விபத்துக்குப் பிறகு பேரரசர் தன் மீதான பழியை கிறித்தவர்கள் மீது சுமத்த முயற்சித்தார் என்று தசிதசு குறிப்பிடுகிறார்.[491] ஒரு முக்கியமான கொடுமைப்படுத்தும் நிகழ்வானது பேரரசர் தோமிதியனுக்குக் கீழ் நடைபெற்றது.[492] கெளல்-உரோமானிய சமய தலைநகரான லுக்துனுமில் பொ. ஊ. 177இல் ஒரு கொடுமைப்படுத்துதல் நடைபெற்றது. பித்தினியாவின் ஆளுநரான இளைய பிளினியின் ஒரு மடலில் அவர் கிறித்தவர்களை கொடுமைப்படுத்தியது மற்றும் மரண தண்டனைக்கு உட்படுத்தியது ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.[493] 246-251இல் தேசியசின் கொடுமைப்படுத்துதலானது கிறித்தவ திருச்சபையை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. ஆனால் இதற்கு பிறகு இறுதியாக கிறித்தவர்களின் பணிய மறுக்கும் தன்மையானது வலிமைப்படுத்தப்பட்டது.[494] 303 முதல் 311 வரை கிறித்தவர்களை மிக கடுமையாக கொடுமைப்படுத்தும் நடவடிக்கையை தியோலெக்தியன் மேற்கொண்டார்.
2ஆம் நூற்றாண்டு முதல் திருச்சபைத் தந்தையர் பேரரசு முழுவதும் பின்பற்றப்பட்ட வேறுபட்ட சமயங்களை "புறச் சமயச் சார்புடையவை" என்று கண்டித்தனர்.[495] 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் கான்ஸ்டன்டைன் கிறித்தவத்திற்கு மதம் மாறிய முதல் பேரரசராக உருவானார். திருச்சபைக்கு நிதியுதவி அளித்தார். அதற்கு சாதகமான சட்டங்களை இயற்றினார். ஆனால் இந்த புதிய சமயமானது ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கி கொண்டிருந்தது. 150 மற்றும் 250க்கு இடையில் 50 ஆயிரத்திற்கும் குறைவான பின்பற்றாளர்களை கொண்டிருந்த இது, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்பற்றாளர்களைக் கொண்டதாக உருவானது.[496] பொதுப் பலியிடல்களை தடை செய்த அதே நேரத்தில், பிற பாரம்பரிய பழக்கவழக்கங்களை சமய சகிப்புத்தன்மையுடன் கான்ஸ்டன்டைனும் அவருக்கு பின் வந்த பேரரசர்களும் நடத்தினர். ஓர் ஒழித்துக் கட்டலில் என்றுமே கான்ஸ்டன்டைன் ஈடுபடவில்லை.[497] இவரது காலத்தின்போது புறச் சமய சார்புடையவர்கள் ஒருவர் கூட கொல்லப்படவில்லை.[498] கிறித்தவ சமயத்திற்கு மாறாத மக்கள் அரசவையில் தொடர்ந்து முக்கியமான பதவிகளை வகித்து வந்தனர்.[497]:302 பாரம்பரிய பொதுப் பலியிடல்கள் மற்றும் எலனிய சமயத்தை மீட்டெடுக்க பேரரசர் சூலியன் முயற்சி செய்தார். ஆனால் கிறித்தவ எதிர்ப்பு மற்றும் பொதுமக்களின் ஆதரவு இல்லாத நிலை ஆகியவற்றை எதிர்கொண்டார்.[499]
