கபிரியேல் தேவதூதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபிரியேல்
அதிதூதர்
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம், கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்
திருவிழா

செப்டம்பர் 29 (தூய மிக்கேல் மற்றும் தூய ரபேலோடு சேர்ந்து)

மரபு வழி திருச்சபைகளில்: நவம்பர் 8


கபிரியேல் (எபிரேயம்:גַּבְרִיאֵל, இறைவன் என் பலம்; அரபு மொழி: جبريل, Jibrīl or جبرائيل Jibrāʾīl) என்பவர் ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.

கிறித்தவ நம்பிக்கைகள்[தொகு]

இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறித்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறித்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்.

இசுலாமிய நம்பிக்கைகள்[தொகு]

இசுலாமிய இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குரான் குறிப்பிடுகின்றது. இவர் இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குரான் குறிப்பிடுகிறது. இசுலாமிய நம்பிக்கையில் இவர் தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது. மேலும் புனித குரான் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது எனபது இசுலாமிய நம்பிக்கை.

பிற நம்பிக்கைகள்[தொகு]

சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

கன்னி மரியாளுக்கு கபிரியேல் தூதுரைகின்றார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிரியேல்_தேவதூதர்&oldid=2048673" இருந்து மீள்விக்கப்பட்டது