வணக்கத்திற்குரியவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணக்கத்திற்குரியவர் என்பது கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு படிகளில் இரண்டாவது படியாகும். ஆயரால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆராய்ந்தறிந்து அவர் வீரமான (மீநிலை) நற்பண்பு (Heroic Virtue) மீநிலை நற்பண்பு கொண்டுள்ளார் என பரிந்துரைத்தால், வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்படுவார். தலைசிறந்த நற்பண்புகள் என்பவை இறையியல் நற்பண்புகளான நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் இறையன்பு ஆகியவற்றையும், தலையான நற்பண்புகளான முன்மதி, அளவுடைமை, நீதி மற்றும் துணிவு ஆகியவற்றையும் உள்ளடக்கும்.

கத்தோலிக்க நம்பிக்கையின் மீது இருக்கும் வெறுப்பால் (hatred for the faith - "odium fidei") மறைசாட்சியாக கொல்லப்பட்டு வணக்கத்திற்குரியவர் நிலையை அடைந்தவர்களுக்கு, அருளாளர் பட்டம் அளிக்கப்பட புதுமைகள் ஏதும் நிகழத் தேவை இல்லை. தமிழகத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு இது போலவே அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் மறைசாட்சியாக இறக்காதவர்களுக்கு ஒரு புதுமை நிகழ்ந்தால் மட்டுமே அருளாளர் பட்டம் அளிக்கப்படும், அதுவரை அவர் வணக்கத்திற்குரியவர் என்றே கருதப்படுவார்.

உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்
  இறை ஊழியர்   →   வணக்கத்திற்குரியவர்   →   அருளாளர்   →   புனிதர்  


"https://ta.wikipedia.org/w/index.php?title=வணக்கத்திற்குரியவர்&oldid=2224027" இருந்து மீள்விக்கப்பட்டது