பெத்சாயிதாவின் பார்வையற்றவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல். ஓவியர்: மின்ரோனோவ்

பெத்சாயிதாவின் பார்வையற்றவர் என்பவர் இயேசுவின் செய்த புதுமையினால் கண் பார்வை பெற்ற ஒருவர் ஆவார். இவரைப்பற்றிய குறிப்பு மாற்கு 8:22-26இல் மட்டுமே உள்ளது.[1][2]

மாற்கு நற்செய்தியின்படி இயேசு கிறித்து கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊருக்கு வந்த போது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் குணமாக்க வேண்டினர். இயேசு பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்று அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார். பார்வையற்றவர் நிமிர்ந்து பார்த்து, “மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால் நடக்கிறார்கள்” என்று சொன்னார். இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். எனக் குறிக்கின்றது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Miracles of Jesus by Craig Blomberg, David Wenham 2003 ISBN 1592442854 page 419
  2. Biblegateway Mark 8:22-26
பெத்சாயிதாவின் பார்வையற்றவர்
இயேசுவின் வாழ்வு: புதுமைகள்
முன்னர்
கடல்மீது நடத்தல்
இயேசுவின் புதுமைகள்
புதிய ஏற்பாடு
நிகழ்வுகள்
பின்னர்
இயேசுவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை
இயேசுவின் பணிவாழ்வு