கான்ஸ்டன்டைன் கிறித்தவ மதத்திற்கு மாறியது புறச் சார்பு சமயங்களை கிறித்தவம் (சொர்க்கத்தில்) வென்று விட்டதை காட்டியதாக 4ஆம் நூற்றாண்டின் கிறித்தவர்கள் நம்பினர். இத்தகைய சொல்லாட்சி கலைகளை தவிர மேற்கொண்ட சிறிய செயல்பாடும் தேவையாய் இருந்தது.[501] இவ்வாறாக அவர்கள் தங்களது கவனத்தை முரண் கருத்துடையவர் மீது திருப்பினர்.[502] பீட்டர் பிரௌன் என்ற அயர்லாந்து நாட்டு வரலாற்றாளரின் கூற்றுப்படி "பெரும்பாலான பகுதிகளில் பல கடவுள்களை வழிபடுவர்கள் கொடுமைப்படுத்தப்படவில்லை, சில அழகற்ற உள்ளூர் வன்முறை நிகழ்வுகளை தவிர்த்து யூத சமூகங்கள் ஒரு நூற்றாண்டு கால நிலையான, தனிச்சலுகை அடைய பெற்ற நிலையைக் கூட பெற்றிருந்தனர்".[502]:641–643[503] புறச் சமயங்களுக்கு எதிராக சட்டங்கள் இருந்தன. ஆனால் அவை பொதுவாக அமல்படுத்தப்படவில்லை. 6ஆம் நூற்றாண்டு முழுவதும் ஏதென்சு, காசா, அலெக்சாந்திரியா மற்றும் அனைத்து இடங்களிலும் புறச் சமயங்களின் மையங்கள் இருந்தன.[504]
சமீபத்திய யூத ஆய்வுப்படி கிறித்தவப் பேரரசர்களுக்கு கீழ் யூதர்கள் சமய சகிப்புத்தன்மையுடன் நடத்தப்பட்டனர்.[505] ஆனால் முரண் கருத்துடையவர்களுக்கு இது விரிவாக்கப்படவில்லை.[505] முதலாம் தியோடோசியசு பல்வேறு சட்டங்களை இயற்றி, கிறித்தவத்தின் வேறுபட்ட வடிவங்களுக்கு எதிராக செயலாற்றினார்.[506] பிந்தைய பண்டைக்காலம் முழுவதும் அரசாங்கம் மற்றும் திருச்சபை ஆகிய இரு அமைப்புகளாலும் முரண் கருத்துடையவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். 6ஆம் நூற்றாண்டு வரை கிருத்தவர் அல்லாதவர்கள் கொடுமைப்படுத்தப்படவில்லை. உரோமின் உண்மையான சமய படிநிலை அமைப்பு மற்றும் சடங்குகள் கிறித்தவ வடிவங்கள் மீது தாக்கத்தை கொண்டிருந்தன.[507][508] கிறித்தவத்திற்கு முந்தைய பல பழக்க வழக்கங்கள் கிறித்தவ விழாக்கள் மற்றும் உள்ளூர் பாரம்பரியங்களில் எஞ்சியிருந்தன.
மரபு
[தொகு]உரோமைப் பேரரசின் வழி வந்ததாக பல அரசுகள் உரிமை கோரியுள்ளன. சார்லமேனுக்கு உரோமைப் பேரரசராக திருத்தந்தை மூன்றாம் லியோ மகுடம் சூட்டிய போது பொ. ஊ. 800ஆம் ஆண்டு புனித உரோமைப் பேரரசானது நிறுவப்பட்டது. பைசாந்திய பேரரசின் கிழக்கு மரபுவழி திருச்சபை பாரம்பரியத்தை பெற்ற அரசாக உருசிய சாராட்சியானது தன்னைத்தானே மூன்றாவது உரோம் (கான்ஸ்டான்டினோபிள் இரண்டாவது உரோம் என்று குறிப்பிடப்படுகிறது) என்று அழைத்துக் கொண்டது. திரான்ஸ்லேடியோ இம்பேரீ என்ற கொள்கைப்படி இவ்வாறாக அழைத்துக்கொண்டது.[509] கடைசி கிழக்கு உரோமை பேரரசர் பட்டத்தை கொண்டிருந்தவரான ஆந்திரியாசு பலையலோகோசு கான்ஸ்டான்டினோபிளின் பேரரசர் என்ற பட்டத்தை பிரான்சின் எட்டாம் சார்லசுக்கு விற்றார். சார்லசின் இறப்பைத் தொடர்ந்து பலையலோகோசு இப்பட்டத்தை மீண்டும் பெற்றுக் கொண்டார். தனது இறப்பின்போது பெர்டினான்டு, இசபெல்லா மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களுக்கு இப்பட்டத்தை கொடுத்தார். அவர்கள் என்றுமே இதை பயன்படுத்தவில்லை. பைசாந்திய மாதிரியை அடிப்படையாக கொண்டு தங்களது அரசை அமைத்திருந்த உதுமானியர்கள் 1453ஆம் ஆண்டு கான்ஸ்டான்டினோபிளை கைப்பற்றிய போது இரண்டாம் மெகமுது தன்னுடைய தலை நகரத்தை அங்கே நிறுவினார். உரோமைப் பேரரசின் அரியணையில் தான் அமர்ந்துள்ளதாகக் கோரினார். பேரரசை மீண்டும் ஒன்றிணைக்கும் நோக்கத்திற்காக இத்தாலியின் ஒற்றாந்தோ மீது படையெடுப்பை கூட தொடங்கினார்.