உள்ளடக்கத்துக்குச் செல்

நற்கருணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்கருணையோடு கிறிஸ்து வின்சென்ட் ஜுவான் மசிப் வரைந்தது.

நற்கருணை (Eucharist) கிறித்தவ சமயத்தில் ஆண்டவரின் திருவிருந்து, திருப்பீடத்தின் அருட்சாதனம், ஒன்றிப்பின் உணவு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. நற்கருணை திருவிருந்து, இயேசு தனது இறுதி இரவுணவு வேளையில் வழங்கிய அறிவுரைகளுக்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது. இயேசுவின் சிலுவைப் பலியின் முன் அடையாளமாக உருவாக்கப்பட்ட நற்கருணை பலி, அவரது திருவிருந்தையும் கல்வாரித் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் சிறப்பிக்கப்படுகிறது.[1] கத்தோலிக்க திருச்சபையின் வரையறையின்படி நற்கருணை என்பது கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவற்றின் குணங்களில் இயேசுவின் திருஉடலும், திருஇரத்தமும், ஆன்மாவும், கடவுள் தன்மையும் அடங்கியிருக்கும் அருட்சாதனம் ஆகும்.

பெயரும் காரணமும்[தொகு]

நற்கருணை என்ற வார்த்தை அப்பத்திலும் இரசத்திலும் கடவுளின் கருணை பிரசன்னத்தைக் குறிக்கும் பொருளில் தோன்றியது; பொதுவாக கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே இந்த தமிழ் பெயர் பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டவரின் திருவிருந்து என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவுணவைக் குறிக்கிறது.

திருப்பீடத்தின் அருட்சாதனம் என்னும் சொல் பலிபீடத்தில் நிறைவேற்றப்படும் அருட்சாதனம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

ஒன்றிப்பின் திருஉணவு என்பது இதை உண்போரிடையே ஒன்றிப்பை உருவாக்கும் உணவு என்னும் பொருளைத் தருகிறது.

அருட்சாதன அடிப்படை[தொகு]

இயேசுவின் இறுதி இரவுணவு ஓவியம்.

நற்செய்திகள்[தொகு]

'அவர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.' (மத்தேயு 26:26-29)[2][3]

'இயேசு அவர்களிடம், "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்." (யோவான் 6:51,53-56)

தொடக்க கிறிஸ்தவர்கள்[தொகு]

'அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.' (திருத்தூதர் பணிகள் 2:42)

"கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்." (1 கொரிந்தியர் 10:16-17)

புனித பவுலின் போதனை[தொகு]

"ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாக செய்யுங்கள் என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்." (1 கொரிந்தியர் 11:23-26)

தொடக்க கிறிஸ்தவ மூலங்கள்[தொகு]

கி.பி.2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட டிடாக்கே என்ற கிறிஸ்தவ போதனை நூல் திருமுழுக்கு, நற்கருணை ஆகியவை பற்றிய ஒழுங்குமுறைகளைத் தருவதுடன்,[4] நற்கருணை பற்றிய இரண்டு மரபுகளையும் அதன் 9 மற்றும் 10ஆம் அத்தியாயங்களில் தருகிறது;[5][6] 14ஆம் அத்தியாயத்திலும் நற்கருணை பற்றி குறிப்பிடுகிறது.[7]

திருத்தூது தந்தையர்களில் ஒருவரான அந்தியோக் புனித இக்னேசியஸ் (-சுமார் கி.பி.117),[8] நற்கருணையை "நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சதை" என்று குறிப்பிடுகிறார்.[9] மேலும் மறைசாட்சியான புனித ஜஸ்டின் இதை உணவைவிட மேலானதாக குறிப்பிடுகிறார்: "நன்றியறிதல் செபமும், கிறிஸ்துவின் வார்த்தைகளும் சொல்லப்படுகின்ற உணவு ... உடலெடுத்த இயேசுவின் சதையும் இரத்தமுமாக இருக்கிறது ... இதில் பங்குபெறாத சிலருக்கு வழங்க திருத்தொண்டர்கள் இதை எடுத்து செல்கின்றனர்."[10]

