ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 17 அக்டோபர் 1404 |
ஆட்சி முடிவு | 6 நவம்பர் 1406 |
முன்னிருந்தவர் | ஒன்பதாம் போனிஃபாஸ் |
பின்வந்தவர் | பன்னிரண்டாம் கிரகோரி |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 5 டிசம்பர் 1387 |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 18 டிசம்பர் 1389 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | கொசிமோ தெ மிகிலியோராதி |
பிறப்பு | 1339 சுல்மோனால், நேபில்சு |
இறப்பு | உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | 6 நவம்பர் 1406
இன்னசெண்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட் (இலத்தீன்: Innocentius VII; 1339[1] – 6 நவம்பர் 1406), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 17 அக்டோபர் 1404 முதல் 1406இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் கொசிமோ தெ மிகிலியோராதி ஆகும் மேற்கு சமயப்பிளவின்போது (1378–1417) இவர் திருத்தந்தையாக இருந்தார். இவருக்கு எதிராக எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட், அவிஞ்ஞோனில் ஆட்சி செய்தார்.
திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் இவரை 1389இல் இவரை கர்தினால்-குருவாக உயர்த்தினார். ஒன்பதாம் போனிஃபாஸின் இறப்புக்குப்பின்பு உரோமையில் இருந்த எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்டினின் தூதுவர்களிடம் கர்தினால்கள் பெனடிக்டிக்ட் பதவி விலகினால் தாங்கள் திருத்தந்தை தேர்தலை தள்ளிப்போட விருப்பம் தெரிவித்தனர். இதை அவர்கள் ஏற்காததால் அவர்கள் ஏழாம் இன்னசெண்டை தேர்வு செய்தனர்.
இவர் உரோமையில் 6 நவம்பர் 1406 அன்று இறந்தார். இவருக்குப்பின்பு திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி திருத்தந்தையானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The single contemporary source that refers to his age (chronicle of Dietrich von Nieheim) says that he became Pope at the age of 65. A. Kneer: Zur Vorgeschichte Papst Innozenz VII., Historisches Jahrbuch, 1891, p. 347-348. Several modern sources (incl. The Catholic Encyclopedia or Encyclopædia Britannica) put his birth ca. 1336