ஏனோக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏனோக்கு
Enoch, the Patriarch
செனசிசு 5:24: "கடவுள் ஏனோக்கை எடுத்துக்கொண்டார்." (1728)
புனித முன்னோர், Antediluvian Patriarch, தீர்க்கதரிசி
பெற்றோர் ஜரெட்
பிள்ளைகள் மெத்தூசலா
ஏற்கும் சபை/சமயம் ஆர்மீனிய அப்போஸ்தலத் திருச்சபை
ஆர்மீனியக் கத்தோலிக்கத் திருச்சபை
இசுலாம்
திருவிழா சூலை 30


ஏனோக்கு (Enoch, எபிரேய மொழி:חֲנוֹךְ; அரபு மொழி: إدريس ʼIdrīs) என்பவர் விவிலியத்தின் படி, நோவாவின் தந்தையான மெத்துசேலாவின் தந்தை. இவர் ஆதாமுக்குப் பின், சேத்து வழிவந்த நான்காம் தலைமுறையை சேர்ந்தவர். இவரின் தந்தை எரேதுக்கு நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, இவர் பிறந்ததாக விவிலியம் கூறுகின்றது. ஏனோக்கு என்ற பெயருக்கு அர்ப்பணிப்பு என்று பொருள்.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இவரைப்பற்றிக் குறிக்கையில், "ஏனோக்குக்கு அறுபத்தைந்து வயதானபோது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான். மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு முந்நூறு ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர். ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24)

விவிலியத்தில் இவரைப்பற்றி மிகக் குறுகிய வசனமே காணப்பட்டாலும், பல பழைய ஏற்பாடு ஆர்வளர்களிடையே முக்கியத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏனோக்கு&oldid=1982701" இருந்து மீள்விக்கப்பட்டது