நற்கருணை இறையியல்[தொகு]

பல கிறிஸ்தவ பிரிவுகள் நற்கருணையை ஒரு அருட்சாதனமாகக் குறிப்பிடுகின்றன.[11] சில புராட்டஸ்டான்ட்கள் இதை கடவுளின் அருளைப் பெறும் வழியாகப் பார்க்காமல், கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து அவரது இறுதி இரவுணவின் நினைவாகச் செய்யப்படும் ஒரு மதச் சடங்காக மட்டும் நினைக்கின்றனர்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள், நற்கருணை வழிபாட்டில் கிறிஸ்துவின் சிறப்பான பிரசன்னம் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் பிரசன்னம் எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறது என்பதில் கிறிஸ்தவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.[12] கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கீழைத் திருச்சபை ஆகியவை வழிபாட்டில் அர்ப்பணிக்கப்பட்ட நற்கருணை அப்பமும் இரசமும் நிலைத்திருக்கும் வரை அவற்றில் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமும் நீடித்திருக்கிறது என்று போதிக்கின்றன. கத்தோலிக்க திருச்சபை, திருப்பலி வேளையில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பம், இரசம் ஆகியவற்றின் தோற்றமோ, பண்போ, சுவையோ மாறாமல், அவற்றின் கருப்பொருள் (matter of substance) மட்டும் வியத்தகு முறையில் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்று போதிக்கிறது; மேலும், இந்த நிகழ்வை உட்கருப்பொருள் மாற்றம் (transubstantiation) என்று அழைக்கிறது.[13] லூதரனியர்கள், அப்பம் மற்றும் இரசத்தின் வடிவில் இயேசுவின் உடலும் இரத்தமும் பிரசன்னமாகிறது என்று நம்புகின்றனர்; இது அருட்சாதன ஒன்றிப்பு எனப்படுகிறது. கால்வின் போதனைகளைப் பின்பற்றும் சபைகள், நம்பிக்கையின் அடிப்படையிலேயே நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னம் அமைந்து இருக்கிறது என்று நம்புகின்றன. ஆங்கிலிக்கர்கள், நற்கருணையில் கிறிஸ்துவின் உண்மை பிரசன்னம் என்பது விண்ணகம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தது என்று நம்புகின்றனர். சில கிறிஸ்தவர்கள் இதில் இயேசுவின் உண்மை பிரசன்னம் என்னும் கருத்தை மறுப்பதுடன், நற்கருணையை கிறிஸ்துவின் மரணத்தின் நினைவாக மட்டும் பார்க்கின்றனர்.

உலகத் திருச்சபைகளின் மன்றம் வெளியிட்டுள்ள திருமுழுக்கு, நற்கருணை மற்றும் மறைபரப்பு பணி ஆவணம் பரணிடப்பட்டது 2008-07-09 at the வந்தவழி இயந்திரம் கிறிஸ்தவர்களிடையேயான நற்கருணை பற்றிய பொதுவான புரிந்துகொள்ளுதலை எடுத்துரைக்கிறது. அதில் நற்கருணை "கடவுளால் நமக்காக கிறிஸ்துவில் தூய ஆவியாரின் வல்லமை வழியாக உருவாக்கப்படும் தேவையான அருட்கொடையின் அருட்சாதனம்", "தந்தை கடவுளுக்கான நன்றியறிதல்", "கிறிஸ்துவின் நினைவு", "நமக்காக எப்பொழுதும் வாழ்ந்து பரிந்துபேசும் கிறிஸ்துவின் ஒப்பற்ற பலியின் அருட்சாதனம்", "கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தத்தின் அருட்சாதனம், அவரது உண்மை பிரசன்னத்தின் அருட்சாதனம்", "ஆவியின் மன்றாட்டு", "விசுவாசிகளின் ஒன்றிப்பு", "இறையரசின் திருஉணவு" என்று விவரிக்கப்படுகிறது.

சடங்கும் வழிபாடும்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை[தொகு]

நற்கருணை வழங்குதல்.

