மரியாவின் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல ஆலோசனை மாதா. ஓவியர்: பாஸ்குவேல் சாருலோ, 19ம் நூற்றாண்டு

இயேசுவின் தாயான தூய மரியா பல பெயர்களால் கிறித்தவர்களிடையே அறியப்படுகின்றார். இப்பெயர்களுள் பட்டங்கள் (ஆசி பெற்றவர், கன்னி, அன்னை), அடைமொழிகள் (விடியற்காலத்தின் விண்மீன், கடலின் விண்மீன் (Star of the Sea), விண் அரசி, எங்கள் மகிழ்ச்சியின் காரணம்), காரியப் பெயர்கள்(கடவுளை ஏந்துபவர் (Theotokos), முற்றிலும் தூயவர் (Panagia), இரக்கத்தின் அன்னை) மற்றும் அரோக்கிய அன்னை முதலிய பிற பெயர்களும் அடங்கும்.

இப்பெயர்கள் அனைத்தும் இயேசுவின் தாயான தூய மரியா என்னும் ஒரு நபரையே குறிக்கும். இப்பெயர்கள் புனிதர்களின் உறவு நிலையினை ஏற்கும் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம் முதலிய பல சபைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மரியாவின் இப்பெயர்கள் ஏதேனும் இறையியட்கோட்பாடுகளின் பேரில் அமைந்திருக்கும். எனினும் பல பெயர்கள் கவிதை நடைக்காவவும் பயன்படுகின்றது. கலை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டிடுக்கும் வகையினைக்கொண்டும் மரியாவுக்கு பல பெயர்கள் உள்ளன.

மரியாவின் பழம்பெரும் பெயர்கள்[தொகு]

தமிழ் இலத்தீன் கிரேக்கம் குறிப்புகள்
மரியாமோட்ச அலங்காரி Maria Mariam (Μαριάμ), Maria (Μαρία) அரபு மொழி: Maryām (مريم), சீனம்: (瑪利亞), காப்டிக்: Mariam, பிரான்சிய மொழி : Marie, இடாய்ச்சு மொழி: Maria, இத்தாலிய மொழி: Maria, அரமேயம்: Maryām (מרים), மால்திய மொழி: Marija, போர்த்துக்கேய மொழி: Maria, உருசிய மொழி: Marija (Мария), எசுப்பானியம்: María, சிரியாக்: Mariam, வியட்நாமிய மொழி: Maria; Marija
"அருள்மிகப் பெற்றவர்", "அருள் நிரைந்தவர்" Gratia plena, Beata, Beatissima kecharitomene[1] (κεχαριτωμένη) Luke 1:28இல் உள்ளபடி கபிரியேல் என்னும் வானதூதரின் வாழ்த்து.
கன்னி Virgo Parthenos[2][3] (Παρθένος) அந்தியோக்கு இஞ்ஞாசியார் மரியாவின் கன்னித்தன்மையினையும், கடவுளின் தாய்த்தன்மையினையும் எடுத்தியம்பி ஊள்ளார்.
எங்கள் மீட்பின் காரணமே causa salutis[4] முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித இரனேயு (150–202);
"Advocate of Eve" advocata Evæ[5] முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித இரனேயு (150–202);
கடவுளின் தாய் Mater Dei Meter Theou (Μήτηρ Θεοῦ) இப்பதம் பொதுவாக ΜΡ ΘΥ என கிரேக்க திருவோவியங்களில் காட்சிப்படுத்தப்படும்;
கடவுளைத் தாங்குபவர் Deipara, Dei genetrix இறைவனின் தாய் (Θεοτόκος) கிறிஸ்தியல் தாக்கங்கள் உடைய இப்பெயர் கிழக்கு கிறித்தவ திருச்சபைகளின் மிகவும் பயன்படுத்தப்படுகின்றது. முதலாம் எபேசு சங்கம் இப்பெயரினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முப்போதும் கன்னி semper virgo aie-parthenos[2] (ἀειπάρθενος)
"புனித மரியா", "தூய மரியா" Sancta Maria Hagia Maria[2] (Ἁγία Μαρία) கிரேக்க திருச்சபைகளில் ஆரம்பமான இது இப்போது கிழக்கு கிறித்தவ திருச்சபைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுவதில்லை;[6]
"மிகவும் புனிதமானவர் " ("Most Holy") Sanctissima, tota Sancta[7] Panagia (Παναγία)
"மிகவும் தூயவர்" ("Most Pure") Purissima
"அமல உற்பவம்" immaculata akeratos[2] (ἀκήρατος)
"தலைவி", "எஜமாணி" Domina Despoina[2] (Δέσποινα) "Madonna" (இத்தாலியத்தில் Madonna, ma "my" + donna "lady"; இலத்தீன் domina); மேலும், "Notre Dame" (French: Notre Dame);
"விண் அரசி" Regina Coeli, Regina Caeli மரியா Revelation 12:1இல் உள்ள பெண் என உருவகப்படுத்தி;
"கடலின் விண்மீன்" stella maris முதன்முதலில் இப்பெயரினை பயன்படுத்தியவர் புனித ஜெரோம்;
"ஞானத்துக்கு இருப்பிடம்" Sedes sapientiae
"எங்கள் மகிழ்ச்சியின் காரணம்" Causa nostrae laetitiae
"கிறித்தவர்களின் சகாய அன்னை" Auxilium christianorum

