இரண்டாம் தியடோர் (திருத்தந்தை)
இரண்டாம் தியடோர் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | திசம்பர் 897 |
ஆட்சி முடிவு | திசம்பர் 897 |
முன்னிருந்தவர் | ரொமானுஸ் |
பின்வந்தவர் | ஒன்பதாம் யோவான் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | தியடோருஸ் |
பிறப்பு | ??? உரோம் |
இறப்பு | திசம்பர் 897 உரோம், இத்தாலி |
தியடோர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தை இரண்டாம் தியடோர் திருத்தந்தை ஐந்தாம் ஸ்தேவானால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரது சசோதரர் தியோடியுஸ் ஒரு ஆயராவார். இவர் 898-ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் 20 நாட்களுக்கு திருத்தந்தையாக இருந்தார். திருத்தந்தை ஆறாம் ஸ்தேவானால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்களுக்கு மீண்டும் பதவி அளித்தார். திருத்தந்தை ஃபொர்மோசுஸில் திருபீடத் தேர்வை செல்லத்தக்கதாக ஏற்பிசைவளித்தார். டைபர் நதியில் தூக்கி எறியப்பட்ட அவரது உடலை கண்டெடுத்து புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்தார்.