உள்ளடக்கத்துக்குச் செல்

பிரின்டிசி நகர லாரன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிந்திசி இலரான்ஸ்
மறைவல்லுநர்
பிறப்பு(1559-07-22)சூலை 22, 1559
பிரிந்திசி
இறப்புசூலை 22, 1619(1619-07-22) (அகவை 60)
லிஸ்பன்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்1783 by திருத்தந்தை ஆறாம் பயஸ்
புனிதர் பட்டம்1881 by பதின்மூன்றாம் லியோ
திருவிழாஜூலை 21
பாதுகாவல்பிரிந்திசி

பிரிந்திசி இலரான்ஸ் (Lawrence of Brindisi, இயற்பெயர்: கியுலியோ செசாரெ ரூசோ, சூலை 22, 1559 - சூலை 22, 1619), ஒரு கத்தோலிக்கக் குருவும், கப்புச்சின் சபைத் துறவியும் ஆவார்.

இவர், வெனிஸ் நகர வணிகர் குடும்பத்தில், பிரிந்திசி நேபிள்ஸ் மாகாணத்தில் பிறந்தவர். சிறுவன் ஜூலியஸ் ஒழுக்கமான, பக்தியான வாழ்வால் பிரிந்திசி நகர மக்களால் சின்ன சம்மனசு என்று அழைக்கப்பட்டார். சிறு வயதிலே பெற்றோர்களை இழந்ததால் தாய்மாமன் உதவியால் வளர்ந்தார். வெனிஸ் நகரில் உள்ள புனித மார்க் கல்லூரி கல்விபயின்ற பின்னர் சகோதரர் இலரான்ஸ் என்னும் பெயரோடு வெரோனா உள்ள கப்புச்சின் சபை சபையில் இணைந்தார். இவர் பதுவை நகர பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற்றார். இவர் ஒரு திறமையான மொழியியலாளர், இவர் சரளமாக பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் செமித்திய மொழிகளை பேசுவார். 1582 இல் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட இலாரன்ஸ் ஒரு அறிவு செறிந்த குருவாக திகழ்ந்தார்.

1596-இல் உரோமில் உள்ள கப்புச்சின் சபைக்கு தள தலைவராக நியமிக்கப்பட்டார்; திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் இவரை அந்த நகரத்தில் உள்ள யூதர்களிடம் மறைபணியாற்ற அனுப்பினார். 1599-இல் தொடங்கி, லாரன்ஸ் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் பல கப்புசின் மடங்களை நிறுவுவதன் மூலம் கத்தோலிக்க மறுமலர்ச்சிக்கு பெரிது உதவினார்.

1601-இல் புனித ரோமானிய பேரரசர் இரண்டாம் ருடால்பின் படைக்கு ஆன்ம குருவாக பணியாற்றினார். அப்போது ஓட்டோமேன் டர்க்குகள் எதிராக போராட உதவ பிலிப் இம்மானுவலை அறிவுறுத்தினார் (Philippe Emmanuel). உதுமானியப் பேரரசிடமிருந்து Székesfehérvár என்னும் இடத்தை கைப்பற்ற நடந்த போரின் போது, சிலுவையை மட்டுமே கையில் கொண்டு படைக்கு முன் சென்றார்.

1602-இல் இவர் கப்புச்சின் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1605-இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அதனை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் திருப்பீட தூதுவராக பவேரியாவுக்கு பணியாற்றினார். பிறகு ஸ்பேயின் நாட்டின் திருப்பீட தூதுவராக பணியாற்றியபின்னர், இவர் 1618 இல் ஓய்வுபெற்றார். 1619-இல் ஸ்பெயின் அரசருக்கு நேபிள்ஸ் வைஸ்ராயாயின் நடவடிக்கைகள் குறித்த ஒரு சிறப்பு தூதராக இவர் அனுப்பப்பட்டார். இந்த பணியை முடித்த பிறகு, லிஸ்பனில் தனது பிறந்த நாள் அன்று இறந்தார்.

இவருக்கு 1783-இல் திருத்தந்தை ஆறாம் பயஸ் அருளாளர் பட்டமும், 1881-இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவினால், புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. 1959-இல் இவர் மறைவல்லுநராக திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் அறிவிக்கப்பட்டார்.

இவரின் விழா நாள் ஜூலை 21.

சான்றுகள்

[தொகு]

ஆ.தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011, 37-43

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரின்டிசி_நகர_லாரன்சு&oldid=3360465" இலிருந்து மீள்விக்கப்பட்டது