திருவோவியங்களில் மரியாவின் காரியப்பெயர்கள்[தொகு]

படம் வகை விளக்கம்
Odigitriya Smolenskaya Dionisiy.jpg

Hodegetria
"வழியை அறிந்தவர்"

பைசாந்தியம் மரியா தனது இடது கையில் கிறிஸ்துவை ஏந்தியுள்ளார் தனது வலது கையால் அவர் வழியான இயேசுவை சுட்டிக்காட்டுகின்றார்;
Presbyter Martinus Madonna als Sedes Sapientiae.jpg

Sedes Sapientiae
"ஞானத்துக்கு இருப்பிடம்/அரியனை"

Romanesque கிறிஸ்து அவரது தாயா மரியாள் மடியில் அமர்ந்துள்ளார், இங்கே மரியா "ஞான அரியனையாக" அடையாளப்படுத்தப்படுகின்றார்.
Toledo Virgen Coro.jpg

"கோதிக் அன்னை"

கோதிக் கலை பைசாந்திய கலைவடிவில் பரியா நின்றவாறு குழந்தை இயேசுவைத்தாங்கியப்படி[8]
Giovenone Madonna del latte Trino.jpg

Madonna Lactans
"பாலூட்டும் அன்னை"

Renaissance, and others மரியா குழந்தை இயேசுவுக்கு பாலூட்டுவது போல;[9]
Lippo memmi, madonna della misericordia, Chapel of the Corporal, Duomo, Orvieto.jpg

Mater Misericordiae
"இரக்கத்தின் அன்னை"

கோதிக் கலை, மறுமலர்ச்சி (ஐரோப்பா), Baroque ஒரு அரசியின் உடையில் வானதூதர் புடைசூழ மரியா தனது பக்தர்களைக்காப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார்; முதல் 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் மத்திய ஐரோப்பா மற்றும் இத்தாலியில் எழுந்த சித்திர வகை;[10]
Maesta-madonna.jpg

Maestà
"கடவுளைத்தாங்கும் கன்னி"

கோதிக் கலை மரியா கிறிஸ்து குழந்தையினை மடியில் வைத்திருக்கும் படியாக, மாட்சிமையோடு அரியனையில் அமர்ந்தவாறு;
Michelangelo's Pieta 5450 cropncleaned.jpg

தாயும் சேயும்
"வியாகுல அன்னை"

கோதிக் கலை, மறுமலர்ச்சிக்காலம், பரோக் இயேசு சிலுவையில் மரித்தப்பின்னர் மரியாள் கிறிஸ்துவின் உடலை மடியில் ஏந்தியவாறு; இந்த வகை சித்தரிப்பு ஜெர்மனியில் 13 ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது;[11]
Antonello da Messina 033.jpg

Mater Amabilis
"அன்பு நிரை அன்னை"
பொதுவாக, "அன்னையும் குழந்தையும்" என இப்படம் அறியப்படுகின்றது

Renaissance, Baroque பொதுவாக மேற்கத்திய பகுதிகளில் கன்னிமரியாவின் சித்தரிப்பு;

மேற்கோள்கள்[தொகு]

  1. "...Byzantine inscriptions from Palestine...in the sixth [century]....fourteen inscriptions invoke "Holy Mary" (Hagia Maria), eleven more hail her as Theotokos; others add the attribution of "Immaculate" (Akeratos), "Most Blessed" (Kecharitomene), "Mistress" (Despoina), "Virgin" or "Ever-Virgin" (Aei-Parthenos)." (Frend 1984, p. 836)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Frend 1984, ப. 836.
  3. "Blue Letter Bible" lexicon results for parthenos பரணிடப்பட்டது 2007-09-01 at the வந்தவழி இயந்திரம் Retrieved December 19, 2007.
  4. இரனேயு (Adversus Haereses 3.22.4).
  5. இரனேயு (Adversus Haereses 5.19.1]): "And if the former did disobey God, yet the latter was persuaded to be obedient to God, in order that the Virgin Mary might become the patroness (advocata) of the virgin Eve. And thus, as the human race fell into bondage to death by means of a virgin, so is it rescued by a virgin; virginal disobedience having been balanced in the opposite scale by virginal obedience."
  6. Orthodox Holiness :: The Titles Of The Saints
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-03-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-13 அன்று பார்க்கப்பட்டது.
  8. Madonna. (2008). In Encyclopædia Britannica. Retrieved February 17, 2008, from Encyclopædia Britannica Online: [1]
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-13 அன்று பார்க்கப்பட்டது.
  10. Jeep 2001, ப. 393.
  11. Watts, Barbara. "Pietà". Grove Art Online. Oxford University Press, Retrieved February 17, 2008, http://www.groveart.com/
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாவின்_பெயர்கள்&oldid=3566605" இருந்து மீள்விக்கப்பட்டது