[510] எனினும் அவரது இறப்பின் காரணமாக இப்படையெடுப்பு முடித்துக் கொள்ளப்பட்டது. நடுக்கால மேற்குலகில் "உரோமானியர்" என்ற சொல்லின் பொருளானது திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருத்தந்தை ஆகியோரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இதன் கிரேக்க சொல்லான உரோமையோய் என்பது பைசாந்திய பேரரசின் கிரேக்க மொழி பேசிய கிறித்தவ மக்களுடன் இணைந்ததாகக் தொடர்ந்து நீடித்தது. இது கிரேக்கர்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.[511]
இத்தாலிய தீபகற்பத்தை உரோமைப் பேரரசு கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிகழ்வானது இத்தாலிய தேசியவாதம் மற்றும் 1861இல் இத்தாலிய ஐக்கியம் (ரிசோர்ஜிமென்டோ) ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.[512] உரோமானிய ஏகாதிபத்தியமானது பாசிச கொள்கைவாதிகளால் உரிமை கோரப்பட்டது. குறிப்பாக இத்தாலியப் பேரரசு மற்றும் நாசி செருமனியால் இது உரிமை கோரப்பட்டது.
ஐக்கிய அமெரிக்காவில் அதன் நிறுவனர்கள் பாரம்பரிய முறையில் கல்வி பெற்றிருந்தனர்.[513] தமது தலைநகரமான வாஷிங்டனில் உள்ள முக்கியமான இடங்களுக்கு பாரம்பரிய கட்டடக்கலை மாதிரிகளைப் பயன்படுத்தினர்.[514][515][516][517] ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனர்கள் ஏதெனிய சனநாயகம் மற்றும் உரோமைக் குடியரசுவாதம் ஆகியவற்றை தங்களது கலவையான அரசியலமைப்புக்கான மாதிரிகளாக கண்டனர். ஆனால் பேரரசரை கொடுங்கோன்மையின் ஒரு வடிவம் என்று கருதினர்.[518]
குறிப்புகள்
[தொகு]- ↑ Other ways of referring to the "Roman Empire" among the Romans and Greeks themselves included Res publica Romana or Imperium Romanorum (also in Greek: Βασιλεία τῶν Ῥωμαίων – வார்ப்புரு:Grc-tr – ["Dominion ('kingdom' but interpreted as 'empire') of the Romans"] and Romania. Res publica means Roman "commonwealth" and can refer to both the Republican and the Imperial eras. Imperium Romanum (or "Romanorum") refers to the territorial extent of Roman authority. Populus Romanus ("the Roman people") was/is often used to indicate the Roman state in matters involving other nations. The term Romania, initially a colloquial term for the empire's territory as well as a collective name for its inhabitants, appears in Greek and Latin sources from the 4th century onward and was eventually carried over to the பைசாந்தியப் பேரரசு[1]
- ↑ Fig. 1. Regions east of the புறாத்து ஆறு river were held only in the years 116–117.
