உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தூதரக அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பேதுரு சதுக்கத்திலிருந்து திருத்தூதரக அரண்மனையின் தோற்றம்

திருத்தூதரக அரண்மனை (இத்தாலியம்: Palazzo Apostolico) என்பது திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.[1] இது வத்திக்கான் நகரில் அமைந்துள்ளது. இதனை புனித அரண்மனை, திருத்தந்தையின் அரண்மனை அல்லது வத்திக்கான் அரண்மனை என்றும் அழைப்பர். ஆனாலும் ஐந்தாம் சிக்ஸ்துஸின் நினைவாக இதன் அதிகாரப்பூர்வ பெயர் ஐந்தாம் சிக்ஸ்துஸின் அரண்மனை என்பதாகும்.[1]

வரலாறு

[தொகு]

அவிஞான் திருத்தந்தையர்களின் காலத்தில் இவ்வரண்மனை கைவிடப்பட்டு பாழானது. 1436இல் எசுப்பானிய எழுத்தாளரான பெத்ரோ தாஃபூர் என்பவர் இவ்வரண்மனை நிலையினை விவரித்துள்ளார்.[2]

தற்போது உள்ள அரண்மனை 30 ஏப்ரல் 1589இல்[3] ஐந்தாம் சிக்ஸ்துஸின் ஆட்சியில் ஆரம்பிக்கப்படு ஏழாம் அர்பன், பதினொன்றாம் இன்னசெண்ட் மற்றும் எட்டாம் கிளமெண்ட் ஆகியோரின் ஆட்சியில் படிப்படியாகக்கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Vatican Press Office guide - buildings of the Vatican
  2. Pedro Tafur, Andanças e viaje.
  3. The lives of the modern painters, sculptors and architects - Giovanni Pietro Bellori
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தூதரக_அரண்மனை&oldid=1806517" இலிருந்து மீள்விக்கப்பட்டது