மூன்றாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் அனஸ்தாசியுஸ்
ஆட்சி துவக்கம்ஏப்ரல் 911
ஆட்சி முடிவுஜூன் 913
முன்னிருந்தவர்மூன்றாம் செர்ஜியுஸ்
பின்வந்தவர்லாண்டோ
பிற தகவல்கள்
இயற்பெயர்அனஸ்தாசியுஸ்
பிறப்பு???
உரோமை நகரம், இத்தாலி
இறப்புஜூன் 913
உரோமை நகரம், இத்தாலி
அனஸ்தாசியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை மூன்றாம் அனஸ்தாசியுஸ் (இறப்பு: ஜூன் 915) ஏப்ரல் 911 முதல் ஜூன் 913 வரை திருத்தந்தையாக இருந்தவர். இவர் உரோம் நகரில் பிறந்தார். மூன்றாம் செர்ஜியுஸுக்கு முறைகேடாகப் பிறந்த மகன் என சிலர் கூறுவர்.

தியோடேரா Theodora என்பவரின் கட்டுப்பாட்டில் திருப்பீடம் இருந்தபோது இவரின் ஆட்சிக்காலம் அமைந்தது. தியோடேராவின் விருப்பத்தால் தான் இவர் ஆட்சியேற்றார் என்பர். இவரின் ஆட்சிக்காலம் பற்றி தகவல் வேறெதுவும் இல்லை.

இவரின் ஆட்சியில் ரோலோ நகர நோர்மானியர்களுக்கு மறைபரப்பப்பட்டது.

இவரின் கல்லறை புனித பேதுரு பேராலயத்தில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
மூன்றாம் செர்ஜியுஸ்
திருத்தந்தை
911–913
பின்னர்
லாண்டோ