- ↑ Between 1204 and 1261 there was an interregnum when the empire was divided into the Empire of Nicaea, the Empire of Trebizond and the Despotate of Epirus – all contenders for the rule of the empire. The Empire of Nicaea is usually considered the "legitimate" continuation of the Roman Empire because it managed to re-take Constantinople.[4]
- ↑ The final emperor to rule over all of the Empire's territories before its conversion to a diarchy.
- ↑ Traditionally the final emperor of the Western empire.
- ↑ Final ruler to be universally recognized as Roman emperor, including by the surviving empire in the East, the Papacy, and by kingdoms in Western Europe.
- ↑ Abbreviated "HS". Prices and values are usually expressed in sesterces; see #Currency and banking for currency denominations by period.
- ↑ Last emperor of the Eastern (Byzantine) empire.
- ↑ The Ottomans sometimes called their state the "Empire of Rûm" (உதுமானியத் துருக்கியம்: دولت علنإه روم). In this sense, it could be argued that a "Roman" Empire survived until the early 20th century.[9]
- ↑ Prudentius (348–413) in particular Christianizes the theme in his poetry.[38] ஹிப்போவின் அகஸ்டீன், however, distinguished between the secular and eternal "Rome" in The City of God. See also Fears, J. Rufus (1981), "The Cult of Jupiter and Roman Imperial Ideology", Aufstieg und Niedergang der römischen Welt, vol. II, no. 17.1, p. 136, on how Classical Roman ideology influenced Christian Imperial doctrine, Bang, Peter Fibiger (2011), "The King of Kings: Universal Hegemony, Imperial Power, and a New Comparative History of Rome", The Roman Empire in Context: Historical and Comparative Perspectives, John Wiley & Sons and the Greek concept of globalism (oikouménē).
- ↑ εἰ δὲ πάνυ ἐβιάζετο, Γαλατιστὶ ἐφθέγγετο. 'If he was forced to, he spoke in Galatian'.[83]
- ↑ The civis ("citizen") stands in explicit contrast to a peregrina, a foreign or non-Roman woman[105] In the form of legal marriage called conubium, the father's legal status determined the child's, but conubium required that both spouses be free citizens. A soldier, for instance, was banned from marrying while in service, but if he formed a long-term union with a local woman while stationed in the provinces, he could marry her legally after he was discharged, and any children they had would be considered the offspring of citizens—in effect granting the woman retroactive citizenship. The ban was in place from the time of Augustus until it was rescinded by Septimius Severus in 197 AD.[106]
- ↑ The others are ancient Athens, and in the modern era Brazil, the Caribbean, and the United States
- ↑ That senator was Tiberius Claudius Gordianus[145]
- ↑ The relation of the equestrian order to the "public horse" and Roman cavalry parades and demonstrations (such as the Lusus Troiae) is complex, but those who participated in the latter seem, for instance, to have been the equites who were accorded the high-status (and quite limited) seating at the theatre by the Lex Roscia theatralis. Senators could not possess the "public horse."[147]
- ↑ Ancient Gades, in Roman Spain (now Cádiz), and Patavium, in the Celtic north of Italy (now Padua), were atypically wealthy cities, and having 500 equestrians in one city was unusual.[149]
- ↑ This practice was established in the Republic; see for instance the case of Contrebian water rights heard by G. Valerius Flaccus as governor of Hispania in the 90s–80s BC.
- ↑ This was the vicesima libertatis, "the twentieth for freedom"[209]
- ↑ The college of centonarii is an elusive topic in scholarship, since they are also widely attested as urban firefighters.[262][263] Historian Jinyu Liu sees them as "primarily tradesmen and/or manufacturers engaged in the production and distribution of low- or medium-quality woolen textiles and clothing, including felt and its products."[263]
- ↑ Julius Caesar first applied the Latin word oppidum to this type of settlement, and even called Avaricum (Bourges, France), a center of the Bituriges, an urbs, "city." Archaeology indicates that oppida were centers of religion, trade (including import/export), and industrial production, walled for the purposes of defense, but they may not have been inhabited by concentrated populations year-round.[287]
- ↑ Such as the Consualia and the October Horse sacrifice.[327]
- ↑ Scholars are divided in their relative emphasis on the athletic and dance elements of these exercises: Lee, H. (1984). "Athletics and the Bikini Girls from Piazza Armerina". Stadion 10: 45–75. sees them as gymnasts, while Torelli thinks they are dancers at the games.[363]
- ↑ Clifford Ando posed the question as "what good would 'posted edicts' do in a world of low literacy?'.[419]
- ↑ Political slogans and obscenities are widely preserved as graffiti in Pompeii: Antonio Varone, Erotica Pompeiana: Love Inscriptions on the Walls of Pompeii ("L'Erma" di Bretschneider, 2002). Soldiers sometimes inscribed sling bullets with aggressive messages: Phang, "Military Documents, Languages, and Literacy," p. 300.
- ↑ The caesareum at Najaran was possibly known later as the "Kaaba of Najran"[486]
- ↑ "This mentality," notes John T. Koch, "lay at the core of the genius of cultural assimilation which made the Roman Empire possible"; entry on "Interpretatio romana," in Celtic Culture: A Historical Encyclopedia (ABC-Clio, 2006), p. 974.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Robert Lee Wolff (1948). "Romania: The Latin Empire of Constantinople". Speculum 23 (1): 1–34, especially 2–3. doi:10.2307/2853672. https://archive.org/details/sim_speculum_1948-01_23_1/page/1.
- ↑ Morley, Neville (17 August 2010). The Roman Empire: Roots of Imperialism. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7453-2870-6.; Diamond, Jared (4 January 2011). Collapse: How Societies Choose to Fail or Succeed: Revised Edition. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-101-50200-6.
- ↑ Bennett (1997).
- ↑ Treadgold (1997), ப. 734.
- ↑ Andrew Gillett (2001). "Rome, Ravenna and the Last Western Emperors". Papers of the British School at Rome 69: 131–167. doi:10.1017/S0068246200001781. பன்னாட்டுத் தர தொடர் எண்:0068-2462. https://www.academia.edu/18189525.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Rein Taagepera (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History (Duke University Press) 3 (3/4): 125. doi:10.2307/1170959.
- ↑ 7.0 7.1 Peter Turchin; Adams, Jonathan M.; Hall, Thomas D. (2006). "East-West Orientation of Historical Empires". Journal of World-Systems Research 12 (2): 222. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://peterturchin.com/PDF/Turchin_Adams_Hall_2006.pdf. பார்த்த நாள்: 6 February 2016.
- ↑ Durand, John D. (1977). "Historical Estimates of World Population: An Evaluation". Population and Development Review 3 (3): 253–296. doi:10.2307/1971891. http://repository.upenn.edu/cgi/viewcontent.cgi?article=1009&context=psc_penn_papers.
- ↑ Roy, Kaushik (2014). Military Transition in Early Modern Asia, 1400–1750: Cavalry, Guns, Government and Ships. Bloomsbury Studies in Military History. Bloomsbury Publishing. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78093-800-4.
After the capture of Constantinople, the capital of the Byzantine Empire became the capital of the Ottoman Empire. The Osmanli Turks called their empire the Empire of Rum (Rome).
- ↑ (Kelly 2007, ப. 4ff); (Nicolet 1991, ப. 1, 15); Brennan, T. Corey (2000). The Praetorship in the Roman Republic. Oxford University Press. p. 605.; (Peachin 2011, ப. 39–40)
- ↑ 11.0 11.1 11.2 Potter (2009), ப. 179.
- ↑ Nicolet (1991), ப. 1, 15.
- ↑ 13.0 13.1 Hekster, Olivier; Kaizer, Ted (16–19 April 2009). "Preface". Frontiers in the Roman World: Proceedings of the Ninth Workshop of the International Network Impact of Empire (Brill): viii.
- ↑ Lintott, Andrew (1999). The Constitution of the Roman Republic. Oxford University Press. p. 114.; Eder, W. (1993). The Augustan Principate as Binding Link. University of California Press. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-08447-0.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Richardson, John (2011). Fines provincial. Brill. p. 10.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Richardson (2011), ப. 1–2.
- ↑ Syme, Ronald (1939). The Roman Revolution. Oxford University Press. pp. 3–4.
- ↑ Boatwright, Mary T. (2000). Hadrian and the Cities of the Roman Empire. Princeton University Press. p. 4.
- ↑ Dio Cassius, Roman History, translated by Cary, E. (Loeb Classical Library edition, 1927 ed.), p. 72.36.4
- ↑ Gibbon, Edward (1776), "The Decline And Fall in the West – Chapter 4", The History of the Decline And Fall of the Roman Empire
- ↑ Goldsworthy (2009), ப. 50.
- ↑ Brown, Peter (1971). The World of Late Antiquity. Harcourt Brace Jovanovich. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-15-198885-3.
- ↑ Goldsworthy (2009), ப. 405–415.
- ↑ Potter, David (2004). The Roman Empire at Bay. Routledge. pp. 296–298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-10057-1.
- ↑ Starr, Chester G. (1974) [1965]. A History of the Ancient World (2nd ed.). Oxford University Press. pp. 670–678. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-501814-1.
- ↑ Bury (1923), ப. 312–313.
- ↑ Bury, John Bagnall (1923). History of the Later Roman Empire. Dover Books. pp. 295–297.
- ↑ Scholl, Christian (2017). Transcultural approaches to the concept of imperial rule in the Middle Ages (in ஆங்கிலம்). Peter Lang AG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-653-05232-9.
Odoacer, who dethroned the last Roman emperor Romulus Augustulus in 476, neither used the imperial insignia nor the colour purple, which was used by the emperor in Byzantium only.
- ↑ Peter, Heather. "The Fall of Rome". BBC. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
- ↑ Gibbon, Edward (1776). "Gothic Kingdom of Italy.—Part II." (ebook). In Widger, David (ed.). History Of The Decline And Fall Of The Roman Empire (in ஆங்கிலம்). Harper & Brothers – via Project Gutenberg.
The patrician Orestes had married the daughter of Count Romulus, of Petovio in Noricum: the name of Augustus, notwithstanding the jealousy of power, was known at Aquileia as a familiar surname; and the appellations of the two great founders, of the city and of the monarchy, were thus strangely united in the last of their successors.", "The life of this inoffensive youth was spared by the generous clemency of Odoacer; who dismissed him, with his whole family, from the Imperial palace.
- ↑ Scholl, Christian (2017). Transcultural approaches to the concept of imperial rule in the Middle Ages (in ஆங்கிலம்). Peter Lang AG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-653-05232-9.
Odoacer, who dethroned the last Roman emperor Romulus Augustulus in 476, neither used the imperial insignia nor the colour purple, which was used by the emperor in Byzantium only.
- ↑ Peter, Heather. "The Fall of Rome". BBC. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
- ↑ Gibbon, Edward (1776). "Gothic Kingdom of Italy.—Part II.". The Decline and Fall of the Roman Empire (in ஆங்கிலம்). Project Gutenberg. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
The republic (they repeat that name without a blush) might safely confide in the civil and military virtues of Odoacer; and they humbly request, that the emperor would invest him with the title of Patrician, and the administration of the diocese of Italy. ...His vanity was gratified by the title of sole emperor, and by the statues erected to his honor in the several quarters of Rome; ...He entertained a friendly, though ambiguous, correspondence with the patrician Odoacer; and he gratefully accepted the Imperial ensigns.
- ↑ Ozgen, Korkut. "Mehmet II". TheOttomans.org. பார்க்கப்பட்ட நாள் 3 April 2007.; Cartwright, Mark (23 January 2018). "1453: The Fall of Constantinople". World History Encyclopedia. World History Encyclopedia Limited. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
- ↑ Kelly (2007), ப. 3.
- ↑ Nicolet (1991), ப. 29.
