திருக்கல்லறைத் தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருக்கல்லறைத் தேவாலயம்
திருக்கல்லறைத் தேவாலய வெளிப்புற குவிமாடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′43″N 35°13′46″E / 31.77861°N 35.22944°E / 31.77861; 35.22944
சமயம்கிறிஸ்தவம்
மண்டலம்இசுரவேல்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு325/326
நிலைபாவணையிலுள்ளது
செயற்பாட்டு நிலைநன்று

திருக்கல்லறைத் தேவாலயம் அல்லது திருக்கல்லறை பேராலயம் அல்லது கிழக்குச் சபையினால் உயிர்ப்புத் தேவாலயம் என்று அழைக்கப்படும் இது, மதிலாலான பழைய நகரின் கிறிஸ்தவப் பகுதியினுள் உள்ள ஓர் தேவாலயமாகும்.

இப்பகுதி கொல்கொத்தா (கல்வாரி மலை) மதிப்புக்குரியதாகியது.[1] ஏனென்றால் இங்கேதான் இயேசு சிலுவையிலறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[2] பல கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக நான்காம் நூற்றாண்டிலிருந்து யாத்திரிகர்களுக்கு, இயேசு இந்த இடத்தில் உயிர்த்தெழுந்த காரணத்தினால் இத்தேவாலயம் மிக முதன்மையான இடமாகும். இன்றும் இது எருசலேமின் கிரேக்க சபை தலைமைக்குருவின் தலைமைப்பீடமும், சில கிறிஸ்தவ சபைகளுக்கிடையே பங்கிடப்பட்ட கட்டடங்கள் பொறுப்பிலுள்ளது. நூற்றாண்டுகளாக மாற்றமடையாத சிக்கலான ஏற்பாடுகளும் காணப்படுகின்றது. இன்று கிழக்கு சபை, கீழ்த்திசை சபை, உரோமன் கத்தோலிக்கம் என்பனவற்றின் வீடாகவுள்ளது. அங்கிலிக்கன், ஒருமைக்கோட்பாட்டுச் சபை, புரட்டஸ்தாந்து சபை என்பனவற்றிற்கு இத்தேவாலயத்தில் நிரந்தர பிரசன்னம் இல்லை.[3] இவர்கள் எருசலேமிலுள்ள தோட்டக் கல்லறையினை உண்மையான இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மதிற்பிக்குரிய இடமாக பேணுகின்றார்கள்.

வரலாறு[தொகு]

கட்டுமானம்[தொகு]

இந்த ஆலயம் தற்போது அமைந்துள்ள இடம் இரண்டாம் நூற்றாண்டில் அப்ரடைட்டின் கோவிலாகக் காணப்பட்டது. சில புராதன எழுத்தாளர்கள் வீனஸ் கோவிலாக இருந்தது என்கின்றனர். எசேபியஸ் கொன்ஸ்டான்டைனின் வாழ்வு எனும் தன் நூலில் இந்த இடம் கிறிஸ்தவர்களின் மதிப்புக்குரிய இடமாகவே இருந்தது,[4], ஆனால் காட்ரியன் கிறிஸ்தவம் மீது கொண்ட வெறுப்பினால், இதன் மீது தன் சொந்த கோவிலைக் கட்டி, வேண்டுமென்றே மறைத்தான் என்கிறார்.[5] எசேபியஸ் இதுபற்றி அதிகம் கூறாதபோதும், அப்ரடைட்டின் கோவில் காட்ரியனின் எருசலேம் மீள் கட்டமைப்பின் பகுதியாகவே கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது. கி.பி. 70 யூதப் புரட்சி மற்றும் கோக்பா புரட்சிகளின் (கி.பி 132-135) பின் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து, 135 இல் ஆலியா கபிடோனியா அபிவிருத்தியின் பகுதியாக இது இடம் பெற்றிருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Church of the Holy Sepulchre, Jerusalem
  2.  McMahon, Arthur .L. (1913). "Holy Sepulchre". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். அணுகப்பட்டது 2009-02-02. 
  3. The search for a Protestant Holy Sepulchre: the Garden Tomb in nineteenth-century Jerusalem, The Journal of Ecclesiastical History, April 01, 1995, Kochav, Sarah
  4. NPNF2-01. Eusebius Pamphilius: Church History, Life of Constantine, Oration in Praise of Constantine | Christian Classics Ethereal Library
  5. Eusebius, Life of Constantine, 3:26