உள்ளடக்கத்துக்குச் செல்

மரியாயின் சேனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியாயின் சேனை
உருவாக்கம்1921
வகைகத்தோலிக்க பொதுநிலையினருக்கான பக்த சபை
மரியாயின் பக்த சபை
தலைமையகம்டப்லின், அயர்லாந்து
வலைத்தளம்www.legionofmary.ie
மரியாயின் சேனைக்கூட்டத்தில் பயன்பட்த்தப்படும் மரியாவின் பீடம். சிலையின் வலப்புறம் சேனையின் சின்னம் உள்ளதைக்காண்க

மரியாயின் சேனை (Legion of Mary) கத்தோலிக்க திருச்சபையில் தன்னார்வம் கொண்ட பொது நிலையினரால் நடத்தப்படும் இயக்கமாகும். இது அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்லினில் ஃபிராங் டாஃப் என்ற பொது நிலையினரால் தொடங்கப்பட்டது. இப்போது கத்தோலிக்க திருச்சபையில் பொதுநிலையினரால் நடத்தப்படும் மிகப்பெரிய அமைப்பாக உருவெடுத்துள்ளது. இதில் தற்போது ஏறத்தாழ 30 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள நாடுகளாக தென்கொரியா, அர்கெந்தீனா, பிரேசில், பிலிப்பீன்சு ஆகியவை உள்ளன.

வடிவமைப்பு[தொகு]

மரியாயின் சேனை பங்கை அடிப்படையாக கொண்ட அடிமட்ட அமைப்பு பிரசீடியம். 3-20 நபர்களை உறுப்பினர்களாக கொண்ட பிரசீடியங்கள் வரந்தோறும் கூட்டங்கள் பிரசீடிய உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது. பல பிரசீடியங்கள் ஒன்றிணைந்த அமைப்பு க்ரீயா ஆகும். பல க்ரீயாக்கள் ஒன்றிணைந்த அமைப்பு கொமித்சியம் ஆகும். பல கொமித்சியங்கள் ஒன்றிணைந்த அமைப்பு செனட்டஸ் ஆகும். பல செனட்டஸ் ஒன்றிணைந்த அமைப்பான கொன்சிலியம் மரியாயின் சேனையின் மிக உயர்ந்த அமைப்பாகும். இது டல்பின், அயர்லாந்தில் அமைந்துள்ளது. [1]

வரலாறு[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  1. http://www.legionofmary.ie/publications/details/the-official-handbook-of-the-legion-of-mary
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியாயின்_சேனை&oldid=2010532" இலிருந்து மீள்விக்கப்பட்டது