- ↑ (Nicolet 1991, ப. 29); (Virgil, ப. 1.278); Mattingly, David J. (2011). Imperialism, Power, and Identity: Experiencing the Roman Empire. Princeton University Press. p. 15.; Moretti, G (1993), de Gruyter, Walter (ed.), "The Other World and the 'Antipodes': The Myth of Unknown Countries between Antiquity and the Renaissance", The Classical Tradition and the Americas: European Images of the Americas, p. 257; Southern, Pat (2001). The Roman Empire from Severus to Constantine. Routledge. pp. 14–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-23943-1.
- ↑ Mastrangelo, Marc (2008). The Roman Self in Late Antiquity: Prudentius and the Poetics of the Soul. Johns Hopkins University Press. pp. 73, 203.
- ↑ Mosley, Stephen (2010). The Environment in World History. Routledge. p. 35.
- ↑ Hanson, J. W. (2016). "Cities database". OXREP databases. 1.0.
- ↑ Nicolet (1991), ப. 7, 8.
- ↑ Nicolet (1991), ப. 9, 16.
- ↑ Nicolet (1991), ப. 10, 11.
- ↑ 44.0 44.1 Southern (2001), ப. 14–16.
- ↑ 45.0 45.1 Kelly (2007), ப. 1.
- ↑ 46.0 46.1 Morris & Scheidel (2009), ப. 184.
- ↑ Goldsmith, Raymond W. (2005). "An Estimate of the Size Anl Structure of the National Product of the Early Roman Empire". Review of Income and Wealth 30 (3): 263–288. doi:10.1111/j.1475-4991.1984.tb00552.x.
- ↑ Scheidel, Walter (April 2006). "Population and demography" (PDF). Princeton/Stanford Working Papers in Classics. p. 9.; Hanson, J. W.; Ortman, S. G. (2017). "A systematic method for estimating the populations of Greek and Roman settlements" (in en). Journal of Roman Archaeology 30: 301–324. doi:10.1017/S1047759400074134. பன்னாட்டுத் தர தொடர் எண்:1047-7594.
- ↑ 49.0 49.1 Boardman (2000), ப. 721.
- ↑ Woolf, Greg, ed. (2003). Cambridge Illustrated History of the Roman World. Ivy Press. p. 340.; Opper, Thorsten (2008). Hadrian: Empire and Conflict. Harvard University Press. p. 64.; Fields, Nic (2003). Hadrian's Wall AD 122–410, which was, of course, at the bottom of Hadrian's garden. Osprey Publishing. p. 35.
- ↑ (Virgil, ப. 12.834, 837); (Rochette 2012, ப. 549, 563); (Adams 2003, ப. 184)
- ↑ Adams (2003), ப. 186–187.
- ↑ Rochette (2012), ப. 554, 556.
- ↑ (Rochette 2012, ப. 549); Freeman, Charles (1999). The Greek Achievement: The Foundation of the Western World. Penguin. pp. 389–433.
- ↑ Rochette (2012), ப. 549, citing புளூட்டாக், Life of Alexander 47.6.
- ↑ Millar, Fergus (2006). A Greek Roman Empire: Power and Belief under Theodosius II (408–450). University of California Press. p. 279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-94141-1.; (Treadgold 1997, ப. 5–7)
- ↑ Rochette (2012), ப. 53.
- ↑ சிசெரோ. In Catilinam. Vol. I 61 "recto" (Rylands Papyri ed.). p. 2.15.
- ↑ Rochette (2012), ப. 550–552.
- ↑ 60.0 60.1 Rochette (2012), ப. 552.
- ↑ Suetonius. Life of Claudius. p. 42.
- ↑ Rochette (2012), ப. 553–554.
- ↑ (Rochette 2012, ப. 556); (Adams 2003, ப. 200)
- ↑ Adams (2003), ப. 185–186, 205.
- ↑ Rochette (2012), ப. 560.
- ↑ Rochette (2012), ப. 562–563.
- ↑ Rochette (2012), ப. 558–559.
- ↑ 68.0 68.1 68.2 Miles, Richard (2000). Communicating Culture, Identity, and Power. Routledge. pp. 58–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-21285-5.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