தங்க வாயில்
Appearance
தங்க வாயில் Golden Gate | |
---|---|
தங்க வாயில் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | யெரூசலம் |
தங்க வாயில் கிறிஸ்தவ இலக்கியங்களில் காணப்படும் பெயரும், எருசலேம் பழைய நகரில் உள்ள பழைய வாயில்களில் ஒன்றுமாகும். யூத பாரம்பரியத்தின்படி, செக்கீனா (שכינה) (புனிதப் பிரசன்னம்) இவ்வாயில் வழியாக வெளிப்பட்டது. இது மீண்டும் மெசியா (மீட்பர்) வரும்போது (எசேக்கியேல் 44:1–3)[1] ஏற்பட்டு, தற்போதுள்ள வாயில் நீக்கப்பட்டு புதிய வாயில் உருவாகும். இதனால்தான் இவ்விடத்திலிருந்த முன்னைய வாயிலில் யூதர்கள் இரக்கத்திற்காக வழிபட்டார்கள்.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ 1. பின்பு, அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது. 2. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும். 3. இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின்வழியாய்ப் புறப்படுவான் என்றார்.
- ↑ "AJE - Jerusalem 3000 - The Golden Gate". Archived from the original on 2003-08-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.