உள்ளடக்கத்துக்குச் செல்

மனித மண்டையோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனித மண்டையோட்டின் எளிமைப்படுத்திய பக்கத் தோற்றம்.
மனித மண்டையோட்டின் எளிமைப்படுத்திய முன்புறத் தோற்றம்.

மனிதர்களில், வளர்ந்தவர்களின் மண்டையோடு பொதுவாக 22 எலும்புகளால் ஆனது. இவற்றுள், கீழ்த் தாடை எலும்பு தவிர்ந்த எனையவை அசையாத, தையல் மூட்டுக்களால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை.

மூளையையும், மூளைத் தண்டையும் சுற்றி அமைந்த பாதுகாப்புக் கவசமான மண்டை அறை எட்டு எலும்புகளைக் கொண்டது. முகத்தைத் தாங்கும் எலும்புகள் பதினான்கு ஆகும். நடுக்காதுச் சிற்றெலும்புகள் ஆறு, பொட்டு எலும்புகளினால் மூடப்பட்டுள்ளன. பிற மண்டையோட்டு எலும்புகளுடன் பொருத்தப்படாது இருப்பதனால், குரல்வளையைத் தாங்கும் எலும்பு பொதுவாக மண்டையோட்டின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுவதில்லை.

மண்டையோட்டில், மூச்சுத் தோலிழைமங்களால் மூடப்பட்டனவும், வளி நிரம்பியனவுமான குழிப்பைகள் காணப்படுகின்றன. இக் குழிப்பைகளின் செயற்பாடு என்ன என்பது விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. எனினும் இவை, மண்டையோட்டின் பலத்தை அதிகம் குறைக்காமல் அதன் நிறையைக் குறைக்க உதவுகின்றன. இவை குரலில் ஏற்படுகின்ற ஒத்ததிர்வுக்கும் உதவுவதுடன், மூக்கு வழியாக உள்ளிழுக்கப்படும் வளியை வெப்பமாகவும், ஈரப்பற்றுடனும் வைத்திருக்கவும் பயன்படுகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மனித எலும்புகள் பட்டியல்

உடல் உறுப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_மண்டையோடு&oldid=2740907" இலிருந்து மீள்விக்கப்பட்டது