கத்தோலிக்க திருச்சபையின் நற்கருணை கொண்டாட்டம் திருப்பலி என்று அழைக்கப்படுகிறது. கத்தோலிக்க போதனையின்படி, திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்படும் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன; மேலும் இயேசு தனது ஆன்மாவோடும் இறைத் தன்மையோடும் அவற்றில் பிரசன்னமாகி இருக்கிறார். அர்ப்பண பொருட்களின் வெளித் தோற்றமும் பண்புகளும் மாற்றம் அடையாமலே இவை நடைபெறுகின்றன. கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவை ஒப்புக்கொடுக்கப்படுவது, கல்வாரியில் இயேசுவின் உடலில் இருந்து இரத்தம் தனியே பிரிக்கப்பட்டதை அடையாளப்படுத்துகிறது. இருந்தபோதிலும் அவர் உயிர்த்து எழுந்ததால், அவரது உடலும் இரத்தமும் எப்போதும் பிரிந்திருப்பதில்லை என்று திருச்சபை போதிக்கிறது; ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கிறது. எனவே, குருவானவர் அப்பத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் உடல்" என்றும், இரசக் கிண்ணத்தை உயர்த்தி "கிறிஸ்துவின் இரத்தம்" என்றும் கூறினாலும் அங்கு கிறிஸ்து முழுமையாக பிரசன்னமாகி இருக்கிறார், அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெறுபவரும் கிறிஸ்துவை முழுமையாகப் பெற்றுக்கொள்கிறார்.

இறுதி இரவுணவு வேளையில் இயேசு கூறிய வார்த்தையின் அடிப்படையில், நற்கருணை கொண்டாட்டத்தை கத்தோலிக்க திருச்சபை நோக்குகிறது: ஒத்தமைவு நற்செய்திகள் (மத்தேயு 26:26-28; மாற்கு 14:22-24; லூக்கா 22:19-20) மற்றும் பவுல் எழுதிய திருமுகம் (1 கொரிந்தியர் 11:23-25) ஆகியவற்றின்படி, இயேசு அப்பம் மற்றும் இரசம் ஆகியவற்றை சீடர்களிடம் அளித்து, "இது என் உடல் … இது என் இரத்தம்" என்று கூறினார். கத்தோலிக்க திருச்சபை இவ்வார்த்தைகளை, பூர்வீக எழுத்தாளர்களின் பின்னணியில் பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை வரலாற்றோடு இணைத்து புரிந்துகொள்கிறது. பழைய ஏற்பாட்டின் பின்னணியில் கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு தரப்படும் விளக்கம் நற்கருணையில் அவரது உண்மை பிரசன்னத்தை ஆதரிப்பதாக உள்ளது.[14] 1551ல் திரெந்து பொதுச்சங்கம் பின்வருமாறு வரையறுத்து அறிக்கையிட்டது: "நம் மீட்பரான கிறிஸ்து அவரால் அர்ப்பணிக்கப்பட்ட அப்பத்தை உண்மையான தனது உடல் என்று கூறியதால், அது எப்போதும் கடவுளின் திருச்சபையின் உறுதியான நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், ஒப்புக்கொடுக்கப்பட்ட அப்பமும் இரசமும் முழுமையாக மாற்றம் அடைந்து, அப்பத்தின் பொருள் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் உடலின் பொருளாகவும், இரசத்தின் பொருள் அவரது கிறிஸ்துவின் இரத்தத்தின் பொருளாகவும் மாறுகின்றன என்பதை இந்த திருச்சங்கம் இப்போது மீண்டும் அறிக்கையிடுகிறது. இந்த மாற்றத்தை புனித கத்தோலிக்க திருச்சபை சரியாகவும் முறையாகவும் உட்கருப்பொருள் மாற்றம் என்று அழைக்கிறது." [15][16] 1215ல் நான்காம் லாத்தரன் பொதுச்சங்கம், "இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமும், திருப்பீடத்தின் அருட்சாதனத்தில் அப்பம், இரசம் ஆகியவற்றின் வடிவில் அடங்கியிருக்கின்றன; இறை வல்லமையால் அப்பம் உடலாகவும், இரசம் இரத்தமாகவும் மாற்றம் அடைகின்றன."[17] திருத்தந்தை ஆறாம் பவுல் 1965ல் தனது சுற்றுமடலான விசுவாசத்தின் மறைபொருள் (Mysterium fidei) 1968ல் தனது இறைமக்களின் நம்பிக்கை (Credo of the People of God) பரணிடப்பட்டது 2019-05-27 at the வந்தவழி இயந்திரம் ஆகியவற்றில், நற்கருணை குறித்த விசுவாசக் கோட்பாட்டை விளக்கும் எந்த இறையியல் விளக்கமும் பின்வரும் இரு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்று குறிப்பிடுகிறார்: திருப்பலியில் ஒப்புக்கொடுக்கப்பட்ட பிறகு, 1) கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் உண்மையாகவே இருக்கிறது; மேலும் 2) அப்பமும் இரசமும் உண்மையாகவே இல்லை; மேலும் இந்த இருப்பும் இன்மையும் உண்மையானவை, நம்புபவரின் மனதைப் பொறுத்த ஒன்று அல்ல.

