ரோமப் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டைக் காலத்து மாபெரும் பேரரசாகும். ரோமப் பேரரசானது 500-ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் பைசண்டைன் பேரரசாக கொன்ஸ்டண்டினோபிள் வீழ்ச்சி (1453) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. கிமு 44 இல் ஜூலியஸ் சீசர் பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான ஆகுஸ்டஸ் செப்டம்பர் 2, கிமு 31 இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும். குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது. ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட செப்டம்பர் 4 கிபி 476 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் டயோகிளேசியன் என்ற கடைசிப் பேரரசன் கிபி 305 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பைசண்டைன் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு 1453 இல் ஓட்டோமான் பேரரசிடம்வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமப்_பண்பாடு&oldid=3598167" இலிருந்து மீள்விக்கப்பட்டது