முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)
முதலாம் மரீனுஸ் | |
---|---|
108ஆம் திருத்தந்தை | |
![]() | |
ஆட்சி துவக்கம் | டிசம்பர் 16, 882 |
ஆட்சி முடிவு | மே 15, 884 |
முன்னிருந்தவர் | எட்டாம் யோவான் |
பின்வந்தவர் | மூன்றாம் ஹேட்ரியன் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? கலீசி, உரோமை நகரம் |
இறப்பு | ??? | மே 15, 884
மரீனுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
முதலாம் மரீனுஸ் (அல்லது இரண்டாம் மார்டீன்), கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 16, 882 முதல் மே 15, 884 வரை இருந்தவர். இவர் டிசம்பர் 882-இல் எட்டாம் யோவானுக்குப் பின் திருத்தந்தையானவர்..
திருத்தந்தையாவதற்கு முன்[தொகு]
இவர் திருத்தந்தையாவதற்கு முன் சேயிரி நகரின் ஆயராக இருந்தார். காண்ஸ்டான்டினோபிலின் மூப்பரான முதலாம் போதியோஸால் எழுந்த சர்ச்சைகளை தீர்க்க இவருக்கு முன் இருந்த மூன்று திருத்தந்தையர்கள் இவரை தம் தூதுவராக அனுப்பினர்.
திருத்தந்தையாக[தொகு]
இவர் திருத்தந்தையான பின் முதலில் ஃபொர்மோசுஸை போர்தஸ் நகரின் கர்தினால் ஆயராக நியமித்தார்.[1] இவருக்கு பெரிய ஆல்பர்டின் (r. 871-899) மீது இருந்த மரியாதையின் நிமித்தம், உரோமையில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவித்தார்.[1] இவர் மே அல்லது ஜூன் 884-இல் இறந்திருக்கலாம். இவருக்கு பின் மூன்றாம் ஹேட்ரியன் திருத்தந்தையானார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Pope Marinus I; Martin II". New Catholic Dictionary. 2008 [last update]. 2012-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 பெப்ரவரி 2011 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|year=
(உதவி)
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Marinus (popes)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
"Pope Marinus I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
வெளி இணைப்புகள்[தொகு]