யூதா (யாக்கோபுவின் மகன்)
தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, யூதா என்பவர் (ஆங்கில மொழி: Judah, எபிரேயம்: יְהוּדָה, யெகுடா, Yəhūḏāh) யாக்கோபுவினதும் லேயாவினதும் நான்காவது மகன் ஆவார். இவர் இசுரயேலிய யூத குலத்தின் தந்தையாவார். இவருடைய பெயரே யூத அரசு, யூதேயா மாகாணம், யூதர் ஆகிய சொற்களுக்கு மறைமுக பெயர்க்காரணமாகியது.
சொல்லிலக்கணம்
[தொகு]யூதா என்பதன் எபிரேயம், யெகுதா (יהודה), இது "நன்றி செலுத்தல்" அல்லது "புகழ்தல்" என்று பொருள்படும். இது பெயர்ச்சொல்லான Y-D-H (ידה) என்பதன் மூலமாகும். இதன்படி, "நன்றிக்கு" அல்லது "புகழ்ச்சிக்கு" என பொருள் வழங்கும்.[1] யூதாவின் பிறப்பு தொடக்க நூலில் 29:35 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது பிறப்பால் மகிழ்ந்த லேயா உரத்த குரலில் "இப்போது ஆண்டவரை நான் மாட்சிப்படுத்துவேன்," என்றார். இதில் "ஆண்டவரை நான் மாட்சிப்படுத்துவேன்," என்பதிலுள்ள எபிரேயப் பதம் ஒடே (אודה) என்பது யெகுடா என்பதன் ஒத்த மூலத்தையே கொண்டுள்ளது.
வாழ்க்கை
[தொகு]யூதா தன் தந்தையின் கட்டளையை மீறி ஒரு கானானியப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஏர், ஓனான் மற்றும் சேலா ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். ஏர், தாமர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். ஆனால் கடவுளின் பார்வையில் ஏர் கொடியவனாக இருந்ததால் கடவுள் அவரைக் கொன்றார். பிறகு இஸ்ரயேலிய வழக்கப்படி, தாமர் ஓனானின் மனைவியானார். ஆனால் ஓனான் தன் கடமையைச் செய்யவில்லை. இதனால் கடவுள் அவரையும் கொன்றுவிட்டார். தன் மகன்கள் இருவரும் இறந்ததைக் கண்டு அச்சமுற்ற யூதா, தன் கடைசி மகன் சேலாவை தாமருக்கு திருமணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் யூத வழிமரபைக் காக்கும் பொருட்டு தாமர், ஒரு வேசிப்பெண் வேடத்தில் சென்று யூதாவுடன் உறவுகொண்டார். இதன்மூலம் பெரேசு மற்றும் செரா ஆகிய இரட்டையர்கள் பிறந்தனர். அவர்களில் பெரேசு மெசியாவின் முதுபெரும் தந்தை என்று ரூத் புத்தகம் கூறுகிறது.
குடும்ப மரம்
[தொகு]தேராகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாராள் | ஆபிரகாம் | ஆகார் | ஆரான் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாகோர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேல் | மில்கா | லோத்து | இசுக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இஸ்மவேலர் | 7 மகன்கள்[2] | பெத்துவேல் | 1 வது மகள் | 2 வது மகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஈசாக்கு | ரெபேக்கா | லாபான் | மோவாப்பியர் | ஆமோனியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏசா | யாக்கோபு | ராகேல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பில்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏதோமியர் | சில்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
லேயா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. ரூபன் 2. சிமியோன் 3. லேவி 4. யூதா 9. இசக்கார் 10. செபுலோன் 11. தீனாள் | 7. காத்து 8. ஆசேர் | 5. தாண் 6. நப்தலி | 12. யோசேப்பு 13. பெஞ்சமின் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணை
[தொகு]- ↑ Exell, Joseph Samuel (1892). Homiletical Commentary on the Book of Genesis. USA: Funk & Wagnalls. p. 583.
- ↑ Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph