பீட்டர் கனிசியு
Jump to navigation
Jump to search
புனித பீட்டர் கனிசியு, சே.ச. | |
---|---|
![]() | |
குரு, மறைப்பணியாளர், மறைவல்லுநர் | |
பிறப்பு | மே 8, 1521 நெதர்லாந்து |
இறப்பு | 21 திசம்பர் 1597 ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து | (அகவை 76)
ஏற்கும் சபை/சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | ஒன்பதாம் பயஸ்-ஆல் 1864, உரோமை |
புனிதர் பட்டம் | பதினொன்றாம் பயஸ்-ஆல் 21 மே 1925, உரோமை |
முக்கிய திருத்தலங்கள் | புனித மிக்கேல் கல்லூரி ஃப்ரிபோர்க், சுவிட்சர்லாந்து |
திருவிழா | 21 டிசம்பர்; 27 ஏப்ரல் (1926-1969) |
பாதுகாவல் | கத்தோலிக்க இதழ்கள், செருமனி நாடு |
புனித பீட்டர் கனிசியு (டச்சு: Pieter Kanis), (8 மே 1521 – 21 டிசம்பர் 1597) என்பவர் ஒரு இயேசு சபை குருவும் கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தின் போது செருமனி, ஆசுதிரியா, போகிமியா, மோராவியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியநாடுகளில் கத்தோலிக்க திருச்சபையின் படிப்பினைகளை மக்களுக்கு புரியுமாறு விளக்கி கூறியவரும் ஆவார். கத்தோலிக்க திருச்சபை கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்பு செருமனியில் கண்ட மறுமலர்ச்சிக்கு இவரும் இயேசு சபையுமே காரணம் என நம்பப்படுகின்றது.
இவர் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் எனவும் திருச்சபையின் மறைவல்லுநர் எனவும் ஏற்கப்படுகின்றார்.