உள்ளடக்கத்துக்குச் செல்

அகபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அகபு
அகபுவின் இறைவாக்கு
ஓவியர்: லூயிஸ் சேரோன் (1660-1713)
மறைசாட்சி, சீடர்
பிறப்பு1ம் நூற்றாண்டு
அந்தியோக்கியா
இறப்புதகவல் இல்லை
அந்தியோக்கியா
ஏற்கும் சபை/சமயங்கள்கிறித்தவம்
திருவிழாபிப்ரவரி 13 கத்தோலிக்க திருச்சபை)
மார்ச் 8 (கிழக்கு மரபுவழி திருச்சபை)
பாதுகாவல்இறைவாக்கினர்கள்

புனித அகபு அல்லது புனித அகபுஸ் (கிரேக்க மொழி: Ἄγαβος) என்பவர் ஆதி கிறித்தவ திருச்சபையின் முதல் சீடர்களுள் ஒருவர். இவரை இறைவாக்கினர் என அப்போஸ்தலர் பணி குறிக்கின்றது. லூக்கா நற்செய்தி 10:1-24இல் குறிப்பிடப்படும் கிறித்துவின் எழுபது சீடர்களுள் இவரும் ஒருவர் என நம்பப்படுகின்றது.[1][2][3]

திருத்தூதர் பணிகள் 11:27-28இன் படி இவர் எருசலேமிலிருந்து அந்தியோக்கியாவுக்கு வந்த இறைவாக்கினர்களுள் ஒருவர். இவர் தூய ஆவியாரால் ஏவப்பட்டு உலகமெங்கும் கொடிய பஞ்சம் ஏற்படப்போகிறது என்று முன்னுரைத்தார். அது கிளாதியு பேரரசர் காலத்தில் ஏற்பட்டது.

மேலும் திருத்தூதர் பணிகள் 11:27-28இன் படி, இவர் மற்ற சீடர்களிடம் சென்று திருத்தூதர் பவுலின் இடைக் கச்சையை எடுத்து தம் கைகளையும் கால்களையும் கட்டிக் கொண்டு, இந்தக் கச்சைக்குரியவரை எருசலேமில் யூதர்கள் இவ்வாறு கட்டிப் பிற இனத்தாரிடம் ஒப்புவிப்பார்கள் என எச்சரித்தார். இருப்பினும் பவுல் எருசலேமுக்கு சென்றார்.

இவர் பல கிறித்தவப்பிரிவுகளில் புனிதர் என ஏற்கப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் பிப்ரவரி 13 ஆகும்.

பாரம்பரியப்படி இவர் அந்தியோக்கியாவில் மறைசாட்சியாக இறந்தார் என்பர்.

ஆதாரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. David Miall Edwards, in International Standard Bible Encyclopedia entry: Agabus http://biblehub.com/topical/a/agabus.htm accessed 24 September 2015
  2. "The Martyrdom of St. Agabus, One of the Seventy Disciples", Coptic Orthodox Church Network
  3. Maas, A. in   "Agabus". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்) 1. (1907). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகபு&oldid=3751999" இலிருந்து மீள்விக்கப்பட்டது