அலோசியுஸ் கொன்சாகா
புனித அலோசியுஸ் கொன்சாகா, சே.ச. கொன்சாகா ஞானப்பிரகாசியார் | |
---|---|
துறவி | |
பிறப்பு | கேசுதிகிலியோன், புனித உரோமைப் பேரரசு | மார்ச்சு 9, 1568
இறப்பு | சூன் 21, 1591 உரோமை நகரம், பாப்பரசு நாடுகள் | (அகவை 23)
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | அக்டோபர் 19, 1605, உரோமை, பாப்பரசு நாடுகள் by திருத்தந்தை ஐந்தாம் பவுல் |
புனிதர் பட்டம் | டிசம்பர் 31, 1726, உரோமை, பாப்பரசு நாடுகள் by பதின்மூன்றாம் பெனடிக்ட் |
முக்கிய திருத்தலங்கள் | புனித இஞ்ஞாசியார் கோவில், உரோமை, இத்தாலி |
திருவிழா | 21 ஜூன் |
சித்தரிக்கப்படும் வகை | லில்லி மலர், சிலுவை, மனித மண்டையோடு, செபமாலை |
பாதுகாவல் | மாணாக்கர், இளையேர் , இயேசு சபை குருடர், எய்ட்சு நோயாளிகள், எய்ட்சு நோயாளிகளை கவணிப்போர் |
புனித அலோசியுஸ் கொன்சாகா, சே.ச., (இத்தாலியம்: Luigi Gonzaga, எசுப்பானியம்: Luis de Gonzaga; பழைய வழக்கு: கொன்சாகா ஞானப்பிரகாசியார்; மார்ச்சு 9, 1568 - ஜூன் 21, 1591) என்பவர் இத்தாலிய உயர்குடியில் பிறந்தவர். இவர் பின்னாளில் தன் குடும்பத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி இயேசு சபையில் சேர்ந்து துறவியானார். உரோமை கல்லூரியில் படித்து கொன்டிருக்கும் போதே, இவர் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவருக்கு அருளாளர் பட்டம் 1605இலும், புனிதர் பட்டமளிப்பு 1726 வழங்கப்பட்டது.
இறப்புக்குப்பின் வணக்கம்[தொகு]

இவர் இறந்தபின் உரோமையில் உள்ள புனித இஞ்ஞாசியார் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார். இவர் இறப்புக்கு சில காலத்திற்கு முன் தனது பெயரை தனது ஆன்ம குருவின் பெயரான "இராபர்ட்" என மாற்றிக்கொண்டார். இவரது உடல் இப்போது ஒரு வைடூரியப் பேழையில் வைக்கப்பட்டிருக்கின்றது. இவரின் தலை, இவரின் பெயராலான கேசுதிகிலியோனில் உள்ள பேராலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.
இவர் இறந்து 14 ஆண்டுகள் கழித்து திருத்தந்தை ஐந்தாம் பவுலினால் அக்டோபர் 19, 1605 அன்று அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. டிசம்பர் 31, 1726இல் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் அளித்தார். 1729இல் இவர் இளையோரின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டார். 1926இல் திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் இவரை கிறித்தவ இளைஞரின் பாதுகாவலராக அறிவித்தார். இவர் உலகம்பரவுநோயினால் பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாவலராக கருதப்படுகின்றார்.
புனித அலோசியுஸ் கொன்சாகாவின் விழா நாள் ஜூன் 21 ஆகும்.