அர்க்கிப்பு
அர்க்கிப்பு | |
---|---|
மறைசாட்சி | |
பிறப்பு | கொலேசை |
இறப்பு | சுமார் 1ம் நூற்றாண்டு |
திருவிழா | 20 மார்ச் (கத்தோலிக்க திருச்சபை) 19 பெப்ரவரி (கிழக்கு மரபுவழி திருச்சபைகள்) |
அர்க்கிப்பு (/ɑːrˈkɪpəs/; கிரேக்கம்: Ἅρχιππος, "வீட்டின் தலைவர்") என்பவர் துவக்ககால கிறித்தவர்களுள் ஒருவரும் புதிய ஏற்பாட்டு நூல்களான திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகம் மற்றும் கொலோசையருக்கு எழுதிய திருமுகம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நபரும் ஆவார்.
பிலமோனுக்கு எழுதிய திருமுத்தில் பிலமோன் மற்றும் அவரின் மனைவி அப்பியாவோடு இவரும் குறிப்பிடப்படுகின்றார். இவரை குறிப்பிடுகையில் இவரை எங்கள் போராட்டத்தில் பங்குபெறும் அர்க்கிப்பு என்று புகழ்கின்றார்.[1] கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் பவுல் "ஆண்டவரது பணியில் தாம் பெற்றுள்ள திருத்தொண்டை நிறைவேற்றி முடிக்கக் கவனமாயிருக்குமாறு அர்க்கிப்பிடம் சொல்லுங்கள்" என்று குறிப்பிடுகின்றார்.[2]
சில நூல்களின் படி இவர் இலாஓடியுசின் (தற்போது துருக்கியில் உள்ளது) ஆயர் என்பர்.[3] மேலும் வேறு சில மரபுகளின் படி இயேசு கிறித்துவின் எழுபது சீடர்களில் இவரும் ஒருவராக இருக்கலாம். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் மார்ச் 20 ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Philemon 1:2
- ↑ Colossians 4:17
- ↑ Apostolic Constitutions 7.46, 4-ஆம் நூற்றாண்டு