சாராள்
சாரா அல்லது சாராள் (Sarah) or (Saral) | |
---|---|
ஆபிரகாம் தன் மனைவி சாராளுடன் நிற்கும் ஒரு ஓவியப்படம். | |
முதல் முதுபெரும் தாய், இஸ்ரயேல் மக்களின்முதுபெரும் தாய், குடும்பத் தலைவி, | |
பிறப்பு | மெசொப்பொத்தேமியா |
இறப்பு | கானான் |
ஏற்கும் சபை/சமயங்கள் | இசுலாம் யூதம் கிறித்தவம் மண்டனிசம் பகாய் சமயம் |
செல்வாக்கு செலுத்தியோர் | ஆபிரகாம் |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | இவருடைய எல்லா வழித்தோன்றல்களும் |
பெற்றோர் | தேராகு |
வாழ்க்கைத் துணை | ஆபிரகாம் |
குழந்தைகள் | ஈசாக்கு இஸ்மவேல் (ஒன்றுவிட்ட மகன்) |
சாராள் அல்லது சாராய் (/ˈsɛərə/;[1] எபிரேயம்: שָׂרָה, தற்கால Sara திபேரியம் Śārā ISO 259-3 Śarra; இலத்தீன்: Sara; அரபு: سارة Sārah;) இந்தி: सराह Sāraha;) என்பவர் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையான ஆபிரகாமின் மனைவியும் மற்றும் ஈசாக்குவின் தாயும் ஆவார். மேலும் இவரைப் பற்றி பழைய ஏற்பாடு மற்றும் திருக்குர்ஆன் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் முதலில் சராய் என அழைக்கப்பட்டது. பின்னர் ஆதியாகமம் 17:15 கணக்கின்படி, கடவுளின் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக சாராய் என்னும் தனது பெயரை சாராள் என மாற்றினார்.[2]
பெயர் விளக்கம்
[தொகு]எபிரேயப் பெயரான சாராள் (שָׂרָה/Sara/Śārā) என்பதற்கு உயர்நிலைப் பெண் எனக் குறிக்கிறது, மற்றும் இளவரசி அல்லது சீமாட்டி என தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.[3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சாராள் ஆபிரகாமின் மனைவியும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார், மேலும் தேராகு இவரது தந்தை ஆவார்.[4] மற்றும் சாராள் மிக அழகுள்ளவளும் தனது கணவர் ஆபிரகாமைவிட பத்து வயது இளமையானவாளும் ஆவார். மேலும் சாராளுக்கு தொண்ணூறு அகவையும், ஆபிரகாமுக்கு நூறு அகவையில் ஈசாக்கு என்னும் மகன் பிறந்தார். இவர் இவர்களுக்கு முதல் மகனாக இருந்தாலும், ஆபிரகாம் மற்றும் சாராளின் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த இஸ்மவேலும் ஆபிரகாமின் மகனாவார். சாராள் தனது நூற்றுயிருபத்தேழு ஆவது அகவையில் மரித்தார். பின்னர் சாரளின் பிரேதம் கானான் தேசத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையில் அடக்கம் செய்யப்பட்டது.
குடும்ப மரம்
[தொகு]தேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[5] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனாள் | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 621. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-05383-8. entry "Sarah"
- ↑ ஆதியாகமம் 17:15 தமிழ் மொழியில்
- ↑ ஆதியாகமம் 17:15 பற்றியான விளக்கவுரைகள், மற்றும் பிரவுன்-டிரைவர்-பிரிக்சு எபிரேயம் விளக்க வரையறைகள் மொழி எபிரேயம் மற்றும் ஆங்கிலம்
- ↑ ஆதியாகமம் 20:12 – மொழி :தமிழ்
- ↑ Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph