உள்ளடக்கத்துக்குச் செல்

மாற்கு (நற்செய்தியாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நற்செய்தியாளரான புனித மாற்கு
நற்செய்தியாளர், மறைசாட்சி
பிறப்பு1ஆம் நூற்றாண்டு (கி. பி)
காப்டிக் மரபுப்படி ஆப்ரிக்காவில் உள்ள இலிபியாவில்[1]
இறப்புதகவல் இல்லை[2]
ஏற்கும் சபை/சமயங்கள்காப்டிக் மரபுவழி திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, லூதரனியம்
முக்கிய திருத்தலங்கள்Saint Mark's Coptic Orthodox Cathedral (கெய்ரோ, எகிப்து)
Saint Mark's Coptic Orthodox Cathedral (அலெக்சாந்திரியா, எகிப்து)
Basilica di San Marco (வெனிசு, இத்தாலி)
திருவிழாஏப்ரல் 25
சித்தரிக்கப்படும் வகைபாலைவனத்தில் சிங்கம்; சிங்கங்கள் சூழ்ந்த அறியனையில் ஆயர் உடையில்; வெனிசு நகரின் மாலுமிகளைக் காப்பது போல; "pax tibi Marce" என்னும் எழுத்துக்களை தாங்கிய புத்தகத்தோடு; இரு இரக்கைகள் உடைய சிங்கம்;
பாதுகாவல்பார் அட் லா, வெனிசு, எகிப்து, மற்றும் பல

நற்செய்தியாளரான புனித மாற்கு (இலத்தீன்: Mārcus; கிரேக்க மொழி: Μᾶρκος; எபிரேயம்: מרקוס‎) என்பவர் பாரம்பரியப்படி மாற்கு நற்செய்தியின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார். மேலும் இவர் இயேசுவின் எழுபது சீடர்கலுள் ஒருவராகவும். கிறித்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் நிருவனராகவும் கருதப்படுகின்றார்.

வரலாற்றாசிரியரான யுசிபசின் (Eccl. Hist. 2.24.1) படி, மாற்கு அனனியாசு என்பவருக்குப்பின்பு, நீரோ மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (62/63) அலெக்சாந்திரியாவின் ஆயரானார். பாரம்பரியப்படி கி.பி 68 இல் இவர் மறைசாட்சியாக மரித்தார் என்பர்.[2][1][3][4][5]

மாற்கு நற்செய்தி 14:51-52இல் கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்டப்பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்பது மரபு; இயேசுவை கைது செய்தவர்கள் இவரைப்பிடித்தபோது தம் வெறும் உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியைப் விட்டு விட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார்.

கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இவரின் விழா ஏப்ரல் 25இல் கொண்டாடப்படுகின்றது. இவரை பொதுவாக இரண்டு இறக்கைகளை உடைய சிங்கத்தைக்கொண்டு கலைகளில் சித்தரிப்பர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "St. Mark The Apostle, Evangelist". Coptic Orthodox Church Network. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2012.
  2. 2.0 2.1 "Catholic Encyclopedia, St. Mark". பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. அப்போஸ்தலர் பணி 15:36-40
  4. 2 திமொத்தேயு (நூல்) 4:11
  5. Philemon 24
  6. Senior, Donald P. (1998), "Mark", in Ferguson, Everett (ed.), Encyclopedia of Early Christianity (2nd ed.), New York and London: Garland Publishing, Inc., p. 720, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8153-3319-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்கு_(நற்செய்தியாளர்)&oldid=3300992" இலிருந்து மீள்விக்கப்பட்டது