ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)
| அருளாளர் ஒன்பதாம் பயஸ் | |
|---|---|
| ஆட்சி துவக்கம் | 16 ஜூன் 1846 |
| ஆட்சி முடிவு | 7 பெப்ரவரி 1878 |
| முன்னிருந்தவர் | பதினாறாம் கிரகோரி |
| பின்வந்தவர் | பதின்மூன்றாம் லியோ |
| திருப்பட்டங்கள் | |
| குருத்துவத் திருநிலைப்பாடு | 10 ஏப்ரல் 1819 |
| ஆயர்நிலை திருப்பொழிவு | 3 ஜூன் 1827 திருத்தந்தை எட்டாம் பயஸ்-ஆல் |
| கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 14 டிசம்பர் 1840 திருத்தந்தை பதினாறாம் கிரகோரி-ஆல் |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | ஜியோவானி மரிய மாஸ்தாய்-ஃபெரெத்தி |
| பிறப்பு | 13 மே 1792 திருத்தந்தை நாடுகள் |
| இறப்பு | 7 பெப்ரவரி 1878 (அகவை 85) திருத்தூதரக அரண்மனை, உரோமை நகரம், இத்தாலிய பேரரசு |
| வகித்த பதவிகள் |
|
| கையொப்பம் | |
| புனிதர் பட்டமளிப்பு | |
| திருவிழா | 7 பெப்ரவரி |
| பகுப்பு | திருத்தந்தை |
| முத்திப்பேறு | 3 செப்டம்பர் 2000 புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்-ஆல் |
| பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் | |
அருளாளர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (இலத்தீன்: Pius IX; 13 மே 1792 – 7 பெப்ரவரி 1878), இயற்பெயர் ஜியோவானி மரிய மாஸ்தாய்-ஃபெரெத்தி, என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 16 ஜூன் 1846 முதல் 1878இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். 32 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்த இவரே அதிக காலம் இப்பதவியினை வகித்தவர் ஆவார். இவர் கூட்டிய முதல் வத்திக்கான் பொதுச்சங்கம் (1869-1870) திருத்தந்தையின் தவறா வரம் ஒரு விசுவாசக் கோட்பாடு என அறிக்கையிட்டது.
தூய கன்னி மரியாவின் அமலோற்பவத்தை இவர் ஆதரித்தார். மரியாவுக்கு இடைவிடா சகாய மாதா என்னும் பட்டத்தையும் அளித்தார். இப்பட்டத்துக்கு காரணமான கிரீட் தீவு பைசாந்திய ஓவியத்தை உலக இரட்சகர் சபை குருக்களின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.
திருத்தந்தை நாடுகளின் அரசராக இருந்த இறுதி திருத்தந்தை இவர் ஆவார். 1870இல் அது இத்தாலிய தேசியவாத படையினரால் கைப்பற்றப்பட்டு இத்தாலிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.
1878இல் இவரின் இறப்புக்குப்பின்பு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 6 ஜூலை 1985 அன்று இவரை வணக்கத்திற்குரியவர் என அறிவித்தார். திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானோடு இவருக்கும் 3 செப்டம்பர் 2000இல் அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் பெப்ரவரி 7 ஆகும்.[1]