ஆலயத்தில் நுழைந்தவுடன் ரோமன் கத்தோலிக்கர்கள் நற்கருணை பேழையின் முன்பாக மண்டியிட்டு, நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசுவை வணங்கி ஆராதிக்கின்றனர். இயேசுவின் பிரசன்னத்தை உணர்த்தும் வண்ணம் நற்கருணை பேழையின் அருகில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.

மரபுவழி திருச்சபை[தொகு]

இறை வழிபாட்டில் பயன்படும் பொருட்கள்.

மரபுவழி திருச்சபையைச் சார்ந்த கீழை ரீதி கிறிஸ்தவர்கள் நற்கருணை வழிபாட்டை இறை வழிபாடு என்று அழைக்கின்றனர். இது இரு முக்கியப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது: முதலாவது தயாரிப்பு வழிபாடு, இதில் தொடக்க மன்றாட்டுகள், விவிலிய வாசகங்கள் மற்றும் மறையுரை ஆகியவை இடம் பெறுகின்றன; இரண்டாவது விசுவாசிகளின் வழிபாடு, இதில் நற்கருணை அர்ப்பணிக்கப்பட்டு, ஒப்புக்கொடுக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. இதில் நற்கருணை மன்றாட்டு அனஃபோரா (anaphora, (ἀνα- + φέρω) literally: "offering" or "carrying up") என்று அழைக்கப்படுகிறது. கான்ஸ்டான்டிநோபுள் வழிபாட்டு ரீதியில் புனித யோவான் கிறிசோஸ்தோம் மற்றும் புனித பெரிய பேசில் ஆகியோரின் இரண்டு வேறுபட்ட அன்ஃபோராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழை மரபுவழி திருச்சபைகளில், கான்ஸ்டான்டிநோபுள் ரீதிக்கு ஒத்த வடிவமுடைய பல அன்ஃபோராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அன்ஃபோராவின் இறுதியில் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் கருதப்படுகின்றன. ரோம் திருச்சபையைப் போலன்றி, கிழக்கு மரபுவழி திருச்சபையில் புளித்த அப்பம் பயன்படுத்தப்படுகிறது; இது தூய ஆவியின் பிரசன்னத்தை அடையாளப்படுத்துகிறது.[18] ஆர்மேனிய அப்போஸ்தல திருச்சபையில், ரோம் திருச்சபையைப் போன்றே புளிப்பற்ற அப்பம் பயன்படுத்தப்படுகிறது.

முறைப்படி இந்த அர்ப்பண பொருட்களின் மாற்றம் தூய ஆவியின் உதவியைக் கோரி, அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாற ஒப்புக்கொடுக்கும் மன்றாடின் (கிரேக்க மொழி: Epiclesis) நிறைவில் நிகழ்கிறது.

