முதலாம் வென்செஸ்லாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகிமியாவின் கோமகன் புனித முதலாம் வென்செஸ்லாஸ்
புனித விதுஸ் கதீடிரலில் உள்ள புனித முதலாம் வென்செஸ்லாஸின் திரு உருவச்சிலை. இச்சிலையின் தலை, புனிதரின் மண்டையோட்டின் அளவில் செய்யப்பட்டிருக்கின்றது.
மறைசாட்சி
பிறப்புc. 907
பிராகா, போகிமியா
இறப்புசெப்டம்பர் 28, 935
ஸ்டாரா போல்சியாவ், போகிமியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை
முக்கிய திருத்தலங்கள்புனித விதுஸ் கதீடிரல், பிராகா
திருவிழாசெப்டம்பர் 28
சித்தரிக்கப்படும் வகைமகுடம், குத்துவாள், பதாகையில் கழுகு
பாதுகாவல்போகிமியா, செக் குடியரசு, பிராகா
கர்தினால் மிலோஸ்லாவ் விக், செப்டம்பர் 28, 2006இல் புனித முதலாம் வென்செஸ்லாஸின் மண்டையோட்டுடன் பவனி வருகின்றார்

முதலாம் வென்செஸ்லாஸ் (செக் மொழி: Václav; c. 907 – செப்டம்பர் 28, 935), என்பவர் போகிமியாவின் கோமகனாக 921 முதல் 935இல் தனது தம்பியால் கொல்லப்படும் வரை இருந்தவர். இவருடைய உயிர்த்துறப்பாலும் இவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்களாலும் நற்பண்புமிக்க நாயகன் என்று போற்றப்பட்டு புனிதராக அறிவிக்கப்பட்டார். இவர் செக் குடியரசின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.

வாழ்க்கை[தொகு]

போகிமியாவின் மன்னர்குடியான பிரெமிசுலோவிய குலத்தைச் சேர்ந்த முதலாம் விரத்திஸ்லாசின் மகனான இவர் சிறுவயது முதல் இறையுணர்வும் அடக்கமும் கொண்டவராகவும் நன்கு கற்றறிந்தவராகவும் புத்திசாலியாகவும் அறியப்பட்டார். இவர் சிறுவயது முதல், நற்கருணை வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு போகிமியாவின் கோமகனாக, வென்செஸ்லாஸ் பதவியேற்றார்.

இறப்பு[தொகு]

இவருக்கு ஒரு மகன் பிறந்ததால், தன் அரசு உரிமையை இழந்ததாக நினைத்த இவரது தம்பி போலெஸ்லாவ், இவரைக் கொல்லத் திட்டமிட்டான். தன் வீட்டில் ஏற்பாடு சேய்யப்பட்டிருந்த புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் விழாவில் பங்கேற்று விருந்துண்ண அழைத்தான். விருந்துக்குச் செல்லும் வழியில் தேவாலயத்திற்குச் சென்ற வென்செஸ்லாஸை, தேவாலயத்தின் வாசலிலேயே இவரது தம்பியுடனிருந்தோர்கள் குத்திக் கொன்றனர். "இறைவன் உன்னை மன்னிப்பாராக." என்ற வார்த்தைகளுடன் வென்செஸ்லாஸ் உயிர் துறந்தார்.

சிறப்பு[தொகு]

  • இறப்புக்குப் பின் இவர் போகிமியாவின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
  • புனித ஸ்தேவான் நாளன்று இவரின் பெயரால் நல்ல மன்னர் வென்செஸ்லாஸ் என்ற இன்னிசைப் பாடல் பாடப்பட்டுவருகின்றது