பெத்தானியாவின் இலாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தானியாவின் புனித இலாசர்
கிறிஸ்து இலாசரை உயிர்பெறச்செய்தல், ஏதென்ஸ், 12-13ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்கிழக்கு மரபுவழி திருச்சபை
கத்தோலிக்க திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
திருவிழாடிசம்பர் 17.[1][2] அல்லது ஜூலை 29.
சித்தரிக்கப்படும் வகைதிருத்தூதர் உடைகளில் அல்லது ஆயர் உடைகளில். புதுமையினை சித்தரிக்கும் போது கட்டுத்துணியால் கட்டப்பட்டவாறு

பெத்தானியாவின் இலாசர் அல்லது புனித இலாசர் என்பவர் யோவான் நற்செய்தியின்படி இறந்த நான்கு நாட்களுக்குப்பின்னர் இயேசு கிறித்துவால் உயிர் பெற்றவர் ஆவார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் இயேசு செய்த ஏழு புதுமைகளில் ஒன்றாகும்.[3] கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மரபுகளில் இலாசரின் பின்னாட்கள் குறித்த ஒத்த கருத்தில்லை.

கடவுளே எனக்கு உதவி[4] எனப்பொருள்படும் இலாசர் என்னும் பெயரானது லூக்கா நற்செய்தியில் செல்வந்தனும் இலாசரசும் உவமையில் மறொருவருக்கும் வழங்கப்படுவது குறிக்கத்தக்கக்து.[5]

யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்படும் இந்த நிகழ்வினாலே இறந்ததாகக்கருதப்படும் உயிரினம் உயிர்பெறும் நிகழ்வை குறிக்க இலாசரின் பெயர் பயன்படுத்தப்படுகின்றது. Lazarus taxon என்னும் சொல் தொல்லுயிர் எச்சப் பதிவுகளில் சில காலத்திற்கு காணாமல் இருந்ததால் அழிந்த இணம் எனக்கருதப்பட்டவை மீண்டும் காணக்கிடைக்கும் நிகழ்வைக்குறிக்கின்றது. அதேபோல Lazarus phenomenon என்னும் சொல் மீளுயிர்ப்புச் சுவாசம் கைவிடப்பட்டப்பின்பு மீண்டும் உயிர்பெற்று இதயம் துடிக்கும் நிகழ்வை குறிக்கப்பயன்படுத்தப்படுகின்றது.

கலையில்[தொகு]

கிறிஸ்து இலாசரை உயிர்பெறச்செய்த நிகழ்வானது கிறித்தவ சமயக்கலையில் அதிகம் இடம்பெற்றுள்ளது.[6] ரெம்பிரான்ட், வின்சென்ட் வான் கோ முதலிய பல குறிக்கத்தக்க ஓவியர்கள் இதனைத்தீட்டியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Roman Martyrology. Transl. by the Archbishop of Baltimore. Last Edition, According to the Copy Printed at Rome in 1914. Revised Edition, with the Imprimatur of His Eminence Cardinal Gibbons. Baltimore: John Murphy Company, 1916. p. 387.
  2. The Benedictine Monks of St. ஆகஸ்ட்ine's Abbey, Ramsgate (Comp.). The Book of Saints: A Dictionary of Servants of God Canonised by the Catholic Church: Extracted from The Roman and Other Martyrologies. London: A & C Black Ltd., 1921. p. 163.
  3. Merrill C. Tenney. Kenneth L. Barker & John Kohlenberger III. ed. Zondervan NIV Bible Commentary. Grand Rapids, Michigan: Zondervan Publishing House. 
  4. William Barclay, The Parables of Jesus, Westminster John Knox Press, 1999, ISBN 0-664-25828-X, pp. 92–98.
  5. Luke 16:19–31
  6. For the treatment of this subject in Western European art, see the discussion in Franco Mormando, "Tintoretto's Recently Rediscovered Raising of Lazarus, in The Burlington Magazine, v. 142 (2000): pp. 624-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தானியாவின்_இலாசர்&oldid=2716819" இலிருந்து மீள்விக்கப்பட்டது