சிரியாக் திருச்சபை[தொகு]

புனித காணிக்கை அல்லது புனித பலி என்பது கீழை சிரியன் ரீதி மற்றும் மேலை சிரியன் ரீதி மரபுகளின் சிரியாக் கிறிஸ்தவர்களின் நற்கருணை கொண்டாட்டத்தைக் குறிக்கிறது. சிரியாக் கிறிஸ்தவர்களின் நற்கருணை வழிபாடு கி.பி.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த பழமையான முறையாகும்.

ஆங்கிலிக்கன் திருச்சபை[தொகு]

ஆங்கிலிக்க ஒன்றியத்தின் பெரும்பாலான ஆலயங்களில், ஒவ்வொரு ஞாயிறும் காலை செபத்துக்கு மாற்றான முதன்மை வழிபாடாக நற்கருணை கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆங்கிலிக்கன் திருச்சபைகளின் பல்வேறு பொது செப புத்தகங்களில் இதற்கான வழிபாட்டு முறைகள் இடம் பெற்றுள்ளன; இதில் அப்பமும் இரசமும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான கதீட்ரல்களில் தினமும், பங்கு ஆலயங்களில் வாரத்தில் பல முறைகளும் இந்த வழிபாடு நடைபெறுகிறது. இதன் வழிபாட்டு முறைகள் இடத்துக்கும், மக்களின் மனநிலைக்கும் ஏற்ப மாறுபடுகின்றன.

