உள்ளடக்கத்துக்குச் செல்

அரிமத்தியா யோசேப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனித யோசேப்பு
இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்படுதலை சித்தரிக்கும் 14ம் நூற்றாண்டு பைசாந்திய திருஓவியம். காப்பிடம்: புனித மரினா கோவில், சைப்பிரஸ். அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு நடுவில் இயேசுவின் உடலை சுற்ற துணிகளோடு நிற்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கும் சபை/சமயங்கள்கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம்
திருவிழாமார்ச் 17 மேற்கில், ஜூலை 31 கிழக்கில், ஆகஸ்ட் 1
பாதுகாவல்நீத்தோர் இறுதி சடங்கினை வழிநடத்துவோர்[1]

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனித யோசேப்பு என்பவர் நற்பெய்திகளின் படி இயேசுவின் சாவுவுக்குப்பின்பு அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது. மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது. யோவான் 19:38 இவரை இயேசுவின் சீடர்களுள் ஒருவர் எனவும் யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர் எனவும் குறிக்கின்றது. இதன்படி இவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்து நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு இயேசுவின் இறப்பை உறுதிசெய்தபின்பு யோசேப்பிடம் இயேசுவின் உடலை அளித்தான்.

நிக்கதேமின் துணையோடு கொல்கொதாவில் இவர் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து இறக்கி யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார். ஒரு புதிய கல்லறை ஒன்றில் அவரின் உடலை அடக்கம் செய்தார் என விவிலியம் கூறுகின்றது.

கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம் மற்றும் சில ஆங்கிலிக்கம் சபைகள் இவரை புனிதர் என ஏற்கின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas Craughwell (2005). "A Patron Saint for Funeral Directors". Catholicherald.com. Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 14, 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிமத்தியா_யோசேப்பு&oldid=3592725" இலிருந்து மீள்விக்கப்பட்டது