சேத்து
தோற்றம்
சேத்து | |
|---|---|
| பிதாப்பிதா | |
| வணங்கும் திருஅவைகள் | யூதம் கிறித்தவம் மண்டேசியம் இசுலாம் |
சேத்து அல்லது சேத் (Seth, எபிரேயம்: שֵׁת, Šēṯ; அரபி: شِيث; நிறுத்தப்பட்ட; நியமிக்கப்பட்ட) என்பவர் யூதம், கிறித்தவம், மண்டேசியம், இசுலாம் ஆகிய சமயங்களில் ஆதாம் ஏவாளின் மூன்றாவது மகனாகவும் காயின் மற்றும் ஆபேல் ஆகியவர்களின் சகோதரராகவும் கருதப்படுகிறார். டனாக்கில் ஆதாம் ஏவாளின் பிள்ளைகளில் காயின், ஆபேல் ஆகியோருடன் பெயர் குறிப்பிடப்பட்டவர் இவர் ஒருவரே ஆவார். விவிலியத்தின்படி,[1] ஆபேலின் கொலையின் பின் இவர் பிறந்தார். அதனால் ஏவாள் கடவுள் ஆபேலுக்குப் பதிலாக இவர் நியமித்தார் என நம்பினார்.
