கோடரி
Jump to navigation
Jump to search
கோடரி (Axe) (மாற்று வழக்குகள்: கோடாரி, கோடாலி) பன்னெடுங்காலமாகப் பயன்பட்டுவரும் ஒரு கருவியாகும். மரத்தை வெட்ட, பிளக்க, செதுக்க கோடரி பயன்படுகிறது. முற்காலத்தில் போர்களங்களில் ஒரு முக்கிய ஆயுதமாகவும் பயன்பட்டது. ஒரு கைப்பிடியையும் கூரிய வெட்டும் பகுதியையும் கொண்டிருக்கும். வெட்டும் பகுதி இரு சாய்தளங்கள் கூடியவாறு இருந்து ஓர் ஆப்பு அல்லது முளை போல் பயன்படுவதால் இது ஓர் எளிய இயந்திரம் ஆகும். தொன்முது காலங்களில் (~ கி.மு 6000) கோடரிகள் மரக் கைப்பிடியும் கற்தலையும் கொண்டிருந்தன. இப்போது இரும்பு, எஃகுப் போன்ற உலோகங்கள் (மாழைகள்) கோடரி உற்பத்தியிற் பயன்படுகின்றன.