உள்ளடக்கத்துக்குச் செல்

இயேசுவை அடக்கம் செய்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசுவை அடக்கம் செய்தல், ஓவியர்: கரவாஜியோ

இயேசுவை அடக்கம் செய்தல் என்பது விவிலியத்தின் இயேசுவின் சாவுக்குப்பின்பு அவரின் உடலை அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு அடக்கம் செய்த நிகழ்வினைக்குறிக்கும். இது கத்தோலிக்க சிலுவைப் பாதையின் பதினான்காம் நிலை ஆகும். கிறித்துவின் வாழ்க்கையினை சித்தரிக்கும் கலைவடிவில் இந்த நிகழ்வு மிக முக்கியத்துவம் பெறுகின்றது.

விவிலிய விவரிப்பு

[தொகு]

நற்செய்திகள் நான்கும் இன்னிகழ்வை விவரிக்கின்றன.[1]:p.91

இயேசுவின் சீடர்களுள் ஒருவரான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி பெற்றார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் என விவரிக்கின்றது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Powell, Mark A. Introducing the New Testament. Baker Academic, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8010-2868-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயேசுவை_அடக்கம்_செய்தல்&oldid=2696028" இலிருந்து மீள்விக்கப்பட்டது