உள்ளடக்கத்துக்குச் செல்

கலை வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கலாஞ்சலோவின் ஆதாமின் உருவாக்கம் (1508-1512) (வத்திக்கான் நகர்) சிறு தேவாலயத்தில்.
கலை வரலாற்றுத்
தொடர்
வரலாற்றுக்கு முந்திய கலை
பண்டையக் கலை வரலாறு
மேலைநாட்டுக் கலை வரலாறு
கிழக்கத்தியக் கலை வரலாறு
இஸ்லாமியக் கலை வரலாறு
சமகாலக் கலை

கலை என்பது பொதுவாக காட்சிக் (visual) கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனோ; அழகியல் நோக்கங்களுக்காகவோ; காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிக்கலை எனலாம். நீண்ட காலமாகவே கலையைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தி வந்துள்ளனர். மத்திய காலத்தில் தாராண்மக் கலை (liberal arts), இயந்திரம்சார் கலை (mechanical arts) என்ற வகைப்பாடு இருந்தது. எனினும் அக்காலத்தில் கலை என்பதில், இன்று அறிவியல், வேளாண்மை, பொறியியல் போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களும் அடங்கியிருந்தன. தற்காலத்தில் நுண் கலைகள், பயன்படு கலைகள் என்ற வகைப்பாடு உள்ளது. தற்காலத்தில் மனித ஆக்கத்திறனின் வெளிப்பாடே கலை என்று வரைவிலக்கணம் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கலைகளை ஒன்பதாக வகுத்தனர். கட்டிடக்கலை, நடனம், சிற்பம், இசை, ஓவியம், கவிதை, திரைப்படம், ஒளிப்படவியல், வரைகதை என்பன இவை.


பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது.

கலை வரலாற்றின் துணைப் பிரிவுகள்

[தொகு]

பின் வருவனவற்றையும் பார்க்கவும்

[தொகு]

பழைய கற்காலம்

[தொகு]

கற்காலத்தில் ( 15,000-8000 கி.மு. ± ) கலை தொடங்கப்பட்டதாற்கான ஆதாரங்கள் கிடைததால் அதுவே கலையின் தொடக்ககாலமாக விளங்குகிறது. 25,000 கி.மு.வே கலையின் முதல் வெளிப்பாடாக இருந்தது . மனிதனால் பொருட்கள் செய்யப்பட்டதற்கான முதல் தடயங்கள் தெற்கு ஆப்பிரிக்கா, மேற்கு மத்திய தரைக்கடல் , மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ( அட்ரியாடி கடல் ) , சைபீரியா ( பைக்கால் ஏரி ) , இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் தடயங்கள் பொதுவாக கல் (பிளின்ட், obsidian ) , மரம் அல்லது எலும்பு கருவிகளில் செய்யப்பட்ட வேலைகளாகும்.ஓவியங்களில் சிவப்பு வண்ணம் பெற இரும்பு ஆக்சைடும், கருப்பு நிறங்களைப் பெற மாங்கனீசு ஆக்சைடும் களிமண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் இருந்து கலை வாழ்ந்துகொண்டிருக்கிறது[1].மனிதர்கள் தனிமையான இடங்களில் உயிர்வாழ கல் அல்லது எலும்பு மற்றும் குகை ஆகியவற்றில் ஓவியம் மற்றும் சிற்பங்கள் செய்துவந்துள்ளனர். பிரான்ஸ் பகுதியில் இருந்து சிறிய சிற்பங்கள் கண்டுபிடித்துள்ளனர் . பழையகற்காலத்தில் வறையப்பட்ட லாஸ்காக்ஸ் குகைகள் படங்கள் தமது இயற்கை உணர்வுகளை வெளிப்படும்படியாக வரைந்ந்துள்ளனர். குறிப்பாக அங்கு மந்திர மத தன்மை கொண்ட படங்கள் மற்றும் விலங்குகள் சித்தரிக்கபட்டுள்ளன. வீனஸ் கடவுளின் சிலகளும் , பெண்களின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.வீனஸ் கடவுளின் சிலை வளத்தைக்குறிப்பதற்காக வரையப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[2] .[3] .

கற்கால கலை

[தொகு]

கி.மு 8000 வாக்கில் மனிதர்கள் ஆடுமாடுகள் பழக்கப்படுத்துதலிலும், விவசாயம் மேற்கொள்வதிலும்,மதங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.லிபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில் சிறு சிறு மனித உருவங்கள் வறையப்பட்டுள்ளன.இவ்வோவியம் ஜிம்பாவே, ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களுடன் ஒத்ததாக உள்ளதாக அறிஞர்கள் கண்டுபிடித்தனர். பின்டுராஸ் நதி படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களும் இதுபோல் வரலாற்று சிறப்புகளைக் கூறுவதேயாகும்[4].

மேற்கோள்கள்

[தொகு]
 1. Gardner, pp.3-4
 2. Honour, Fleming. A World History of Art p. 25
 3. Honour-Fleming (2002), p. 36-44.
 4. Onians (2008), p. 20-25.

மேலும் படிக்க

[தொகு]
 • Adams, Laurie. Art across Time. 3rd ed. Boston: McGraw-Hill, 2007.
 • Gardner, Helen, and Fred S. Kleiner. Gardner's Art through the Ages: A Global History. 13th ed. Australia: Thomson/Wadsworth, 2009.
 • Gombrich, E. H. The Story of Art. 15th ed. Englewood Cliffs, N.J.: Prentice-Hall, 1990.
 • Honour, Hugh, and John Fleming. The Visual Arts: A History. 5th ed. New York: Henry N. Abrams, 1999.
 • Honour, Hugh, and John Fleming. A World History of Art. 7th ed. Laurence King Publishing, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85669-451-8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85669-451-3
 • Janson, H. W., and Penelope J. E. Davies. Janson's History of Art: The Western Tradition. 7th ed. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2007.
 • Oliver Grau (Ed.): MediaArtHistories, Cambridge/Mass.: MIT-Press, 2007.
 • La Plante, John D. Asian Art. 3rd ed. Dubuque, IA: Wm. C. Brown, 1992.
 • Miller, Mary Ellen. The Art of Mesoamerica: From Olmec to Aztec. 4th ed, World of Art. London: Thames & Hudson, 2006.
 • Pierce, James Smith, and H. W. Janson. From Abacus to Zeus: A Handbook of Art History. 7th ed. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2004.
 • Pohl, Frances K. Framing America: A Social History of American Art. New York, NY: Thames & Hudson, 2002.
 • Stokstad, Marilyn. Art History. 3rd ed. Upper Saddle River, NJ: Pearson Education, 2008.
 • Thomas, Nicholas. Oceanic Art, World of Art. New York, N.Y.: Thames and Hudson, 1995.
 • Wilkins, David G., Bernard Schultz, and Katheryn M. Linduff. Art Past, Art Present. 6th ed. Upper Saddle River, NJ: Pearson Education, 2008.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை_வரலாறு&oldid=3715342" இலிருந்து மீள்விக்கப்பட்டது