நான்கு நற்செய்தியாளர்கள்
Appearance
நான்கு நற்செய்தியாளர்கள் என்பவர்கள் கிறித்தவ மரபில் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நால்வரைக்குறிக்கும். இவர்கள் நால்வரும் இயேசுவின் வரலாற்றை விவரிக்கும் பின்வரும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளின் ஆசிரியர்களாகக்கருதப்படுகின்றனர்:
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய முதல் மூன்று நூல்களும் தமக்குள் மிகப் பெரும் அளவில் ஒத்திருப்பதால்,இவை ஒத்தமை நற்செய்திகள் என்று அழைக்கப்படுகின்றன. மரபுப்படி இவர்களைப்பற்றியத்தகவல்கள்:
- மத்தேயு – வரி வசூளிப்பவராக இருந்தவர். இயேசுவின் அழைப்பை ஏற்று அவரின் சீடராகவும் பின்னர் திருத்தூதர்களுள் ஒருவராகவும் இருந்தவர்,
- மாற்கு – இவர் பேதுருவின் சீடர்,
- லூக்கா – இவர் ஒரு மருத்துவர். இவர் தனது நற்செய்தியினையும் திருத்தூதர் பணிகள் நூலினையும் தியோபில் என்பவருக்காக எழுதியதாக இவரே குரிக்கின்றார். இவர் திருத்தூதர் பவுலின் நண்பர்.
- யோவான் – இவர் சீடரும் திருத்தூதர்களுள் ஒருவரும் ஆவார். இவரே மிக இளைய திருத்தூதர் என்பர்.
இயேசுவின் நற்செய்தியினை வெளிப்படுத்து நூல்களை இவர்கள் எழுதியதால் நற்செய்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The good news of Jesus Christ, the Son of God." Mark 1:1