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. Ignazio Silone, Bread and Wine (1937).
 2. மாற்கு 14:22-25 'அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து, "இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.'
 3. லூக்கா 22:19-20 'இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" என்றார்.'
 4. Bruce Metzger. The canon of the New Testament. 1997
 5. "There are now two quite separate Eucharistic celebrations given in Didache 9-10, with the earlier one now put in second place." Crossan. The historical Jesus. Citing Riggs, John W. 1984
 6. 9.1 Concerning the thanksgiving (tēs eucharistias) give thanks thus: 9.2 First, concerning the cup: "We give thanks to you, our Father, For the holy vine of David your servant which you have revealed to us through Jesus your servant. To you be glory for ever." 9.3 And concerning the fragment: "We give thanks to you, our Father, For the life and knowledge, which you have revealed to us through Jesus your servant." But let no one eat or drink of your Eucharist, unless they have been baptized into the name of the Lord; for concerning this also the Lord has said, "Give not that which is holy to the dogs." 10.1 After you have had your fill, give thanks thus: 10.2 We give thanks to you holy Father for your holy Name which you have made to dwell in our hearts and for the knowledge, faith and immortality which you have revealed to us through Jesus your servant. To you be glory for ever. 10.3 You Lord almighty have created everything for the sake of your Name; you have given human beings food and drink to partake with enjoyment so that they might give thanks; but to us you have given the grace of spiritual food and drink and of eternal life through Jesus your servant. 10.4 Above all we give you thanks because you are mighty. To you be glory for ever. 10.5 Remember Lord your Church, to preserve it from all evil and to make it perfect in your love. And, sanctified, gather it from the four winds into your kingdom which you have prepared for it. Because yours is the power and the glory for ever. ...
 7. 14.1 But every Lord's day do ye gather yourselves together, and break bread, and give thanksgiving after having confessed your transgressions, that your sacrifice may be pure. 14.2. But let no one that is at variance with his fellow come together with you, until they be reconciled, that your sacrifice may not be profaned. 14.3. For this is that which was spoken by the Lord: In every place and time offer to me a pure sacrifice; for I am a great King, saith the Lord, and my name is wonderful among the nations.
 8. The tradition that Ignatius was a direct disciple of the Apostle John is consistent with the content of his letters (Introduction to the Roberts-Donaldson translation of his writings.)
 9. " ... (t)he eucharist is the flesh of our Saviour Jesus Christ, which flesh suffered for our sins, and which in His loving-kindness the Father raised up. ... Let that eucharist alone be considered valid which is under the bishop or him to whom he commits it. ... It is not lawful apart from the bishop either to baptize, or to hold a love-feast. But whatsoever he approves, that also is well-pleasing to God, that everything which you do may be secure and valid." Letter to the Smyrnaeans, 6, 8 "Give heed to keep one Eucharist. For there is one flesh of our Lord Jesus Christ, and one cup unto union with His blood. There is one altar, as there is one bishop, together with the presbytery and deacons, my fellow-servants; that whatsoever you do, you may do according unto God."Letter to the Philadelphians, 4
 10. There is then brought to the president of the brethren bread and a cup of wine mixed with water; and he taking them, gives praise and glory to the Father of the universe, through the name of the Son and of the Holy Ghost, and offers thanks at considerable length for our being counted worthy to receive these things at His hands. And when he has concluded the prayers and thanksgivings, all the people present express their assent by saying Amen. This word Amen answers in the Hebrew language to γένοιτο [so be it]. And when the president has given thanks, and all the people have expressed their assent, those who are called by us deacons give to each of those present to partake of the bread and wine mixed with water over which the thanksgiving was pronounced, and to those who are absent they carry away a portion. And this food is called among us Εὐχαριστία [the Eucharist], of which no one is allowed to partake but the man who believes that the things which we teach are true, and who has been washed with the washing that is for the remission of sins, and unto regeneration, and who is so living as Christ has enjoined. For not as common bread and common drink do we receive these; but in like manner as Jesus Christ our Saviour, having been made flesh by the Word of God, had both flesh and blood for our salvation, so likewise have we been taught that the food which is blessed by the prayer of His word, and from which our blood and flesh by transmutation are nourished, is the flesh and blood of that Jesus who was made flesh. For the apostles in the memoirs composed by them, which are called Gospels, have thus delivered unto us what was enjoined upon them; that Jesus took bread, and when He had given thanks, said, "This do ye in remembrance of Me, this is My body"; and that, after the same manner, having taken the cup and given thanks, He said, "This is My blood"; and gave it to them alone. Which the wicked devils have imitated in the mysteries of Mithras, commanding the same thing to be done. For, that bread and a cup of water are placed with certain incantations in the mystic rites of one who is being initiated, you either know or can learn. ... And on the day called Sunday, all who live in cities or in the country gather together to one place, and the memoirs of the apostles or the writings of the prophets are read, as long as time permits; then, when the reader has ceased, the president verbally instructs, and exhorts to the imitation of these good things. Then we all rise together and pray, and, as we before said, when our prayer is ended, bread and wine and water are brought, and the president in like manner offers prayers and thanksgivings, according to his ability and the people assent, saying Amen; and there is a distribution to each, and a participation of that over which thanks have been given, and to those who are absent a portion is sent by the deacons. First Apology, 65-67
 11. For example, Roman Catholics, Eastern Orthodox, Oriental Orthodox, "Anglo-Catholic" Anglicans, Old Catholics; and cf. the presentation of the Eucharist as a sacrament in the Baptism, Eucharist and Ministry document பரணிடப்பட்டது 2008-07-09 at the வந்தவழி இயந்திரம் of the World Council of Churches
 12. "Most Christian traditions also teach that Jesus is present in the Eucharist in some special way, though they disagree about the mode, the locus, and the time of that presence" (Encyclopaedia Britannica Online).
 13. Catechism of the Catholic Church, 1333 (emphasis added)
 14. ""Abrahamic, Mosaic, and Prophetic Foundations of the Eucharist." Inside the Vatican 16, no. 4 (2008): 102-105". Archived from the original on 2010-12-10. பார்க்கப்பட்ட நாள் 2010-12-10.
 15. CCC 1376
 16. Session XIII, chapter IV; cf. canon II)
 17. Canon 1. A misprint in this source gives "transubstantiatio" in place of "transubstantiatis" of the original: "Iesus Christus, cuius corpus et sanguis in sacramento altaris sub speciebus panis et vini veraciter continentur, transsubstantiatis pane in corpus, et vino in sanguinem potestate divina" (Denzinger 8020.
 18. Steven Runciman, The Great Church in Captivity (Cambridge University Press 1968 ISBN 0-521-31310-4), p. 90

வெளி இணைப்புகள்[தொகு]

வழிபாட்டு பாடமும் முறையும்[தொகு]

வரலாறு, இறையியல், வழக்கம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்கருணை&oldid=3560266" இலிருந்து மீள்விக்கப்பட்டது