இயேசுவின் திருமுழுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயேசு தனது பணி வாழ்வைத் தொடங்குவதற்கு முன் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு பெற்றார். இந்நிகழ்வு மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.[1][2] இயேசுவின் உருமாற்றம், சிலுவைச் சாவு, உயிர்த்தெழுதல், விண்ணேற்றம் ஆகியவற்றுடன் திருமுழுக்கும் அவரின் இந்து முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்றாக கருதி அனேக திருச்சபைகளில் ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் வாரங்களில் அனுசரிக்கப் படுகிறது.[3] இந்நிகழ்வை கத்தோலிக்க திருச்சபையானது ஒளியின் மறைபொருள்களுள் ஒன்றாக ஜெபமாலையில் ஜெபிக்க பணிக்கிறது.

விவிலிய குறிப்புகள்[தொகு]

17ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இயேசுவின் திருமுழுக்கு வரைபடம்

இயேசுவின் திருமுழுக்கானது மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நான்கு நற்செய்திகளிலும் காணக்கிடைக்கிறது.[4]

மத்தேயு நற்செய்தியில் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறித் தடுத்தார். இயேசு, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை" எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார் என்றும் (மத்தேயு 3:13-17)

மாற்கு நற்செய்தியில் அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார் என்றும் (மாற்கு 1:9-11)

லூக்கா நற்செய்தியில் மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது என்றும் (லூக்கா 3:21-22)

மூன்று நற்செய்திகளின் ஒற்றுமை

தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது.அப்பொழுது,
     "என் அன்பார்ந்த மகன் இவரே,
     இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" 
என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.[5] (மத்தேயு: 3:16-17)(மாற்கு 1:10-11)(லூக்கா 3:22)

என்று மூன்று நற்செய்திகளிலும் ஒரிரு சொல் வேற்றுமைகளைத் தவிர ஒன்று போல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் யோவான் நற்செய்தியில் "தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் 'தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' (யோவான் 1:32-33) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


யோவான் நற்செய்தியில் மூன்று நற்செய்திகளை விட தனித்துவமாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுழுக்கு யோவானின் வாழ்க்கைக் குறிப்பை குறிப்பிட்டு பின்னர் அனேகருக்கு திருமுழுக்கு கொடுப்பதாகவும், இயேசுவின் வருகையை முன் அறிவிப்பதாகவும், பின்னர் இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்து அதை தானே சான்று பகர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[6] (யோவான் 1:19-34)

ஆதாரங்கள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Special:BookSources/0814658032
  2. https://en.wikipedia.org/wiki/Special:BookSources/9004111425
  3. http://www.pravoslavieto.com/calendar/feasts/01.06_Bogojavlenie/istoria.htm
  4. Big Picture of the Bible—New Testament by Lorna Daniels Nichols 2009 ISBN 1-57921-928-4 page 12
  5. The Lamb of God by Sergei Bulgakov 2008 ISBN 0-8028-2779-9 page 263
  6. John by Gerard Stephen Sloyan 1987 ISBN 0-8042-3125-7 page 11